ஸலபு & ஸலபிகளின் வாழ்வு/கூற்றுகளிலிருந்து..
தொகுப்பு: ஸுன்னாஹ் அகடமி
1) இமாம் இப்னு தைமிய்யாஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறுகினார்:
எவரை அல்லாஹ் விரும்புகின்றானோ அவரை அவனுக்கு விருப்பமான காரியங்களில் செயற்படவைப்பான்.
قال شيخ الإسلام ابن تيمية رحمه الله :
من كـــان الله يحبه
استعمله فيما يحبه.
العبودية (صـ١١٣)
2) இமாம் அபூ ஹஃப்ஸ் அன்னைஸாபூரி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது மாணவன் இமாம் அபூ உஸ்மான் அன்னைஸாபூரி அவர்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்:
(பிரச்சாரம் செய்யும் நோக்கில்) நீர் மனிதர்களுக்காக உட்கார்ந்தால் நீர் உமது உள்ளத்திற்கும் ஆன்மாவிற்கும் உபதேசம் செய்கின்றவனாக இருந்துகொள். அவர்கள் உம்மிடத்தில் கூடியிருப்பது உம்மை ஏமாற்றி விட வேண்டாம். அவர்கள் உமது வெளிரங்கத்தையே அவதானிக்கின்றனர்; அல்லாஹ்வோ உமது உள்ரங்கத்தை கண்காணிக்கின்றான்.
قال أبو حفص لأبي عثمان النيسابوري :
إذا جلست للناس فكن واعظًا لقلبك ونفسك ، ولا يغرنك اجتماعهم عليك ، فإنهم يراقبون ظاهرك ، والله يراقب باطنك .
[ مدارج السالكين ٢ / ٦٦ ]
3) இமாம் இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்:
எவரிடத்தில்
1. உண்மைத் தன்மையும்
2. நேர்மையும்
3. உபகாரம் செய்யும் பண்பும்
ஒருசேர இருக்கிறதோ அவர் அல்லாஹ்வால் இழிவுபடுத்தப்படுகின்றவர்களில் இருக்க மாட்டார்.
قال ابن تيمية رحمه الله:
" *من جُمِعَ فيه الصِّدق والعدل والإحسان*
*لم يكن ممّن يُخزيه الله*"
الأصفهانية (٥٤٨/١)
4) இமாம் இப்னுல் கைய்யிம் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்:
தவ்பஹ்வும் இஸ்திஃபாரும் (அதாவது அல்லாஹ்வின் பக்கம் மீளுவதும் பாவமன்னிப்புத் தேடுவதும்) எவரது இயல்புத்தன்மையாக மாறுகிறதோ அவர்
இயல்புத் தன்மைகளிலே மிக மகத்தான ஒன்றின் பக்கம் வழிகாட்டப்பட்டுள்ளார்.
قال الإمام ابن القيم رحمه الله :
ومن كانت شيمته
التوبة والاستغفار
فقد هُدي لأعظم الشيم.
إغاثة اللهفان (٩٤٥/٢)
5) ஸஃதி (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:
ஏகத்துவம் உள்ளத்தில் பூர்த்தி அடைகின்ற போது அல்லாஹ் அந்த உள்ளத்திற்குரியவருக்கு ஈமானை விருப்பமானதாக்கி விடுகிறான்; அதனை அவ்வுள்ளத்தில் அலங்காரமாக்கி வைக்கிறான்; மேலும் நிராகரிப்பையும், பாவத்தையும், மாறுசெய்வதையும் அவருக்கு அவன் வெறுப்பாக்கியும் வைக்கிறான்; அவரை நேர்வழி பெற்றவர்களில் ஆக்கி விடுகின்றான்.
التوحيد إذا كمل في القلب حبب الله لصاحبه الإيمان وزينه في قلبه وكره إليه الكفر والفسوق والعصيان وجعله من الراشدين.
القول السديد للعلامة السعدي ص ٥٠
6) இமாம் வஹ்ப் இப்னு முனப்பிஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்:
-கல்வி
முஃமினின் (விசுவாசியின்) உற்ற நண்பனாகும்.
-சகிப்புத்தன்மை
அவனது மந்திரியாகும்.
-புத்தி
அவனது வழிகாட்டியாகும்.
-அமல்
அவனை நிர்வகித்துப் பண்படுத்தக்கூடியதாக இருக்கும்.
-பொறுமை
அவனது படைகளின் தளபதியாகும்.
-இரக்க குணம்
அவனின் தந்தையாக இருக்கும்.
-மென்மைத்தன்மை
அவனின் சகோதரனாக இருக்கும்.
عن وهب بن منبه ، قال :
العلم خليل المؤمن ، والحلم وزيره ، والعقل دليله ، والعمل قيِّمه ، والصَّبر أمير جنوده ، والرِّفق أبوه ، واللِّين أخوه .
سير أعلام النُّبلاء ٤/ ٥٥٠
7) இமாம் இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்:
எவர் (நல்லறங்களில்) முயற்சி செய்து,
அல்லாஹ்வின் உதவியை வேண்டி,
தொடர்ந்து இஸ்திஃபாரிலும்
முயற்சி செய்வதிலும் ஈடுபடுகிறாரோ
அவருக்கு எந்த கற்பனையிலும் உதித்திடாத விடயங்களை அல்லாஹ் தனது அருட்கொடையிலிருந்து கட்டாயமாக வழங்குவான்.
قال ابن تيمية رحمه الله:
من اجتهد واستعان بالله تعالى
ولازم الاستغفار والاجتهاد،
فلا بدَّ أن يؤتيه الله من فضله
ما لم يخطر ببال .
الفتاوى 62/5
8) இமாம் வஹ்ப் இப்னு முனப்பிஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்:
முஃமின் (விசுவாசி) பார்ப்பது; அறிந்து கொள்வதற்காகவே.
அவன் பேசுவது; விளங்கிக் கொள்வதற்காகவே.
அவன் மௌனமாக இருப்பது; (தவறுகளிலிருந்து) ஈடேற்றம் பெறுவதற்காகவே.
அவன் தனிமையில் இருப்பது; (அமல்கள் செய்து) நன்மைகளை பெற்றுக் கொள்வதற்காகவே.
عن وهب بن منبه ، قال :
المؤمن ينظر ليعلم ، ويتكلَّم ليفهم ، ويسكت ليسلم ، ويخلو ليغنم .
سير أعلام النُّبلاء ٤/ ٥٥٠
9) இமாம் இப்னு கஸீர் (றஹிமஹுல்லாஹ்) தனது ஆசான் இமாம் இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) பற்றி பின்வருமாறு கூறினார்: இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) மரணித்த பின் நான் வந்து அவர்களின் முகத்தைத் திறந்து பார்த்து, முத்தமிட்டேன். நாம் அவர்களை மரணத்திற்கு முன் கடைசியாக பிரிந்து சென்ற நேரத்தில் இருந்ததை விட அதிகமாக அவர்களது முடி நரைத்திருந்தது. அவர்கள் தமக்குப் பிறகு தமக்காக பிரார்த்தனை செய்வதற்கு ஒரு ஸாலிஹான பிள்ளையையும் விட்டுச் செல்லவில்லை. ஆனாலும், தமக்காக பிரார்த்தனை செய்யும் ஒரு சமூகத்தையே விட்டுச் சென்றுவிட்டார்கள்.
(நூல்: அல்பிதாயஹ் வந்நிஹாயஹ் 18/300)
قال الإمام ابن كثير رحمه الله:
ماتَ ابنُ تيمية فكشفتُ عن وجهه وقبَّلتُه وقد علاهُ الشَّيبُ أكثر مما فارقناه لم يتركْ ولداً صالحاً يدعو له لكنه تركَ أُمَّةً صالحةً تدعو له.
البداية والنهاية ١٨/٣٠٠
10) இமாம் இப்னுல் கைய்யிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்:
அடியான் உண்மையான தூய்மையான முறையில் பாவமன்னிப்புக் கேட்டால் அதற்கு முன்னர் நடந்த அனைத்துப் பாவங்களையும் அது எரித்துவிடும். மேலும், அது அவனது நற்காரியங்களின் கூலியையும் அவனுக்கு மீட்டிக்கொடுத்துவிடும்.
(அல்-வாபில் அஸ்-ஸைய்யிப்: 12)
11) ஸுப்யான் இப்னு உயைனஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்:
நல்லதையும் தீயதையும் அறிபவனல்ல புத்திசாலி; புத்திசாலி யாரெனில் நல்லதை கண்டால் பின்பற்றுவான், தீயதைக் கண்டால் விட்டுவிடுவான்.
ஆதாரம்:
[شعب الإيمان للبيهقي:٤٦٦٤]
قال سفيان بن عيينة رحمه الله:
"ليس العاقل الذي يَعرِفُ الخيرَ والشرَّ؛
إنما العاقل الذي إذا رأى الخير اتَّبعه،
وإذا رأى الشر اجتنبه ".
[شعب الإيمان للبيهقي:٤٦٦٤]
12) இமாம் தஹபீ (றஹிமஹுல்லாஹ்) கூறினார்:
யார் துஆவில் மூழ்கிவிடுகிறாரோ; மேலும், தொடர்ந்து கதவை தட்டுகிறாரோ அவருக்காக அது திறக்கப்படும்.
سِيَرُ أعلام النُبلاء ( 6 / 369 )
قَــ❀ـال الإمَامُ الذَهــبيُّ
- رحمهُ الله - :
مَــنْ أدمـــن الدُّعـــــــاء ،
ولازم قَــــــــرْع البــــاب ؛
فُــتِــــحَ لـــــــــه .
سِيَرُ أعلام النُبلاء ( ٦ / ٣٦٩ )
13) ஸுஃப்யான் இப்னு ஹுஸைன் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்: ஒரு முறை நான் இயாஸ் இப்னு முஆவியஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் ஒரு மனிதரைப் பற்றி குறை கூறினேன். அவர் என்னுடைய முகத்தைப் பார்த்துவிட்டு, கேட்டார்: நீர் ரோமர்களுடன் யுத்தம் புரிந்திருக்கிறாயா? என்று, இல்லை என்றேன். சரி, சிந்திகளுடன் இந்தியர்களுடன் துருக்கியர்களுடன் யுத்தம் புரிந்திருக்கிறாயா? என்று கேட்டார்கள். அதற்கும் நான் இல்லை என்று சொன்னேன். அதற்கவர், உன்னிடமிருந்து ரோமர்கள், சிந்திகள், இந்தியர்கள், துருக்கியர்கள் எல்லோரும் ஈடேற்றம் அடைந்துவிட்டார்கள்! உன்னுடைய முஸ்லிம் சகோதரன் தானா ஈடேற்றமடையவில்லை!? என்று கேட்டார்கள்.
அதற்குப் பிறகு நான் இவ்வாறு நடந்து கொண்டதே கிடையாது.
அல்பிதாயஹ் வன்னியா யஹ் (13/121)
குறிப்பு: அன்று மேற்படி நாட்டவர்கள் முஸ்லிம்களின் எதிரிகளாக இருந்த காலம்.
قــ❀ـَالَ سُفيَانُ بنُ حُسَينٍ
- رَحِمَهُ الله تعالــﮯ - :
ذَكَرتُ رَجُلًا بِسُوءٍ عِندَ إيَاسٍ بنِ مُعَاوِيَةً ، فَنَظرَ فِي وَجهِي ،
وقَالَ : أغَزَوتَ الرُّومَ ؟!
قُلتُ : لَا !
قَالَ : فَالسِّندَ والهِندَ والتُّركَ ؟!
قُلتُ : لَا !
قَالَ : أفَتَسلَمُ مِنكَ الرُّومُ والسِّندُ والهِندُ والتُّركُ ، ولَم يَسلَم مِنكَ أخُوكَ المُسلِمُ ؟!
قَالَ : فَلَم أعُد بَعدَهَا .
البِدَايَةُ والنِّهَايَة ( ١٣ / ١٢١)
14) அறிந்ததை செயல்படுத்துவோம்
ஸுப்பையான் இப்னு உயைனஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்:
செயலை விட்டுவிட்டு சொல்லையும், அமலை விட்டுவிட்டு இல்மையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு காலத்தில் நீர் இருந்தால், நீர் மிக மோசமான ஒரு காலத்தில் மிக மோசமான மனிதர்களுக்கு மத்தியில் இருக்கிறாய் என்பதை அறிந்துகொள்.
இப்தாலுல் ஹியல் (1/34)
قَالَ الإمامُ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ :
« إذَا كُنْتَ فِي زَمَانٍ يُرْضَى فِيهِ
بِالقَولِ دُونَ الفِعلِ ،
والعِلمِ دُونَ العَمَلِ ،
فَاعلَم بِأنَّكَ فِي شَرِّ زَمَان
ٍ بَينَ شَرِّ النَّاسِ ».
إبْطَالُ الحِيَلِ (١ / ٣٤)
15) மனன சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?*
இமாம் இப்னுல் கைய்யிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
எந்த உறுப்பு அதிகமாக பயிற்சி பெறுகிறதோ அது பலமடையும். அதிலும் குறிப்பாக அந்த வகையான பயிற்சிகளுக்கு ஆற்றல் பெறும். எனவே எவர் அதிகமாக மனனமிட முயற்சிக்கிறாரோ அவருடைய மனன சக்தி பலமடையும். எவர் அதிகமாக சிந்திக்கிறாரோ அவருடைய சிந்திக்கும் ஆற்றல் பலமடையும். ஒவ்வொரு உறுப்புக்கும் அதற்கென்றே இருக்கின்ற பயிற்சி இருக்கிறது.*
நூல்: [زاد المعاد : ٢٢٦ / ٤]
#قالَ الإمامُ إبنُ القَيِّم رحمه ﷲ:
"أيُّ عُضُوٍ كَثُرَت رِيَاضَتُه قَوِيَّ، وَخُصُوصًا عَلَى نَوعِ تِلكَ الرِيَاضَة؛ فَإنَّ مَن استَكثَرَ مِنَ الحِفظِ قَوِيَت حَافِظَتُهُ، وَمَن استَكثَرَ مِنَ الفِكرِ قَوِيَتْ قُوَتُه المُفَكِّرة، ولِكُلِّ عُضُوٍ رِيَاضَةٍ تَخُصُّه ".
[زاد المعاد : ٢٢٦ / ٤]
16) அபூஜஃபர் அல்-பாகிர் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்:
எனக்கொரு சகோதரர் இருந்தார். அவர் என் கண்ணில் மகத்தான ஒருவராக விளங்கினார். என் கண்ணில் அவரை மகத்தானவராக கண்பித்தது யாதெனில், அவர் கண்ணில் இந்த உலகம் சிறியதாக தோன்றியது தான்.
நூல்:
حلية الأولياء (٤/١٨٦)
قال أبو جعفر الباقر محمد بن علي -رحمه الله- : كان لي أخٌ في عيني عظيم ، وكان الذي عظَّمه في عيني ؛ صِغرُ الدنيا في عينه
17) குர்ஆனின் உபதேசங்கள் உங்களுக்குப் பயனளிக்க வேண்டுமா?
இமாம் இப்னு கைய்யிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்:
குர்ஆனின் மூலம் நீ பயன்பெற வேண்டும் என்று நினைத்தால் அதனை ஓதும் போது உன் மனதை (அதன் கருத்தை விளங்குவதில்) ஒன்றுகுவிக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
எவருக்கு (சிந்திக்கும்) உள்ளமிருக்கிறதோ அவருக்கு, அல்லது எவர் கவனத்தோடு செவிசாய்க்கின்றாரோ அவருக்கு நிச்சயமாக இதில் (நல்ல) படிப்பினை இருக்கின்றது. (அல்குர்ஆன் : 50:37)
நூல்:
الفوائد صـ3
قال ابن القيم رحمه الله:
إذا أردت الانتفاع بالقرآن : فاْجمع قلبك عند تلاوته
قال ﷻ : "إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد".
18) சத்தியம் அரிதானது
ஸம்ஆனி (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்:
சத்தியம் என்பது அரிதானது. அது அரிதாக இருந்தும் அது தம்மிடம் இருப்பதாக அனைவரும் வாதிடுகின்றனர். சத்தியத்தில் இருப்பதாக அவர்கள் வாதிடுவது அவர்களை சத்தியத்தை மீளாய்வு செய்வதிலிருந்து தடுக்கிறது. ஆம்; நிச்சயமாக அசத்தியத்தின் மீது ஒரு இருள் இருக்கிறது. உண்மையிலே சத்தியத்தின் மீது ஒரு ஒளியும் இருக்கிறது. எவருடைய உள்ளம் ஒளியினால் நிரப்பப்பட்டு இருக்கிறதோ அவராலே தவிர சத்தியத்தின் ஒளியை பார்க்க முடியாது.
{எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்த வில்லையோ அவனுக்கு யாதொரு ஒளியும் இல்லை.} [23:40]
மனோ இச்சையின் இருள்களில் தட்டுத்தடுமாறுகின்றவனும் அழிவின் குழிகளில் விழ்ந்திருப்பவனும் பேச்சில் நேர்மையற்ற முறையில் சிரமப்பட்டு (தன் வாதத்தை நிறுவ) முயற்சிப்பவனும் சத்தியத்தின் பால் மீண்டு வருவதற்கு பாக்கியம் அளிக்கப்படுவதில்லை.
الانتصار لأصحاب الحديث - السمعاني ص٢
قال السمعاني رحمه الله:
*الحق عزيز* ،
*وكلٌ مع عزَّته يدَّعيه*
*ودعواهم الحق تحجبهم عن مراجعة الحق*
نعم
*إن على الباطل ظلمة*
*وإن على الحق نوراً*
*ولا يبصر نور الحق إلا من حُشي قلبه بالنور* *{ومن لم يجعل الله له نورا فما له من نور}*
*فالمتخبط في ظلمات الهوى* *والمتردي في مهاوي الهلكة* *والمتعسف في المقال*
*لا يوفَّق للعود إلى الحق*
19) இவ்வுலகில் பாவக் கறையை நீக்கும் மகத்தான ஆறுகள்
இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்:
இவ்வுலகில் பாவிகளுக்கு சுத்தம் செய்து கொள்வதற்காக மூன்று பெரும் ஆறுகள் இருக்கின்றன. அவை அவர்களை போதுமான அளவு சுத்தப்படுத்தாவிட்டால் மறுமை நாளில் நரகம் எனும் ஆற்றில் அவர்கள் சுத்தப்படுத்தப்படுவார்கள். அவை:
1. உண்மையான “தவ்பாஹ்” (பாவமன்னிப்பு கோரல்) என்ற ஆறு
2. பாவங்களை சூழ்ந்து மூழ்கடிக்கும் “நன்மைகள்” என்ற ஆறு
3. (குற்றங்களுக்கான) தண்டப் பரிகாரமாக அமைந்திருக்கும் பெரும் “சோதனைகள்” என்ற ஆறு
அல்லாஹ் தன் அடியானுக்கு நலவை நாடினால் இம்மூன்று ஆறுகளில் ஒன்றில் அவனை நுழைய வைப்பான்; அதனால் அவன் மறுமையில் நல்லவனாகவும் சுத்தமடைந்தவனாகவும் வருவான்; நான்காவது சுத்தப்படுத்தலுக்கு தேவையுள்ளவனாக அவன் இருக்கமாட்டான்.
நூல்:
مدارج_السالكين ❪٦٤/١❫
قال ابن_القيم رحمه الله:
لأهل الذنوب ثلاثة أنهار عظام يتطهرون بها في الدنيا، فإن لم تف بِطُهرهم طُهِّروا في نهر الجحيم يوم القيامة
نهر التوبة النصوح
ونهر الحسنات المستغرقة للأوزار المحيطة بها.
ونهر المصائب العظيمة المكفرة
فإذا أراد الله بعبده خيرا أدخله أحد هذه الأنهار الثلاثة فورد القيامة طيبا طاهرا فلم يحتج إلى التطهير الرابع.
20) தீயவனின் தோழமை ஆபத்தானது
பிஷ்ருல்ஹாஃபி (றஹிமஹுல்லாஹ்) கூறினார்:
கெட்டவர்களுடன் தோழமை கொள்வது நல்லவர்களைப் பற்றிய தப்பெண்ணத்தை உருவாக்கும்.
நூல்:
الآداب الشرعية لابن مفلح ٧٩/١
قال بِشر الحافي -رحمه الله-:
*صُحبةُ الأشرار أورثت سوء الظنِّ بالأخيار*.
21) மார்க்கக் கல்வியின் மகத்துவம்
இமாம் புகாரி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் எழுத்தாளரும் மாணவருமாகிய முஹம்மத் இப்னு அபீ ஹாத்திம் கூறுகிறார்:
(இமாமவர்கள்) ஒரு நாள் எனக்கு அதிகமான ஹதீஸ்களை அறிவித்தார்கள். நான் சோர்வடைந்து விடுவேனோ என்று அஞ்சி (பின்வருமாறு) கூறினார்கள்: *"நீர் மன திருப்தி அடைந்து கொள். வீண் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் தமது விளையாட்டுகளில் இருக்கிறார்கள். கைத்தொழில்கள் செய்பவர்கள் தமது கைத்தொழில்களில் இருக்கிறார்கள். வியாபாரிகள் தமது வியாபாரங்களில் ஈடுபடுகிறார்கள். நீரோ நபி ﷺ அவர்களுடனும் அவர்களின் தோழர்களுடனும் இருக்கிறீர்.*
குறிப்பு: அதாவது அவர்களின் சம்பவங்களையும் செய்திகளையும் படித்துக் கொண்டிருப்பதால் அவர்களோடு இருப்பதைப்போல.
நூல்:
(سير أعلام النبلاء جـ 12 صـ 445).
قال محمد بن أبي حاتم الوراق عن شيخه الإمام البخاري:
أملى يومًا عليَّ حديثًا كثيرًا، فخاف ملالي، فقال: طِبْ نفسًا؛ فإن أهل الملاهي في ملاهيهم، وأهل الصناعات في صناعاتهم، والتجار في تجاراتهم، وأنت مع النبي صلى الله عليه وسلم وأصحابه.
فقلتُ: ليس شيءٌ من هذا، يرحمك الله، إلا وأنا أرى الحظ لنفسي فيه.
22) மார்க்க கல்வியின் மகத்துவம்
இமாம் இப்னுல் கையிம் கூறுகிறார்:
*எவர் இஸ்லாமை வளர்ப்பதற்காக கல்வியைத் தேடுகிறாரோ அவர் சித்தீக்கீன்க(ள் எனும் உண்மையாளர்க)ளில் உள்ளவர். அவரின் அந்தஸ்து நபித்துவத்தின் அந்தஸ்துக்கு அடுத்திருக்கிறது.*
நூல்:
مفتاح دار السعادة (1/ 121)
قال ابن القيم رحمه الله:
"فمن طلب العلم ليحيي به الإسلام، فهو من الصديقين ودرجته بعد درجة النبوة"
23) அல்லாஹ் பாக்கியமளித்தால் மாத்திரமே சத்தியம் விளங்கும்
ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்:
சத்தியத்திற்கான ஆதாரங்கள் அதிகமாக இருந்தும், அதிகமானவர்களுக்கு அவை மறைந்திருப்பதையிட்டு நீர் ஆச்சரியப்பட வேண்டாம்; ஏனெனில் சத்தியத்திற்கான சான்றுகள் அதிகமாக இருக்கின்றன; எனினும் அல்லாஹ் தான் நாடியவர்களையே நேரான வழியின் பால் செலுத்துகின்றான்.
நூல்:
ﺩﺭﺀ ﺍﻟﺘﻌﺎﺭﺽ(٧ / ٨٥)
قال شيخ الإسلام ابن تيمية رحمه الله :
«ﻓﻼ ﺗﻌﺠﺐ ﻣﻦ ﻛﺜﺮﺓ ﺃﺩﻟﺔ ﺍﻟﺤﻖ ﻭﺧﻔﺎﺀ ﺫﻟﻚ ﻋﻠﻰ ﻛﺜﻴﺮﻳﻦ! ﻓﺈﻥ ﺩﻻﺋﻞ ﺍﻟﺤﻖ ﻛﺜﻴﺮﺓ ﻭﺍﻟﻠﻪ ﻳﻬﺪﻱ ﻣﻦ ﻳﺸﺎﺀ ﺇﻟﻰ ﺻﺮﺍﻁ ﻣﺴﺘﻘﻴﻢ»
24) *கஷ்டத்தை முறையிடுவதை விட்டு விட்டு, உன் மீது அல்லாஹ் அருளியிருக்கும் எண்ணற்ற அருட்கொடைகளை நினைத்துப் பார்*
யூனுஸ் இப்னு உபைத் (றஹிமஹுல்லாஹ்) [மரணம்: ஹி139] அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தனது நெருக்கடியான நிலையை முறையிட்டார். அப்போது அவரிடம் யூனுஸ் (றஹிமஹுல்லாஹ்), 'உனது பார்வையை இழப்பதற்கு பகரமாக ஒரு இலட்சம் வெள்ளி நாணயங்கள் கிடைப்பது உனக்கு மகிழ்ச்சி அளிக்குமா? என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் இல்லை என்று கூறினார். அப்படியானால் உனது இரு கைகளுக்குப் பகரமாக ஒரு இலட்சம்? என்று கேட்டார்கள். அதற்கும் அம்மனிதர் இல்லை என்றார். அப்படியானால் உனது இரு கால்களுக்கும் பகரமாக? என்றார்கள். அதற்கும் அம்மனிதர் இல்லை என்றார். இவ்வாறு அல்லாஹ் அவருக்குச் செய்திருக்கும் பல அருட்கொடைகளை நினைவுபடுத்திவிட்டு, உன்னிடம் பல லட்சங்கள் இருப்பதை நான் பார்க்கிறேன், நீரோ உனது தேவையை முறையிட்டுக் கொண்டிருக்கிறீர்! என்று கூறினார்கள்.
நூல்:
[الشكر لابن أبي الدنيا (١٠١)]
جاء رجل إلى يونس بن عبيد يشكو ضيق حاله، فقال له يونس: أيسُرُّك ببصرك هذا الذي تُبصِر به مائة ألف درهم؟ قال الرجل: لا، قال: فبيديك مائة ألف؟ قال الرجل: لا، قال: فبرجليك؟ قال الرجل: لا، -فذكَّره بنعم ﷲ عليه- وقال: أرى عندك مئين ألوف وأنت تشكو الحاجة!
25) ஷைத்தான் மனிதனை வழிகெடுக்கும் முறைகள்
இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
ஷைத்தான்கள் மனிதனை (பின் வரும் 1/6) ஆறில் ஒரு விடயத்தில் வீழ்த்துவதற்கு சதி செய்கின்றன.
1. குஃப்ர் (இறை நிராகரிப்பு, இணைவைப்பு)
2. பின்னர் பித்அத்
3. பின்னர் பெரும் பாவங்கள்
4. பின்னர் சிறு பாவங்கள்
5. பின்னர் நன்மையோ தீமையோ அல்லாத ஆகுமான விடயங்களில் கூடுதலாக ஈடுபட வைத்தல்
6. பின்னர் மிகச்சிறப்பானதை விட்டுவிட்டு சிறப்பு குறைந்ததில் ஈடுபாட வைத்தல்.
மேற்படி ஆறு சதி முயற்சிகளிலும் அவை தோல்வியடைந்தால் வேறு ஒரு சதி முயற்சியில் இறங்குகின்றன; அதுதான் அசத்தியவாதிகளையும் பித்அத்வாதிகளையும் அவனுக்கு எதிராக தூண்டிவிடுதல்.
நூல்:
[إعلام الموقعين (157)]
قال ابن القيّم - رحمه الله- :
«الشياطينُ تحتالُ على ابن آدم لتوقعَه في واحدٍ من أمور ستة:
الكفر
ثم البدعة
ثم الكبائر
ثم الصغائر
ثم الاشتغال بفضول المباح
ثم بالفاضل عن الأفضل
فإن أعيتهُم هذِه الحِيلُ السّت، عمِدوا إلى حيلة أُخرى، وهي تسليطُ أهلِ الباطل والبدع عليهم»
26) ஒரு பிள்ளைக்கு வீட்டுச்சூழல் எந்த அளவு முக்கியம்?
அல்லாமஹ் இப்னு பாதீஸ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
வீடுதான் முதலாவது பாடசாலை. அதுவே ஆளுமை மிக்க மனிதர்களை உருவாக்கும் அடிப்படையான தொழிற்சாலை. தாயிடம் இருக்கும் மார்க்கப் பிடிப்புதான் (பிள்ளையின்) மார்க்கப் பற்றும் நற்குணமும் பாதுகாக்கப்படுவதற்கான அடித்தளமாகும்.
நூல்:
الآثار 2/201
قال ابن باديس رحمه الله: "البيت هو المدرسة الأولى والمصنع الأصلي لتكوين الرجال، و تديّنُ الأم هو أساس حفظ الدين والخلق." [الآثار (4: 201)]
27) சோதனைகளின் போது பாவங்களும் மன்னிக்கப்பட்டு நற்கூலியும் கிடைக்க வேண்டுமா?
இப்னு உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
மனிதன் சோதனைகளை நற்கூலியை எதிர்பார்க்காமல் பொறுமையோடு எதிர்கொண்டால் அவை அவனது பாவங்களுக்கு பரிகாரமாக அமையும். அவன் நற்கூலியையும் எதிர்பார்த்து பொறுமை செய்தால் பாவங்கள் மன்னிக்கப்படுவதோடு சேர்த்து நற்கூலியும் கிடைக்கும். ஏனெனில் அவன் அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைக்கின்றான்; அதனால் அவன் அல்லாஹ்வைப் பற்றி எப்படியான எண்ணத்தை வைத்தானோ அல்லாஹ்வும் அவனுக்கு அதையே கொடுக்கின்றான்.
நூல்:
التعليق على صحيح مسلم 342
قال ابن عثيمين رحمه الله تعالى:
إن المصائب إذا قابلها الإنسان بالصبر دون احتساب الأجر صارت كفارة لذنوبه ،
وإن صبر مع احتساب الأجر صارت بالإضافة إلى تكفير الذنوب أجرا وثوابا،
ومعنى الاحتساب أن يعتقد في نفسه أن هذا الصبر سوف يثاب عليه فيحسن الظن بالله فيعطيه الله عز وجل ما ظنه به.
28) நீ பிரச்சாரம் செய்யும் போது மென்மையாக நடந்துகொள்:
இமாம் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்:
அல்லாஹ்வின் அடியானே உனது பிரச்சாரத்தில் மென்மையை கடைபிடிப்பது உம் மீது கடமை. மனிதர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிடாதீர். மார்க்கத்திலிருந்து அவர்களை விரண்டோடச் செய்துவிடாதீர். உமது தவறினால், உமது அறியாமையினால், தீங்கு ஏற்படுத்தும் நோவினை தரும் உமது கடும்போக்கினால் அவர்களை வெருப்பூட்டிவிடாதீர். உம் சகோதரனின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மிக நிதானமானவனாக, அதிக பொறுமையாளனாக, பணிவுடன் இலகுவாக கட்டுப்படுபவனாக, நல்லவார்த்தை பேசுபவனாக இருப்பது உமக்குக் கட்டாயம். அப்போது தான் அழைக்கப்படுபவனின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவீர். அவன் உம் பிரச்சாரத்தை நெருங்கி, அதனால் பயன்பெறுவான். அது குறித்து உம்மை பாராட்டி நன்றிசெலுத்துவான். கடினசித்தமோ மற்றவர்களை தூரமாக்கிவிடும்; நெருக்கத்தை ஏற்படுத்தாது; பிளவுபடுத்தும்; ஒற்றுமையை விளைவிக்காது...
*قال الشيخ ابن باز - رحمه الله :*
*فعليك يا عبد الله أن ترفق في دعوتك، ولا تشق على الناس، ولا تنفرهم من الدين، ولا تنفرهم بغلظتك ولا بجهلك، ولا بأسلوبك العنيف المؤذي الضار، عليك أن تكون حليمًا صبورًا، سلس القياد لين الكلام، طيب الكلام حتى تؤثر في قلب أخيك، وحتى تؤثر في قلب المدعو، وحتى يأنس لدعوتك ويلين لها، ويتأثر بها، ويثني عليك بها ويشكرك عليها، أما العنف فهو منفر لا مقرب، ومفرق لا جامع.. ومن الأخلاق والأوصاف التي ينبغي بل يجب أن يكون عليها الداعية، العمل بدعوته، وأن يكون قدوة صالحة فيما يدعو إليه، ليس ممن يدعو إلى شيء ثم يتركه، أو ينهى عنه ثم يرتكبه، هذه حال الخاسرين نعوذ بالله من ذاك وأما المؤمنون الرابحون فهم دعاة الحق يعملون به وينشطون فيه ويسارعون إليه، ويبتعدون عما ينهون عنه...*
*المصدر : [مجموع الفتاوى ٣٤٦/١]*
29) பாவங்களால் விளையும் வினைகள்
பாவங்கள் உள்ளத்தை வெகுவாகப் பாதிக்கின்றன. அப்பாதிப்பின் விளைவு உடலையும் தாக்குகின்றது.
இமாம் இப்னுல் கைய்யிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
பாவமானது..
-உள்ளத்தை மரணிக்கச் செய்யும்,
-அல்லது அதனை பயங்கரமாக நோய்வாய்ப்படுத்தும்,
-அல்லது அதன் பலத்தை குன்றச் செய்யும்;
இவற்றைத் தவிர்க்க முடியாது. இப்பலவீனம் இறுதியாக நபி ﷺ அவர்கள் பாதுகாப்புத் தேடிய எட்டு விடயங்களின் பக்கம் இட்டுச்செல்லும். அவை:
1. (எதிர்காலத்தைப் பற்றிய) கவலை (هَمّ)
2. (கடந்த காலத்தைப் பற்றிய) துக்கம் (حزن)
3. இயலாமை (عجز)
4. சோம்பேறித்தனம் (كسل)
5. கோழைத்தனம் (جبن)
6. கஞ்சத்தனம் (بخل)
7. கடன் சுமை (ضلَع الدين)
8. மனிதர்களின் அடக்குமுறை (غلبة الرجال)
...
மேற்படி எட்டு விடயங்களையும் விளைவிக்கும் காரணிகளில் மிகப் பலமான காரணியாக பாவங்களும் இருக்கின்றன.
அதேபோன்று,
1. கஷ்டமான சோதனை جهْد الْبَلَاء
2. துர்பாக்கியம் வந்தடைவது دَرَك الشَّقَاء
3. விதியின் கெடுதி سُوء الْقَضَاء
4. (எமக்கு ஏற்படும் சோதனைகளை கண்டு) எதிரிகள் மகிழ்ச்சியடைதல் (அதனால் ஏற்படும் மன உளைச்சல்) شَمَاتَة الْأَعْدَاء
ஆகியவற்றை ஏற்படுத்தும் வலுவான காரணிகளில் பாவங்களும் இருக்கின்றன.
மேலும்,
1. நற்பாக்கியங்கள் நீங்குவது زَوَال نِعْمَة الله
2. ஈடேற்றம் மாறி விடுவது تَحَوُّل عَافِيَتِه
3. தண்டனை (எதிர்பாராத விதமாக) திடீரென வருவது فُجَاءَة نِقْمَتِه
4. அல்லாஹ்வின் அனைத்து (வகை) கோபங்கள் جَمِيع سَخَطِه
ஆகியவற்றையும் ஏற்படுத்தும் வலுவான காரணிகளில் பாவங்களும் இருக்கின்றன.
நூல்:
الداء والدواء ١٧٨/١-١٧٩
قال الإمام ابن القيم – رحمه الله تبارك وتعالى – :
فالذنب إما أن يميت القلب ،
أو يُمرضَه مرضًا مخوفًا ،
أو يضعف قوته ، ولا بدّ ، حتى ينتهي ضعفه إلى الأشياء الثمانية التي استعاذ منها النبي – صلى الله عليه وسلم – ،
وهي : الهمّ والحزن ، والعجز والكسل ، والجبن والبخل ، وضلَع الدَّين وغلبة الرجال . وكل اثنين منها قرينان :
فالهم والحزن قرينان ، فإن المكروه الوارد على القلب إن كان من أمر مستقبل يتوقّعه أحدثَ الهمَّ ، وإن كان من أمر ماضٍ قد وقع أحدثَ الحزَنَ .
والعجز والكسل قرينان ، فإنّ تخلّفَ العبد عن أسباب الخير والفلاح إن كان لعدم قدرته فهو العجز ، وإن كان لعدم إرادته فهو الكسل.
والجبن والبخل قرينان ، فإن عدم النفع منه إن كان ببدنه فهو الجبن ، وإن كان بماله فهو البخل .
وضلَع الدين وقهر الرجال قرينان ، فإنّ استعلاء الغير عليه إن كان بحق فهو من ضلَع الدين، وإن كان بباطل فهو قهر الرجال .
والمقصود أنّ الذنوب من أقوى الأسباب الجالبة لهذه الثمانية ،
كما أنها من أقوى الأسباب الجالبة لجهد البلاء ، ودرك الشقاء ، وسوء القضاء ، وشماتة الأعداء ؛ ومن أقوى الأسباب الجالبة لزوال نعم الله وتحوُّل عافيته ، وفجاءة نقمته ، وجميع سَخَطه .
30) அல்லாஹ்விடம் மதிப்புள்ள முஃமின் உடனே தண்டிக்கப்படலாம். அல்லாஹ்விடம் மதிப்பையிழந்தவன் தன் பாவத்தை அதிகரிக்க அவகாசம் கொடுக்கப்படலாம்
இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
அல்லாஹ் தான் விரும்பும் தனது முஃமினான அடியானை அவன் தன்னிடம் கண்ணியமானவனாக இருக்கும் நிலையில், ஒரு சிறிய தவறுக்காக்கூட தண்டனை மூலம் பண்படுத்துகின்றான். அதனால் அந்த அடியான் எப்போதும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருப்பான். ஆனால் எவன் அல்லாஹ்வின் கண்ணியமான பார்வையில் இருந்து விழுந்து, அவனிடத்தில் இழிவாகிவிட்டானோ அப்படியானவனை அல்லாஹ் தண்டிக்காமல் பாவம் செய்வதற்கு விட்டுவிடுகின்றான்; அவன் ஒவ்வொரு முறை பாவம் செய்கின்ற பொழுதும் அல்லாஹ் அவனுக்கு ஒரு நிஃமத்தை (அருட்பாக்கியத்தை) புதிது புதிதாகக் கொடுத்துக் கொண்டிருப்பான்; இந்த ஏமாளியோ அதனை அல்லாஹ்விடம் தனக்கிருக்கும் கண்ணியத்தின் காரணமாகக் கிடைத்தது என்று நினைத்துக் கொள்கிறான். உண்மையில் அது (அல்லாஹ் அவனுக்குக் கொடுக்கும்) இழிவுபடுதலே என்பதை அறியாமல் இருக்கிறான். அல்லாஹ் அவனுக்கு கடுமையாக வேதனையையும் முடிவில்லாத தண்டனையையும் கொடுக்க நாடுகிறான் என்பதையும் அவன் அறியாமல் இருக்கிறான்.
நூல்
[ زاد المعاد ٥٠٦/٣ ]
قال ابن القيم رحمه الله تعالى: " يؤدب الله عبده المؤمن الذي يحبه وهو كريم عنده بأدنى زلة أو هفوة، فلا يزال مستيقظا حذرا. وأما من سقط من عينه وهان عليه فإنه يخلي بينه وبين معاصيه، وكلما أحدث ذنبا أحدث له نعمة، والمغرور يظن أن ذلك من كرامته عليه ولا يعلم أن ذلك عين الإهانة، وأنه يريد به العذاب الشديد، والعقوبة التي لا عاقبة معها "
31) இப்னுல் ஜவ்ஸி (றஹிமஹுல்லாஹ்) கூறினார்:
மனிதன் அல்லாஹ்வை திக்ர்செய்யது, அல் குர்ஆனை ஓதினால் தவிர அவன் ஷைத்தானிற்குக் கீழ் வீழ்த்தப்பட்டவனாகவே தொடர்ந்து இருந்து கொண்டிருப்பான்.
நூல்:
[التذكرة ١٥٢]
▪قال ابن الجوزي :
لا يزال الإنسان صريعا تحت الشيطان حتى يذكر الله ويتلو القرآن .
32) பாவத்தை தடுப்பதன் மூலமாக அதைவிடப் பெரிய பாவம் உருவாகாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்
இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
பாவங்களை தடுக்கும் விடயத்தில் நான்கு படித்தாரங்கள் இருக்கின்றன:
1. முதலாவது: (பாவத்தைத் தடுப்பதன் மூலம்) அது இல்லாமல் போய்; அதற்கு மாற்றமான நிலைமை உருவாதல்.
2. இரண்டாவது: பாவம் முழுமையாக ஒழியா விட்டாலும் அது குறைவடையும் நிலை.
3. மூன்றாவது: (ஒரு பாவத்தைத் தடுப்பதன் மூலமாக) அதே போன்ற ஒரு தீமை உருவாகும் நிலை.
4. நான்காவது: (தடுத்ததிற்குப் பிறகு) அதைவிட மோசமான நிலையை உருவாக்குதல்.
1,2- முதல் இரு படித்தரங்களும் மார்க்கத்தில் வரவேற்கப்படுகின்றன.
3- மூன்றாவது படித்தரம் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்பட வேண்டியது.
4- நான்காவது படித்தரம் ஹராமானதாகும்.
நூல்:
إعلام الموقعين (٧/٣)
قال ابن القيم رحمه الله:
فإنكار المنكر أربع درجات:
الأولــى: أن يزول ويخلفه ضده
الثانية : أن يقل و إن لم يزل
بجملته
الثالثة: أن يخلفه ما هو مثله
الرابعة: أن يخلفه ما هو شر منه
- فالدرجتان الأوليان مشروعتان
- والثالثة موضع الاجتهاد
- والرابعة محرمة
33) வெட்கம் ஒரு பாதுகாப்புக் கேடயம்
இப்னு உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
பெண்ணிடமிருந்து வெட்கம் அகற்றப்பட்டால் அவளுடைய மோசமான இறுதி முடிவைப் பற்றிக் கேட்க வேண்டாம்.
ஆதாரம்:
[مجلة الدعوة 1765/ 54]
قال العلامة ابن عثيمين رحمه الله تعالى:
*إذا نزع الحياء من المرأة فلا تسأل عن سوء عاقبتها*
34) உங்களுக்குக் கிடைத்திருக்கும் அல்லாஹ்வின் அருட்பாக்கியங்கள் நிலைக்க வேண்டுமா?
இமாம் அஹ்மத் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
அல்லாஹ் உனக்காக நீ விரும்புகின்ற அடிப்படையில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நீ ஆசைப்பட்டால், நீ அவனுக்காக அவன் விரும்புகின்ற அடிப்படையில் தொடர்ந்து இருக்க வேண்டும்.
நூல்:
الآداب الشرعية لابن مفلح ج1 / ص104:
قال الإمام أحمد رحمه الله تعالى:
إذا أحببت أن يدوم الله لك على ما تحب فدم له على ما يحب.
35) உலகத்தை கையில் வைத்துக் கொள் உள்ளத்தில் வைத்துக் கொள்ளாதே
இப்னு உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) கூறுகினார்:
இந்த உலகத்தில் இருந்து உனக்கு ஹலாலானவற்றை எடுத்துக்கொள்; அதிலிருந்து உனது பங்கை மறந்துவிடாதே! ஆனாலும் உலகத்தை உன் கையில் வைத்துக்கொள்; அதனை உன் உள்ளத்தில் வைத்துக்கொள்ளாதே! இதுவே முக்கியம்.
நூல்:
شرح رياض الصالحين 3/369
قال ابن عثيمين رحمه الله تعالى:
خذ من الدنيا ما يحل لك، ولا تنس نصيبك منها، ولكن اجعلها في يدك ولا تجعلها في قلبك، وهذا هو المهم.
36) ஸலமதுப்னு தீனார் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
அல்லாஹ்விடம் உன்னை நெருக்கிவைக்காத ஒவ்வொரு அருட்பாக்கியமும் சோதனையாகும்.
تهذيب الكمال 11/275:
قال الحافظ سلمة بن دينار رحمه الله:
كل نعمة لا تقربك من الله فهي بَلِيَّة.
37) இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
உள்ளங்கள் நிவாரணம் பெற அல்குர்ஆனை விட பயன் தரும் மருந்தில்லை. நிச்சயமாக அதுவே உள்ளங்களில் எந்த நோயையும் விட்டுவைக்காமல் குணப்படுத்துகின்ற உள்ளங்களுக்கான பரிபூரண நிவாரணமாகும். அது அவற்றின் முழுமையான ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்கும். மேலும், அது அவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்துலிருந்தும் முழுமையான பாதுகாப்பைக் கொடுக்கும்.
நூல்:
زاد المعاد ( ٤ / ٩٣ )
قال الإمام ابن القيم رحمه الله:
ليس لشِفَاءِ القُلوبِ دواءٌ قطُّ أنفعُ من القرآن، فإنَّه شفاؤها التَّام الكامل الذي لا يُغادر فيها سقما إلَّا أبرأه، ويحفظُ عليها صِحَّتَها المُطلقةَ، ويحميها الحِماية التَّامَّة من كُلِّ مُؤذٍ ومُضِرٍّ.
38) இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:
பொதுவாக மனிதனுக்கு மிகவும் பயனுள்ள விடயம் யாதெனில் அவன் தனது றbப்பை தனது வெளிரங்கத்தாலும் உள்ரங்கத்தாலும் வழிப்பட்டு நடப்பதாகும். பொதுவாக மனிதனுக்கு மிகவும் கேடுவிளைவிக்கும் விடயம் யாதெனில் அவன் தனது றbப்புக்கு தனது வெளிரங்கத்தாலும் உள்ரங்கத்தாலும் மாறுசெய்வதாகும்.
அவன் தனது றbப்பை இஃலாஸுடன் வணங்கி வழிபட்டால் அவனுக்கு ஏற்படும் அவன் விரும்பாத அனைத்து விடயங்களும் அவனுக்கு நலவாகவே இருக்கும். அவன் தனது றbப்பை வணங்கி வழிபடுவதில் இருந்து தூரமாகியிருந்தால் அவனிடம் இருக்கும் அனைத்து விரும்பத்தக்க விடயங்களும் அவனுக்கு கெடுதியாகவே இருக்கும்.
நூல்:
[الفوائد لابن القيم رحمه الله: 91]:
أنفع الأشياء للإنسان على الإطلاق طاعة ربه، بظاهره وباطنه، وأضر الأشياء عليه على الإطلاق معصيته، بظاهره وباطنه، فإذا قام بطاعته وعبوديته مخلصًا له، فكل ما يجري عليه مما يكرهه يكون خيرًا له.
وإذا تخلى عن طاعته وعبوديته، فكل ما هو فيه من محبوب هو شر له.
39) உள்ளத்திற்கான ஒரு நோய் நிவாரணி
இமாம் இப்னுல் ஜவ்ஸி (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
உடல் நோய்களை குணப்படுத்துவதில் தேன் செயல்படுவதைப் போல உள்ளத்திலுள்ள நோய்களை குணப்படுத்துவதில் குர்ஆன் ஓதல் செயல்படுகிறது.
நூல்:
التبصرة - ٧٩
قال الإمام ابن الجوزي رحمه الله :
" تلاوة القرآن تعمل في أمراض الفؤاد ،
ما يعمله العسل في علل الأجساد ! ".
40) உனக்கு ஏற்படும் சோதனைகள் உனது நலனுக்காகவே!
இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:
எவர் அல்லாஹ்வையும் அவனது பெயர்களையும் பண்புகளையும் பற்றி சரியான அறிவை பெற்றுவிடுகிறாரோ, அவர் தனக்கு ஏற்படும் விருப்பத்துக்கு மாறான விடயங்கள் மற்றும் சோதனைகள் அனைத்திலும் தனது அறிவுக்கும் சிந்தனைக்கும் எட்டாத பல்வேறு நலன்களும் பயன்களும் இருக்கின்றன என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்வார்.
ஒரு அடியானுக்குரிய நலன்கள் அவன் விரும்புகின்ற விடயங்களில் இருப்பதைவிட அவனது விருப்பத்திற்கு மாறான விடயங்களிளேயே அதிகமாக இருக்கின்றன.
ஆத்மாகளுக்கான பெரும்பாலான கேடுகளும் அவற்றின் அழிவிற்கான காரணங்களும் அவற்றின் விருப்பத்திற்குரிய விடயங்களில் தான் இருப்பதைப் போல ஆத்மாக்களுக்குரிய பெரும்பாலான நலன்கள் அவற்றின் விருப்பத்திற்கு மாறான விடயங்களில் தான் இருக்கின்றன.
நூல்:
[الفوائد: 91]
قال ابن القيم رحمه الله:
فمن صحت له معرفة ربه، والفقه في أسمائه وصفاته علم يقينًا أن المكروهات التي تصيبه، والمحن التي تنزل به فيها ضروب من المصالح، والمنافع التي لا يحصيها علمه، ولا فكرته.
بل مصلحة العبد فيما يكره أعظم منها فيما يحب، فعامة مصالح النفوس في مكروهاتها، كما أن عامة مضارها وأسباب هلكتها في محبوباتها.
41) இரு பாதைகளில் நீ விரும்புகின்ற ஒன்றைத் தேர்வு செய்து கொள்!
இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
நிச்சயமாக நாவு மௌனமாக இருக்காது. ஒன்று அது திக்ர் செய்யக்கூடியதாக இருக்கும் அல்லது வீண் பேச்சுக்களை பேசக் கூடியதாக இருக்கும். இவை இரண்டில் ஒன்றை நிச்சயம் தவிர்க்க முடியாது.
நீ உனது ஆத்மாவை சரியான விடயத்தில் ஈடுபடுத்தவில்லை என்றால் அது உன்னை தவறான விடயத்தில் ஈடுபடுத்தும்.
நீ உள்ளத்தில் அல்லாஹ்வின் அன்பை குடிகொள்ளச் செய்யாவிட்டால் படைப்புக்களின் அன்பு அதில் குடிகொண்டு விடும். இதனைத் தவிர்க்க முடியாது.
நீ நாவை திக்ரில் ஈடுபடுத்தாது விட்டால் அது உன்னை வீண் பேச்சுக்களில் ஈடுபடுத்திவிடும்.
இவ்விரு விடயங்களில் ஒன்றை உனக்காக நீ தேர்ந்தெடுத்துக் கொள். உன்னை நீ இவ்விரு வசிப்பிடங்களில் ஒன்றில் வசிக்க வைத்துக் கொள்.
நூல்:
[الوابل الصيّب (١٧٦-١٧٧) ]
قال ابن القيم رحمه الله :
فإن اللسان لا يسكت البتّة:
فإما لسان ذاكر
وإمّا لسان لاغ،
ولابُدّ من أحدهما.
*فهي النّفس إنْ لمْ تشغلها بالحق شغلتك بالباطل ..*
*وهو القلب إنْ لمْ تسكنه محبّة الله عز وجل، سكنته محبّة المخلوقين ولابـُدّ ..*
وهو اللسان إنْ لمْ تشغله بالذكر شغلك باللغو وهو عليك ولابـُدّ ..
فاخـْتر لنَفْسك إحـْدى الخطتين وأنزلها في إحْدى المنزلتين .
42) இஸ்லாத்தை சரியாகக் கடைபிடிக்கும் முஸ்லிமுக்குரிய ஒரு அடையாளம்
இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
நபி ﷺ அவர்கள் முழுப் பேணுதலையும் ஒரே வார்த்தையில் உள்ளடக்கி, பின்வருமாறு கூறியிருக்கிறார்கள்: "ஒரு மனிதன் தனக்குத் தேவையில்லாத விடயங்களை விட்டுவிடுவது அவனுடைய இஸ்லாம் அழகாக இருப்பதி(ன் அடையாளங்களி)ல் ஒன்றாகவுள்ளது."
இந்த ஹதீஸ், பேச்சு, பார்வை, செவிமடுத்தல், பிடித்தல், நடத்தல், சிந்தித்தல், ஏனைய வெளிப்படையான மற்றும் உள்ளத்துடன் சம்மந்தப்பட்ட அசைவுகள் அனைத்திலும் அவசியமற்ற விடயங்களை விட்டுவிடுவதை உள்ளடக்குகின்றது. இது பேணுதல் பற்றி எடுத்துரைக்கும் ஒரு பூரணமான வார்த்தையாக அமைந்திருக்கின்றது.
நூல்:
مدارج السالكين (2/ 22)
قال ابن القيم رحمه الله : وقد جمع النبي صلى الله عليه وسلم الورع كله في كلمة واحدة، فقال: ((من حسن إسلام المرء: تركُه ما لا يعنيه))، فهذا يعم الترك لما لا يعني: من الكلام، والنظر، والاستماع، والبطش، والمشي، والفكر، وسائر الحركات الظاهرة والباطنة، فهذه كلمة شافية في الورع.
43) இச்சையைக் கட்டுப்படுத்தாமல் செயல்படுவது ஆபத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும்
இமாம் இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
இச்சையானது கெடுதி, மறதி, பயம் ஆகியவற்றுக்குரிய கதவை திறந்துவிடும்; அதனால் உள்ளமானது அல்லாஹ்வை விட்டும் தூரமாகி, அவனது நினைவை மறந்து, அவனல்லாதவர்களில் கவனமெடுத்து, அது எதனை ஆசைப்படுகின்றதோ மேலும் அது எதனை அஞ்சுகின்றதோ அவற்றினுள் மூழ்கடிக்கப்பட்டதாகவே இருக்கும். அந்த மனிதன்
அல்லாஹ் அல்லாதவர்களிலும் அவனுடன் சம்பந்தப்படாத விடயங்களிலும் ஈடுபாடுகாட்டுவான்; அவனது சிந்தனைகள் சிதறடிக்கப்பட்டுவிடும்; உலக மோகம் அவனுடைய உள்ளத்தை மூடிவிடும்.
நூல்:
[ مَجْمُوعُ الفَتَاوَى|| ٥٩٧/ ١٠ ]
قَالَ ابن تيميَّة - رَحِمَهُ اللَّـه -
"والشَّهْوَةُ تَفْتَحُ بَابَ الشَّرِّ وَالسَّهْوِ وَالْخَوْفِ ؛
فَيَبْقَى الْقَلْبُ مَغْمُورًا فِيمَا يَهْوَاهُ وَيَخْشَاهُ غَافِلًا عَنْ اللَّـهِ ،
رَائِدًا غَيْرَ اللَّـهِ ،
سَاهِيًا عَنْ ذِكْرِهِ ،
قَدْ اشْتَغَلَ بِغَيْرِ اللَّـهِ ،
قَدْ انْفَرَطَ أَمْرُهُ ،
قَدْ رَانَ حُبُّ الدُّنْيَا عَلَى قَلْبِهِ " .
44) மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதால் கிடைக்கும் பயன்கள்
இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
நிச்சயமாக உபகாரம் செய்வதானது உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்; நெஞ்சத்தை விரிவுபடுத்தும்; அருட் பாக்கியங்களை கொண்டுவரும்; இறைத் தண்டனைகளை தடுக்கும். உபகாரம் செய்யாமலிருப்பதானது இழிவையும், மனதில் நெருக்கடியையும் கட்டாயமாக ஏற்படுத்தும்; அருள் பாக்கியங்கள் வந்து சேருவதை தடுத்துவிடும்.
கோழைத்தனம் (ஜுப்ன்) என்பது உடலால் உபகாரம் செய்யாமல் இருப்பதைக் குறிக்கும். கஞ்சத்தனம் (புஹ்ல்) என்பது செல்வத்தால் உபகாரம் செய்யாமல் இருப்பதைக் குறிக்கும்.
நூல்:
طريق الهجرتين 460
قال الإمام ابن القيم رحمه الله تعالى :
فإنَّ الإحْسَان يفرح القلب ويشرح الصَّدر ويجلب النِّعم ويدفع النِّقم، وتركه يوجب الضَّيم والضِّيق، ويمنع وصول النِّعم إليه، فالجبن: ترك الإحْسَان بالبدن، والبخل: ترك الإحْسَان بالمال.
45) அல்லாஹ்வை திக்ர் செய்வதின் - (நினைவுகூர்வதின்) மகிமை
இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
திக்ர் செய்வதில் நூற்றுக்கும் அதிகமான பயன்கள் இருக்கின்றன. அவற்றில் சில வருமாறு:
- அது ஷைத்தானைத் துரத்திவிடும்; அவனைத் தாக்கும்.
- அது றஹ்மானின் பொருத்தத்தை ஈட்டித்தரும்.
- அது துக்கத்தையும் மனக் கவலையையும் அகற்றிவிடும்.
- உள்ளத்தில் மகிழ்ச்சியை உருவாக்கும்.
- உள்ளத்தையும் உடலையும் பலப்படுத்தும்.
- ரிzஸ்கை - வாழ்வாதாரத்தைப் பெருகச் செய்யும்.
எனவே, எவர் அல்லாஹ்வின் அன்பைப் பெற விரும்புகிறாராரோ அவர் அவனை நினைவுகூர்வதை வழமையாக்கிக் கொள்ளட்டும். ஆகவே, திக்ர் செய்வது (அல்லாஹ்வின்) அன்பிற்கான கதவாகும், மேலும் அதற்கான மிகப்பெரிய பாதையுமாகும்.
நூல்:
الوابل 42
قال الإمام ابن القيم رحمه الله
وفي الذكر أكثر من مائة فائدة " منها " :
أنه يطرد الشيطان ويقمعه
أنه يرضي الرحمن
أنه يزيل الهم والغم عن القلب
أنه يجلب للقلب الفرح.
أنه يقوى القلب والبدن.
أنه ينور الوجه والقلب.
أنه يجلب الرزق..
فمن أراد أن ينال محبة الله فليلهج بذكره فالذكر باب المحبة وشارعها الأعظم.
46) இமாம் இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
பாவியானவன் பல்வேறு வகை இன்பங்களை அனுபவித்தாலும் அவனது உள்ளத்தில் உள்ளங்களைத் துண்டாடுகின்ற தனிமை உணர்வும் இழிவும் கைசேதமும் இருந்து கொண்டிருக்கும்.
நூல்:
[الجواب الكافي١٢٠]
قال الإمام ابن تيمية-رحمه الله-:
«العاصي وإن تنعّمَ بِأصناف النّعم، ففي قلبه مِن الوحشةِ والذلّ والحسراتِ التي تقطّع القلوب».
47) இப்னு அப்தில்பர் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
எவர் தனது சிந்தனையை வைத்துத் தற்பெருமை கொள்கிறாரோ அவர் வழிதவறிவிடுவார். எவர் தன்னிடம் இருக்கும் புத்திக்கூர்மை போதுமானது என்று நினைக்கிறாரோ அவர் சறுக்கிவிடுவார். எவர் மனிதர்களுக்கு மத்தியில் பெருமையாகநடக்கிறாரோ அவர் இழிவடைவார். எவர் தரம் கெட்டவர்களுடன் சேருகிறாரோ அவர் அற்பமானவாராகக் கருதப்படுவார். எவர் அறிஞர்களிடம் உட்காருகிறாரோ அவர் மதிக்கப்படுவார்.
நூல்:
جامــ؏ بـيان العـــلم [[ ١٤٣/١ ]]
قـ✑ـال ابــن ؏ــبـد البــر
رحمـہ اللـہ تعالـﮯ :
مــن أُعـجب بـرأيہ ضـل ومــن استغنـﮯ بعقلـہ زل ومــن تڪبر علـﮯ الناس ذل ومــن خالط الأنذال حُقّر ومـــن جالس العلماء وُقِّر "
48) மாலிக் இப்னு தீனார் (றஹிமஹுல்லாஹ்) முகீறஹ் இப்னு ஹபீப் (றஹிமஹுல்லாஹ்) அவர்களைப் பார்த்துக் கூறினார்கள்:
முகீறஹ்வே! உன்னுடைய ஒவ்வொரு நண்பனைப் பற்றியும் சிந்தித்துப்பார். எந்த நண்பரிடமிருந்து உன்னுடைய மார்க்க விடயத்தில் நீ நற்பயனடையவில்லையோ அவனை விட்டும் உன் தோழமையே அகற்றிக்கொள்.
நூல்:
{الزهد للإمام أحمد ١٨٧٧}
قال ﻣﺎﻟﻚ ﺑﻦ ﺩﻳﻨﺎﺭ ﻟﻠﻤﻐﻴﺮﺓ ﺑﻦ ﺣﺒﻴﺐ :
ﻳﺎ ﻣﻐﻴﺮﺓ ، اﻧﻈﺮ ﻛﻞ ﺟﻠﻴﺲ ﻭﺻﺎﺣﺐ ﻻ ﺗﺴﺘﻔﻴﺪ ﻓﻲ ﺩﻳﻨﻚ ﻣﻨﻪ ﺧﻴﺮا ﻓﺎﻧﺒﺬ ﻋﻨﻚ ﺻﺤﺒﺘﻪ.
49) தாபிஈன்களில் ஒருவரான யஹ்யா இப்னு அபீ கஸீர் (றஹிமஹுல்லாஹ்) [மரணம்: ஹி 129] அவர்கள் கூறினார்கள்:
சூனியக்காரன் ஒரு மாதத்தில் விளைவிக்க முடியாத குழப்பத்தை ஒரு கோள் பேசுபவன் ஒரு குறுகிய நேரத்தில் விளைவித்துவிடுகிறான்.
நூல்:
البيهقي في شعب الإيمان (ج13/ص447-448)
قال يحيى بن أبي كثير : النمام يفسد في ساعة ما لا يفسد الساحر في شهر.
50) இல்மின் மகிமை
இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
"இல்ம்" ஆனது நபிமார்கள் விட்டுச்சென்ற வாரிசுச் சொத்தாகும். செல்வம் அரசர்களும் செல்வந்தர்களும் விட்டுச்சென்ற வாரிசுச் சொத்தாகும்.
"இல்ம்" ஆனது அதனை பெற்றவரைப் பாதுகாக்கும். செல்வத்தைப் பெற்றவரே தனது செல்வத்தை பாதுகாப்பார்.
செல்வம் செலவு செய்வதால் முடிவடையும். இல்மை செலவு செய்வதால் அது வளர்ச்சியடையும்.
செல்வந்தர் மரணித்தால் அவரது செல்வம் அவரை பிரிந்துவிடும். இல்ம் அதை சுமந்தவரின் கப்ருக்குள் அவரோடு நுழைந்துகொள்ளும்.
இல்ம் செல்வத்தை நிர்வகிக்கும்; செல்வமோ இல்மை நிர்வகிக்காது.
செல்வம் முஃமினுக்கும் கிடைக்கும், காஃபிருக்கும் கிடைக்கும், நல்லவனுக்கும் கிடைக்கும், கெட்டவனுக்கும் கிடைக்கும்; பயனுள்ள இல்மோ முஃமினைத் தவிர வேறு எவருக்கும் கிடைக்காது.
ஆலிமின் பக்கம் அரசர்களுக்கும் தேவையிருக்கும் ஏனையவர்களுக்கும் தேவை இருக்கும்; செல்வந்தனின் பக்கம் இல்லாதவருக்கும் வறியவருக்கும் மட்டுமே தேவை இருக்கும்.
நூல்:
[ مفتاح دار السعادة (٤١٣/١) ]
قـال الإمـام ابن الـقـيم رحمه الله تعالى :
الـْعلم مِيرَاث الأنبيـاء، وَالـْمَال مِيرَاث الـْمُلُوك والأغنيـاء .
الْـعلم يحرس صَاحبه وَصَاحب المَال يحرس مَاله .
الـمَال تُذهبه الـنَّفَقَات، وَالـعلم يزكو على الـنَّفَقَة .
صَاحب الـمَال إِذا مَـاتَ فَارقه مـَاله وَالْـعلم يدْخل مَعَه قَبره .
الْـعلم حَاكم على الـمَال وَالـْمَال لَا يحكم على الـْعلم .
الـمَال يحصل لِلْمُؤمنِ وَالْكَافِر، وَالـْبَر والـفاجر وَالْـعلم الـنافع لَا يحصل إلا لِلْمُؤمنِ .
✭ الـْعَالم يحْتَاج إليه الْمُلُوك فَمن دونهم وَصَاحب الـمَال إِنَّمَا يحْتَاج إليه أهل الـْعَدَم والـفاقة .
51) இமாம் அஹ்மத் (றஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் ஓய்வு எப்போது? என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர்கள்: 'நான் சுவனத்தினுள் முதலாவது காலடியை எடுத்து வைக்கின்ற போது தான்' என்று கூறினார்கள்.
நூல்:
[ طبقات الحنابلة - (٢٩١/١) ]
۞ سئـل الإمـام أحـمد رحمه الله تعالى :《 متى الـراحـة ؟ قـال : عنـد أوّل قـدم أضعهـا في الـجنة 》
52) நேரம் பொன்னானது
அஹ்மத் இப்னு ஸாலிஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்: ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்:
நீ தலைமைத்துவத்திற்கு வர முன்னால் (மேலதிகமாக) இபாதத்தில் ஈடுபடு; ஏனெனில் நீ தலைமைப் பொறுப்பிற்கு வந்தபிறகு உன்னால் (மேலதிகமாக) இபாதத்தில் ஈடுபடுவதற்கு முடியாதிருக்கும்.
நூல்:
الـسـّيـر (٤٩/١٠)
قـال أحـمد بن صالح رحمه الله : قـال لـي الـشافـعي رحمه الله :
《 تعبّـد مـِنْ قبـْل أنْ ترأَّس ، فـإنك إنْ ترأسـْت لـمْ تقـْدرْ أنْ تتعبـّد 》
53) பாவங்கள் வணக்க வழிபாட்டிலுள்ள இன்பத்தை தொலைத்து விடும்
இப்னுல் முபாரக் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்: வுஹைbப் (றஹிமஹுல்லாஹ்) அவர்களிடத்தில் பின்வருமாறு கேட்கப்பட்டது:
பாவத்தில் ஈடுபடுகின்றவர் இபாதத்தின் சுவையை பெற்றுக்கொள்வாரா?
அதற்கவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
பாவம் செய்வதற்கு எண்ணுபவர் கூட இபாதத்தின் சுவையை சுவைக்கமாட்டார்.
நூல்:
الـسـيـر (١٩٩/٧)
قـال عبْدُ الله ابن الـمبارك رحمه الله : قيـل لـِوهيـبٍ :
《 يَجـِدُ طعْـمَ الـعِبـادَة مَـنْ يَعْـصـي ؟
قـال : ولا مَـنْ يهـمُّ بالـمَعْصِيـة 》
54) பாவத்தின் இழிவு நிலை பாவியுடன் சேர்ந்திருக்கும்
சுலைமான் அத்-தைமி (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
நிச்சயமாக மனிதன் பாவம் செய்துவிட்டு, அவன் மீது அந்தப் பாவத்தின் இழிவு இருக்கும் நிலையில் அவன் காலைப் பொழுதை அடைகின்றான்.
நூல்:
الـسـيـر (٢٠٠/٦)
قـال سليمـان الـتيمـي رحـمه الله تعـالى :《 إنّ الـرَّجُـل لَـيُذْنِبُ الـذّنبَ فيُصْبـِحُ وعليْـهِ مذَلّـتـُهُ 》
55) நீ யாருக்கு பாவம் செய்கிறாய் என்பதை சிந்தித்துப் பார்
பிலால் இப்னு ஸஃத் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்: (நீ செய்யும்) பாவம் சிறிதாக இருக்கிறதே என்பதைப் பார்க்காதே! ஆனாலும், நீ யாருக்கு மாறுசெய்கிறாய் என்பதைப் பார்!
நூல்:
الـسـيـر (٩١/٥)
قـال بلال بن سعـد رحـمه الله تعالى :《 لا تنظـُر إلى صـِغـَر الـخَطيئـَة ، ولـكنِ انظُـر إلى مَـنْ عَصَيـْتَ 》
56) கொள்ளையடிக்க வந்த வீட்டில் கொள்ளைபோன இதயம்
மாலிக் இப்னு தீனார் (றஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் ஒரு திருடன் நுழைந்தான். (அவரது வீட்டில் இருந்து) எடுப்பதற்கு அவனுக்கு எந்த ஒன்றும் கிடைக்கவில்லை.
(இதை அவதானித்த) மாலிக் இப்னு தீனார் அவர்கள் (அவனைப் நோக்கி) dதுனியாவில் இருந்து எந்த ஒன்றும் உமக்கு கிடைக்கவில்லை; 'ஆகிறஹ்'விலிருந்து எதையேனும் பெற்றுக் கொள்ள விரும்புகிறீரா? என்று கேட்டார்கள்.
அதற்கு அவனும் 'ஆம்' என்று கூறினான்.
அதற்கு அவர், 'வுழூ செய்து, இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்' என்று கூறினார். அவனும் அவ்வாறு செய்துவிட்டு, பின்னர் உட்கார்ந்து கொண்டான். அவர் மஸ்ஜிதிற்குச் சென்றபோது அவனும் சென்றான்.
இமாம் அவர்களிடம் 'யார் இவர்?' என்று கேட்கப்பட்ட போது, 'எம்மிடம் திருட வந்தார்; நாம் அவரிடம் திருடி விட்டோம்' என்று பதிலளித்தார்கள்.
الـسـيـر (١٩٠/٤)
《 دخـل على مـالك بن دينـار رحمه الله لِـصٌّ ، فمـا وجَـد مـا يأخـذ ،
✾ فنـاداهُ مـالك : لـمْ تجـدْ شيئًـا مـِنَ الـدنيا ، فترغـب في شيء مـِنَ الآخـرة ؟
✺ قـال : نعـم، قـال : توضَّـأ وصَـلِّ ركعتيـن ، ففعـَل، ثـم جلـس ، وخـرَج إلى الـمسجد ، وخـرَج اللـص ،
❂ فـسُئـِلَ : مـَنْ ذَا ؟
۞ قَـالَ : جـَاءَ يَسـْرِقُنـَا فَسَـرَقْنـَاهُ 》
57) பாவங்களின் விளைவுகள்
இப்னு அபீ லைலா (றஹிமஹுல்லாஹ்) கூறினார்:
அபூத்தர்தா (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள், மஸ்லமஹ் இப்னு மஹ்லத் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு பின்வருமாறு மடல் எழுதி அனுப்பினார்கள்:
உங்கள் மீது சலாம் உண்டாவதாக! ஒரு அடியான் அல்லாஹ்விற்கு மாறு செய்தால், அல்லாஹ் அவனை வெறுப்பான். அல்லாஹ் அவனை வெறுத்தால், தன்னுடைய அடியார்களுக்கும் அவன் மீது வெறுப்பை ஏற்படுத்துவான்.
நூல்:
الـسـيـر (٣٤٥/٢)
عـن ابن أبي لـيلـى رحمه الله قـال :
۞ كتـب أبـو الـدرداء إلى مسلمـة بن مخْلـد :
《 سـلامٌ عليـك ، أمّـا بعـد ، فـإنّ الـعبد إذا عمِـل بمعصيـةِ اللهِ أبْغضـهُ الله ، فـإذا أبْغضـهُ الله : بغَّضـهُ إلى عبـاده 》
58) 'திக்ர்' செய்வதன் முக்கியத்துவம்
இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
இவ்வுலகில் கிடைக்கும் கடுமையான தண்டனை யாதெனில் அல்லாஹ் உன் நாவை அவனை நினைவுபடுத்துவதை விட்டும் தடுப்பதாகும்...
ஷைத்தான் மனிதன் மீது போடும் முதல் விலங்குச் சங்கிலி 'திக்ர்' செய்ய விடாமல் நாவை விலங்கிடுவதாகும். நாவு விலங்கிடப்பட்டால் ஏனைய உடலுறுப்புகள் சரணடைந்துவிடும்.
ٱسْتَحْوَذَ عَلَيْهِمُ ٱلشَّيْطَٰنُ فَأَنسَىٰهُمْ ذِكْرَ ٱللَّهِۚ
(ஷைத்தான் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி, அல்லாஹ்வின் நினைவை அவர்களுக்கு மறக்கவைத்து விட்டான்.) [19:58]
எனவே, அல்லாஹ்வை திக்ர் செய்பவனாக இருந்து கொள்!
நூல்:
الوابل الصيب لابن القيم ص:42
أشد عقوبة في الدنيا
أن يمسك الله لسانك عن ذكره ...
أول قيود الشيطان على الإنسان تقييد اللسان عن الذكر ، فإذا قُيّد اللسان استسلمت الأركان. (استحوذ عليهم الشيطان فأنساهم
ذكر الله) فكن ذاكراً لله.
59) ஒளிமயமான உள்ளம்
இமாம் ஷாபிஈ (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
எவர் தன் உள்ளத்தை அல்லாஹ் ஒளிமயமாக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர் மீது தனிமையில் இருப்பதும், குறைவாக உணவு உட்கொள்வதும், மடையர்களுடனும் நேர்மையும் ஒழுக்கமுமற்ற சில அறிவுள்ளவர்களுடனும் கூட சேராமல் இருப்பதும் அவசியமாகும்.
நூல்:
المجموع للإمام النووي(31/1):
قال الإمام الشافعي، رحمه الله:
«من أحبَّ أن يُنوِّر الله قلبه، فعليه: بالخَلوة، وقِلَّة الأكل، وترك مُخالطة السُفهاء، وبُغضِ أهلِ العلمِ الذين ليس معهم إنصافٌ ولا أدَب»
60. இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
கவலை உள்ளத்தை பலவீனப்படுத்தும்; மனஉறுதியை குன்றச் செய்யும்; நாட்டத்தை பாதிக்கும். ஷைத்தானுக்கு ஒரு முஃமின் கவலைப்படுவதை விட விருப்பமான ஒன்று கிடையாது. அல்லாஹ் கூறுகிறான்:
{ஈமான் கொண்டவர்களைக் கவலைப்படச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்துள்ளதே (இந்த) இரகசிய(ப் பேச்சாகு)ம்...} [அல்குர்ஆன் 58:10]
நூல்:
["طريق الهجرتين": (٢٧٩)]
قال الإمام ابن القيِّم -رَحِمَهُ اللهُ تَعَالَى-:
الحُـزن يُضعف القَلب ويُوهن العزم، ويَـضـر الإرادة، ولا شَـيء أحَـب إلَـى الشيطَـان من حُـزن المُـؤمن؛
قال تعالى: {إِنَّمَا النَّجْوَى مِن
َ الشَّيْطانِ لِيَحْزُنَ الَّذِينَ آمَنُوا}
61. இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
மனிதர்களுக்கு மத்தியில் ஆலிமின் அந்தஸ்தானது உடல் உறுப்புகளுக்கு மத்தியில் உள்ளத்தின் அந்தஸ்தைப் போன்றதாகும்.
நூல்:
مفتاح دار السعادة ٣٥٣/١
قال ابن القيم رحمه الله:
العالِم في الناس كالقلب في الأعضاء.
62. உலகப் பற்றின்மைக்குரிய அடையாளம்
புழைல் இப்னு இயாழ் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
உலகத்திலும் மனிதர்களிடத்திலும் பற்றற்று இருப்பதற்குரிய அடையாளம் யாதெனில்,
- மனிதர்கள் உன்னைப் புகழ்வதை நீ விரும்பாமல் இருப்பதும்
- அவர்களது இகழ்ச்சியை பொருட்படுத்தாமல் இருப்பதுமாகும்.
- மேலும் நீ அறியப்படாமல் இருப்பதற்கு முடியுமாக இருந்தால் அதனை செய்து கொள்.
- நீ அறியப்படாமல் இருப்பதால் உன் மீது குற்றமில்லை.
- நீ புகழப்படாமல் இருப்பதாலும் உன் மீது குற்றமில்லை.
- நீ அல்லாஹ்விடத்தில் புகழுக்குரியவனாக இருந்தால், நீ மனிதர்களிடத்தில் இகழப்படுபவனாக இருப்பதில் உன் மீது எந்தக் குற்றமுமில்லை.
நூல்:
حـلـيـة الأولـيـاء ٩٠/٨ :
قال الفضيل بن عياض رحمه الله: "علامة الزهد في الدنيا وفي الناس أن لا تحب ثناء الناس عليك ولا تبالي بمذمتهم وإن قدرت ألا تعرف فافعل ولا عليك ألا تعرف وما عليك ألا يثنى عليك وما عليك أن تكون مذموما عند الناس إن كنت محموداً عند الله"
63. கனிவின் மேன்மை
இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
மனிதர்களுடன் மென்மையாக நடந்து கொள்வதையும் அவர்களுக்கு நல்லதையே விரும்புவதையும் விட உள்ளத்திற்கு பயனளிக்கக்கூடிய வேறு எதுவும் கிடையாது.
மற்றவருடன் மென்மையான அணுகு முறையை கடைபிடிக்கும் போது, அவன் நெருக்கமற்ற ஒருவனாக இருந்தால் அவனது அன்பையும் நேசத்தையும் சம்பாதித்துக் கொள்வாய்; அவன் நண்பனாக, நேசனாக இருந்தால் நட்பும், நேசமும் தொடர்ந்தும் நிலைத்திருக்கச் செய்துவிடுவாய்; அவன் உன்னை வெறுக்கின்ற ஒரு எதிரியாக இருந்தால் உனது மென்மையின் காரணமாக அவனது நெருப்பை அணைத்து, அவனது கெடுதியை விட்டும் உன்னைப் பாதுகாத்துக் கொள்வாய்.
- எவர் மனிதர்களின் செயல்களை நல்லெண்ணத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ள முயற்சிக்கிறாரோ அவரது எண்ணம் ஈடேற்றம் அடைந்துவிடும்; அவரது நெஞ்சம் விரிவடையும்; அவரது உள்ளம் ஆரோக்கியமடையும்; அல்லாஹ் அவரை கெடுதிகளிலிருந்தும் வெறுக்கத்தக்க விடயங்களில் இருந்தும் பாதுகாத்து விடுவான்.
நூல்:
مدارج السالكين (2/ 51)
يقول ابن القيّم - رحمه الله :
" فليس للقلب أنفع من معاملة الناس باللطف وحب الخير لهم؛
فإن معاملة الناس بذلك إما أجنبي فتكتسب مودّته ومحبته ، وإما صاحب وحبيب فتستديم صحبته ومودّته ، وإما عدوٌّ مبغض فتُطفئ بلطفك جمرته وتستكفي شره ،
ومن حمل الناس على المحامل الطيبة وأحسن الظنّ بهم سلمت نيته وانشرح صدره وعوفي قلبه وحفظه الله من السّوء والمكاره ".
64. முஸ்லிம்களிடம் பலவீனம் ஏற்படுவதற்கான காரணம்
இப்னு தைமியஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
முஸ்லிம்களிடம் பலவீனம் ஏற்பட்டு; எதிரிகள் அவர்களை மிகைத்து; கொலை செய்து கொண்டு இருப்பார்களானால், அதற்கான காரணம் அவர்கள் செய்து கொண்டிருக்கும் பாவங்களாகவே இருக்கும். அதாவது அவர்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் உள்ரங்கமாகவும் பகிரங்கமாகவும் குறை செய்து கொண்டு இருப்பார்கள் அல்லது உள்ரங்கமாகவும் பகிரங்கமாகவும் தடைகளை மீறி எல்லை மீறிக் கொண்டிருப்பார்கள்.
நூல்:
【ﻣﺠﻤﻮﻉ ﺍﻟﻔﺘﺎﻭﻯ ٦٤٥/١١ 】
ﻗﺎﻝ ﺷﻴﺦ ﺍﻹﺳﻼم ﺍﺑﻦ ﺗﻴﻤﻴﺔ
-ﺭﺣﻤﻪ ﺍﻟﻠﻪ - :
" ﻭﺇﺫﺍ ﻛﺎﻥ ﻓﻲ ﺍﻟﻤﺴﻠﻤﻴﻦ ﺿﻌﻒ
ﻭﻛﺎﻥ ﻋﺪﻭﻫﻢ ﻣﺴﺘﻈﻬﺮًﺍ ﻋﻠﻴﻬﻢ
ﻭﻳﺬﺑﺤـﻮﻥ ﻭﻳﺸﻨﻘــﻮﻥ؟
ﻛﺎﻥ ﺫﻟﻚ ﺑﺴﺒﺐ ﺫﻧﻮﺑﻬﻢ ﻭﺧﻄﺎﻳﺎﻫﻢ
ﺇﻣﺎ ﻟﺘﻔﺮﻳﻄﻬﻢ ﻓﻲ ﺃﺩﺍﺀ ﺍﻟﻮﺍﺟﺒﺎﺕ ﺑﺎﻃﻨًﺎ ﻭﻇﺎﻫﺮًﺍ
ﻭﺇﻣﺎ ﻟﻌﺪﻭﺍﻧﻬﻢ ﺑﺘﻌﺪﻱﺍﻟﺤﺪﻭﺩ ﺑﺎﻃﻨًﺎ ﻭﻇﺎﻫﺮًﺍ ".
65. பாவங்கள் வெட்கத்தை அழிக்கும்
இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
பாவங்கள் ஒரு அடியானின் வெட்கத்தைக் குறைத்துவிடும்; சில வேளைகளில், காலப்போக்கில் அவனிடம் முழுமையாக வெட்கமற்றுப் போய்விடும். எந்த அளவுக்கெனில் மனிதர்கள் தன்னுடைய மோசமான நிலையை அறிந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றியோ, அவர்கள் தன்னை அவதானிக்கிறார்கள் என்பதைப் பற்றியோ அவன் பொருட்படுத்தமாட்டான். அதைவிட மேலாக, இப்படியானவர்களில் பலர் தமது நிலை பற்றியும் தாம் செய்யும் அசிங்கங்கள் பற்றியும் (மற்றவர்களிடம்) எடுத்துரைப்பர். இந்நிலைக்கு இவர்களை தூண்டுவது இவர்கள் வெட்கமற்றுப் போனதேயாகும். அடியான் இந்நிலையை அடைந்துவிட்டால் அவன் சீர்திருந்துவதை பெரிய அளவில் நம்பமுடியாது. அது ஒரு கவிதையில் சொல்லப்பட்டிருப்பதை போல: அவன் முகத்தை 'இப்லீஸ்' கண்டால், வாழ்த்துவான்; வெற்றிபெறாமல் இருக்கப்போகும் இவனுக்கு நான் அர்ப்பணம் என்று கூறுவான்.
நூல்:
الداء والدواء ص 69
قال ابن القيم رحمه الله:
الذنوب تضعف الحياء من العبد حتى ربما انسلخ منه بالكلية ، حتى إنه ربما لا يتأثر بعلم الناس بسوء حاله ولا باطلاعهم عليه ، بل كثير منهم يخبر عن حاله وقبيح ما يفعله ، والحامل له على ذلك انسلاخه من الحياء . وإذا وصل العبد إلى هذه الحال لم يبق في صلاحه مطمع ،
كما قيل:
وإذا رأى إبليس طلعة وجهه حيّا، وقال : فديت من لا يفلح
66. மார்க்கத்தில் நடுநிலைமை என்பது யாது?
இமாம் இப்னு உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
ஷரீஅத்திற்கு உடன்படுவதுதான் நடுநிலைமையாகும். அதனைவிட அதிகரிப்பது கடும்போக்காகும். அதனைவிடக் குறைவது பொடுபோக்காகும்.
قال الإمام ابن عثيمين رحمه الله:
فما وافق الشرع فهو الاعتدال ، وما زاد عنه فهو التشدد ، وما نقص عنه فهو التساهل.
فتاوى علماء البلد الحرام ص 211
67. திக்ரின் தாக்கம்
இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுமல்லாஹ்) கூறினார்கள்:
திக்ர் - அல்லாஹ்வை நினைவுகூர்வதானது நெஞ்சம் விரிவடைந்து அகமகிழ்ச்சி ஏற்படுவதிலும் உள்ளம் இன்புறுவதிலும் விசித்திரமாக தாக்கம் செலுத்துகின்றது. அல்லாஹ்வை நினைவுகூராமல் மறந்திருப்பதானது உள்ளம் நெருக்கடிக்குள்ளாவதிலும் அது துன்புறுவதிலும் விசித்திரமாக தாக்கம் செலுத்துகின்றது.
زاد المعاد (2/22)
قال الإمام ابن القيم رحمه الله: فللذكر تأثير عجيب في انشراح الصدر ونعيم القلب وللغفلة تأثير عجيب في ضيقه وحبسه وعذابه.
68. மனன சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
*எந்த உறுப்பு அதிகமாக பயிற்சி பெறுகிறதோ அது பலமடையும். அதிலும் குறிப்பாக அந்தப் பயிற்சியின் வகையைச் சார்ந்ததவிடயங்களுக்கு ஆற்றல் பெறும். எனவே எவர் அதிகமாக மனனமிட முயற்சிக்கிறாரோ அவருடைய மனன சக்தி பலமடையும். எவர் அதிகமாக சிந்திக்கிறாரோ அவருடைய சிந்திக்கும் ஆற்றல் பலமடையும். ஒவ்வொரு உறுப்புக்கும் அதற்கென்றே இருக்கின்ற பயிற்சி இருக்கிறது.*
நூல்:
[زاد المعاد : ٢٢٦ / ٤]
#قالَ الإمامُ إبنُ القَيِّم رحمه ﷲ:
"أيُّ عُضُوٍ كَثُرَت رِيَاضَتُه قَوِيَ، وَخُصُوصًا عَلَى نَوعِ تِلكَ الرِيَاضَة؛ فَإنَّ مَن استَكثَرَ مِنَ الحِفظِ قَوِيَت حَافِظَتُهُ، وَمَن استَكثَرَ مِنَ الفِكرِ قَوِيَتْ قُوَتُه المُفَكِّرة، ولِكُلِّ عُضُوٍ رِيَاضَةٌ تَخُصُّه".
[زاد المعاد : ٢٢٦ / ٤]
69. தூய்மையான ஈமானிய உள்ளம்
அபூபக்ர் இப்னுல் அறபி (றஹிமஹுமல்லாஹ்) கூறினார்கள்:
குரோதமும் பொறாமையும் தற்பெருமையும் மமதையும் கொண்டதாக உள்ளம் இருந்தால், அது தூய்மையான உள்ளமாக இருக்காது. ஏனெனில், தனக்கு விரும்புவதை தன் சகோதரனுக்கும் விரும்புவது ஈமானுக்குரிய நிபந்தனையாக நபி ﷺ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல்:
((أحكام القرآن)) لابن العربي (3/459).
قال ابن العربي: (لا يكون القلب سليمًا إذا كان حقودًا حسودًا معجبًا متكبرًا، وقد شرط النَّبي صلى الله عليه وسلم في الإيمان، أن يحبَّ لأخيه ما يحبُّ لنفسه)
70. அறிவின்றி மார்க்கம் பேசாதீர்
இமாம் இப்னு உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஃபத்வா கொடுப்பதற்கு முந்திக் கொள்ளாமல் இருப்பது முஸ்லிமின் மீது கட்டாயமாகும். எனினும் அவரிடம் இல்ம் - அறிவு இருந்தாலே தவிர. அவருக்கு அந்த அறிவைக் கொண்டு அல்லாஹ்வை சந்திப்பதற்கு முடியுமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஃபத்வா வழங்குகின்றவர் அல்லாஹ்விடம் இருந்து எத்திவைக்கக்கூடிய, அவன் சார்பாகப் பேசக்கூடிய ஒருவரின் இடத்தில் இருக்கின்றார். அவர் ஃபத்வா வழங்கும் பொழுது அல்லாஹ் தனது நபி ﷺ அவர்கள் விடயத்தில் கூறக்கூடிய பின்வரும் ஆயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளட்டும்:
*{(நபியாகிய) அவர் நம்மீது (நாம் சொல்லாத) சில பேச்சுகளை இட்டுக்கட்டி கூறியிருந்தால், நாம் அவரை வலக்கரத்தால் (பலமாக) பிடித்திருப்போம். பிறகு, அவரின் நாடி நரம்பை நாம் வெட்டி இருப்போம். உங்களில் எவரும் அவரை விட்டும் (நமது பிடியை) தடுப்பவர்கள் இல்லை.}* [69:44-47]
மேலும், அத்தகையவர் பின்வரும் அல்லாஹ்வின் கூற்றையும் ஞாபகப்படுத்திக் கொள்ளட்டும்:
{(நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் தடை செய்ததெல்லாம் வெளிப்படையான, மறைவான எல்லா மானக்கேடான காரியங்களையும், பாவத்தையும், நியாயமின்றி (மக்களை) கொடுமைப்படுத்துவதையும், (அல்லாஹ்) எதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு நீங்கள் இணையாக்குவதையும் *மேலும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது கூறுவதையும்தான் (அல்லாஹ் தடைசெய்தான்).}* [7:33]
ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்களிடம் இருந்து வெளிப்படும் பெரும்பாலான தவறுகள், இவ்வாறு அறிவின்றி ஃபத்வா வழங்குவதாலும், பொதுமக்கள் ஒருவரை ஒருவர் ஆதாரமின்றிப் பின்பற்றுவதாலுமே ஏற்படுகின்றன.
قال الإمام ابن عثيمين رحمه الله:
والواجب على المسلم ألا يقدم على الفتيا إلا بعلم يواجه به الله عز وجل لأنه في مقام المبلغ عن الله تعالى القائل عنه ، فليتذكر عند الفتيا قوله في نبيه صلى الله عليه وسلم : (وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيل* لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ* ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ * فَمَا مِنْكُمْ مِنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ) (الحاقة 44-47) .
وقوله تعالي: (قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّيَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْأِثْمَ وَالْبَغْيَ بِغَيْرِ الْحَقِّ وَأَنْ تُشْرِكُوا بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَاناً وَأَنْ تَقُولُوا عَلَى اللَّهِ مَا لا تَعْلَمُونَ) (الأعراف 33) .
وأكثر الأخطاء من الحجاج ناتجة عن هذا ـ أعني عن الفتيا بغير علم ـ وعن تقليد العامة بعضهم بعضاً دون برهان .
أخطاء يرتكبها بعض الحجاج للإمام ابن عثيمين رحمه الله.
71. ஒரு பிள்ளைக்கு வீட்டுச்சூழல் எந்த அளவு முக்கியம்?
அல்லாமஹ் இப்னு பாதீஸ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
வீடுதான் முதலாவது பாடசாலை. அதுவே ஆளுமை மிக்க மனிதர்களை உருவாக்கும் அடிப்படையான தொழிற்சாலை. தாயிடம் இருக்கும் மார்க்கப் பிடிப்புதான் (பிள்ளையின்) மார்க்கப் பற்றும் நற்குணமும் பாதுகாக்கப்படுவதற்கான அடித்தளமாகும்.
நூல்:
الآثار 2/201
قال ابن باديس رحمه الله: "البيت هو المدرسة الأولى والمصنع الأصلي لتكوين الرجال، وتديّنُ الأم هو أساس حفظ الدين والخلق." [الآثار (4: 201)]
72. தாபிஈன்களில் ஒருவரான யஹ்யா இப்னு அபீ கஸீர் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:
சூனியக்காரனால் ஒரு மாதத்தில் விளைவிக்க முடியாத குழப்பத்தைக் கோள் பேசுகின்றவன் ஒரு குறுகிய நேரத்தில் விளைவித்துவிடுகிறான்.
البيهقي في شعب الإيمان (ج13/ص447-448):
قال يحيى بن أبي كثير: النمام يفسد في ساعة ما لا يفسد الساحر في شهر.
73. அரபியில் பிரபல்யமான ஒரு கூற்று இருக்கிறது:
"ஷைத்தானின் செயலை விட கோள்பேசுபவனின் செயல் பாதிப்பானது; ஏனெனில் ஷைத்தானுடைய செயல் உள்ளத்தில் எண்ணங்களைப் போடுவதால் நடைபெறும். கோள்பேசுபவனின் செயலோ நேருக்கு நேராக நடைபெறும்."
الزواجر عن اقتراف الكبائر لابن حجر الهيتمي 2/571
ويقال: عمل النَّمام أضرُّ من عمل الشيطان، فإنَّ عمل الشيطان بالوسوسة، وعمل النَّمام بالمواجهة.
74. ஹஸனுல் பஸரி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:
"யார் உன்னிடம் வந்து புறம் பேசுகிறாரோ அவர் உனக்கு எதிராகவும் (மற்றவர்களிடத்தில்) புறம் பேசுவார்."
إحياء علوم الدين 3/156
قال الحسن: من نمَّ إليك نمَّ عليك.
75. முஹம்மத் இப்னு கஃப் (றஹிமஹுல்லாஹ்) எனும் தாபிஈ இடத்தில் முஃமினுடைய பண்புகளில் அவனை மிகவும் தாழ்த்துகின்ற பண்பு எது என்று வினவப்பட்ட போது, "அதிகம் பேசுவதும், இரகசியத்தை வெளிப்படுத்துவதும், எல்லோருடைய பேச்சுக்களையும் ஏற்றுக் கொள்வதும்" என்று பதிலளித்தார்கள்.
إحياء علوم الدين 3/157
وقيل لمحمد بن كعب القرظي: أي خصال المؤمن أوضع له؟ فقال: كثرة الكلام، وإفشاء السرِّ، وقبول قول كلِّ أحد.
76. இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினர்கள்:
உள்ளதைச் சீர்கெடுக்கக்கூடிய விடயங்கள் ஐந்திருக்கின்றன:
1. அதிகமாக மற்றவர்களுடன் கலந்திருத்தல்
2. பேராசை கொள்ளல்
3. அல்லாஹ் அல்லாதவர்களில் (நம்பிக்கை வைத்துத்) தங்கியிருத்தல்
4. வயிறு நிரம்பி இருத்தல்
5. (அதிகமாகத்) தூங்குதல்.
இவை ஐந்தும் உள்ளத்தைச் சீர்கெடுக்குகின்ற மிகப்பெரும் காரணிகளில் உள்ளவையாகும்.
நூல்:
مدارج السالكين ١/٤٥٢ :
وَأَمَّا مُفْسِدَاتُ الْقَلْبِ الْخَمْسَةُ فَهِيَ الَّتِي أَشَارَ إِلَيْهَا: مِنْ كَثْرَةِ الْخُلْطَةِ وَالتَّمَنِّي، وَالتَّعَلُّقِ بِغَيْرِ اللَّهِ، وَالشِّبَعِ، وَالْمَنَامِ، فَهَذِهِ الْخَمْسَةُ مِنْ أَكْبَرِ مُفْسِدَاتِ الْقَلْبِ.
77. இமாம் இப்னு தைமிய்யஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
(தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக) யார் பொறுமை செய்யாமல் பழிக்குப் பழிவாங்குவதை வழக்கமாக ஆக்கிக் கொள்கின்றாரோ அவர் அநீதி இழைப்பதில் வீழ்வது நிச்சயம்...
இதனால், அவர் அநீதியிழைக்கப்பட்டவராக (இறை) உதவியையும் கண்ணியத்தையும் எதிர்பார்த்து இருந்த நிலையில் இருந்து, (இறை) கோபத்தையும் தண்டனையையும் சந்திக்கப்போகும் அநியாயக்காரராக மாறிவிடுவார்.
جامع المسائل (1/173)
قال الإمام ابن تيمية: من اعتادَ الانتقام ولم يَصبِرْ لا بُدَّ أن يقعَ في الظلم... فبينما هو مظلوم ينتظر النصر والعز، إذ انقلب ظالما ينتظر المقت والعقوبة.
78. இமாம் இப்னுல் முபாறக் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
(உள்ளத்தில் ஏற்படும் நிய்யத் எனும்) எண்ணமானது எத்தனையோ சிறு அமல்களை (நன்மையில்) பெரும் அமல்களாக மாற்றுகிறது; மற்றும், எண்ணம்தான் எத்தனையோ பெரும் அமல்களை (நன்மையில்) சிறு அமல்களாகவும் மாற்றுகிறது.
நூல்:
السير (8/400)
قال الإمام عبد الله بن المبارك رحمه الله تعالى:
*رُبَّ عَمَلٍ صَغِيْرٍ تُكَثِّرُهُ النِّيَّةُ، وَرُبَّ عَمَلٍ كَثِيْرٍ تُصَغِّرُهُ النِّيَّةُ.*
79. சோதனைகளின் போது பாவங்களும் மன்னிக்கப்பட்டு நற்கூலியும் கிடைக்க வேண்டுமா?
இப்னு உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
மனிதன் சோதனைகளை நற்கூலியை எதிர்பார்க்காமல் பொறுமையோடு எதிர்கொண்டால் அவை அவனது பாவங்களுக்கு பரிகாரமாக அமையும். அவன் நற்கூலியையும் எதிர்பார்த்து பொறுமை செய்தால் பாவங்கள் மன்னிக்கப்படுவதோடு சேர்த்து நற்கூலியும் கிடைக்கும். ஏனெனில் அவன் அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைக்கின்றான்; அதனால் அவன் அல்லாஹ்வைப் பற்றி எப்படியான எண்ணத்தை வைத்தானோ அல்லாஹ்வும் அவனுக்கு அதையே கொடுக்கின்றான்.
நூல்:
التعليق على صحيح مسلم 342
قال ابن عثيمين رحمه الله تعالى:
إن المصائب إذا قابلها الإنسان بالصبر دون احتساب الأجر صارت كفارة لذنوبه ،
وإن صبر مع احتساب الأجر صارت بالإضافة إلى تكفير الذنوب أجرا وثوابا،
ومعنى الاحتساب أن يعتقد في نفسه أن هذا الصبر سوف يثاب عليه فيحسن الظن بالله فيعطيه الله عز وجل ما ظنه به.