இஸ்லாமிய உடலுறவு சட்டங்கள்


بسم الله الرحمن الرحيم

இஸ்லாம்‌ முழுமையான மார்க்கம்‌ என்பது, வாழ்வின்‌ ஒவ்வொரு துறைக்கும்‌ அது வழங்கும்‌ வழிகாட்டுதலில்‌ பிரதிபலிக்கிறது. தூய்மை, வணக்க வழிபாடு, வணிகச்‌ சட்டதிட்டங்கள்‌, திருமணச்‌ சட்டங்கள்‌, சொத்துப்‌ பங்கீடு சட்டங்கள்‌ என அனைத்திலும்‌ அது வெளிப்படுகிறது. தன்‌ போதனைகளின்‌ முழுவீச்சையும்‌ பின்பற்றுமாறு அது வலியுறுத்துகிறது. நம்பிக்கையின்‌ அடிப்படைக்‌ கூறுகள்‌ (அகாயித்), வணக்க வழிபாடுகள்‌ (இபாதாத்‌), நிதி கொடுக்கல்‌ வாங்கல்கள்‌ (முஆமலாத்), சமுதாய, சமூக நடத்தை முறைகள்‌ (முஆஷரா), ஒழுக்க நெறிகள்‌ (அஃக்லாக்‌) என
அனைத்தும்‌ அதில்‌ அடங்கியுள்ளன.

இறைவன்‌ கூறுகிறான்‌;

நம்பிக்கைகொண்டவர்களே, நீங்கள்‌ இஸ்லாத்திற்குள்‌ முழுமையாக நுழைந்து விடுங்கள்‌. ஷைத்தானின்‌ அடிச்சுவட்டைப்‌ பின்பற்றாதீர்கள்‌. நிச்சயமாக அவன்‌ உங்களுக்கு வெளிப்படையான பகைவன்‌ ஆவான்‌. (குர்‌ஆன்‌ 2:208).

திருமணத்தின் நோக்கங்களில் ஒன்று, ஒருவர் தன் பாலியல் தேவைகளை அனுமதிக்கப்பட்ட வழிகளில் நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பதாகும். இருவரில் ஒருவர் திருப்தியடையாவிட்டாலும்கூட, அவர் தன் பாலுணர்வுகளை வேறு வழிகளில் தீர்த்துக்கொள்ள அதிகமாகத் தூண்டப்படலாம்.

பலநேரங்களில் தம்பதியருள் ஒருவர் ஓர் உடலுறவுச் செயல் வடிவை விலக்கப்பட்டது என்று தவறுதலாக எண்ணி அதில் ஈடுபட மறுக்கக்கூடும். இதனால் அவர்களுக்கிடையில் உறவுப்பிரச்சனை ஏற்படலாம். ஆகவே, தம்பதிகள் உடலுறவு நடத்தை குறித்த இஸ்லாமிய போதனைகளைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானதொன்றாகும். ஏனெனில், ஆரோக்கியமான பாலியல் வாழ்வு மேற்கொள்வதுடன் தாம்பத்ய மோதலையும் தவிர்த்துவிடலாம்.

பொதுவாக பாலியல் குறித்த எந்தவொறு கலந்துரையாடலும், மார்க்க நன்னடத்தைக்கும் (அதப்), நாண உணர்வுக்கும் (ஹயா) பங்கம் ஏற்படுத்தும் செயல் என்று சிலர் கருதக்கூடும். ஆனால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே பாலியலைக்குறித்து விரிவாக விளக்கியுள்ளார்கள் என்பதை அவர்கள் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.

இன்னும் சொல்லப்போனால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாலியல் செய்திகளை எப்படியெப்படியெல்லாம் கற்பித்தார்கள் என்பதுபற்றி ஏராளமான நபிமொழிகள் (ஹதீஸ்கள்) உள்ளன.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உடலுறவு தொடர்பான கேள்விகளைக் கேட்பதிலிருந்து நபித்தோழர்கள் வெட்கி ஒதுங்கவில்லை. பிரபலமான ஒரு சம்பவத்தில், உமர் இப்னு அல்-ஃகத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, ஒருவர் தம் மனைவியைப் பின்புறமிருந்து, அதாவது ஆசனவாயில் அல்லாமல், பெண்குறியில் புணர்வது அனுமதிக்கப்பட்டதா? என்பது பற்றி வினவினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்ர்கள் இதை அவமரியாதையான கேள்வி என்று கண்டிக்கவில்லை. மாறாக, இந்தக் கேள்வியின் பதிலை குர்ஆனிய வசனங்களாக அல்லாஹ்வே இறக்கி வைக்கும்வரை காத்திருந்தார்கள். (ஆதாரம்: ஸுனன் திர்மிதீ 2980)

இன்னும் சொல்ல வேண்டுமானால், பெண்களும் கூட பாலியல் தொடர்பான கேள்விகளைத் தயக்கமோ வெட்கமோ இன்றி அல்லாஹ்வின் தூதரிடம் கேட்கத் துணிந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவற்றுக்கெல்லாம் பதில் உரைப்பதிலிருந்து வெட்கி ஒதுங்கவில்லை. இத்தனைக்கும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயற்கையிலேயே நாணம் மிக்கவர்கள்.

ஹளரத் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்; உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அல்லாஹ்வின் தூதரிடம் வந்து கூறினார்: "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையானவற்றில் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண் ஈரக்கனவு கண்டபின் குளிப்பு அவள் மீது கடமையா?" அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம்! திரவம் வெளிப்பட்டிருந்தால்" என பதிலளித்தார்கள்.
ஹளரத் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா தம் முகத்தை மறைத்துக்கொண்டு கேட்டார்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுக்கு(கும் கூட) திரவம் வெளிப்படுமா?" அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம்! உம் வலக்கை மண்ணைப்பற்றிக் கொள்ளட்டுமாக (இது ஒருவரின் கூற்றோடு முரண்படும்போது அவரிடம் நளினமாகக் கூறப்படும் அரபுச் சொற்றொடராகும்) பிறகு எப்படி மகன் தாயின் சாயலில் பிறக்கின்றான்?" என்றார்கள். (நூல்: சஹீஹ் புகாரி 130)

இங்கு நாம் கவனிக்கவேண்டியது அந்த ஹதீஸை மட்டுமல்ல, ஈரக்கனவு போன்ற பாலுறவுச் செய்திகளைப் பற்றி அல்லாஹ்வின் தூதரிடம் கேட்பதிலிருந்துகூட ஒரு பெண்ணுக்குத் தயக்கவுணர்வு இல்லை, அக்காலத்தில்!

"அல்லாஹ் உண்மையானவற்றில் வெட்கப்படுவதில்லை" எனும் ஹளரத் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாசகத்திலிருந்து, தீன் - மார்க்க விஷயங்களைக் கற்பதில் வெட்க உணர்வு என்பது கிடையாது எனும் தெளிவான செய்தி நமக்கு கிடைக்கிறது.

இதே சொற்றொடரை அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள் ஆசனவாய்‌ உறவைக்‌ தடைசெய்தபோதும் பயன்படுத்தியுள்ளார்கள்‌:

அல்லாஹ்‌ உண்மை கூறுவதில்‌ வெட்கப்படுவதில்லை; பெண்களின்‌ ஆசனவாயில்‌ புணராதீர்கள்‌. (சுனன்‌ இப்னு மாஜா 1924, முஸ்னது அஹ்மது மற்றும்‌ பிற தொகுப்புகள்‌)

உண்மையில், இறைவனின் போதனைகளிலிருந்தும், அவனுடைய தூதரின் போதனைகளிலிருந்தும் வெட்கப்பட்டு ஒதுங்கிக் கொள்வது தவறானது - அது பாலியல் விஷயங்கள் குறித்தவையாக இருப்பினும் சரியே.

முஜாஹிதிடமிருந்து இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள்: "வெட்கப்பட்ட ஒரு மனிதராலும், ஆணவமுடைய ஒரு மனிதராலும் தூய அறிவை (இல்ம்) பெற்றுக்கொள்ள இயலாது" (நூல்: ஸஹீஹுல் புகாரி 1:60)

நாணம் இஸ்லாத்தின் ஓர் அடிப்படைக்கூறு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனினும், மார்க்க விஷயங்களைக் கற்பது என்று வரும்பொழுது அது தடைக்கல்லாக இருக்கக்கூடாது. நவீன உலகில் பாலியல் குறித்த கேள்விகள் வெளிப்படையாகக் கலந்துரையாடப்படுகிறது. அதுவும் பெரும்பாலும் அநாகரிகமான விதத்தில்! எனவே, பாலியல் குறித்த விஷயங்களை ஒழுக்க நாகரிகம் கொண்ட இஸ்லாமிய போதனைகளை சரியான முறையில் கற்பதில் நாம் ஏன் வெட்கப்படவேண்டும்?

இக் கட்டுரையில் ஆண்-பெண் பாலியல் மிக வெளிப்படையாக இருப்பதாக உணர்வோர், இறைவனின் சொற்களை மனதில் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

"நிச்சயமாக அல்லாஹ் உண்மை(யை விளக்கும்) விஷயத்தில் வெட்கப்படுவதில்லை" (அல்குர்ஆன் 33:35)

இதையே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அண்ணலாரின் தோழர்களும் எதிரொலித்துள்ளனர். (ஸஹீஹுல் புகாரி 130, ஸுனன் இப்னு மாஜா 1924).

எனவே, தம்பதியருக்கு இடையிலுள்ள பாலியல் பிரச்சனையே மணவாழ்வின் விரிசலுக்கு காரணமாக அமைதல், நவீன காலத்தில் பாலியல் மீதான தீராத மோகத்தினால் முஸ்லிம்கள் மீது அது ஏற்படுத்தும் கடுமையான தாக்கம் ஆகியவற்றால் பாலியல் குறித்த இஸ்லாமிய வழிகாட்டுதல் முஸ்லிம்களுக்குப் பெரிதும் தேவைப்படுகின்றன.

மணவாழ்வின்‌ நீடிப்பிற்கு இதமான உடலுறவு இன்றியமையாதது. மணவாழ்வு குலைவதற்கான அடிப்படைக்‌ காரணங்களுள்‌ ஒன்று, குறைபட்ட உடலுறவு என இன்று அன்றாடம் நடைபெறும் விவாகரத்து வழக்குகளிலிருந்தும், தினசரிகளிருந்தும் நாம் கண்கூடாக காணலாம்‌. தாம்பத்திய உறவு விரிசலின்‌ ஆணிவேர்‌, பெரும்பாலும்‌, உடலுறவு அதிருப்‌திதான்‌. படுக்கை அறையில்‌ தொடங்கும்‌ பிரச்சினை மனக்கசப்பு, மகிழ்ச்சியின்மை, எரிச்சல்‌ எனத்‌ தொடர்ந்து, சில வேளைகளில்‌ மணவிலக்கில்‌ போய்‌ முடிகிறது.

மேலும், முஸ்லிம்களில் பலர் உடலுறவு குறித்த இஸ்லாமியச் சட்டங்களையும் ஒழுங்குகளையும் பற்றி அறவே தெரியாதவர்களாக இருக்கிறார்கள். மாதவிடாய் காலத்தில் புணர்வது தடுக்கப்பட்டுள்ளது என்பதுகூட சிலருக்குத் தெரியாது. மேலும் பலர், தங்கள் வாழ்வை இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர்; கற்பதற்கோ ஆர்வமும் கொண்டிருக்கின்றனர். ஆனால், அறிஞர்களிடம் நேரடியாகக் கேட்பதற்கு சங்கடப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்காகவும் இவ்வாக்கம் அமைகிறது


''உடலுறவும் ஓர் அறச் செயலே''

நமது எண்ணங்கள் (நிய்யத்) தான் சாதாரண செயல்களைப் பெரும் நன்மையான காரியமாக உயர்த்தி, அளப்பறிய நற்கூலியை இறைவனிடம் நமக்குப் பெற்றுத்தருகிறது.

"செயல்கள் எண்ணத்தின் (நிய்யத்தின்) அடிப்படையிலேயே அமைந்துள்ளன. ஒருவர் எதை நாடுகிறாரோ அதுவே அவருக்குக் கிடைக்கும்...'' அறிவிப்பவர்: உமர் இப்னுல் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். (இந்த நபிமொழியைத்தான் இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நபிமொழி திரட்டிலேயேயே மிகச்சிறந்த நூலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஸஹீஹுல் புகாரியின் முதல் நபிமொழியாக இடம் பெறச்செய்துள்ளார்கள்.)

இதன் மூலம், ஒருவர் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சரியான எண்ணம் அமைத்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். ஒருவரின் செயல் அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைவதற்கு, அதை அல்லாஹ்வின் அன்புத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிக்கேற்ப செய்வதாய் எண்ணம் கொள்ள வேண்டும். இல்லையெனில் அது வெறும் பழக்கச் செயலாகவே இருக்கும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, ஹளரத் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்: "திருமணம் என் வழியை (ஸுன்னா) சார்ந்தது. எவர் என் வழியை (நிராகரிக்கும் முகமாக) பின்பற்றுவதில்லையோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர். மேலும், திருமணம் செய்யுங்கள் (மற்றும் இனவிருத்தி செய்யுங்கள்) நிச்சயமாக நான் உங்களைக் கொண்டு, பிற சமூகத்தாரை எண்ணிக்கையில் விஞ்சிவிடுவேன்..." (நூல்: ஸுனன் இப்னு மாஜா 1846)

இந்த நபிமொழியிலிருந்து, மக்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதும், சந்ததியினரைத் தேடிக்கொள்வதும் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்வதன் அனுமதிக்கப்பட்ட குறிக்கோள்கள் என்பது தெளிவாக விளங்குகிறது.

திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம் இயங்குவதில் ஓர் அர்த்தம் இருக்கும். ஆக, உலகம் இயங்குவதற்கு ஒரு உன்னதமான அர்த்தத்தை வழங்குவது உடலுறவு என்று சொல்வதில் தவறேதுமில்லை.

உடலுறவு மனித வாழ்வுக்கு எந்த அளவு முக்கியமோ அது போன்று இந்த உலகம் இயங்குவதை அர்த்தமுள்ளதாக்குவதற்கு உரிய ஒரு செயலாகவும் இருக்கிறது. எனவே அது எந்த அளவுக்கு ஒரு புண்ணியமான செயல் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அந்த புண்ணியமான செயலை இறைவன் அனுமதித்த விதத்தில் நாம் நிறைவேற்றும்போது அது ஓர் மகத்தான இறைவணக்கமாகவே ஆகிவிடுகிறது என்பது நிச்சயம். ஆம்! அனுமதிக்கப்பட்ட உடலுறவை இஸ்லாம் ஓர் இறை வழிபாடாகவே எடுத்தோதுகிறது.

ஒருவர் தம் துணைவரோடு உடலுறவில் ஈடுபடும்போது, அனுபவித்து மகிழும், இச்சையைத் தணிக்கும் நோக்கம் கொள்வதில் தவறில்லை. அது இயற்கையானதே. உடலுறவு ஓர் அசிங்கமான செயலல்ல. மாறாக, அது எண்ணற்ற நபிமார்களும், அல்லாஹ்வின் நல்லடியார்களும் செய்துள்ள ஓர் உயர்வான செயல். எனவே, இச்செயலை சட்டத்துக்கு உட்பட்டு மகிழ்ந்து அனுபவிப்பது எவ்விதத்திலும் வெட்க உணர்வுக்கு எதிரானதல்ல, நற்பண்புக்கு முரணானதுமல்ல.

உடலுறவு அசுத்தமானது, இச்சையை பூர்த்தி செய்து கொள்வதற்காகத்தான் - மல ஜலம் கழிக்கும் தேவையைப் போலத்தான் அதை செய்ய வேண்டியுள்ளது. - என்று சிலர் காண்கின்றனர். இப்படி ஒரு தவறான எண்ணம் கொண்டிருக்கும் மனிதர்கள் தயக்கத்துடனேயே உடலுறவு கொள்கின்றனர். அதிலிருந்து கிடைக்கும் சுக அனுபவங்கள் அனைத்தும் அவமரியாதையானது, ஒழுக்கக்கேடானது என்று கருதுகின்றனர். உண்மையில் இவர்கள் உடலுறவின் அசல் தன்மையை தவறவிட்டு விட்டவர்கள்.

அனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும். எனவே அதை இயன்ற அளவு அனுபவித்து மகிழ வேண்டும். தொழுகையை ஒருவர் எவ்வாறு இறைசிந்தனையுடன் மனம் லயித்துத் தொழுகிறாரோ அவ்வாறே அவர் முழு மன ஈடுபாட்டுடன் உடலுறவு கொண்டு அனுபவிக்கும் போதுதான் அவருக்கு இயற்கையாகவே; தனக்கு சுகத்திலும் சுகமான, சுவையிலும் சுவையான ஓர் அற்புத இன்பத்தை வாரி வழங்கினானே அந்த ஏக இறைவனுக்கு நன்றி சொல்லும் எண்ணம் வரும். அந்த நிலைக்கு நம் மனதை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சரியான எண்ணங்கள்; உடலுறவை ஓர் உடல் அளவிலான சுகம் என்பதிலிருந்து மாற்றி, ஓர் அளப்பரிய நற்கூலி கிடைக்கும் செயலாகவும், ஒருவகையான அறச்செயலாகவும் உயர்த்துகின்றன.

அபூதர் அல் கிஃபாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூரியதாக அறிவிக்கிறார்கள்:
"...நிச்சயமாக ஒவ்வொரு தஸ்பீஹும் (ஸுப்ஹானல்லாஹ் - இறைவன் தூய்மையானவன் எனக் கூறுதல்) அறச் செயலே, ஒவ்வொரு தக்பீரும் (அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன் எனக்கூறுதல்) ஓர் அறச் செயலே, ஒவ்வொரு தஹ்மீதும் (அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் இறைவனுக்கே எனக் கூறுதல்) அறச் செயலே,
ஒவ்வொரு தஹ்லீலும் (லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை எனக் கூறுதல்) அறச் செயலே,
நன்மையை ஏவுவதும் அறம், தீயதைத் தடுப்பதும் அறம், மற்றும் உங்கள் எல்லோரின் உடலுறவுச் செயலிலும் அறம் இருக்கிறது" என்றார்கள்.
(அப்போது நபித்தோழர்கள் கேட்டார்கள்), அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் உடலுறவு ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவா அவருக்கு நற்கூலி கொடுக்கப்படும்?" அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்; "அவர் அதை (உடலுறவை) விலக்கப்பட்ட விதத்தில் செய்தால் அவர் பாவம் செய்பவராகக் கருதப்படுவதை நீங்கள் அறியவில்லையா? அதுபோலத்தான், அவர் அதை அனுமதிக்கப்பட்ட விதத்தில் செய்தால், அவருக்கு நற்கூலி கொடுக்கப்படும்" (ஸஹீஹ் முஸ்லிம் 1006)

அல்லாஹ் தனது திருமறையாம் அல்குர்ஆனில் கூறுகின்றான்; "....மேலும், இப்போது அவர்களுடன் (உங்கள் துணைவியருடன்) உறவு கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ளதைத் தேடிக்கொள்ளுங்கள். (2:187)

"அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ளதைத் தேடிக்கொள்ளுங்கள்" எனும் வசனத்திலிருந்து அல்லாஹ் விதித்துள்ளதை தேடிக்கொள்வதற்காக வேண்டியாவது ஒவ்வொருவரும் உடலுறவு கொள்வது ஓர் இறைக்கட்டளை என்பதை விளங்கலாம். இறை கட்டளை எனும்போது அதை நிறைவேற்றுவது ஒவ்வொருவரின் கடமையென்பதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. "பெண்களுடன் உடலுறவு கொள்வதன்மூலம், உங்களுக்காக விண்ணுலக ஏட்டில் (லவ்ஹூல் மஹ்ஃபூள்) விதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை நீங்கள் தேடிக்கொள்ள வேண்டும். வெறுமனே இச்சையைத் தணித்துக் கொள்ளும் உடலுறவு மட்டும் நோக்கமாக இருப்பது உவப்பானதல்ல'' என்று தஃஸீரே உஸ்மானி (1:123) யில் எழுதுகிறார்கள்.

அனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும். எனவே அதை இயன்ற அளவு அனுபவித்து மகிழ வேண்டும். தொழுகையை ஒருவர் எவ்வாறு இறைசிந்தனையுடன் மனம் லயித்துத் தொழுகிறாரோ அவ்வாறே அவர் முழு மன ஈடுபாட்டுடன் உடலுறவு கொண்டு அனுபவிக்கும்போது அவருக்கு இயற்கையாகவே தனக்கு சுகத்திலும் சுகமான, சுவையிலும் சுவையான ஓர் அற்புத இன்பத்தை வாரி வழங்கிய அந்த ஏக இறைவனுக்கு நன்றி சொல்லும் எண்ணம் வரும்படி நாம் நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவர் பரவசத்தின் உச்சநிலையிலும்கூட தன் தம் துணைவரோடு கொள்ளும் உயலுறவு மூலம், ஆசை நிறைவேற்றத்துக்கு அப்பால் உள்ள பல உயர் நன்னோக்கங்களை நினைவில் நிறுத்த வேண்டும். அதே சமயம் உடலுறவின்போது இறைசிந்தனை இருந்தால்தான் அது வணக்கமாக ஏற்றுக்கொள்ளப்படும் எண்று அர்த்தமல்ல. அனுமதிக்கப்பட்ட வழியில் - திருமணம் முடித்து தன் மனைவியுடன் உடலுறவு கொண்டாலே அது வணக்கமாகத்தான் ஆகிவிடுகிறது.

அனைவருமே தொழுதாலும் ஒவ்வொருவருடைய எண்ணத்திற்கும் இக்லாஸிற்கும் தகுந்தாற்போல் நன்மைகளில் வித்தியாசம் உண்டல்லவா அது போலத்தான் இதிலும் என்று கொள்ளலாம். உடலுறவின்போது இறைவனின் நினைவு இருந்தால் அதற்கு அதிக நன்மை உண்டு என்பது அனைவரும் புரிந்துகொள்ளக்கூடியதே.


உடலுறவு - தம்பதியர் இருவருக்குமான உரிமை 

பாலியல் திருப்தி என்பது கணவன், மனைவி இருவருக்கும் உள்ள உரிமை. இது கணவனுக்கு மட்டுமே உள்ளது என நினைத்துக்கொள்வது தவறாகும். கணவனின் அளவுக்கு மனைவிக்கும் தன் பாலியல் தேவைகளின் நிறைவை எதிர்பார்க்கும் உரிமை உண்டு. துல்லியமாக சொல்ல வெண்டுமானால், உடலுறவு என்பது தம்பதியர் இருவருக்குமான உரிமையாகும். ஒருவர் தம் துணைவியரின் பாலியல் பசியைத் தணிப்பது உடலுறவின், இன்னும் சொல்லப்போனால் மணவாழ்விற்கும்கூட சட்ட ஏற்புக்குரிய வழிமுறையாகும்.

இனி, உடலுறவில் கணவனின் உரிமை என்ன? மனைவியின் உரிமை என்ன? என்பதைப் பார்ப்போம்.

கணவனின் உரிமை : 

ஓர் ஆண் உடலுறவுக்கு விரும்பும்போதெல்லாம் அவர் தம் மனைவியுடன் உடலுறவுகொள்ள உரிமை பெற்றுள்ளார். அவருக்காக தன்னை தயாராக வைத்துக்கொள்வது மனைவியின் மார்க்கக்கடமையில் ஒன்றாகும். நியாயமான காரணமின்றி இதில் தவறவிடுவது பாவச்செயலாகும்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்;
"ஓர் ஆண் தன் மனைவியைத் தன் படுக்கைக்கு அழைத்து அவள் வர மறுத்துவிட்டால், அவர் கோபமான நிலையில் தூங்குவார் எனில், காலைப்பொழுது வரை வானவார்கள் அவளை சபிக்கின்றனர். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: புகாரி, 3065 முஸ்லிம் 1436) இங்கு முஸ்லிமில் உள்ள சொற்களே இடம்பெற்றுள்ளன.

திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மற்றோர் ஹதீஸ்; "எவன் கைகளில் என் ஆத்மா உள்ளதோ அவன் மீது ஆணையாக, ஒருவர் தன் மனைவியைத் தன் படுக்கையின்பால் அழைத்து அவள் மறுத்துவிட்டால், அவளுடைய கணவன் அவள் மீது திருப்தியுறும்வரை அல்லாஹ் அவள் மீது கோபம் கொண்டிருக்கிறான். (நூல்: முஸ்லிம் 1436)

இதுகுறித்து இன்னுமோர் நபிமொழி; "ஓர் ஆண் தன் மனைவியைப் பாலியல் தேவை நிறைவேற்றத்துக்காக அழைத்தால், அவள் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் (அதை விட்டுவிட்டு) வரவேண்டும். (நூல்: திர்மிதீ 1160)

இவையும் இவை போன்ற பிற நபிமொழிகளில் இருந்தும் உடலுறவுக்கான கணவனின் கோருதலுக்கு மனைவி பணிவதன் முக்கியத்துவம் தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. இயல்புநிலையில், மனைவி கணவனின் அழைப்பை மறுப்பது கொடிய பாவமாகும். அதைவிட, அவளின் மறுப்பால் கணவன் விலக்கப்பட்ட செயலை (அதாவது வேறொரு பெண்ணை நாடி விபச்சாரம்) செய்துவிட்டால் அது மாபெரும் பாவமாகிவிடும்.

எனவே தகுந்த காரணமின்றி மனைவி தன் கணவனுக்கு உடலுறவை மறுப்பது விலக்கப்பட்ட செயல் (ஹராம்) ஆகும் என்பதை மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
இந்த கருத்தின் அடிப்படையில்தான், பெண்கள் நஃபிலான நோன்பு வைப்பதற்குமுன் தங்கள் கணவன்மார்களிடம் அனுமதி கேட்குமாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணித்தார்கள். ஏனெனில், அவள் நோன்பு நோற்றிருக்கும்போது கணவன் தன் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஆசைப்படலாம் அல்லவா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "ஒரு பெண், தன்னுடைய கணவன் அவளுடன் இருக்கும்போது அவருடைய அனுமதியின்றி (நஃபிலான) நோன்பு நோர்க்கக்கூடாது. (நூல்: புகாரி 4896)

ஆண்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய இரு விஷயங்கள் :

முதலாவதாக, உடலுறவு கோரும் கணவனின் உரிமை என்பதற்குப் பொருள், அவர் தம் இச்சையைத் தணித்துக்கொள்ளத் தம் மனைவியை வன்செயலால் கட்டாயப்படுத்தலாம் என்பதல்ல. கணவன் "கோப நிலையில் உறங்குவது", "அதிருப்தி கொள்வது" பற்றி ஹதீஸ்களில் (நபிமொழியில்) கூறப்படுவதிலிருந்து, கணவன் அவளுடன் பலவந்தமாக இணைவதிலிருந்தும், அவளைப் புண்படுத்துவதிலிருந்தும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் விஷயம் தெளிவுபடுகிறது.

அதுபோன்ற செயல் நியாயமாக இருப்பின், நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை கணவனுக்கு அனுமதித்திருப்பார்கள். இஸ்லாத்தின் கொள்கைகளில் பொதுவான சட்டம்; மார்க்க விஷயத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை. இதுதான் சட்டம் என்று எடுத்துச் சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறது. அதை பின்பற்றுதல் அல்லது பின்பற்றாமல் இருத்தல் என்பதை அவரவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறது. அதே வேளையில் சட்டத்தைப் பின்பற்றும்போது நற்கூலியும், சட்டத்தை மறுக்கும்போது தண்டனையும் நிச்சயம் உண்டு என்பதையும் இஸ்லாம் தெளிவாக எடுத்துச்சொல்கிறது.

இரண்டாவதாக, மனைவி தன்னை தயார்நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது சாதாரண இயல்புநிலைகளில் பொருந்தும். இஸ்லாமியச் சட்டங்கள் (ஷரீஆ) விதித்த இடர்களோ, தகுந்த காரணமோ இருக்கும் நிலையில் அது பொருந்தாது. மனைவி தன் சுயவுரிமைகளை விட்டுத்தர வேண்டியநிலை இல்லாதவரை, அவள் தன் கணவனுக்குப் பணிய கடமைப்பட்டிருக்கிறாள். எனவே, இதுபற்றிய பல்வேறு ஹதீஸ்கள், தங்கள் கணவன்மார்களுக்கு எதிராக உடலுறவை ஆயுதமாகப் பயன்படுத்தும் பெண்களுக்கே ஓர் எச்சரிக்கையாகும். எனினும் மாதவிடாயில் இருந்தால் அல்லது பேறுகால ரத்தப்போக்கு கொண்டிருந்தால் அல்லது நோயுற்றிருந்தால் அல்லது உடல்ரீதியாக உடலுறவு கொள்ள இயலாமல் இருந்தால். அல்லது களைப்புற்று, உணர்வெழுச்சி குன்றியிருந்தால்
அல்லது உடலுறவுச் செயல்பாடு அவளின் நலனைப் பாதிக்கக்கூடியதாய் இருந்தால், தன் கணவனின் உடலுறவுக்கோருதலுக்கு அவள் இணங்கவேண்டிய கட்டாயம் இல்லை. மாறாக, அவள் உடலுறவுக்கொள்ள இயலாமல் இருப்பதை கணவன் புரிந்துகொண்டு அவள்மீது அனுதாபம் காட்ட வேண்டும். எனினும், வெறுமனே "அதற்கான மனநிலையும் விருப்பமும் இல்லை" என்பது பெண்களின் நியாயப்பாடாக அமையாது.

அல்லாஹ் கூறுகின்றான்;
"எந்தவொரு ஆன்மாவின் மீதும் அது தாங்கவியலாத் சுமையை அல்லாஹ் சுமத்துவதில்லை." (அல்குர்ஆன் 2:286)

மனைவி கடும் நோயுற்று, உடலுறவுகொள்ள சக்திபெறாத நிலையில் இருப்பதைப் பொருட்படுத்தாது, தன் பாலியல் தேவைகளைப் பூர்த்திசெய்யுமாறு கணவன் மனைவியிடம் கோரும் பல உதாரணங்களை நாம் காண்கிறோம். சிலர், மணவிலக்கு செய்துவிடுவதாகக்கூட மனைவிமார்களை மிரட்டுகின்றனர். தங்களின் இந்த நடத்தைக்கு மேற்கூறிய ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர்! மனைவி உடலுறவில் ஈடுபடும் நிலையில் இல்லாது, அதற்காக ஓர் உண்மையான மற்றும் இஸ்லாமிய ரீதியாகத் தகுந்த காரணம் இருக்கும்பட்சத்தில், கணவன் மனைவியை நிர்பந்தித்தால், அவர் பாவம் செய்தவராகிறார். பெண்களும் மனிதப் பிறவிகளே; விரும்பும்போதெல்லாம் "ஆன்", ஆஃப்" செய்துகொள்ள அவள் இயந்ந்திரம் அல்ல என்பதையும் முஸ்லிம் கணவன்மார்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அறுதியாக, இந்த விவகாரங்களை மிகச் சிறந்தமுறையில் தீர்ப்பதற்கான வழிகளும் உண்டு. அவை; ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுதல், மதிப்பு மரியாதை, அன்பு, பண்பு, பரிவு, துணைவருக்குத் தன்னைவிட முன்னிடம் அளிப்பது ஆகியவையே.

"நீங்கள் உங்களுக்கு விரும்புவதையே மற்றவர்களுக்கும் விரும்பாதவரை (உன்மையான) இறை நம்பிக்கையாளராக முடியாது" என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதை (நூல்: முஸ்லிம் 45) நினைவில் கொள்ள வேண்டும். இந்த கருத்தாக்கம் தாம்பத்யத்தில் மென்மேலும் கூடுதலான முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

மனைவியின் உரிமைகள் : 

ஆணைப்போல், பெண்ணுக்கும் பாலியல் தேவைகள் உண்டு. எனினும், ஆணைப்போலல்லாமல், பெண் தன் பாலியல் வேட்கையின்மீது கூடுதல் கட்டுப்பாடு கொண்டவள். இந்த வித்தியாசம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிலவும் உடல், உணர்வெழுச்சி மற்றும் உள்ளூர இயல்புணர்ச்சி ரீதியான வேறுபாடுகளினால் தோன்றுகிறது.

பொதுவாக, பெண் தன் பாலியல் தேவைகளை நிறைவேற்றும்படி கேட்கமாட்டாள். மாறாக, அவளுக்கு இச்சை ஏற்படும்போது, தன் கணவனை வசீகரிப்பதற்காகு பல்வேறு உத்திகளைக் கையாளுவாள். தன்னை அலங்கரித்துக்கொள்ளுதல், ஆசையைத்தூண்டும் வகையில் கணவனிடம் பேசுதல், ஏக்கத்துடன் கணவரைப்பார்த்தல் முதலியன. மாதவிடாய் சுழற்சி முடிந்ததும் பெண்ணின் பாலுறவு விருப்பம் மிகுந்திருக்கும். என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்து. புரிந்துகொள்ளும் கணவன் இதை உணர்ந்து, தன் மனைவியின் சமிக்ஞைகளை உணர்ந்து செயல்படுவான்.

கணவன், தன் மனைவியின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவது மார்க்கக்கடமையாகும். ஒரு தகுந்த காரணமோ அனுமதியோ இன்றி, மனைவியின் இந்த உரிமையை கணவன் நிறைவேற்றத் தவறினால் அவர் பாவம் செய்தவராவார். எனவேதான் கணவன் தன் மனைவியுடன் சிறிது காலத்திற்கு ஒருமுறை (அடிக்கடி) உடலுறவு கொள்ள வேண்டும் எனப் பல சட்டவியலார்கள் கருதுகின்றனர்.

கணவன் தன் மனைவியின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவளுடன் எத்தனை நாளுக்கொருமுறை உடலுறவு கொள்வது என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்துவேற்பாடு உள்ளது.

இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி அவர்கள் கருத்தில், ஒரு மனிதர் தன் மனைவியுடன் நான்கு இரவுகளுக்கு ஒருமுறையாவது உடலுறவு கொள்ளவது மார்க்கக்கடமை என்று கூறப்படுகிறது. இந்தக் கண்ணோட்டத்திற்கு பின்வரும் சம்பவம் ஆதாரமாக அமைகிறது.

கதாவும் ஷஅபியும் அறிவிப்பதாக அப்துர் ரஸ்ஸாக் தம்முடைய அல்-முஸாஃபில் கூறுகிறார்;

"ஒரு பெண்மணி ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, "என் கணவர் இரவில் நின்று வணங்குகிறார், பகலில் நோன்பு நோற்கிறார்" என்றாள். ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள், "நீர் உம் கணவரை மிகச் சிறப்பாகப் போற்றியிருக்கிறாய்" என்றார்கள். அதற்கு கஅப் இப்னு சவ்வார் அவர்கள், ''அவள் (அசலில்) புகார் செய்கிறாள்'' என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறினார். "எப்படி?" என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்.

"அவள் தன் கணவரிடமிருந்து திருமணப் பங்கை பெறுவதில்லை எனக் கோருகிறாள் (அதாவது தன்னுடைய உரிமைகளை அவளது கணவன் நிறைவேற்றுவதில்லை)" என்றார். அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள், "இந்த அளவுக்கு நீர் புரிந்திருந்தால் நீரே அவளுக்கு தீர்ப்பு கூறவும்" என்றார்கள். அப்போது அவர் (கஅப் இப்னு சவ்வார் கூறினார்; "அமீருல் முஃமினீன் அவர்களே! நான்கு மனைவிகளைத் திருமணம் செய்ய அல்லாஹ் அனுமதித்துள்ளான். எனவே நான்கு பகல்களில் ஒரு பகலும், நான்கு இரவுகளில் ஓர் இரவும் அவளுக்கு உரிமையுண்டு.." (நூல்: ஸுயூத்தி, தாரிக் அல்-குல்ஃபா - பக்கம் 161)

இதன் அடிப்படையில், நான்கு இரவுகளில் ஒருமுறை ஒரு கணவன் தன் மனைவியின் பாலுணர்வுத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி அவர்களின் கருத்து. ஏனெனில், அவருக்கு நான்கு மனைவிகள் இருப்பின், அவர் மற்ற மூன்று இரவுகளை தன்னுடைய மற்ற மனைவிகளுடன் கழிப்பதற்கு அனுமதி உண்டு.

இமாம் இப்னு ஹஸமின் கருத்தில், ஒரு மனிதர் மாதத்தில் ஒருமுறையேனும் தன் மனைவியுடன் படுக்கையில் கூடுவது மார்க்கக்கடமை. அண்ணாரின் கூற்றுப்படி; மாதவிடாய்களுக்கு இடையே ஒருமுறையாவது மனைவியுடன் உடலுறவு கொள்வது கடமை. இல்லாவிட்டால், அவர் பாவியாகிவிடுவார். இதற்கு அவர்கள் எடுக்கும் ஆதாரம்; திருமறையின் வாசகம். "எனினும், அவர்கள் தூய்மையடைந்துவிட்டால், அவர்களை அல்லாஹ் கட்டளையிட்டுள்ள இடத்திலிருந்து அணுகுங்கள்: என்பதாகும். (நூல்: அல்-முஹல்லா, பக்கம் 1672)

"அவர்களை அணுகுங்கள்" என்ற அல்லாஹ்வின் சொற்களிலிருந்து இப்னு ஹஸம் தமது கருத்தைப் பெற்று, இது கடமையைக் குறிக்கும் ஒரு கட்டளை என்கிறார்கள். ஆனால் அறிஞர்கள் பலர் இதை, மாதவிடாய்க்குப்பின் உடலுறவை அனுமதிக்கும் வாசகமாகாவே கருதுகின்றனர்.
அறிஞர்கள் சிலரின் கருத்துப்படி, ஒரு மனிதர் தன் மனைவியுடன் நான்கு மாதங்களில் ஒருமுறையேனும் கட்டாயம் உடலுறவு கொள்ளவேண்டும், இல்லாவிட்டால், அவர் பாவியாகிவிடுவார். இவர்கள் தங்களின் நிலைப்பாட்டிற்குப் பின்வரும் சம்பவத்தை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தீர்ப்பு :

இப்னு ஜரீர் அறிவிக்கிறார்; "நான் நம்பும் ஒருவர் இந்தத் தகவலை என்னிடம் கூறினார். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ரோந்து வரும்பொழுது, ஒரு பெண் இவ்வாறு கூறுவதை (கவிதை பாடுவதை) செவியுற்றார்கள்.

"இரவு நீண்டு செல்கிறதே! இருள் சூழ்ந்துள்ளதே!
(ஆனால்) என்னுடன் நெருங்கியிருக்க தோழன் இல்லையே. என் உறக்கம் தொலைந்ததே! தனக்கு இணையில்லாத அல்லாஹ்வின் அச்சம் மட்டும் இல்லையெனில் இந்தப் படுக்கையின் இருபக்கங்கள் அங்குமிங்கும் நகர்ந்திருக்குமே!" (அதாவது இறையச்சம் மட்டும் அப்பெண்மணியை தடுத்திருக்காவிட்டால் அவள் வழிதவறிப்போயிருப்பாள் என்பதைக் கூறுகின்றது கவிதையின் இறுதி வாசகம்).

உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள், "உமக்கு என்ன நேர்ந்தது?"

அதற்கு அவள்: "நீங்கள் தான் என் கணவரை சில மாதங்களுக்குமுன் போருக்கு அனுப்பிவிட்டீர்களே! இங்கே நான் அவருக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றேன்" என்றாள்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்; "உமக்கு தவறிழைக்கும் எண்ணம் இருக்கிறதா?"

அதற்கு அவள்; "அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்" என்றாள். உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்; "அப்படியென்றால் நீர் உம்மைக் கட்டுப்படுத்திக்கொள். அவருக்கு (கணவருக்கு) வெறும் ஒரு செய்தியை அனுப்பினாலே போதும். விஷயம் தீர்ந்துவிடும்" என்றார்கள்.

பின்னர் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரை - அப்பெண்ணின் கணவரை (திரும்ப வருமாறு) கட்டளையிட்டு செய்தி அனுப்பினார்கள். அதன்பின் தன் மகள் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹாவிடம் சென்று கேட்டார்கள்; "என் விஷயம் சம்பந்தப்பட்ட ஒன்றை நான் உன்னிடம் கேட்க விரும்புகின்றேன். அதற்கு தீர்வு கூறவும். ஒரு பெண் தன் கணவன் இன்றி எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும்?"

அவர் (ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா) வெட்கத்தில் தன் தலையைத் தாழ்த்திக்கொண்டார்கள். "நிச்சயமாக அல்லாஹ் உண்மையானா விஷயத்தில் வெட்கம் கொள்வதில்லை" என்றார்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆகையால், அவர்கள் (ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா) தன் கையால் சைகை காட்டினார்கள் - மூன்று மாதங்கள் அல்லது நான்கு மாதங்கள் என. எனவே, நான்கு மாதங்களுக்கு மேலாக (எவரும்) ராணுவப் பணியில் அமர்த்தப்படக் கூடாது என உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள்.'' (நூல்: தாரீஃக் அல்-குல்ஃபா. பக்கம் 161,162)

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இக்கேள்வியை தம் மனைவியிடம் கேட்காமல், தம் மகள் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டுள்ளார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

எனினும், கணவனுக்காகான உடலுறவு உரிமை போலவே, தன் மனைவியின் பாலுறவுத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் நிபந்தனை உண்டு,.

அவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் அளவிற்கு உடல் வலிமை பெற்றிருக்க வேண்டும்.
கணவன் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தால்,

அல்லது உடலுறவில் ஈடுபட இயலாத அளவு பலவீனமாக இருந்தால், அல்லது தன் மனைவியுடன் உடலுறவு கொள்வதன் விளைவாக தாங்கவியலாத பலவீனம் ஏற்படுமானால், அவர் தம் மனைவியின் பாலுறவுத் தேவைகளை நிறைவேற்றவேண்டிய அவசியமில்லை. அதனால் பாவியாகவுமாட்டார்.`

எத்தனை நாளுக்கொருமுறை உடலுறவு?  ஒரு தம்பதியர் எத்தனை நாளுக்கு ஒருமுறை அல்லது பலமுறை உடலுறவில் ஈடுபடலாம் என்பதைப்பற்றி ஒரு குறிப்பிட்ட அளவையோ வரைமுறையையோ ஷரீஅத் நிர்ணயம் செய்ய்யவில்லை. ஏனெனில், ஒவ்வொருவருக்கும் இயல்புணர்ச்சி, உடல்வாகு, பாலுணர்வு ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளன. எனவே, தங்களுக்கு மிகப் பொருத்தமான அளவை தம்பதிகளே ஒருவருக்கொருவர் முடிவுசெய்துகொள்ள வேண்டியதுதான்.

எனினும், இஸ்லாம் எல்லாவற்றிர்க்கும் வழிகாட்டும் மார்க்கமல்லவா? வாழ்வின் அனைத்துக்கூறுகளிலும் சமநிலைப்பேண ஊக்குவிக்கிறது. ஏனெனில் நடுநிலைப் பாதையே மிகச்சிறந்த பாதை. இஸ்லாத்தின் அணைத்துப் போதனைகளிலும் சமநிலைப்போக்கு கலந்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம். அளவுக்கதிகமான உடலுறவும் சரி, உடலுறவை முற்றிலும் துறப்பதும் சரி இரண்டுமே அறிவான செயலல்ல.

அறிஞர்களில் சிலர் வாரம் ஒருமுறை உடலுறவு கொள்வதற்கு பரிந்துரை செய்கின்றனர். இது சமநிலைப்போக்கின் வட்டத்துக்குள் அமைந்திருப்பதாகக் கருதுகின்றனர். இந்த நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக அவர்கள் மேற்கொள்ளும் ஆதாரம்:

அவ்ஸ் இப்னு அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த ஒரு நபிமொழி:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;"எவர் வெள்ளிக்கிழமையன்று (தன் மனைவியை) குளிக்கச் செய்துவிட்டு, தானும் குளித்துவிட்டு, (வெள்ளிக்கிழமை தொழுகை) நேரத்திலேயே புறப்பட்டு, வாகனத்தில் செல்லாமல் நடந்துசென்று, இமாமுக்கு அருகில் உள்ளதொரு இடத்தில் அமர்ந்து, கவனமாக அவரை செவியேற்று, வீண் செயலில் ஈடுபடுவதைத் தவிர்க்கிறாரோ, அவருக்கு, அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பகரமாக, ஓராண்டு காலம் நோன்பு நோற்று இரவில் தொழுத நன்மை கிடைக்கும்" (ஆதாரம்: அபூதாவூத் 349, நஸாஈ 1381). அபூதாவூதின் சொற்களே இங்கு இடம்பெற்றுள்ளன.

இந்த நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "மன் கஸ்ஸல" எனும் சொல்லை பயன்படுத்தியுள்ளார்கள். இதன் நேரடி மொழி பெயர்ப்பு, "இன்னொருவரைக் குளிப்பாட்டும் ஒருவர்" அல்லது "இன்னொருவரைக் குளிக்கச் செய்விக்கும் ஒருவர்". இந்த வாசகத்தை இமாம் சுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஸுனன் அல்-நஸாஈயிற்கான தம்முடைய விரிவுரையில் இவ்வாறு விளக்குகிறார்கள்; "கஸ்ஸல (மாற்றொருவரைக் குளிப்பாட்டுதல் அல்லது குளிக்கச்செய்வித்தல்) என்பதன் (உட்)பொருள், ஒருவர் (வெள்ளிக்கிழமை) தொழுகைக்குச் செல்லுமுன் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல் எனக்கூறப்படுகிறது. ஏனெனில் இது, வழியில் அவருடைய பார்வையைத் தாழ்த்திக்கொள்ள உதவும்..." (ஸுனன் அல்-நஸாஈ பி ஷரஹ் அல்-ஸுயூத்தி 3:95)

இதன்படி, இந்த நபிமொழியின் பொருள்களுள் ஒன்று, எவர் வெள்ளிக்கிழமையன்று தம் மனைவியுடன் உடலுறவுக் கொண்டு பின் தானும் குளித்து, தன் மனைவியையும் குளிக்கச்செய்வித்து, கூறப்பெற்றுள்ள பிற செயல்களை நடைமுறைப்படுத்துகின்றாரோ, அவருக்கு, அவர் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பகரமாக, ஒரு வருட காலம் நோன்பு நோற்று இரவில் தொழுத நன்மை கிடைக்கும்.

அதற்காக வாரம் ஒருநாள் தான் உடலுறவுகொள்ள வேண்டும் என்று இந்த நபிமொழி கூறுவதாக தப்பர்த்தம் கொண்டுவிட வேண்டாம். வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குமுன் மனைவியுடன் உடலுறவு கொள்வது சிறந்ததது என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது. அதற்கான காரணத்தையும் இமாம் ஸுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி மேலே சுட்டிக்காட்டியுள்ளார்கள்.


 உடலுறவுக்கான சிறந்த நேரம் எது?

பொதுவாக, உடலுறவுச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான நேரம் இதுதான் என்று ஷரீஅத் எதையும் வரையறுக்கவில்லை. தம்பதிகள் உடலுறவு கொள்வதற்கு பகலோ, இரவோ; எந்த நேரத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இரவு, பகல் எனப் பல்வேறு நேரங்களில் தம் மனைவிகளுடன் உடலுறவு கொண்டிருக்கிறார்கள் என்பது நம்பகமான செய்தியாகும். மேலும், உடலுறவுக்கான தூண்டுதலும், தம்பதியருக்கு போதிய வீரியமும், ஓய்வும் இருந்தாலே உடலுறவுச் செயல்பாடுகள் நடக்கும் என்பதால், உடலுறவுக்கு குறிப்பிட்ட நேரத்தை விதியாகத் திணிப்பது நடைமுறைக்கு ஏற்றதாகாது.

அதே சமயம் அனுபவத்தின் அடிப்படையில் அறிஞர்கள் விரும்பத்தக்க நேரங்கள் என்று சிலவற்றை குறிப்பிடுகிறார்கள். இவை இங்கு ஒரு புரிதலுக்காக மட்டுமே தரப்பட்டுள்ளது. கட்டாயமானது என்றோ அல்லது நம்பத்தக்கது என்றோ கருதத்தேவையில்லை.

விரும்பத்தக்க நேரங்கள் : 

உடலுறவுக்கு ஏதுவான நேரம் - ஓய்வாக இருக்கும் வேளை, தம்பதியர் இருவரிடத்திலும் சமமான இயல்புணர்ச்சி நிலவும் வேளை ஓ.கே.! பதற்றம், கவலை அல்லது பசி, தாகம், சோகம், நோய்நொடி போன்றவை இச்சையை குன்றச்செய்துவிடலாம். இதுபோன்ற சமயத்தில் உடலுறவை தவிர்ப்பது நலம்.

சிலருக்கு ஏதுவான நேரம் இரவுதான். அறிஞர்கள் சிலர், இரவின் பிற்பகுதியே உடலுறவுக்கு மிகப் பொருத்தமான நேரம் எனக் கருதுகின்றனர். ஏனெனில், இரவின் முதற்பகுதியில் வயிறு நிறைந்திருக்கும். முழுமையாக உணவு செரிமானம் ஆனபின்பே உடலுறவு கொள்வது மிகப்பொருத்தமாக இடுக்கும். இதுவே அல்லாஹ்வின் தூதருடைய வழக்கமும் கூட! இருப்பினும் மற்ற நேரங்களிலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய மனைவிமார்களுடன் உடலுறவு கொண்டுள்ளார்கள்.

அபூ இஸ்ஹாக் அறிவிக்கிறார்கள்; "அல்லாஹ்வின் தூதருடைய (இரவு நேரத்) தொழுகை குறித்து ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் என்ன கூறினார்கள் என அல்-அஸ்வத் இப்னு யஸீதிடம் கேட்டேன். அதற்கவர் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா இவ்வாறு கூறியிருக்கிறார்கள்;
"அவர்கள் (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவின் முதல் பகுதியில் உறங்கி, பிற்பகுதியில் (தொழுகைக்காக) எழுந்திரிப்பார்கள். அப்போது அவர்கள் தம் மனைவியுடன் தம் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள நாடினால், விருப்பத்தை நிறைவேற்றிவிட்டு உறங்கிவிடுவார்கள். தொழுகைக்கான முதல் அழைப்பு கொடுக்கப்பட்டதும் அவர்கள் குதித்தெழுவார்கள். (அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவர்கள் குளித்தார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறவில்லை. எனினும் அவர்கள் கூறியதை நான் விளங்கிக்கொண்டேன்.) (எனினும்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் இருக்கவில்லை எனில், (வெறுமனே) தொழுகைக்கான உளூ- கைகால் கழுவி தூய்மை செய்துகொண்டு, இரு ரக் அத்துகள் (ஃபஜ்ர் தொழுகையின் ஸுன்னா) தொழுதார்கள் (நூல்: முஸ்லிம் 739)

விஞ்ஞான ரீதியிலும் ''விடியற்காலை உடலுறவு'' ஆரோக்கியமானாதே என்பதை மருத்துவ நிபுணர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். காலை நேர செக்ஸ் நல்ல 'ஐடியா'தான் என்கிறார்கள். நல்லதொரு இரவுத் தூக்கத்தை மேற்கொள்பவர்களுக்கு காலையில் உடலும், மனமும் ஃபிரஷ்ஷாக இருக்கும். உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலை நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக்கும். ஆண்களில் பெரும்பாலானோருக்கும் இந்த காலை நேர 'பாலியல் உணர்ச்சி எழுவது சகஜம்.

எந்த நேரமாக இருந்தால் என்ன, உறவுக்கு மிக மிக முக்கியம் மென்மையான அணுகுமுறைதான். காலையாக இருந்தாலும் சரி, பகலாக இருந்தாலும் சரி, மாலையாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணுசரணையான நிகழ்வாக, காதலுடன் கூடியதாக மாற்றிக் கொள்வதே தம்பதிகளுக்கு சாலச் சிறந்தது, காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடிய உறவுக்கு வழிவகுக்கக் கூடியது என்பதை இருவருமே மறக்கக் கூடாது.

இங்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தவேண்டியது அவசியமாகிறது. வெள்ளிக்கிழமை உடலுறவைப்பற்றி சிறப்பித்துக்கூறப்பட்டுள்ளதால் வாரம் ஒருமுறை உடலுறவு போதுமானது என்று முடிவு செய்துகொள்ளாதீர்கள். அவ்வாறு எண்ணுவது தவறு. பொதுவாக உடலுறவுக்கான காலமும் சரி, நேரமும் சரி, எத்தனை முறை என்பது பற்றிய குறிப்புகளும் சரி எதையும் ஷரீ அத் பொருட்படுத்தாத நிலையில் அதை வலியுறுத்தி சொல்வது சரியானதாகாது. தெளிவாகச் சொல்லவேண்டுமானால் நேரம், காலம், இடம் இவற்றை உத்தேசித்து தம்பதிகள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார்போல் நடந்துகொள்ள இஸ்லாம் முழுமையாக அனுமதிக்கிறது.

பரிபூரண தாம்பத்யத்திற்கு மிகப்பெரும் கூலி நிச்சயம் உண்டு!

 உடலுறவு கொண்ட பின் குளிப்பதற்கும்கூட நன்மை உடலுறவு கொண்டு "ஜனாபத் குளியல்" குளிப்பதில் கூட நன்மைகளை அள்ளித்தருகிறது இஸ்லாம்.

"ஜனாபத் குளியல் குளிக்கும் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் சரி, அவர்கள் தலைமுடியை நன்றாக கோதிக் கழுவிக் குளிக்கும்போது உடலில் இருந்து தெறித்துவிழும் ஒவ்வொரு துளித் தண்ணீருக்கும் ஒவ்வொரு நூறு நன்மைகள் எழுதப்படாமல் இல்லை. மேலும் அவர்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன." என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்." (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அல் ஹதீஸ்)

மற்றோர் நபிமொழியில்,

"எவரொருவர் உளூச்செய்து பின்பு (ஜனாபத்) முழுக்கு நீங்கக் குளித்தால் குழைத்த மாவிலிருக்கும் உரோமத்தை எடுப்பது போன்று அவர் பாவங்கள் களையப்படுகின்றன." என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அலீ ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அல் ஹதீஸ்)

இந்த இரு நபிமொழிகளைக் காணூம் எவரும் ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்வதில் வினோதமில்லை. உடலுறவு கொள்வதும் ஒரு வணக்கமே என்பதை முதலிலேயே பார்த்தோம். இப்பொழுதோ உடலுறவுக்குப்பின் தூய்மைப்படுத்திக்கொள்ள குளிக்கும் குளியலுக்குக்கூட இவ்வளவு நன்மை என்று இஸ்லாம் சொல்கிறதே! நினைத்தாலே இனிக்கிறதல்லவா? ஆம்! அதுதான் இஸ்லாத்தின் வசீகரம்.

மனிதா! நீ, தீய வழியில் சென்று உன் இச்சையை தீர்த்துக்கொள்ளாதே! அது உன்னை நரகக்குழியில் தள்ளிவிடும் என்று எச்சரிக்கும் இஸ்லாம், ஆகுமான வழியில் இறைவன் அனுமதித்த வழியில் திருமணம் முடித்துக்கொண்டு மனைவியுடன் உடலுறவு கொண்டு இச்சையை நிறைவேற்றிக்கொள்ளும்போது - அதை இறைக்கட்டளைக்கு கட்டுப்பட்ட, இறைக்கட்டளைக்கு கண்ணியமளித்த ஒரு செயலாக இறைவன் கருதுவதால் தனது அடியார்களுக்கு கரும்புத் தின்னக்கூட கூலி கொடுக்கின்றான் என்றே அறியமுடிகிறது. இப்பொழுது எண்ணிப்பாருங்கள் அந்த ஏக இறைவன்; தனது படைப்புகளில் உயர்வான மனித இனத்தின்மீது மீது கொண்டிருக்கும் அன்பும் கருணையும்.

அடுத்து இஸ்லாம் அனுமதிக்கும் எந்த செயலை செய்தாலும் நன்மை நிச்சயம் உண்டு எனும் அதே வேளையில் அந்த செயலை முறையாக செய்தால் நன்மைகள் இன்னும் அதிகமுண்டு என்பதை எவரும் மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஆம்! மனைவியுடன் உடலுறவு கொள்வதும் நன்மையான காரியம் எனும்போது அந்த உடலுறவு இருவருக்குமே நிம்மதியளிக்கும் விதத்தில் அமையும்போது இன்னும் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதில் என்ன சந்தேகம்?! இப்போது ஓரளவுக்காவது உங்களுக்குப் புரிந்திருக்கும். தம்பதிகள் தங்களது இச்சையைத் தீர்த்துக்கொள்ளும்போது தன்னுடைய சுகத்தை மட்டும் பாராமல் தனது இணைக்கும் உடலுறவின்மூலம் முழு திருப்தியை கொடுக்க வேண்டும். அப்படி செய்யும்போதுதான் அது இருவருக்கும் முழு நிம்மதியளிக்கக்கூடிய செயலாக அமையும்.

மனங்கள் அமைதிபெறும் பொருட்டே உங்களிலிருந்து உங்கள் மனைவிகளை படைத்திருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறானே அந்த மன நிம்மதி உங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமானால் உடலுறவின்மூலம் நீங்கள் சுகத்தை அனுபவிக்கும் அதே சமயம் உங்கள் துணைவிக்கும் முழு சுகத்தைக் கொடுத்து அவளது மனமும் அமைதியடைந்தாலே அது பரிபூரணமான தாம்பத்யம். அப்படிப்பட்ட தாம்பத்யத்திற்கு மிகப்பெரும் கூலி நிச்சயமாக உண்டு.

உடலுறவில் முழு திருப்தியை பெற்றுக்கொண்ட தம்பதிகளின் நிலை :
உடலுறவில் முழு இன்பத்தையும் திருப்தியையும் பெற்றுக்கொண்ட தம்பதிகளுக்கிடையே சண்டைச் சச்சரவுகள் அதிகமிருக்காது. அவர்களுக்குள் பாசம் பொங்கிவழியும். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேர்ந்தாலும் அவைகளை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சமாளித்துக்கொள்வார்கள். காரணம் உடலுறவின்போது அவர்களுக்குள் இருந்த ஈடுபாடு அதாவது தன்னைப்போல் தன் துணையும் முழுமையான இன்பத்தை அனுபவிக்க வேண்டும் எனும் எண்ணம்... அந்த நல்லெண்ணம் எல்லா நேரத்திலும் அவர்களிடம் தழைத்தோங்கவே செய்யும். இது திருப்தியான, நிம்மதியான உடலுறவினால் விளைந்த நன்மையல்லவா? இது இவ்வுலகில் நம் கண்முன்னே இறைவன் அவர்களுக்களித்த நற்கூலிதானே! வெறுமனே சொன்னால் எப்படி? அந்த உண்மையான தம்பதிகள் தங்களுடைய இணையின் திருப்திக்கும் முக்கியத்துவம் அளித்து நடந்து கொண்டதால் இறைவன் அவர்களுக்கு அளித்த பரிசுதானே வாழ்க்கையின் மற்ற காரியங்களிலும் அவர்களுக்குக் கிடைக்கும் நிம்மதி.

திருப்தி கிட்டாத தம்பதிகளின் நிலை :
அவ்வாறு இல்லாமல் உடலுறவில் சரியான முறையில் பரிபூரண திருப்தியை கிடைக்கப்பெறாத தம்பதிகளைப் பாருங்கள்... என்ன நடக்கிறது? உடலுறவில் திருப்தி இல்லாத முழுமையான உச்சம் அடையாத எத்தனையோ பெண்கள் நிம்மதியிழந்து.... எல்லா வசதியும் இருந்து மனநோயாளியைப் போல இருப்பார்கள். எதையோ பறிகொடுத்ததுபோல் காட்சியளிப்பார்கள். இல்லற சுகத்தை கணவன் மூலம் முழுமையாக கிடைக்கப்பெறாதவள் தன்னை கணவனுக்காக அலங்கரித்துக்கொள்ள மாட்டாள். எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென்று சீறிப்பாயும் குணம் கொண்டவளாக இருப்பாள். இதன் பாதிப்பு எதுவரை செல்லும் என்றால், குழந்தைகளை திட்டுவதும், சின்ன சின்ன குற்றத்துக்காக அவர்களை அடிப்பவர்களாகக் காணமுடியும். ''சனியன்களா... இதுகளைப்பெற்றுக்கொண்டு என்ன சுகத்தைக் கண்டேன்...? என்று கண்ணீர் வடிப்பாள்.

இப்படி உலகெங்கும் பாலியல் திருப்தி இல்லாமல் பலப்பல அநியாயங்கள், கொடுமைகள், தவறுகள் தினந்தோறும் நடப்பதை கண்முன்னால் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

ஆண்களைக் காட்டிலும் 99 மடங்கு பெண்களுக்கு ஆசையா? :

"ஆண்களைக் காட்டிலும் 99 மடங்கு பெண்களுக்கு ஆசை அதிகப்படுத்தப்பட்டுள்ளது, என்றாலும் அவர்களுக்கு அதில் அல்லாஹ் (ஆசையை அடக்கிக்கொள்ள) அவர்கள்மீது வெட்கத்தைப் போட்டுவிட்டான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க்ள் சொன்னார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: கன்ஜுல் உம்மால்)

வெட்கம் எனும் போர்வையை பெண்ணின் மீது போர்த்தி அவளின் 99 மடங்கு இச்சையை மறைத்து வைத்துள்ளான் அல்லாஹ்! இது பெண்ணினத்திற்கே இறைவன் வழங்கிய தனிப்பட்ட பாக்கியமாகும். அந்த தனிப்பட்ட பாக்கியத்தை ஒவ்வொரு கணவனும் புரிந்து நடந்துகொண்டால் அவர்களின் இல்லங்கள் ஒவ்வொன்றுமே பூலோக சொர்க்கம்தான் என்பதை அவர்கள் உணரமுடியும், புரிந்துகொள்ள வேண்டும்.

 மனைவியின் ஆசை அடங்கவில்லையென்றால்....

இஸ்லாம் பெண்ணினத்தின் இந்த ஆசைக்கு எந்த அளவு உயர்வான மதிப்பளிக்கிறது என்பதற்கு... ''மனைவியின் ஆசை அடங்கவில்லையென்றால் அவளுக்கு ஆசை அடங்கும்வரை ஊரில் தங்கியிருந்து அவளை முழுமையாக திருப்திபடுத்திவிட்டு அதற்கப்புறமே போருக்குச் செல்ல வேண்டும்'' என்று இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது. எனவே மனைவிக்கு செலுத்த வேண்டிய கடமைகளில் ஒன்றான உடலுறவு விஷயத்தில் கணவன்மார்கள் புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும். இதற்கு மாற்றமாக, தனது மனைவியிடம் உடலுறவு விஷயத்தில் அலட்சியமும், பொடுபோக்கும், வஞ்சகமும் செய்வது மாபெரும் துரோகமாகும்.

எங்களுக்கு வேலைபளு, டென்ஷன், வெளிநாடு சம்பாத்தியம், அது... இது என்று சாக்கு போக்கு சொல்லி எந்த கணவனும் மனைவிக்கு செய்ய வேண்டிய இந்த மாபெரும் பொறுப்பிலிருந்து அல்லாஹ்விடம் தப்பிக்கவே முடியாது.

நடைமுறையில் காணப்படும் தவறான தாம்பத்யம் :
ஒரு முஸ்லிம் சகோதரர். கைநிறைய சம்பளம். வசதிக்கு குறைவில்லை. சொந்தவீடு, அழகான மனைவி எல்லாம் அவருக்கு உண்டு. ஆனால், வேலை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியதும் நேராக குளியலறைக்குச் சென்று நன்றாக குளித்துவிட்டு, அத்தர் போட்டுக் கொண்டு ரெடியாக இருப்பார். அந்த நேரத்தில் மனைவி சூடாக சுவையாக உணவுகளைத்தயாரித்து கொண்டு வருவாள். எல்லாவற்றையும் ஒரு வெட்டு வெட்டிவிட்டு (வயிற்றுக்குள் தான்!) அவர் எழுந்து கை கழுவிவிட்டு வரும்போது மனைவி ரெடியாக படுக்கையறைக்குள் அவருக்காக காத்திருக்க வேண்டும். உண்டுவிட்டு சிறிது நேரம் கூடத்தில் உலாத்திவிட்டு ரூமுக்குள் நுழைந்த வேகத்துக்கு அவசர அவசரமாக உடலுறவு கொண்டு முடித்துவிட்டு, திரும்பப் படுத்து தூங்கிவிடுவார்.

உடலுறவுக்கு சக்தி வேண்டும் என்பதற்காக உணர்ச்சியைத்தூண்டும் உணவுகளை வகை வகையாக சமைக்கச் சொல்லி சாப்பிடுவார். தினந்தோறும் உடலுறவு கொள்வார். ஐந்து நிமிடத்தில் அவரது முழு உடலுறவும் முடிந்துவிடும். இப்படியே பல வருடங்கள் அவர் செய்து கொண்டிருந்தார். தினமும் உடலுறவு வைத்துக் கொள்வது மனைவியை திருப்திப்படுத்தும் என்று தவறாக எண்ணிக்கொண்டு ஒரு இயந்திரத்தனமாய், மனைவியின் மனதைப் புரிந்து கொள்ளாமலேயே இருந்து வந்திருக்கிறார். அவர் தூங்கிய பின் மனைவி குளித்துவிட்டு, சமையல் அறை வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, சீரியல் பார்த்து விட்டு கணவன் அறையை எட்டிப் பார்ப்பாள், அங்கு கணவன் குறட்டை விட்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார்.

இதுவா வாழ்க்கை? ஆனால், இன்று பெரும்பாலான குடும்பங்களில் இந்த நிலை அதிகமாக பரவி வருகிறது. இப்படிப்பட்ட இயந்திரத்தனமான உடலுறவை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. அதை உடலுறவு என்றுகூட சொல்வதில்லை.

உடலுறவு விஷயத்தில் முன்னோர்களின் பெரும் அக்கறை:
நமது முன்னோர்கள் உடலுறவு விஷயத்தில் பெரும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். தொழுகையில் அக்கறை எடுத்துக்கொள்வது போல அக்கறை எடுத்துக்கொள்வார்கள். (மனைவிக்கு உச்சநிலையை உண்டாக்கி அவளை திருப்திபடுத்தாத உடல் உறவு, உடலுறவே அல்ல என்றும் சொன்னார்கள்.) அவ்வாறு இருந்த காரணத்தால் தான் அதிக குழந்தைகளை அவர்களால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

பெண் உடலுறவில் திருப்தி அடைய அவள் மனம், உடல், குடும்ப சூழல், இடம் பொருள் போன்ற பல விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். கணவன் தான் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இன்று பெண்களை தூக்க மாத்திரைகள் போல பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆண்களே அதிகம். தங்களின் தூக்கத்திற்கு தாம்பத்யம் தேவை என்ற கண்ணோட்டத்தில் அவர்கள் மனைவியை அணுகுவதால் அவளது மனம், உடல், சூழ்நிலை சார்ந்த அனைத்து விஷயங்களையும் அவளே கருத்தில்கொள்ள வேண்டியவளாகிவிடுகிறாள். இது அவளது உடல் நலத்தை மட்டுமின்றி மனநலத்தையும் மிகவும் பாதிக்கச்செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒரு பெண் தன் கணவனிடம் அதிக அன்பையும், பாதுகாப்பையும், நம்பிக்கையையும் எதிர்பார்க்கிறாள். இவை அவளுக்கு கிடைக்கும்போது அவள் ஐஸ் கட்டியாக கணவனின் பார்வையில் உருகுகிறாள். அப்படிப்பட்ட நிலையில் அவள் தன்னை முழுமையாக, எல்லாவற்றையும் கணவனிடம் ஒப்படைக்கும்போதுதான் அங்கு அர்த்தமுள்ள உடலுறவுக்கு சாத்தியம். ஆம்! உடல் மட்டுமின்றி மனமும் ஒன்றோடொன்று சேரும்போது இரட்டை இன்பம் கிடைக்கும்போது அதன் முடிவு பன்மடங்கு சிறப்பானதாக உயர்வானதாக அமையும்.

இன்று மனிதர்கள் பணத்தின் பின்னாலேயே ஓடுவதால் தாம்பத்யமே பாழாகிப் போய், பெரும்பாலும் தம்பதிகளிடம் தாம்பத்யமே குறைந்து போய்விட்டது என்றுகூட சொல்லலாம். அந்த இடத்தை டி வி யும் சீரியலும் பிடித்துக்கொண்டுவிட்டது தான் காரணம்.


உடலுறவுக்குத்‌ தயாராதல்‌ :

ஆரோக்கியமான உடலுறவைப்‌ பராமரிப்பதற்கு, உளரீதியாகவும்‌ உடல்ரீதியாகவும்‌ தயாராகுதல்‌ அதன்‌ நீடிப்புக்கு முக்கியமானது.உடலுறவுக்குத்‌ தயாராகுதல்‌, புணர்ச்சிக்கு நிகராக முக்கியம்‌ பெற்றுள்ளது. இருபாலரும்‌ தங்களைத்‌ தயாராக்கிக்கொள்வதில்‌ கவனமாக இருப்பது மூலம்‌, தங்கள்‌ இணைவில்‌ முழுமையான இன்பம்‌ காணலாம்‌. இந்த விஷயத்தில்‌ அசட்டையாக இருப்பது,
விபரீத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்‌.

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) தம்‌ மனைவிமார்களின்‌ வீடுகளுக்குள்‌ நுழையும்போது, தம்‌ வாயையும்‌ பற்களையும்‌ பல்துலக்கி (சிவாக்‌) கொண்டு சுத்தம்செய்வது வழக்கம்‌. ஷுரைஹ்‌ இப்னு ஹானி அறிவிக்கிறார்‌:

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) தம்‌ வீட்டினுள்‌ நுழைந்ததும்‌ முதலில்‌ என்ன செய்தார்கள்‌! என்று நான்‌ ஆயிஷாவிடம்‌ வினவினேன்‌. “சிவாக்கைப்‌
பயன்படுத்துவார்கள்‌' என அவர்‌ பதிலளித்தார்‌.” (சஹீஹ்‌ முஸ்லிம்‌ 253)

நீண்ட பயணங்களிலிருந்து திரும்பி வருகையில்‌ அல்லாஹ்வின்‌ தூதரும்‌ அவருடைய தோழர்களும்‌ இரவு நேரத்தில்‌ தங்களுடைய வீடுகளுக்குள்‌ எதிர்பாராவிதமாக நுழையமாட்டார்கள்‌. மாறாக,
தங்கள்‌ மனைவிகளுக்கு முன்கூட்டியே செய்தியனுப்பி, அவர்கள்‌ தங்கள்‌ கணவர்களுக்குத்‌ தயாராகவிருக்க அவகாசம்‌ அளிப்பார்கள்‌.

நாங்கள்‌ அல்லாஹ்வின்‌ தூதருடன்‌ ஒரு போர்‌ நடவடிக்கைக்குச்‌ சென்றிருந்தோம்‌. நாங்கள்‌ மதீனாவுக்குத்‌ திரும்பியபோது, எங்கள்‌ வீடுகளுக்குச்‌ செல்ல நாடினோம்‌. அப்போது நபியவர்கள்‌ (ஸல்‌) கூறினார்கள்‌: “மாலையில்‌ பின்நேரம்வரை காத்திருந்து (வீடுகளுக்குச்‌) செல்லவும்‌.
இதன்‌ மூலம்‌, கலைந்த தலையுடன்‌ இருக்கும்‌ பெண்‌ தன்‌ கூந்தலைச்‌ சீவி சரி செய்து கொள்வாள்‌; தன்‌ கணவன்‌ உடன்‌ இல்லாத நிலையில்‌ உள்ள
பெண்‌ தன்‌ பருவ முடிகளை மழித்துக்கொள்வாள்‌. ” (சஹீஹ்‌ அல்‌-புஹாரி 4949 மற்றும்‌ சஹீஹ்‌ மூஸ்லிம்‌ 1928, இங்கு முஸ்லிமில்‌ உள்ள சொற்களே இடம்‌
பெற்றுள்ளன.)

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக ஜாபிர்‌ (ரழி) அறிவிக்கிறார்‌:

உங்களில்‌ ஒருவா்‌ (பயணத்திலிருந்து மீண்டு) இரவுநேரத்தில்‌ வரும்‌ பொழுது, அவர்‌ தன்‌ குடும்பத்தாரிடம்‌ ஒர்‌ இரவு-விருந்தாளியாகச்‌ செல்லக்‌ கூடாது. (மாறாக சற்று தாமதிப்பது மூலம்‌) கணவன்‌ வீட்டிலில்லாத பெண்‌ தன்‌ பருவ முடிகளை மழிக்துக்கொள்ளவும்‌, கலைந்த தலையுடன்‌
இருக்கும்‌ பெண்‌ தன்‌ கூந்தலைச்‌ சீவி சரிசெய்துகொள்ளவும்‌ இயலும்‌.
(சஹிஹ்‌ அல்‌- புஹாரி, 4948 மற்றும்‌ சஹிஹ்‌ முஸ்லிம்‌ 1928, இங்கு முஸ்லிமில்‌ உள்ள சொற்களே இடம்பெற்றுள்ளன)

இமாம்‌ அபுல்‌ ஃபராஜ்‌ இப்னு அல்‌-ஜவ்ஸி தம்முடைய ஸைத்‌ அல்‌-ஃகாதிரில்‌ இவ்வாறு கூறுகிறார்‌. அதாவது, தம்பதிகள்‌ உடலுறவுக்‌கென பகலிலோ இரவிலோ குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்துக்‌ கொள்ளவேண்டும்‌. இதன்‌ மூலம்‌ இருவரும்‌ உடல்‌, உளரீதியாக தயார்நிலையில்‌ இருக்கவியலும்‌. இது அவர்களின்‌ இன்ப சுகத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, அவர்களில்‌ ஒருவர்‌ உடல்‌ அல்லது உள ரீதியாகத்‌ தயாரின்றி இருக்கும்‌ சாத்தியத்தையும்‌ அகற்றிவிடும்‌. (ஸைத் அல்‌-ஃகாதிர்‌. ப.280)


மனைவி தயாராதல்‌: 

1. சுத்தமும்‌ தற்சுகாதாரமும்‌:

சுத்தமும்‌ (நழாஃபா) தூய்மையும்‌ (தஹாரா) தற்சுகாதாரமும்‌ இஸ்லாத்தில்‌ அளப்பரிய முக்கியத்துவம்‌ வாய்ந்த விஷயங்கள்‌. தூய்மையே தொழுகைக்குத்‌ திறவுகோல்‌. தொழுகை, ஒரு முஸ்லிமின்‌ வாழ்வில்‌ முதன்மையான செயல்‌. மேலும்‌, தூய்மை அல்லாஹ்வின்‌ அன்பை ஒருவருக்குப்‌ பெற்றுத்தருகிறது. அல்லாஹ்‌ கூறுகிறான்‌:

நிச்சயமாக, அதிகமாகப்‌ பாவமன்னிப்புக்‌ கோருபவர்களை அல்லாஹ்‌ நேசிக்கின்றான்‌; தீமையிலிருந்து விலகி இருப்பவர்களையும்‌ தூய்மையாளர்‌களையும்‌ நேசிக்கின்றான்‌. (குர்‌ஆன்‌ 2:222)

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அபூமாலிக்‌ அல்‌-அஷ்‌அரி (ரழி) அறிவிக்கிறார்‌:

துரய்மை இறைநம்பிக்கையில்‌ பாதியாகும்‌... (சஹீஸ்‌ முஸ்விம்‌ 284)

எனவே, ஓர்‌ இறைநம்பிக்கையாளர்‌ எல்லா நேரங்களிலும்‌ சுத்தமாகவும்‌ தூய்மையாகவும்‌ இருக்கவேண்டும்‌. இதை, தன்‌ மணவாழ்வில்‌ இன்னும்‌ உறுதியாகக்‌ கடைப்பிடிக்கவேண்டும்‌.

வீட்டில்‌ கணவர்‌ இருக்கும்போது அவருக்கு எதிரில்‌ அழகாகவும்‌ தூய்மையாகவும்‌ இருக்கவேண்டுமே எனும்‌ உணர்வே பெண்களில்‌ சிலருக்கு இருப்பதில்லை. அதேவேளை, பொது நிகழ்ச்சிகளில்‌ கலந்து கொள்ளும்போது அல்லது நண்பர்களைக்‌ காணச்செல்லும்‌ போது தங்களைத்‌ தூய்மைப்படுத்தி அலங்கரித்துக்கொள்வதில்‌ கவனமாக
இருக்கின்றனர்‌. வேறுசிலர்‌, திருமணம்‌ ஆகுமுன்‌ தங்களை அலங்‌கரித்துக் கொள்வதில்‌ பெரிதும்‌ அக்கறை காட்டுவார்கள்‌. ஆனால்‌, தங்கள்‌ மணவாளனைத்‌ தேர்ந்தெடுத்து மணம்முடித்தபின்‌, இந்த முக்கியமான அம்சத்தில்‌ அலட்சியம்‌ காட்டுவார்கள்‌.

உண்மையில்‌ இது இஸ்லாமிய போதனைகளுக்குப்‌ புறம்பானது. மனைவி முதலில்‌ தன்‌ கணவனுக்காகவே தன்னை அலங்கரித்துக்‌ கொள்ளவேண்டும்‌. இதற்காக அவளுக்கு நற்கூலியும்‌ அளிக்கப்படுகிறது. மஹ்ரம்‌ அல்லாத (குடும்பத்தார்‌ அல்லாத) ஆண்களின்‌ கவனத்தைக்‌ கவர்வதற்கு அழகுபடுத்திக்கொள்வது முழுக்க முழுக்க விலக்கப்‌பட்டதும்‌ பெரும்பாவமும்‌ ஆகும்‌. அவள்‌ வீட்டில்‌ தன்‌ கணவன்முன்‌ இயன்றளவு மிக அழகாகவும்‌ தூய்மையாகவும்‌ இருப்பது அவசியம்‌. வீட்டுவேலைகள்‌ காரணமாக அவள்‌ அலங்கோலமாக இருப்பின்‌, வேலை முடிந்ததும்‌ தன்னைத்‌ தூய்மை செய்துகொள்ள வேண்டும்‌, தன்‌ வேலை முடிந்து நீண்டநேரம்‌ ஆகியும்‌ அலங்கோலமாகவே திரிவது அவளுக்கு உகந்ததல்ல.

ஆரோக்கியமான உடலுறவுக்கு, கசப்புணர்வோ தொந்தரவோ ஏற்படுத்தக்கூடிய அனைத்தையும்‌ தவிர்க்கவேண்டும்‌. மனைவி, வாய்‌ நாற்றம்‌ அல்லது வேறுவித உடல்நாற்றமின்றி இருப்பதில்‌ கவனமாக இருக்கவேண்டும்‌. ஏனெனில்‌, இது ‘ஆசையைக்‌ கெடுக்கும்‌' முக்கிய விஷயமாக அமையக்கூடும்‌. 

வாய்நாற்றம்‌ அடித்தால்‌, அவர்கள்‌ பள்ளிவாசலுள்‌ நுழைவதைக்கூட அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) தடுத்‌துள்ளார்கள்‌. அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக ஜாபிர்‌ இப்னு அப்துல்லாஹ்‌ (ரழி) அறிவிக்கிறார்‌:

“பூண்டு அல்லது வெங்காயம்‌ உண்டவர்கள்‌ எம்மிடம்‌ வரக்கூடாது” அல்லது, இப்படிக்‌ கூறினார்‌: “அவர் நம்‌ பள்ளிவாசலுக்கு வரவேண்டாம்‌. தன்‌ வீட்டிலேயே இருந்துகொள்ளட்டும்‌...' (சஹீஹ்‌ அல்‌-புஹாரி 877)

அல்லாஹ்வின்‌ தூதா்‌ (ஸல்‌) கூறியதாக ஜாபிர்‌ இப்னு அப்துல்லாஹ்‌ (ரழி) அறிவிக்கிறார்‌:‌
எவர்‌ இந்தச்‌ செடியை, அதாவது பூண்டை, உண்டாரோ - இன்னொருமுறை, 'எவர்‌ வெங்காயமும்‌ பூண்டும்‌ சமையற்பூண்டும்‌ உண்டாரோ” எனக்‌ கூறினார்கள்‌ அவர் நம்‌ பள்ளிவாசலுக்கு வரவேண்டாம்‌. ஏனெனில்‌, ஆதமின்‌ மக்கள்‌ பாதிக்கப்படும்‌ அதே பொருள்களினால்‌ வானவர்களும்‌ பாதிக்கப்படுகின்றனர்‌. (சஹீஹ்‌ முஸ்லிம்‌ 564)

துர்நாற்றம்‌ மனிதர்கள்‌, வானவர்கள்‌ இரு சாராரையும்‌ பாதிக்கின்றது என்பதை மேற்கூறிய நபிமொழி காட்டுகிறது. எனில்‌, ஒருவர்‌ தன்‌ துணைவருக்குத்‌ தீங்கிழைக்காமல்‌ தவிர்ந்திருப்பது இதைவிட
முக்கியமானது என்பதன்‌ காரணங்களைக்‌ குறிப்பிடத்‌ தேவையில்லை. எனவே, மனைவி என்பவள்‌ அழுக்கு, அசுத்தம்‌, வாய்நாற்றம்‌, உடல்‌ நாற்றம்‌ அனைத்தையும்‌ தவிர்ப்பதில்‌ கவனமாய்‌ இருக்க வேண்டும்‌.
பற்களை இயன்றளவு அடிக்கடி துலக்கி வாய்‌ சுத்தம்‌ பேணவேண்டும்‌. இதன்மூலம்‌, முத்தமிடும்வேளை துணைவருக்குப்‌ பாதிப்புவராமல்‌ காக்கமுடியும்‌, அவள்‌ எப்பொழுதுமே தன்‌ கணவன்‌ முன்‌ தான்‌
தூய்மையாக இருப்பதில்‌ ஆர்வமும்‌ அக்கறையும்கொள்ள வேண்டும்‌.

ஒருவருக்கு உடல்நாற்றம்‌ தொடர்பாக உண்மையில்‌ பிரச்சினை உள்ளதென்றால்‌, அவர்‌ மருத்துவ சிசிச்சையை நாடவேண்டும்‌. இந்த நிலைமையை சீர்செய்ய பல எளிய, திறனுள்ள சிகிச்சைகள்‌ உள்ளன. பொதுவாக, உடல் நாற்றத்துக்கு மருத்துவ நோய்க்குறி சோதனை அவசியமில்லை. எனினும்‌, சரிசெய்யும்‌ முயற்சிகளையும்‌ மீறி அது தொடர்ந்து நீடித்தால்‌, மருத்துவ ஆலோசனை பெறுவது இறந்தது.

2. அலங்கரித்தலும்‌ அழகுபடுத்தலும்‌:

உடலுறவுக்குத்‌ தயாராவதன்‌ மிக முக்கிய பகுதி, மனைவி தன்னைக்‌ கணவனுக்காக அழகுபடுத்திக்கொள்வதில்‌ கவனமாய்‌ இருப்பதே.
மனிதர்கள்‌, அழகானவற்றைப்‌ பார்த்து, ரசித்து, மகிழக்கூடிய காட்சி சார்ந்த படைப்பினங்களைப்‌ பார்ப்பதிலும்‌ அனுபவிப்பதிலும்‌ மகிழ்ச்சி
அடைவார்கள்‌. இதனால்தான்‌ இஸ்லாம்‌, ஜும்‌ஆ (வெள்ளிக்கிழமை தொழுகை), ஈத்‌ (பெருநாள்‌) போன்ற மக்கள்‌ கூடும்‌ இடங்களுக்குச்‌ செல்லும்போது தங்களை அலங்கரித்துச்‌ செல்ல வேண்டும்‌ என ஊக்குவிக்கிறது. முஸ்லிம்கள்‌ இதர முஸ்லிம்களின்‌ கண்களுக்கு இதமாகக்‌ காட்சிதர வேண்டும்‌. வாழ்க்கைத்‌ துணைவரின்‌ விஷயத்தில்‌
இது மேலும்‌ முக்கியத்துவம்‌ பெறுகிறது.

எனவே, பெண்‌ தன்‌ கணவனுடன்‌ உடலுறவுக்காகத்‌ தன்னை அலங்கரித்துக்‌ தயார்படுத்திக்கொள்வதன்‌ முக்கியத்துவத்தை மேலும்‌ வலியுறுக்கக்‌ தேவையில்லை. ஹூர்‌ அல்‌-அய்ன்‌ அல்லது அழகான
கண்களையுடைய கன்னிகள்‌: எனும்‌ சுவனத்து மங்கைகளை சித்திரிக்கையில்‌ அல்லாஹ்‌ இவ்வாறு கூறுகிறான்‌:

அவர்கள்‌ இரத்தினங்களையும்‌ பவளங்களையும்‌ போல அழகானவர்கள்‌. (குர்‌ஆன்‌ 55:59)

ஆகவே, அலங்காரம்செய்தல்‌ என்பது ஒருவர்‌ தன்‌ துணைவரின்‌ கவனத்தை ஈர்ப்பதற்கான வழியாகும்‌. திடமான உடலுறவையும்‌ அதன்மூலம்‌ திடமான மணவாழ்வையும்‌ நாடும்‌ பெண்மணி, தன்னைத்‌
தன்‌ கணவனுக்காக அழகுபடுத்த முனைவது அவசியம்‌. இதன்மூலம்‌, கணவனும்‌ பிற பெண்களை இச்சையுடன்‌ பார்ப்பதிலிருந்து காக்கப்‌படுவார்‌.

துரதிர்ஷ்டவசமாக, பேணுதலான முஸ்லிம்‌ பெண்‌ தன்னைத்‌ தன்‌ கணவனுக்காக வசீகரிக்கும்‌ விதத்தில்‌ அலங்கரித்துக்கொள்வது சரியான செயலல்ல என சில முஸ்லிம்கள்‌ கருதுகின்றனர்‌. இது உண்மைக்கு
எதிரான கருத்து. ஒரு பெண்‌ தன்‌ கணவனுக்காகப்‌ பல்வேறு அழகுபடுத்தல்‌ வழிகளைப்‌ பயன்படுத்துவதற்கு அனுமதி மட்டுமல்ல நற்கூலியும்‌ உண்டு. இறைபக்தியும்‌ பேணுதலுமுள்ள முஸ்லிமாக இருப்பதன்‌ ஒரு பகுதி, கற்பு காத்து வாழுதல்‌. இதற்கான அனைத்து வழிகளும்‌
ஊக்குவிக்கப்படுகின்றன - அவை ஷரீஆவினால்‌ (இஸ்லாமியச்‌ சட்டத்தினால்‌) குறிப்பாக விலக்கப்படாத வழிகளாக இருந்தாலே
போதும்‌.

பெண்கள்‌ தங்களை அலங்கரித்துக்கொண்டு, தங்கள்‌ கணவர்கள்‌ முன்‌ அழகாகக்‌ தோன்றவேண்டுமென அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) ஊக்குவிக்கார்கள்‌. அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்‌:

அல்லாஹ்வின்‌ தூதரிடம்‌ தரவேண்டிய கடிதம்‌ தன்னிடம்‌ உள்ளதாக ஒரு பெண்‌ திரைமறைவிற்குப்‌ பின்னாலிருந்து சைகை காட்டினாள்‌. அல்லாஹ்வின்‌
தூதர்‌ (ஸல்‌) தம்‌ கையை விலக்கிக்கொண்டு "கூறினார்கள்‌: “இந்தக்‌ கை ஆணுடையுதா பெண்ணுடையுதா என்பதை என்னால்‌ அறிய முடியவில்லையே. அகுற்கு அவள்‌, “இல்லை, இது ஒரு பெண்ணின்‌ கைதான்‌' என்றாள்‌. அப்போது நபியவர்கள்‌, 'நீ பெண்ணாக இருப்பின்‌, உன்னுடைய நகங்களை அழகுபடுத்த மருதாணி பூசியிருப்பீர்‌ என்றார்கள்‌. ' (ஸுனன்‌ அபூ தாவூத்‌ 4163)

ஹிந்து பின்த்‌ உத்பா அல்லாஹ்வின்‌ தூதரிடம்‌ வந்து இப்படிக்‌ கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்‌, அல்லாஹ்வின்‌ தூதரே! என்னுடைய உறுதிப்‌ பிரமாணத்தை (பைஅத்‌) ஏற்றுக்‌ கொள்ளுங்கள்‌. அதற்கு நபியவர்கள்‌ (ஸல்‌) பதிலளித்தார்கள்‌:

நீ உன்னுடைய உள்ளங்கைகளின்‌ தோற்றத்தை மாற்றும்வரை நான்‌ உன்னுடைய உறுதிப்‌ பிரமாணத்தை ஏற்கமாட்டேன்‌. அவை வனவிலங்கின்‌
பாத நகங்கள்‌ போன்று தோன்றுகின்றன! (சுனன்‌ அபூ தாவூத்‌ 4102)

அன்னை ஆயிஷா (ரழி) மேலும்‌ அறிவிக்றார்‌:
நஜாஷி (மன்னர்‌) தமக்கு அன்பளிப்பாக அளித்த சில நகைகளை அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) பெற்றார்கள்‌. அவற்றில்‌, அபிஸீனியக்‌ கல்‌ பதித்ததொரு தங்க மோதிரமும்‌ இருந்தது.' ஆயிஷா (ரழி) கூறினார்‌: 'அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) தம்‌ முகத்தை அதிலிருந்து திருப்பி, அதை ஒரு குச்சியாலோ தம்‌ விரலாலோ எடுத்து, அபுல்‌ ஆஸின்‌ மகளும்‌ தம்‌ மகள்‌ ஸைனபின்‌ மகளுமான உமாமாவை அழைத்து, என்‌ அருமை மகளே, இதை அணிந்து உன்னை அலங்கரித்துக்கொள் என்றார்கள்‌.” (சுனன்‌ அபூ தாவூத்‌ 4838)

எனவே, மனைவி தன்னை அழகுபடுத்திக்கொள்வது திடமான உடலுறவுக்கு வழிவகுக்கும்‌; மேலும்‌ உடலுறவுக்கு உடல்ரீதியாகத்‌ தயாராதலில்‌ இது மிகத்தேவையான அம்சமாகும்‌. இதுகுறித்து சில
முக்கியமான விஷயங்களைக்‌ கீழே தருகிறோம்‌:

அ. உடல்‌ முடிகளை அகற்றுதல்‌. 

மனைவி - தன்‌ கணவன்‌ விரும்பினால்‌, தன்‌ உடலிலிருந்து தேவையற்ற முடியை அகற்றுவதை உறுதிசெய்ய வேண்டும்‌. நாம்‌ ஏற்கனவே சஹீஹ்‌ புஹாரியிலும்‌ சஹீஹ் ‌ முஸ்லிமிலும்‌
பதிவாகியுள்ள அந்த ஹதீஸை மேற்கோள்காட்டினோம்‌. அதில்‌, மனைவி பருவ முடிகளை மழிப்பது", வீடுதிரும்பும்‌ கணவனுக்காகத்‌
தன்னைத்‌ தயார்படுத்துவதில்‌ ஒரு பகுதி என்பதாக அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கருதியுள்ளார்கள்‌. உடல்‌ முடியை நீக்குவது முற்றிலும்‌ அனுமதிக்கப்பட்டது. மேலும்‌, அதற்கான எண்ணம்‌ கணவனைத்‌
திருப்துப்படுத்துவதற்காக இருப்பின்‌, அது விரும்பத்தக்கதும்‌ நற்கூலிக்கு உரித்தானதும்கூட.

பெண்கள்‌ தங்களுடைய கைகள்‌, கால்கள்‌, உடலின்‌ இதர பகுதிகளிலிருந்து பாலுறுப்பு, அக்குள்‌ மற்றும்‌ முகத்தின்‌ ரோமங்களுக்கு சிறப்பு அழுத்தம்‌ உள்ளது - முடியை நீக்கிவிடலாம்‌. புருவங்கள்‌ மட்டுமே இதற்கு விதிவிலக்கு. நபிமொழியின்‌ பிரகாரம்‌, புருவங்களை மழிப்பதற்கு அனுமதி இல்லை.

சில பெண்களுக்கு கன்னங்களிலும்‌ முகத்தின்‌ இதர பகுதிகளிலும்‌ மிகுதியான முடி வளரக்கூடும்‌. முகத்திலுள்ள இந்த முடியை நீக்குவது விரும்பத்தக்கது. இதன்மூலம்‌, தாங்கள்‌ ஆண்‌ சாயலில்‌ தெரிவதைத்‌ தவிர்க்கலாம்‌. அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌), பெண்கள்‌ முகத்திலுள்ள
முடி நீக்கப்படுவதைத்‌ தடைசெய்த ஹதீஸிற்கான விளக்கவுரையில்‌ இமாம்‌ நவவி இவ்வாறு கூறுகிறார்‌: “இந்தச்‌ செயல்‌ (அதாவது, முகத்திலுள்ள முடியைப்‌ பெண்கள்‌ நீக்குவது) அனுமதிக்கப்பட்டதல்ல, ஒரு
பெண்ணிற்கு தாடியோ மீசையோ முளைத்தாலொழிய. அப்படி முளைத்தால்‌, அதை நீக்குவதற்குத்‌ தடையில்லை. உண்மையில்‌, எங்கள்‌
கருத்துப்படி, அது (அதை நீக்குவது) விரும்பத்தக்கது... (இந்த ஹதீஸில்‌
உள்ள) தடை, புருவங்களை வடிவமைக்கும்‌ விஷயத்திற்கு மட்டுமே பொருந்தும்‌.” (அல்‌-மின்ஹாஜ்‌ ஷரஹ்‌ சஹிஹ்‌ முஸ்லிம்‌ ப, 1602)

தேவையற்ற உடல்‌ முடியைப்‌ பல்வேறு வழிகளில்‌ மெழுகு, பசை, பொடி, சவரக்கத்தி போன்றவை மூலம்‌ நீக்குவதற்கு அனுமதியுண்டு. இதற்குப்‌ பதிலாக, முடியின்‌ நிறத்தை (நரை முடியை கறுப்பு சாயம் கொண்டு மாற்றுவதை தவிர) மாற்றுவதற்கு அனுமதியுண்டு. அதே போல்‌, உடல்‌ முடியை நிரந்தரமாக நீக்குவதற்கும்‌ ஷரீஆவில்‌ தடை ஏதும்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை. ஏனெனில்‌, இங்கே தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தேவையற்ற முடியை நீக்குவதுகான்‌ நோக்கம்‌. 

எனினும்‌, முஸ்லிம்‌ பெண்களின்‌ முன்னிலையில்கூட, அவளது மறைவான பகுதியை (அவ்ரா) வெளிப்படுத்தக்‌ கூடாது எனும்‌ நிபந்தனை உண்டு. பிற முஸ்லிம்‌ பெண்களின்‌ முன்னிலையில்‌ ஒரு முஸ்லிம்‌ பெண்ணின்‌ மறைவான பகுதி (அவ்ரா) என்பது, அவளுடைய தொப்புளிலிருந்து முழங்கால்‌ வரையாகும்‌. இதில்‌ முழங்காலும்‌ அடங்கும்‌. எனவே, பிற முஸ்லிம்‌ பெண்களின்‌ முன்னிலையில்கூட
அவள்‌; தன்‌ உடல்முடியை நீக்குவதற்காக தொப்புள்‌ முதல்‌ முழங்கால்‌ வரையிலான பகுதியை வெளிப்படுத்தக்‌ கூடாது. அதேபோல்‌, முஸ்லிமல்லாத பெண்களின்‌ முன்னிலையில்‌ ஒரு முஸ்லிம்‌ பெண்ணின்‌ மறைவான பகுதி (அவரா) என்பது, அவளுடைய முகம்‌, கைகள்‌ தவிர்த்து
உடல்‌ முழுவதுமாகும்‌. (அல்‌-ஹிதாயா 4:461 ரத்‌ அல்‌-முஹ்தார்‌ 6:371)

ஆ. வசீகரிக்கும்‌ ஆடையணிதல்‌. 

ஒரு பெண்‌ தன்‌ கணவனுடன்‌ உடலுறவு
கொள்வதற்காக கவர்ச்சியான, வசீகரமான, வெளிக்காட்டக்கூடிய உடை அணிந்து அலங்கரித்துக்கொள்வதில்‌ தவறேதுமில்லை. உல்லாச சின்ன உள்ளாடை, மயக்கும்‌ உள்ளாடை, பிகினி, டூ பீஸ் போன்றவற்றை அணிவது
மார்க்க ஒழுங்குக்கும்‌ (அதப்) நாணத்துக்கும்‌ (ஹயா) எதிரானதல்ல. இதற்கான நிபந்தனை, அது கணவனுக்காக மட்டுமே இருக்க வேண்டும்‌; அந்தக்‌ கோலத்தில்‌ எந்த மூன்றாவது ஆளும்‌ தம்பதியருடன்‌
இருக்கக்கூடாது. உண்மையில்‌, நாம்‌ ஏற்கனவே கூறியதுபோல, தன்னுடைய கற்பையும்‌ தன்‌ கணவனின்‌ கற்பையும்‌ காக்க உதவுவதே
இதன்‌ நோக்கமாக இருப்பின்‌, அவளுக்கு நற்கூலி கிடைக்கும்‌, இன்ஷா அல்லாஹ்‌.

‌மேலே கூறப்பட்ட உடைபற்றிய
குறிப்புகளை அவள்‌ தன்‌ கணவனின்‌ முன்னிலையில்‌ மட்டும்தான்‌, அதுவும்‌ படுக்கையறை சூழலில்தான்‌, பின்பற்ற வேண்டும்‌.

இ. நறுமணம்‌. 

இதமான வாசனை பிறர்மீது குறிப்பிடத்தக்க தாக்கம்‌ ஏற்படுத்தலாம்‌. அருமையான நறுமணங்கள்‌ மனதுக்கு இதமளிக்கக்‌ கூடியன. வாசனைத்‌ திரவியங்களைப்‌ பூசி மகிழ்வது மனித இயற்கையின்‌ (பிஃத்ரா) ஒரு பகுதியாகும்‌. இதனால்தான்‌, நறுமணம்‌ பூசும்‌ வழக்கத்தை அல்லாஹ்வின்‌ தூதர்கள்‌ அனைவரும்‌ பின்பற்றியிருந்தனார்‌. அல்லாஹ்வின்‌
துரதர்‌ (ஸல்‌) கூறியதாக அபூ அய்யூப்‌ (ரலி) அறிவிக்கிறார்‌: .

நான்கு விஷயங்கள்‌ நபிமார்களின்‌ வழிகளைச்‌ சேர்ந்தவை: நாணம்‌, நறுமணம்‌ பூசுதல்‌, பல்துலக்கியைப்‌ (சிவாக்‌) பயன்படுத்தல்‌, திருமணம்‌ முடித்தல்‌ . (சுனன்‌ அல்‌-திர்மிதீ 1080)

அல்லாஹ்வின்‌ அன்புத்‌ தூதர்‌ (ஸல்‌) நறுமணப்‌ பொருட்களை நேசித்தார்கள்‌. அனஸ்‌ (ரழி) அறிவிக்கிறார்‌: அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) நறுமணப்‌ பொருளை மறுக்கமாட்டார்கள்‌.
(சஹீஹ்‌ அல்‌-புஹாரி 5585)

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்‌:
ரப்ஹான் (நறுமணப்‌ பொருள்‌) வழங்கப்படும்போது எவரும்‌ அதை மறுக்கக்‌ கூடாது. அது மென்மையான, அருமையான நறுமணம்‌ கொண்டது. (சஹீஹ்‌ முஸ்லிம்‌ 2253)

ஆண்கள்‌ வெள்ளிக்கிழமை, ஈத்‌ (பெருநாள்‌) போன்ற பொது நிகழ்ச்சிகளுக்குச்‌ செல்லும்பொழுது நறுமணம்‌ பூசுவது விரும்பத்தக்கது எனும்‌ விஷயம்‌ பல நபிமொழிகள்‌ வாயிலாக ஆதாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிம்‌ இதமான நறுமணம்ப பூசிக்கொள்வதன்‌ மூலம்‌ பிறருக்கு நலன்‌ பயக்கிறார்‌. இந்தக்‌ கருத்துச்சூழலில்தான்‌, நறுமணம்‌ பூசுவது அறச்செயலாகக்‌ கருதப்படுகிறது.

இயல்பாகவே, நறுமணப்‌ பொருள்கள்‌ உடலுறவுச்‌ செயல்பாடுகளில்‌ முக்கியப்‌ பங்கு வகிக்கின்றன. இதமான மணம்‌ பாலுறவு வேட்கையைத்‌ தூண்டி, இன்ப சுகத்தையும்‌ செயல்திறனையும்‌, அதிகரிக்கும்‌. எனவே, மனைவி தன்‌ கணவனுடன்‌ உடலுறவு கொள்வதற்கான அலங்கரிப்பின்‌ ஒரு பகுதியாக நறுமணம்‌ பூசிக்கொள்ள முயலவேண்டும்‌. அவள்‌ தனக்கு மிகப்‌ பொருத்தமான, தன்‌ கணவனை
மகிழ்விக்கக்கூடிய நறுமணப்‌ பொருளைக்‌ தெரிவுசெய்துகொள்ள வேண்டும்‌. அது, அவளின்‌ உடல்‌ அல்லது உடையில்‌ உள்ள எந்தவொரு
துர்நாற்றத்தையும்‌ போக்க உதவும்‌.

எனினும் பெண்கள் நறுமணம் பூசிக்கொண்டு வெளியில்‌ செல்ல அனுமதியில்லை. 

இதை அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌), மிக ஆதாரப்பூர்வமான (சஹீஹ்‌) ஹதீஸ்களில்‌ திட்டவட்டமாகத்‌ தடுத்துள்ளார்‌. அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அபூமூஸா (ரழி) அறிவிக்கிறார்‌:

“ஒரு பெண்‌ நறுமணம்‌ பூசிக்கொண்டு, ஓர்‌ (ஆண்கள்‌) குழுவைச்‌ கடந்து செல்கையில்‌, அவர்கள்‌ அவளுடைய நறுமணப்‌ பொருளின்‌ வாசனையை
நுகர்வார்களெனில்‌, அவள்‌ அப்படிப்பட்டவளாவாள்‌...' (மேலும்‌, ) “அவர்கள்‌ (ஸல்‌) கடுமையான சொற்களைப்‌ பயன்படுத்தினார்கள்‌ என அறிவிப்பாளர்‌
கூறுகிறார்‌.” (சுனன்‌ அபூ தாவூத்‌ 4170)

எனவே, மனைவி வீட்டினுள்‌ இருக்கும்போது மட்டுமே நறுமணம்‌ பூசிக்கொள்ளலாம்‌.

ஈ. அழகுணர்வும்‌ ஆபரணங்களும்‌. 

மனைவியின்‌ அலங்காரத்தில்‌, அழகுபடுத்தலில்‌ தங்கம்‌, வெள்ளி மற்றும்‌ இதரவகை ஆபரணங்கள்‌ அணிவதும்‌ அடங்கும்‌; முக ஒப்பனையும்‌ உதட்டுச்‌ சாயம்‌ பூசுதலும்‌ அடங்கும்‌. கைகால்களுக்கு மருதாணி இட்டுக்கொள்வதும்‌ - அவளுக்குப்‌
பிடித்தால்‌, கண்களுக்கு மை அல்லது சுர்மா போட்டுக்கொள்வதும்‌ - அவளின்‌ அழகை அதிகரிக்கும்‌. இவற்றை நபிவழி (சுன்னா) குறிப்பாக அனுமதித்துள்ளது. மேலும்‌, கூந்தலை அழகாக சீவி, சீர்படுத்தி, பராமரிப்பது மூலம்‌ அதையும்‌ அவள்‌ அலங்கரித்துக்கொள்ள வேண்டும்‌. கூந்தலுக்குச்‌ சாயம்‌ பூசுவதற்கும்‌ அனுமதியுண்டு. இதில்‌, சாயத்தின்‌
உட்பொருள்கள்‌ மார்க்கத்தில்‌ அனுமதிக்கப்பட்டவையாக (ஹலால்‌) இருக்கவேண்டும்‌.

மேற்கூறப்பட்டதிலிருந்து, பெண்‌ தன்‌ கணவனுக்காகத்‌ தன்னை அலங்கரித்துக்கொள்ளும்‌ விஷயத்தில்‌ பொதுவாக இஸ்லாம்‌ பெரிய
அளவில்‌ தடைகள்‌ எதையும்‌ விதிக்கவில்லை என்பது விளங்கும்‌. ஆம்‌, அலங்காரம்செய்வது மூலம்‌ கணவன்‌, மனைவி இருவரும்‌ தங்கள்‌ கற்பு ஒழுக்கத்தைப்‌ பேணவும்‌ விலக்கப்பட்டதைத்‌ தவிர்க்கவும்‌ இயலும்‌.

எனினும்‌, ஒருவரின்‌ உருவத்தையே திரிக்கக்கூடிய சில அலங்‌காரங்கள்‌” தடைசெய்யப்பட்டுள்ளன - அவை கணவனுக்காக வேண்டி செய்யப்பட்டாலும்‌ சரியே. இதில்‌ அழகுபடுத்கலுக்காகச்‌ செய்யப்‌படும்‌ அலங்கார அறுவைசிகிச்சை, புருவங்களை வடிவமைத்தல்‌, பச்சை குத்துதல்‌, காதுகள்‌, மூக்கு தவிர்த்த உடலின்‌ பிற பகுதிகளைக்‌ குத்துதல்‌, மனித ரோமத்தால்‌ செய்யப்பட்ட சவுரி அல்லது செயற்கைத்‌ தலைமுடி அணிதல்‌ ஆகியவை அடங்கும்‌. எனவே, இவையெல்லாம்‌ தவிர்க்கப்படவேண்டும்‌.

உடல்‌ உருவத்தை அழகாக வைத்துக்கொள்ளுதல்‌. ஒரு பெண்‌, தன்னைக்‌ கச்சிகமாகவும்‌ நல்ல வடிவிலும்‌ ஆரோக்கியமாகவும்‌ வைத்துக்‌ கொள்ளுதல்‌ கணவனுக்கு அவள்‌ செய்யும்‌ அலங்காரத்தின்‌ ஒரு
பகுதியே ஆகும்‌. மனைவி தன்‌ உடல்‌ உருவத்தையும்‌ நன்கு கவனித்து, இயன்றளவு அதன்‌ அழகைப்‌ பராமரிப்பது அவசியம்‌. இதன்மூலம்‌,
அவளுடைய உடலின்பால்‌ கணவன்‌ ஈர்க்கப்படுவது மட்டுமின்றி, அவள்‌ தன்‌ உடல்நலத்தையும்‌ காத்துக்கொள்ள உதவும்‌.

3. பெண்மைசார்ந்த நடத்தை:

உடலுறவுக்கு உளரீதியாகத்‌ தயாராகும்‌ ஒரு பெண்‌, தன்னுடைய மென்மையும்‌ நளினமும்‌ பெண்மைசார்ந்த நடத்தைகளும்தான்‌ தன்‌ கணவனைத்‌ தன்‌ பக்கம்‌ ஈர்க்கும்‌ என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்‌. முரட்டுத்தனமும்‌, ஆண்‌ போன்ற இயல்புகளும்‌, பொதுவாக ஆண்களுக்கு ‘ஆசை கெடுக்கும்‌' விஷயங்கள்‌ என்பதை விளங்கிக்‌ கொள்வது அவசியம்‌”.

பெண்ணின்‌ குரலில்‌ ஓர்‌ இயற்கையான கவர்ச்சியையும்‌ ஈர்ப்பையும்‌ இறைவன்‌ வைத்துள்ளான்‌. இது ஆணிடம்‌ பாலியல்‌ கிளர்ச்சியூட்ட வல்லது. இந்த உண்மையை எவராலும்‌ மறுக்கவியலாது. பல
உளவியலாளர்களும்‌ இதை ஏற்றுள்ளதோடு, அவர்கள்‌, ஒருவரின்‌ குரல்‌ பாலியல்‌ ஆசைகளைக்‌ தூண்டுவதில்‌ பெரும்பங்கு வகிப்பதாக அழுத்தமாகக்‌ குறிப்பிட்டுள்ளனர்‌.

இதனால்தான்‌, இறைவன்‌ குறிப்பாகத்‌ தன்னுடைய தூதரின்‌ மனைவிமார்களையும்‌, பொதுவாக அனைத்து முஸ்லிம்‌ பெண்களையும்‌, அந்நிய அண்களிடம்‌ மென்மையான, இனிமையான குரலில்‌ பேசவேண்டாம்‌ எனக்‌ தடுத்துள்ளான்‌.

இறைவன்‌ கூறுகிறான்‌:

நபியின்‌ மனைவியரே! நீங்கள்‌ ஏனைய சாதாரணப்‌ பெண்களைப்‌ போன்றவர்கள்‌ அல்லர்‌. நீங்கள்‌ அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாய்‌ இருந்தால்‌
மென்மையாகக்‌ குழைந்து பேசாதீர்கள்‌. ஏனெனில்‌ உள்ளத்தில்‌ கெட்ட எண்ணம்‌ கொண்டிருக்கும்‌ யாரேனும்‌ ஒருவன்‌ சபலம்கொள்ளக்‌ கூடும்‌.
(குர்‌ஆன்‌ 33:22)

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌), பெண்‌ நடத்தைகொண்ட ஆண்களையும்‌, ஆண்‌ நடத்தைகொண்ட பெண்களையும்‌ சபித்துள்ள ஹதீஸிற்கு, இமாம்‌ பத்ருத்தீன்‌ அல்‌-அய்னி அளிக்கும்‌ கருத்துரையில்‌, எதிர்பாலினரின்‌ பாவனை அறிந்தும்‌ அறியாமலும்‌ -
இரண்டு விதத்திலும்‌ - செய்யப்படுகின்றன என விளக்குகிறார்‌. இந்த ஹதீஸில்‌ உள்ள குற்றச்சாட்டும்‌ சாபமும்‌, அறிந்து செய்பவர்கள்‌ மீதே சாரும்‌. (உம்தத்‌ அல்‌-காரி ஷரஹ்‌ சஹீஹ்‌ அல்‌-புஹாரி 15:85)

அந்திய ஆண்களோடு மிகுந்த மென்மையுடன்‌ பேச வேண்டாம்‌ எனவும்‌, அவர்களோடு பேசுகையில்‌ உள்ளடக்கமும்‌ பொருளும்‌ நேர்மையாக இருக்கவேண்டும்‌ எனவும்‌, ஆசை தூண்டுதல்‌ அறவே
இருக்கக்கூடாது எனவும்‌ மேற்கூறிய வசனம்‌ பெண்களுக்குக்‌ கட்டளையிடுகிறது. ஏனெனில்‌, அந்நிய ஆண்களிடம்‌ மென்மையாகவும்‌, இச்சையைத்‌ தூண்டும்‌ விதத்திலும்‌, கொஞ்சிக்‌ குழைந்தும்‌ உரையாடுவது விலக்கப்பட்ட (ஹராம்‌) ஒன்றில்‌ வீழ்வுதற்கான வழியாகும்‌. எனவே, தவறு செய்வதற்கான வழியும்‌ தடைசெய்யப்பட்டுள்ளது.

உள்ளபடியே, மனைவியின்‌ மென்மையாலும்‌ பெண்மைசார்ந்த நடத்தைகளாலும்தான்‌ கணவன்‌ வெகுவாக அவள்பால்‌ ஈர்க்கப்‌படுவான்‌.

மேற்கூறிய வழிகாட்டுதல்‌ எல்லா நேரங்களுக்கும்‌ பொருந்தும்‌ என்ற போதிலும்‌, தம்பதியர்‌ உடலுறவில்‌ ஈடுபட எண்ணும்போது இது இன்னும்‌ அதிகமாகப்‌ பொருந்தும்‌, மனோநிலையையும்‌ காதல்‌ சூழலையும்‌ உருவாக்குவதற்கு மனைவி பல்வேறு வழிகள்‌, உத்திகளைப்‌ பயன்படுத்தி கணவனை வசீகரிக்கவேண்டும்‌. தன்‌ கணவனின்‌ உடலுறவு
ஆசையைக்‌ கிளப்புவதற்காக அவள்‌ கொஞ்சலாம்‌, பேசலாம்‌ மோகவலை வீசலாம்‌. அதேவேளை கசப்பு உணர்வு அல்லது 'ஆசைகெடுக்கும்‌’ எதனையும்‌ அவள்‌ தவிர்க்க வேண்டும்‌. இவ்வாறு செய்தால்‌,
கணவன்‌-மனைவி இணைதலுக்கான ஓர்‌ உணர்ச்சி ததும்பிய இன்பச்‌சூழல்‌ உருவாகும்‌, ,இன்ஷா அல்லாஹ்‌.


கணவன்‌ தயாராதல்‌:

மேலே மனைவியின்‌ உள, உடல்ரீதியான தயார்நிலைபற்றி கூறப்‌பட்டது கணவனுக்கும்‌ பொருந்தும்‌. இதில்‌ மனைவிக்கென்றே
கூறப்பட்டிருந்த விஷயங்கள்‌ மட்டும்‌, இயல்பாக, கணவனுக்குப்‌ பொருந்தாது. எனவே, மேற்கூறப்பட்ட பொதுவான வழிகாட்டுகலைக்‌ கணவனும்‌ கவனத்தில்கொள்வது அவசியம்‌.

இறைவன்‌ கூறுகிறான்‌:
பெண்கள்‌ மீது (ஆண்களுக்கு) உள்ள உரிமைகள்‌ போன்றே பெண்களுக்கும்‌ உரிமைகள்‌ உண்டு. (குர்‌ஆன்‌ 2:228)

எவ்வாறாயினும்‌, கணவனின்‌ கண்ணோட்டத்திலிருந்து சில குறிப்பிட்ட விஷயங்களை விளக்கவும்‌ பரிசிலிக்கவும்‌ தேவை உள்ளது.

1. சுத்தமும்‌ தற்சுகாதாரமும்‌:

கணவன்‌, தான்‌ எப்படியிருந்தாலும்‌ - அழுக்காக, அலங்கோலமாக, வாய்நாற்றத்தோடும்‌ உடல்‌ நாற்றத்தோடும்‌ இருந்தாலும்‌ - மனைவி தன்பால்‌ ஈர்க்கப்படுவாள்‌ என எண்ணிக்கொள்வது பெருந்தவறாகும்‌. பெண்‌ ஆணைவிட மிக நளினமான, நயமான உணர்வுகளும்‌ பதிவு நுட்பத்திறமும்‌ உடைய பிறவியாவாள்‌. சில நேரங்களில்‌, அவள்‌ கூச்சவுணர்வு காரணமாக மட்டுமே தன்‌ உணர்வுகளைக்‌ கணவனிடம்‌
வெளிப்படுத்தாமல்‌ இருப்பாள்‌. எனவே, கணவன்‌ தன்னைச்‌ சுத்தமாகவும்‌ சுகாதாரமாகவும்‌ வைத்துக்கொள்வதில்‌ கவனம்‌ செலுத்தவேண்டும்‌.

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) மக்களிலேயே மிகத்‌ தூய்மையானவர்கள்‌. தூய்மையின்றி இருப்பதன்‌ விபரீத விளைவுகள்‌ குறித்து நபியவர்கள்‌
(ஸல்‌) கணவன்மார்களை எச்சரித்துள்ளார்கள்‌. 

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அலீ இப்னு அபீதாலிப்‌ (ரழி) அறிவிக்கிறார்‌. உங்கள்‌ ஆடைகளை சலவைசெய்து கொள்ளுங்கள்‌. உங்கள்‌ தலைமுடியைப்‌ பராமரித்துக்‌ கொள்ளுங்கள்‌. பல்துலக்கியைப்‌ (சிவாக்‌) பயன்படுத்துங்கள்‌. உங்களை அலங்கரித்துத்‌ தூய்மையாக இருங்கள்‌. பனீ இஸ்ரவேலர்கள்‌ இதைச்‌ செய்யாததனால்‌ அவர்களுடைய பெண்கள்‌ விபச்சாரத்தில்‌ ஈடுபட்டனர்‌.
(கன்ஸ்‌ அல்‌-உம்மால்‌ ஃபீசுனன்‌ அல்‌-அக்வால்‌ வஅல்‌-அஃப்‌ஆல்‌ 17175)

மேலும்‌, அப்துல்லாஹ்‌ இப்னு அப்பாஸ்‌ கூறுகிறார்‌: 'எனக்காக என்‌ மனைவி அலங்கரித்துக்‌ கொள்ளவேண்டும்‌ என நான்‌ விரும்புமளவுக்கு அவளுக்காகவும்‌ நான்‌ அலங்கரித்துக்கொள்ள விரும்புகிறேன்‌.” (ஸைத்‌ அல்‌-ஃகாதிர்‌ ப.142)

மனிதனின்‌ தூய்மையான, இயற்கையான, இயல்பான புத்து விஷயங்‌களை அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) குறிப்பிட்டார்கள்‌. இயற்கையான வழிமுறைகள்‌ (ஃபித்ரா) என்றழைக்கப்படும்‌ இவை, அல்லாஹ்வின்‌
நபிமார்களுடைய - குறிப்பாக, இப்ராஹீமுடைய - வழியைச்‌ சார்ந்தவை. மனித இயல்பு இயற்கையாகவே இவற்றை உறுதியாக விரும்புகிறது. இவை குறித்து அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்‌:

“பத்து விஷயங்கள்‌ இயல்பானவை (பித்ரா): மீசையை வெட்டிக்‌ குறைக்கல்‌, தாடியை வளரவிடுதல்‌, பல்துலக்கியைப்‌ பயன்படுத்துதல்‌, மூக்கைச்‌ சுத்தம்‌
செய்தல்‌, நகங்களை வெட்டுதல்‌, மூட்டுகளைக்‌ கழுவுகல்‌, அக்குளில்‌ உள்ள முடியை அகற்றுதல்‌, பருவ முடிகளை மழித்தல்‌, பாலுறுப்புகளைக்‌
தண்ணீரால்‌ கழுவிச்‌ சுத்தம்‌ செய்தல்‌ (இஸ்தின்ஜா).' அறிவிப்பாளர்‌ (மேலும்‌) கூறினார்‌, நான்‌ பத்தாவது விஷயத்தை மறந்துவிட்டேன்‌: அது வாய்‌
கொப்பளிப்பதாக இருந்திருக்கலாம்‌. (சஹீஹ்‌ மூஸ்லிம்‌ 261, சுனன்‌ அபூ தாவுத்‌ 54, சுனன்‌ அல்‌-திர்மிதீ 2747, சுனன்‌ அல்‌-நஸாயி 9,286 மற்றும்‌ சுனன்‌ இப்னு மாஜா 293)

எனவே, தற்சுகாதாரம்‌ தொடர்பாக, கணவன்‌ பின்வரும்‌ விஷயங்‌களை மனத்தில்‌ வைத்துக்கொள்ள வேண்டும்‌:

அ. தூய்மையாக இருத்தல்‌. 

அழுக்கு, அசுத்தம்‌, துர்நாற்றம்‌ ஆகியவற்றைத்‌ தவிர்த்து சுத்தமாக இருப்பதில்‌ கணவன்‌ கவனமாக இருக்கவேண்டும்‌. மலஜலம்‌ கழித்தபின்‌ அவர்‌, ஆணுறுப்புப்‌ பகுதியைச்‌ சரியாக தண்ணீர்‌ கொண்டு கழுவ வேண்டும்‌ (இஸ்தின்ஜா). அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) இஸ்தின்ஜாவை, இயல்பான செயலில்‌ அடங்கும்‌ (ஃபித்ரா) பத்து விஷயங்‌களுள்‌ ஒன்றாகச்‌ சேர்த்துள்ளார்கள்‌. இது மேலே கூறப்பட்டுள்ளது.

அன்னை ஆயிஷா (ரழி) முஸ்லிம்‌ பெண்களை நோக்கி இவ்வாறு அறிவுறுத்தினார்‌:

தங்கள்‌ ஆணுறுப்பைத்‌ தண்ணீர்கொண்டு கழுவுமாறு உங்கள்‌ கணவர்‌களிடம்‌ கூறுங்கள்‌. நானே அவர்களிடம்‌ அதைச்‌ சொல்ல வெட்கம்‌ என்னைத் தடுக்கிறது. அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அதைச்‌ செய்வார்கள்‌. (சுனன்‌ அல்‌-திர்மிதீ 19)

ஒருவர்‌ மலஜலம்‌ கழித்தபின்‌ தன்‌ கைகளைச்‌ சுத்தமாக, அசுத்தத்தின்‌ (நஜாஸா) சுவடுகள்‌ எதுவுமின்றிக்‌ கழுவவேண்டும்‌. சோப்‌ பயன்‌படுத்துவது சிறந்தது. ஒருவர்‌ சிறுநீர்‌ கழித்தபின்‌, தன்‌ சிறுநீர்க்‌
குழாயிலிருந்து (இஸ்திப்ரா,) சிறுநீர்த்‌ துளிகள்‌ முற்றிலுமாக வடிந்து விடுவதை உறுதிசெய்தல்‌ வேண்டும்‌.

ஆ, உடல்‌ நாற்றம்‌. 

கணவன்‌, தன்‌ மனைவிக்குக்‌ கசப்புணர்வோ ஆசை கெடுப்போ ஏற்படுத்தும்‌ எந்தவொன்றையும்‌ தவிர்ப்பதில்‌ கவனமாக இருக்க வேண்டும்‌. அவர்‌ சிறப்புக்‌ கவனமெடுத்து, வாய் நாற்றமோ உடல்‌ நாற்றமோ இல்லாது பார்த்துக்கொள்ள வேண்டும்‌.

கணவன்‌, தன்‌ உடல்‌ நாற்றத்தை அகற்ற நாள்தோறும்‌ குளிப்பது நல்லது. குறிப்பாக, தன்‌ மனைவியுடன்‌ உடலுறவுகொள்ள நாடும்‌ போது இது முக்கியம்‌. நறுமணம்‌ (இதர) பூசிக்கொள்வது அல்லாஹ்வின்‌ அன்புக்‌ தூதருடைய வழிமுறையாகும்‌. அதை அலட்சியமாக விட்டு விடக்கூடாது. மஸ்க்‌, அம்பர்‌, ஒளச்‌ போன்ற பல இயற்கை நறுமணப்‌ பொருள்களைப்‌ பயன்படுத்தலாம்‌. 'மஸ்க்‌ தான்‌ மிக இதமான நறுமணப்‌ பொருள்‌” என அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அறிவிக்கப்‌படுகிறது. (சஹீஹ்‌ முஸ்லிம்‌ 2252) பொதுவாக சந்தையில்‌ கிடைக்கும்‌
வாடைபோக்கிகளையும்‌ (டியோடிரண்ட்‌) உடல்‌ வாசனைத்‌ தெளிப்பான்‌ ளையும்‌ (ஸ்ப்ரே) பயன்படுத்தலாம்‌. ஓரே நிபந்தனை: அவை மார்க்கத்தில்‌ அனுமதிக்கப்பட்டதாக (ஹலாலாக) இருக்கவேண்டும்‌.

அதேபோல்‌, கணவன்‌ தன்‌ வாய்தாற்றத்தை அகற்ற தன்‌ வாயையும்‌ பற்களையும்‌ நன்றாகத்‌ துலக்கவேண்டும்‌. வாய்‌ கொப்பளிப்பது, இயற்கைச்‌ செயலின்‌ (பித்ரா) பத்து விஷயங்களுள்‌ ஒன்று. பற்களில்‌ ஒட்டிக்கொண்டிருக்கும்‌ உணவுக்‌ துணுக்குகள்‌ அனைத்தையும்‌ நீக்கும்‌ பொருட்டு வாயை நன்றாகக்‌ கழுவவேண்டும்‌. இதற்கு வாய்க்கழுவிகளை (மவுத்வாஷை,) பயன்படுத்தலாம்‌. மீண்டும்‌ ஒரே நிபந்தனை, அதில்‌ ஹராமான உட்பொருள்கள்‌ இருக்கக்கூடாது. பல்துலக்கியைப்‌ (கிவாச்‌) பயன்படுத்துவதும்‌ ஃபித்ராவின்‌ பத்து
விஷயங்களுள்‌ ஓன்று.

ஹுதைஃபா அறிவிக்கிறார்‌:

அல்லாஹ்வின்‌ தாதர்‌ (ஸல்‌) இரவில்‌ (தொழுகைக்காக) எழுந்திருக்கும்‌ போதெல்லாம்‌, பல்துலக்கியைப்‌ (சிவாக்கைப்‌) பயன்படுத்தித்‌ தம்‌ வாயை நன்கு அலக்‌ கழுவுவார்கள்‌. (சஹீஹ்‌ முஸ்லிம்‌ 255)

தம்பதியர்‌ உடலுறவுகொள்ள எண்ணும்போது, வாயை சுத்தமாகவும்‌ புத்துணர்வுடனும்‌ வைத்திருப்பதில்‌ கவனமாக இருப்பது மிக, மிக முக்கியம்‌. கணவன்‌ சரியாகத்‌ தன்‌ வாயைக்‌ கழுவாமலும்‌ பற்களைத்‌
துலக்காமலும்‌ தன்‌ மனைவியை உணார்ச்சிப்பூர்வமாக முத்தமிடுவது நிச்சயமாகத்‌ தவறு. புகைபிடிப்பவர்களும்‌ சுவைகெடுக்கும்‌ பொருள்‌களை உட்கொள்ளும்‌ பழக்கமுடையவர்களும்‌ கூடுதல்‌ எச்சரிக்கையுடன்‌ இருப்பது அவசியம்‌. தவறினால்‌, அது துணைவியின்‌ அடங்கா உணர்ச்சியையும்‌ ஆசையையும்‌ கொன்றுவிடும்‌.

இ. தோற்றமும்‌ உடையும்‌. 

கணவன்‌ கன்‌ உடையிலும்‌ வெளித்தோற்றத்திலும்‌ கவனம்‌ செலுத்த வேண்டும்‌. அவர்‌ பாங்காக உடையணிய வேண்டும்‌. சுத்தமான, இஸ்திரிசெய்த ஆடைகளை உடுக்கவேண்டும்‌. ஆம்‌, அல்லாஹ்‌ அழகானவன்‌; அழகை விரும்புபவன்‌. கணவன்‌ வழக்கமாக உடை மாற்றிக் கொள்ளவேண்டும்‌. அவற்றைப்‌ பாங்காகவும்‌ துப்புரவாகவும்‌ வைத்துக்கொள்ளவேண்டும்‌. அழுக்கான, சலவை செய்யாத ஆடைகளை உடுத்திக்கொண்டு உலா வருவது நிச்சயமாகத்‌ தவறானது. சில கணவர்கள்‌ இதற்குரிய முக்கியத்துவம்‌ அளிக்கத்‌ தவறி, பணி-ஆடைகளை அணிந்த நிலையிலேயே மனைவியுடன்‌ உடலுறவில்‌ ஈடுபடுகின்றனர்‌! இது மனைவிக்கு 'ஆசை கெடுக்கும்‌’ விஷயம்‌ மட்டு மல்ல; கணவனின்‌ சுயநலத்தைப்‌ பிரதிபலிக்கும்‌ ஒரு செய்லும்கூட..

ஜாபிர்‌ (ரழி) அறிவிக்கிறார்‌:

அவர்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌), இன்னொரு மனிதர்‌ அழுக்கான உடை அணிந்திருப்பதைக்‌ கண்டு, “இந்த மனிதர்‌ தன்‌ ஆடைகளைச்‌ சலவை செய்வதற்கு ஏதாவது தேடிக்கொள்ளக்கூடாதா?” என்று கூறினார்கள்‌. (சுனன்‌ அபூ தாவூத் 4059)

இமாம்‌ அபூதாவூத்‌ தம்‌ நூலில்‌ பதிவுசெய்யும்‌ ஒரு நீண்ட நபிமொழியில்‌ அபூதர்தா (ரழி) சஹ்ல்‌ இப்னு அல்‌-ஹன்ஸலிய்யா விடம்‌ கூறினார்‌, :... எங்களுக்குப்‌ பலன்‌ தரக்கூடிய, தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு சொல்லை (எங்களுக்குக்‌ கூறும்‌).” அதற்கு அவர்‌ கூறினார்‌, நான்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) இவ்வாறு கூறுவதைக்‌ கேட்டேன்‌:

நீங்கள்‌ உங்கள்‌ சகோதரர்களைச்‌ சந்திக்கச்‌ செல்கிறீர்கள்‌. எனவே, உங்கள்‌ சேணங்களை சரிசெய்து, உடையை அழகாக்கிக்கொள்ளுங்கள்‌. இதன்‌ மூலம்‌, நீங்கள்‌ (ஓர்‌ அழகான முகத்தில்‌ உள்ள) அழகுக்குறி போல மக்கள்‌ மத்தியில்‌ எடுப்பாகத்‌ தோன்றவேண்டும்‌. முரட்டுத் தனத்தையும்‌ முரட்டு
நடத்தையையும்‌ அல்லாஹ்‌ விரும்புவதில்லை. (சுனன்‌ அபூதாவுத்‌ 4086 முஸ்னத்‌ அஹ்மத்‌ 4:180)

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அப்துல்லாஹ்‌ இப்னு மஸ்‌ஊத்‌ (ரழி) அறிவிக்கிறார்‌:

“எவர்‌ உள்ளத்தில்‌ கடுகளவு தற்பெருமை உள்ளதோ அவர்‌ சுவர்க்கத்தில்‌ நுழையமாட்டார்‌.” அப்போது ஒரு மனிதர்‌ வினவினார்‌, “ஒருவர்‌, தன்‌ ஆடை நன்றாக இருக்கவேண்டும்‌; தன்‌ காலணிகள்‌ நன்றாக இருக்கவேண்டும்‌ என விரும்பலாம்‌ அல்லவா?” அதற்கு நபியவர்கள்‌ (ஸல்‌) கூறினார்கள்‌: 'நிச்சயமாக
அல்லாஹ்‌ அழகானவன்‌. அழகை விரும்புபவன்‌. தற்பெருமை என்பது (கர்வத்தால்‌) உண்மையை மறுப்பதும்‌ மக்களை இழிவாகப்‌ பார்ப்பதும்‌ தான்‌. 
(சஹீஹ்‌ முஸ்லிம்‌ 91)

ஆகவே, தூய்மையாக இருப்பதும்‌ பாங்கான உடை அணிவதும்‌ மணம்‌ கமழ்வதும்‌ நபிவழியாகும்‌. ஒரு மனிதர்‌ தன்‌ நண்பர்கள்‌ மற்றும்‌ உறவினர்களின்‌ முன்னிலையில் கூட பாங்காக உடையணிந்து இருக்க
வேண்டும்‌. அவருடைய ஆடை தூய்மையாகவும்‌ அழகாகவும்‌ இருக்க வேண்டும்‌; அசிங்கமாகவும்‌ பார்க்க சகிக்காத விதத்திலும்‌ இருக்கக்‌
கூடாது. அவர்‌ தூய்மையான உடையில்‌ நன்றாகத்‌ தோன்றுவார்‌ எனில்‌, அவரைப்‌ பார்க்க இதமாக இருக்கும்‌; அவரோடு இருப்பதில்‌ மக்கள்‌ இன்புறுவார்கள்‌. ஆனால்‌, அவர்‌ இதற்கு மாறாக இருப்பின்‌, மக்கள்‌ அவரைத்‌ தாழ்வாகப்‌ பார்த்து, அவருக்கு எந்தவொரு முக்கியத்துவமும்‌ அளிக்கமாட்டார்கள்‌. இது, கணவன்‌-மனைவி உறவு
விஷயக்கில்‌ மேலுமதிகமாக முக்கியத்துவம்‌ பெறுகிறது.

கணவன்‌ அசுத்தமாக இருப்பது, அவனை மனைவி விரும்பாமல்‌ போவதற்குக்‌ காரணமாகிவிடும்‌ என இமாம்‌ இப்னு அல்‌-ஜவ்ஸி தம்‌ ஸைத்‌ அல்‌-ஃகாதிரில்‌ கூறுகிறார்‌. அவள்‌ அதைக்‌ தன்‌ கணவனிடம்‌
சொல்வதற்கு சங்கடப்படலாம்‌. எனினும்‌, அதன்‌ விளைவாக அவன்‌ மீது அவளுக்கு ஆர்வம்‌ குன்றிவிடும்‌. கணவன்‌ தூய்மையாகவும்‌ நேர்த்தியாகவும்‌ இருந்தால்‌, அவன்மீது மனைவிக்கு ஈர்ப்பு ஏற்படும்‌. பெண்கள்‌ ஆண்களின்‌ மறுபாதியே - ஷகாயிக்‌. கணவனுக்கு அவள்‌ குறித்து சில விஷயங்கள்‌ பிடிக்காமல்‌ இருக்கலாம்‌ என்பது போலவே, அவளுக்கும்‌ அவர்‌ குறித்து சில விஷயங்கள்‌ பிடிக்காமல்‌ போகலாம்‌.
(ஸைத்‌ அல்‌-ஃகாதிர்‌ ப.141 142)

ஈ. தலையும்‌ தாடியும்‌. 

தலையையும்‌ தாடி முடியையும்‌ சுத்தமாகவும்‌பாங்காகவும்‌ வைத்திருப்பது முக்கியம்‌. கணவன்‌ தன்‌ முடிக்கு எண்ணெய்‌ பூசி, சீவி வாரிக்கொள்வது அவசியம்‌. அவன்‌ தன்‌ தலை
முடியை சரிவரப்‌ பராமரிக்க இயலாவிட்டால்‌, அதைச்‌ சிறியதாக வெட்டிக்கொள்ள வேண்டும்‌. தாடியை சீவிவிட்டு பாங்காக வைத்திருக்கவேண்டும்‌. இயலுமெனில்‌, எண்ணெயும்‌ தடவலாம்‌.

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அபூஹுரைரா (ரழி)

முடிவைத்துக்கொள்பவர்‌ அதைப்‌ பராமரிப்பது அவசியம்‌. (சுனன்‌ அபூ தாவூத்‌ 4180)

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) எங்களிடம்‌ வந்தபோது, அலங்கோலமான ஒரு மனிதரைக்‌ கண்டார்கள்‌. அவருடைய தலைமுடி கலைந்துபோய்‌ இருந்தது.
அப்போது, 'இந்த மனிதர்‌ தன்‌ தலைமுடியை சீர்செய்துகொள்வதற்கு ஏதாவது தேடிக் கொள்ளக்கூடடாதா?' என்றார்கள்‌. (சுனன்‌ அபூ தாவூத்‌ 4059)

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) தம்‌ தலையையும்‌ தாடி முடியையும்‌ நன்கு பராமரித்துக்கொள்வார்கள்‌. அனஸ்‌ இப்னு மாலிக்‌ (ரழி) அறிவிக்கிறார்‌:

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அடிக்கடி. எண்ணெய்‌ பூசுவார்கள்‌, தம்‌ தாடியை சீவி விடுவார்கள்‌ மற்றும்‌ கினாவை (எண்ணெயைத்‌ துடைத்து உறிஞ்சுவதற்காக தலைமீது வைக்கப்படும்‌ துணி) பயன்படுத்துவார்கள்‌. எந்த அளவிற்‌ கெனில்‌, அவருடைய துணி எண்ணெய்க்காரரின்‌ துணியைப்‌ போலாகி விடும்‌. (ஷமாயில்‌ அல்‌-திர்மிதி 33)

ஒருவர்‌ தம்‌ தலைக்கும்‌ தாடி முடிக்கும்‌ சாயம்‌ பூசுவது அனுமதிக்கப்‌பட்டது மட்டுமின்றி, அது பரிந்துரைக்கவும்‌ படுகிறது. ஒரே நிபந்தனை,
முடிச்‌ சாயத்தில்‌ பயன்படுத்தப்பட்டுள்ள உட்பொருள்கள்‌ ஹலாலாக இருக்கவேண்டும்‌. தலைக்கோ தாடிக்கோ பூசப்படும்‌ மிகச்சிறந்த சாயம்‌, மருதாணிதான்‌. அல்லாஹ்வின்‌ தாதர்‌ (ஸல்‌) கூறியதாக அபூதர்‌ (ரழி) அறிவிக்கிறார்‌:

(ஒருவரின்‌) முதுமையை (நரைமுடியை) மாற்றுவதற்கான மிகச்சிறந்த சாயம்‌, மருதாணி மற்றும்‌ கத்ம்‌ (ஒருவகை புல்‌). (சுனன்‌ அல்‌-திர்மிதீ 1753 மற்றும்‌ பிற நூல்கள்‌)

எனினும் முற்றிலும் கருப்புச் சாயம் பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறினார்‌:
..கருப்புச்சாயம்‌ பூசுவதைத்‌ தவிர்க்கவும்‌. (சஹீஹ்‌ முஸ்லிம்‌ 202)

கணவன்‌ தன்‌ மீசையை மழிப்பதில்‌ அல்லது குறைப்பதில்‌ கவனம்‌ செலுத்த வேண்டும்‌. மேலே, ஃபித்ராவின்‌ பத்து விஷயங்கள்‌ பற்றி
கூறப்பட்ட ஹதீஸில்‌ மீசை குறைத்தலும்‌ அடங்கியுள்ளது. ஆக, மீசையைச்‌ சிறிதாக்குவது கருத்தொற்றுமையுள்ள நபிவழியாகும்‌. மேல்‌ உதட்டின்‌ மேல்பகுதியை மூடும்‌ அளவுக்கு மீசையை நீளமாக
வளர்ப்பது தவறு. அது சுகாதாரக்‌ கேடும்கூட. ஏனெனில்‌, உணவும்‌ இதர விரும்பத்தகாத பொருள்களும்‌ மீசையில்‌ ஒட்டிக்கொள்ளும்‌
சாத்தியம்‌ உண்டு. கணவன்‌ இதில்‌ கவனம்‌ செலுத்தவேண்டும்‌. ஏனெனில்‌ - குறைந்தபட்சம்‌ - தம்பதியர்‌ ஒருவரையொருவர்‌ முத்தமிடும்பொழுது நீளமான மீசை தொல்லை ஏற்படுத்தலாம்‌.

அப்துல்லாஹ்‌ இப்னு உமர்‌ (ரழி) தம்‌ மீசையை மிகச்‌ சிறியதாக வெட்டுவதால்‌ அவருடைய தோலின்‌ வெண்ணிறம்கூட தெரியும்‌ என இமாம்‌ புஹாரி அறிவிக்கிறார்‌. (சஹீஹ்‌ அல்‌-புஹாரி 5:2208)

உ. பருவமுடிகளை அகற்றுதல்‌. 

கணவன்‌ தன்‌ மறைவிடத்திலும்‌ அக்குளிலும்‌ உள்ள முடியை வழக்கமாக அகற்றுவதிலும்‌ கவனம்‌ செலுத்தவேண்டும்‌. மறைவிடத்திலும்‌ அக்குள்களிலும்‌ மழிக்காமல்‌ விடப்படும்‌ முடியில்‌ அழுக்கும்‌ வேர்வையும்‌ சேர்ந்துவிடுவதால்‌, அது உடல்‌ நாற்றத்துக்கான ஒரு காரணியாக அமையும்‌. மேலும்‌, அக்குள்‌ முடியை அகற்றுவது, பருவ முடிகளை மழிப்பது இரண்டுமே ஃபித்ராவின்‌ புத்து விஷயங்களுள்‌ அடங்கும்‌. எனவே, இப்பகுதிகளில்‌ உள்ள முடியை வளரவிடுவது ஸுன்னாவுக்கு முரணானதாகும்.

அக்குள்‌ மற்றும்‌ பாலுறுப்புப்‌ பகுதியிலிருக்கும்‌ பருவ முடிகளை வாரம்‌ ஒருமுறை - வெள்ளிக்கிழமை மிகப்பொருத்தமாக இருக்கும்‌ - அகற்றுவது விரும்பத்தக்கது. இதை இரண்டு வாரங்களுக்கு தள்ளிப்‌ போடுவது விரும்பத்தகாகது அல்ல. எனினும்‌, அதையும்‌ தாண்டிச்‌ செல்வது தவறானது. நாற்பது நாள்களுக்கும்‌ மேல்‌ செல்வது பாவமானது. (அல்‌-பதாவா அல்‌-ஹிந்திய்யா 5:257-258)

இதேபோல்‌, கணவன்‌ தன்‌ நகங்களை வெகுநீளமாக வளரவிடக்‌ கூடாது. ஏனெனில்‌, நகங்களில்‌ மிக எளிதாக அழுக்கு சேர்ந்துவிடும்‌. நகங்களை வெட்டுவதும்‌ ஃபித்ராவின்‌ விஷயங்களுள்‌ ஒன்று. எனவே, இரண்டு வாரங்களுக்கும்‌ மேலாக நகங்களை வெட்டாமல்‌ விடுவது தவறாகும்‌. நாற்பது நாட்களைத்‌ தாண்டுவது பாவமாகும்‌. (மேலது)

அனஸ்‌ இப்னு மாலிக்‌ (ரழி) அறிவிக்கிறார்‌
நாங்கள்‌ மீசையைச்‌ சிறிதாக்குவுதற்கும்‌ நகங்களை வெட்டுவதற்கும்‌ அக்குள்‌ முடியை அகற்றுவுதற்கும்‌ பருவ முடிகளை மழிப்பதற்கும்‌ (அல்லாஹ்வின்‌ தூதரால்‌) எங்களுக்குக்‌ கால வரையறை விதிக்கப்பட்டிருந்தது. அவற்றை நாற்பது நாள்களுக்கு மேலாக வளரவிடக்கூடாது என்று. (சஹீஹ்‌ முஸ்லிம்‌ 258)

2. நன்னடத்தையும்‌ வசீகரமும்‌:

கணவனின்‌ உளவியல்‌ தயார்நிலையின்‌ முக்கியமானதொரு கூறு, உடலுறவுக்குமுன்‌ மனைவியை நல்ல விதமாக நடத்துதல்‌, அன்பாகப்‌ பேசுதல்‌, விளையாடுதல்‌, பாசம்‌ காட்டுதல்‌ போன்றவை. கணவன்‌ தன்‌ மனைவியை - உடலுறவு நாடும்‌ வேளையில்‌ மட்டுமல்லாது - எல்லா நேரங்களிலும்‌ கண்ணியமாக நடத்தவேண்டும்‌ எனப்‌ பொதுவாக இஸ்லாம்‌ கட்டளையிடுகிறது. அல்லாஹ்‌ கூறுகிறான்‌:

அவர்களோடு நல்லமுறையில்‌ வாழ்க்கை நடத்துங்கள்‌. அவர்களுடன்‌ சேர்ந்து வாழ நீங்கள்‌ விரும்பாவிட்டாலும்‌ பொறுமையைக்‌ கைக்‌ கொள்ளுங்கள்‌. ஏனெனில்‌ ஒரு விஷயம்‌ உங்களுக்குப்‌ பிடிக்காமல்‌ போகலாம்‌. ஆனால்‌ அல்லாஹ்‌ அதில்‌ பல நன்மைகளை வைத்திருக்கக்கூடும்‌. (குர்‌ஆன்‌ 4:19)

ஒருவர்‌ தம்‌ மனைவியை சொல்லிலும்‌ செயலிலும்‌ பரிவோடு நடத்தவேண்டியதன்‌ முக்கியத்துவத்தை அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) வலியுறுத்தியுள்ளார்கள்‌. அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அபூ
ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்‌:

மிகச்‌ சிறந்த நற்குணம்‌ கொண்டவர்களே மிகச்‌ சிறந்த இறைநம்பிக்கையாளர்கள்‌ ஆவர்‌. மேலும்‌, உங்கள்‌ பெண்களிடம்‌ மிகச்சிறந்த முறையில்‌
நடந்துகொள்டவர்களே உங்களில்‌ மிகச்‌ சிறந்தவர்கள்‌. (சுனன்‌ அல்‌. திர்மிதீ 1162. இது மிகவும்‌ நம்பகமான அறிவிப்புத்‌ தொடரைக்‌ கொண்டுள்ளது)

'ஒரு கணவர்‌ தன்‌ மனைவியை எப்படி நடத்தவேண்டும்‌ என்பதற்கு அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) நடைமுறை எடுத்துக்காட்டாய்த்‌ திகழ்ந்தார்கள்‌. அவர்கள்‌ தம்‌ மனைவியர்‌ மீது மிகுந்த பண்பும்‌ பரிவும்‌
கொண்டு, அவர்களை நட்புடன்‌ நடத்தினார்கள்‌. அவர்களிடம்‌ பாசமாகவும்‌ நகைச்சுவையாகவும்‌ தாராளமாகவும்‌ இருந்தார்கள்‌. அல்லாஹ்வின்‌ தூதர் (ஸல்‌) தம்‌ மனைவியருடன்‌ சிறந்த முறையில்‌ நடந்துகொண்டதற்கான பல எடுத்துக்காட்டுகள்‌ நபிமொழித்‌ தொகுப்புகளில்‌ காணப்படுகின்றன.

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அப்துல்லாஹ்‌ இப்னு அப்பாஸ்‌ (ரழி) அறிவிக்கிறார்‌:

உங்களில்‌ மிகச்‌ சிறந்தவர்‌, உங்கள்‌ குடும்பத்தாரிடம்‌ மிகச்‌ சிறந்த முறையில்‌ நடப்பவரே. நான்‌ என்‌ குடும்பத்தாரிடம்‌ மிகச்‌ சிறந்த முறையில்‌ நடந்து கொள்கிறேன்‌. (சுனன்‌ இப்னு மாஜா 1977)

எனவே, மனைவியை அன்போடு நடத்துவது இஸ்லாத்தின்‌ பொது விதி. ஒருவர்‌ உடலுறவுகொள்ள நாடும்பொழுது இது மிகவும்‌ தேவையாகிறது. படுக்கை அறைக்கு வெளியில்‌ தம்பதியர்‌ நடந்துகொள்ளும்‌
விதம்‌, படுக்கை அறைச்‌ செயல்பாடுகளில்‌ நேரடித்‌ தாக்கத்தை ஏற்படுத்தும்‌.

உறவுக்குத்‌ தேவையான சூழலை உருவாக்குவதற்கு, கணவன்‌பண்பாகவும்‌ பாசமாகவும்‌ இருந்து, அவள்‌ மயங்கும்‌ வகையில்‌ தன்‌ காதலை வெளிப்படுத்த வேண்டும்‌. பெண்கள்‌ தங்களிடம்‌ கூறப்படும்‌
சொற்களாலும்‌ அதில்‌ பொதிந்துள்ள பொருளாலும்‌ 'உறவுக்குத்‌ தூண்டப்படுன்றனர்‌' என்பதை அவர்‌ மறந்துவிடக்கூடாது. அதாவது, அவருடைய சொற்கள்‌ அவளுக்கு எத்தகைய உணர்வை ஏற்படுத்துகின்றன என்பதே முக்கியம்‌. அது முழுவதும்‌ ஒரு செயல்தொகுப்பு. அதில்‌ ஓவ்வொரு சிறிய விஷயமும்‌ முக்கியமானது; திடமான உடலுறவு அனுபவத்துக்கு வழிவகுக்கக்‌ கூடியது. இதுபற்றி குர்‌ஆனில்‌ மறைமுகமான சுட்டுதல்‌ உள்ளது. அல்லாஹ்‌ கூறுகிறான்‌:

உங்கள்‌ மனைவிகள்‌ உங்களுக்கு விளைநிலங்களாவர்‌. எனவே, நீங்கள்‌
விரும்பிய புறங்களிலிருந்து உங்கள்‌ விளைநிலங்களை அணுகுங்கள்‌. எனினும்‌,
முன்னதாக உங்களுக்கென சில நற்செயல்கள்‌ செய்துகொள்ளுங்கள்‌; மேலும்‌ அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்‌. (குர்‌ஆன்‌ 2:224)

குர்‌ஆன்‌ விரிவுரையாளர்களில்‌ சிலர்‌, “எனினும்‌, முன்னதாக உங்களுக்கென சில நற்செயல்கள்‌ செய்துகொள்ளுங்கள்‌' எனும்‌ சொற்றொடர்‌, உடலுறவுக்கு முன்‌ நிகழும்‌ விஷயங்களின்‌ முக்கியத்‌துவம்‌ பற்றியே சுட்டுவுதாகக்‌ கூறுகின்றனர்‌. இதில்‌ சரியான எண்ணம்‌ கொள்ளுதல்‌, பொருத்தமாக துஆ ஓதுதல்‌, ஆசையை அதிகரிக்க முன்விளையாட்டில்‌ ஈடுபடுதல்‌, காரியத்தை எளிதாக்குதல்‌ போன்றவை அடங்கும்‌. (தஃப்சீர்‌ அபூஅல்‌-சவூத்‌ 1:223 மற்றும்‌ த.ஃப்சீர்‌ அல்‌- கஷ்ஷாஃப்‌ 1:294)

ஒருவர்‌ தம்‌ மனைவியைக்‌ கொடுமையாக நடத்துவது, பிறகு அவளுடன்‌ உடலுறவிலும்‌ ஈடுபடுவது எந்த அளவிற்கு ஈனத்தனமான செயல்‌ என அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) ஒரு ஹதீஸில்‌ சித்தரிக்‌கின்றார்கள்‌:

உங்களில்‌ ஒருவர்‌ தம்‌ மனைவியை அடிமையை அடிப்பதுபோல்‌ அடித்து விட்டு, பின்னர்‌ மாலையில்‌ அவளுடன்‌ உடலுறவிலும்‌ ஈடுபடுவதா! (சஹிஹ்‌
அல்‌-புஹாரி 4658 மற்றும்‌ சஹீஹ்‌ முஸ்லிம்‌ 855, இங்கு புஹாரியின்‌ சொற்களே இடம்பெற்றுள்ளன)

இங்கே அல்லாஹ்வின்‌ தாதர்‌ (ஸல்‌) திகைப்பை வெளிப்படுத்துகிறார்கள்‌. ஒருவர்‌ தம்‌ மனைவியைக்‌ கொடுமைப்படுத்திவிட்டு, பின்னர்‌ அவளுடன்‌ உடலுறவில்‌ ஈடுபடுவதற்கும்‌ துணிச்சல்‌ வந்து விட்டதோ என வியக்கிறார்கள்‌. இதனால்தான்‌ நபியவர்கள்‌ (ஸல்‌) இன்னொரு ஹதீஸில்‌ கூறினார்கள்‌:

"உங்களில்‌ ஒருவர்‌ தம்‌ மனைவியை பொலிக்குதிரையை அடிப்பதுபோல்‌
அடித்துவிட்டு, பின்னர்‌ எப்படி அவளுடன்‌ படுத்துறவாட இயலும்‌?”
(சஹிஹ்‌ அல்‌-புஹாரி 5695) 

வேறு வார்த்தைகளில்‌ கூறவேண்டுமெனில்‌,
ஒருவா்‌ தம்‌ மனைவியைக்‌ கடுமையாக நடத்தி அக்கிரமம்‌ புரிந்துவிட்டு, பிறகு தன்‌ பாலுறவு எத்தனிப்புகளால்‌ அவள்‌ தூண்டுதல்‌ அடையவேண்டும்‌ என எப்படி எதிர்‌பார்க்க முடியும்‌?

முஸ்லிம்‌ கணவர்கள்‌ இந்த எச்சரிக்கையைக்‌ கவனத்தில்கொள்வது அவசியம்‌. சில ஆண்கள்‌, படுக்கை அறைக்கு வெளியே தங்கள்‌ மனைவியரைப்‌ பரிவோடும்‌ பாசத்தோடும்‌ நெருக்கத்தோடும்‌ நடத்தத்‌
தவறிவிடுகின்றனர்‌. ஆனால்‌, உடலுறவு வேளையில்‌ திடீரென அன்பு, பாசம்‌, கருணை எல்லாவற்றையும்‌ கொட்டுகின்றனர்‌. இது சுயநலம்‌ மட்டுமல்ல; மனைவியை அவர்‌ எத்தகைய அந்தஸ்தில்‌ வைத்துள்ளார்‌ என்பதையும்‌ காட்டுகிறது.

உடலுறவுக்கு முன்‌ நளினமும்‌ பாசமும்‌ காட்டுதல்‌ நபிவழியாகும்‌. கணவன்‌ தன்‌ மனைவியை மயக்குவதற்குத்‌ தன்னுடைய சொல்‌, செயல்மூலம்‌ பொருத்தமான உத்திகளைக்‌ கையாளவேண்டும்‌. இதன்‌ மூலம்‌, அவருடைய பாலுறவு எத்தனிப்புகளை மனைவியும்‌ மிகுந்த மகிழ்ச்சியுடன்‌ வரவேற்பாள்‌.

 

உடலுறவுக்கு முன்பு:

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி

( பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான, வஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்தனா) 

என்று கூறுவாரானால் அவ்விரவில் அவ்விருவருக்கும் குழந்தை பாக்கியம் ஏற்பட்டால் அந்தக் குழந்தையை ஷைத்தான் எப்போதும் தீண்ட மாட்டான்' அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி

உடலுறவுக்கு முன்பு பிஸ்மில்லாஹ் கூறுவதுடன் நபி(ஸல்) அவர்கள் கற்று தந்த இந்த துவாவை கண்டிப்பாக கூற வேண்டும்.

துவாவின் பொருள்: அல்லாஹ்வின் பெயர் கூறி (இதில் ஈடுபடுகிறேன்) இறைவா! ஷைத்தானை விட்டும் எங்களை அகற்றிவிடு! நீ எங்களுக்கு வழங்கக்கூடிய குழந்தையையும் ஷைத்தானை விட்டும் அகற்றிவிடு!


முன்விளையாட்டும் ஓர் சுன்னத்தே!  அலட்சியப்படுத்த வேண்டாம்:

முன் குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்கள் பற்றி சிலருக்கு "இதெல்லாம் எழுத்தில் தேவையா?" எனும் எண்ணம் எழலாம். ஆனால் இவற்றிலுள்ள சில ஆகுமான காரியங்களை உணர்ச்சிமேலீட்டில் செய்துவிட்டு; பாவம் செய்துவிட்டோம், தவறுசெய்துவிட்டோம் என்று தவறுதலாக பலர் கருதக்கூடும். அவ்வாறு கருதுவது ஹலாலை ஹராமென்று எண்ணுவதற்குச் சமமாகும். எனவே சரியான கருத்து எதுவென்பதை எடுத்துச்சொல்ல விழையும்போது அனைத்தையும் சொல்லவேண்டிய அவசியம் கருதியே இங்கு இடம்பெறச்செய்துள்ளோம். அல்லாஹ் போதுமானவன்.

''ஒரு முஸ்லிம் விளையாடும் எல்லா விளையாட்டுக்களும் வீணானவையே - அம்பெய்தல், தன் குதிரைக்குப் பயிற்சியளித்தல் மற்றும் தன் மனைவியுடன் விளையாடுதலைத் தவிர. இவை (யாவும்) போற்றுதலுக்குரிய செயல்கள்.'' (ஆதாரம்: ஸுனன் திர்மிதீ 1637, சுனன் இப்னு மாஜா 2811, முஸ்னத் அஹ்மத் 17433).

தம்பதியர்களுக்கிடையே தாம்பத்ய உறவுக்குமுன் முன் விளையாட்டு மிகவும் அவசியம். இதில் உடற்சேற்கைக்கு முன் நிகழும் அனைத்துப் பாலுறவுச் செயல்பாடுகளும் அடங்கும். இதில் தம்பதியர் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் அன்பு, இச்சையான ஆசை வார்த்தைகள் எல்லாம் அடங்கும்.

முன் விளையாட்டில் ஈடுபடுவது மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு மிகத் தேவையானதாகும். முன்விளையாட்டு இல்வாழ்வின் பிரிக்கமுடியாத ஓர் அங்கமாகவும் விளங்குகிறது. எனவே எத் தம்பதியரும் முன்விளையாட்டை அலட்சியப்படுத்த வேண்டாம்.

தம்பதியர் இருவருக்கும் முன்விளையாட்டு முக்கியமானது என்றபோதிலும், கணவன் உடலுறவுக்குமுன் தன் மனைவிக்கு கிளர்ச்சியூட்டுவது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்கள் பொதுவாக பாலியல் கிளர்ச்சியடைவதற்கு ஆண்களைவிட கூடுதல் நேரம் பிடிக்கும் என்பதால், அவள் தயாராக இல்லாதபோது கணவன் உடலுறவு கொள்வானெனில், அவனுடைய தேவை பெயருக்கு நிறைவடையலாமே தவிர, அவள் நிறைவடைய மாட்டாள். இதன் விளைவாக, மனைவிக்கு வலியும் அதிருப்தியும் ஏமாற்றமும் ஏற்பட்டு மணவாழ்விற்கே குந்தகம் ஏற்படலாம்.

முன்விளையாட்டுக்கள் மூலம் மனைவியை கிளர்ச்சியுறச்செய்து அவளும் ஆயத்தமாகவும், தயார்நிலைக்கு வந்த பிறகுதான் உடலுறவில் ஈடுபட வேண்டும். கணவன் தன் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு, மனைவியை அதிருப்தியிலும் நிறைவின்மையிலும் விட்டுவிடுவது, அவனுடைய தன்னலத்தையும் ஆணவத்தையும் தான் காட்டும். இதுபோன்ற கணவன்மார்கள் உண்மையில் தங்கள் மனைவிமார்களை உண்மையாக நேசிப்பவர்களாக இருக்க மாட்டார்கள். தங்கள் இச்சையை தீர்த்துக்கொள்வதிலேயே அக்கறையுள்ளவர்களாய் இருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முன்விளையாட்டை ஊக்குவித்துள்ளார்கள் என்பதை நபிமொழிகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. ஹளரத் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்; "நான் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதருடன் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வினவினார்கள், 'உமக்குத் திருமணமாகிவிட்டதா?' அதற்கு நான் 'ஆம்' என்றேன். '(அவள்) கன்னிப்பெண்ணா ஏற்கனவே மணமானவளா?' எனக் கேட்டார்கள். 'ஏற்கனவே மணமானவள்' என்றேன். "ஏன் கன்னிப்பெண்ணை மண முடித்திருக்கக்கூடாதா? அப்போது நீ அவளுடன் விளையாடலாம், அவள் உன்னுடன் விளையாடலாம், அல்லவா?" எனக் கூறினார்கள். (ஆதாரம் ஸஹீஹுல் புகாரி 1991)

இமாம் திர்மிதீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை செல்லும் ஒரு சுய அறிவிப்புத் தொடர் மூலம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கிறார்கள்;

"ஒரு முஸ்லிம் விளையாடும் எல்லா விளையாட்டுக்களும் வீணானவையே - அம்பெய்தல், தன் குதிரைக்குப் பயிற்சியளித்தல் மற்றும் தன் மனைவியுடன் விளையாடுதலைத் தவிர. இவை (யாவும்) போற்றுதலுக்குரிய செயல்கள். (ஆதாரம்: ஸுனன் திர்மிதீ 1637, சுனன் இப்னு மாஜா 2811, முஸ்னத் அஹ்மத் 17433) இங்கு திர்மிதீயின் சொற்களே இடம்பெற்றுள்ளன.

பல விளையாட்டுக்களை வீணானவை என்று சொல்லும் மார்க்கம் மனைவியுடன் விளையாடுவதை அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல் அதை ஊக்குவிக்கவும் செய்கிறது என்பதை அறியும்போது தாம்பத்ய வாழ்க்கையை செழித்தோங்கச்செய்யும் அத்தனை வாசல்களையும் இஸ்லாம் திறந்து விட்டிருக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமோ!.

புகழ்பெற்ற சட்டமேதை இமாம் இப்னு குதாமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடும் ஒரு வாசகத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறு கூறியதாக அறிவிக்கப்படுகிறது: "நீர் அனுபவிக்கும் ஆசையை அவளும் அனுபவிக்கும் வரை புணர்ச்சியைத் தொடங்காதீர். ஏனெனில், அவளுடைய ஆசை நிறைவேறுமுன் உம்முடைய ஆசை நிறைவேறிவிடக்கூடும்." (ஆதாரம்: அல்-முக்னீ :136)

மேற்கூறிய சில அறிவிப்புகள் தம்பதியருக்கு இடையில் நிகழும் முன்விளையாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

இமாம் முனவி ரஹ்மதுல்லாஹி அலைஹி உரைக்கிறார்கள்: "புணர்ச்சிக்குமுன் முன்விளையாட்டும் அழுத்தமான காதல் முத்தங்களும் வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். (ஸுன்னா முஅக்கதா) அதற்கு மாற்றமாக நடப்பது விரும்பத்தகாததாகும் (மக்ரூஹ்)". (ஆதாரம்: ஃபைழ் அல்-காதிர் ஷரஹ் அல்-ஜாமிஃ அல்-ஸகீர் 5:115)

முன்விளையாட்டு தொடர்பான பழக்கங்களை, சரியானவையல்ல, மார்க்க ஒழுங்குக்கு முரணானவை என்று சிலர் கருதுவது தவறாகும். அவர்கள், இச்செயலை துறப்பது இறைபக்தி என எண்ணுகின்றனர். ஆனால், இது முழுக்க முழுக்கத் தவறாகும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட இறைபக்தியும், தூய்மையும், இறையச்சமும் கொண்டவர் உண்டோ!. ஆயினும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்விளையாட்டை ஊக்குவித்தது மட்டுமின்றி, தம் மனைவியருடன் அதில் ஈடுபடவும் செய்தார்கள். எனவே இதுபோன்ற செயல்களைத் துறப்பது இறைபக்தியின் அடையாளமல்ல. ஆம், இஸ்லாத்தில் துறவறத்திற்கு வேலையில்லை. இஸ்லாம் ஓர் நடைமுறை மார்க்கம். அது தன்னைப் பின்பற்றுவோர் தங்களின் பாலியல் தேவைகளை நியாயமான முறையில் நிறைவுசெய்துகொள்ள அனுமதிக்கிறது.

முன்விளையாட்டு பல வடிவங்கள் எடுக்கலாம். ஒவ்வொரு தம்பதியரும் வேறுபட்டவர்கள் என்பதால், தங்களுக்கு எவை கிளர்ச்சியூட்டும் விதமாக உள்ளன என்பதை தம்பதியரே கண்டறிந்துகொள்ள விட்டுவிடுவதே சிறந்ததாகும்.

முத்தத்தைக் கொண்டு முன்விளையாட்டை துவங்குங்கள் : 

முன்விளையாட்டின் துவக்கம் முத்தமாக இருக்கட்டும். ஒருவர் தம் துணைவரை முத்தமிடுவது முன்விளையாட்டின் மிகவும் அவசியமானதும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியுமாகும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது: "உங்களில் எவரும் மிருகத்தைப் போன்று தன் மனைவியை அணுகக்கூடாது. அவர்களுக்கு இடையில் தூது அனுப்புதல் வேண்டும். "அல்லாஹ்வின் தூதரே! (இங்கே) தூது என்பது யாது?" என வினவப்பட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "முத்தமும், இன்சொற்களும் (கொண்ட முன்விளையாட்டு) என பதிலளித்தார்கள்." (ஆதாரம்: இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் இத் ஹாஃப் அல்-ஸாதாத் அல்-முத்த்கீன் பிஷரஹ் இஹ்யா உலூம் அல்-தீன் 6:175)

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிரார்கள்: "அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மனைவியர்களில் ஒருவரை முத்தமிட்டுவிட்டு, ஒளூச்செய்யாமலே தொழச் சென்றார்கள். (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து அறிவிக்கும்) உர்வா கூறுகிறார், "நான் ஆயிஷாவிடம் 'அது நீங்களாகத்தான் இருக்கும்?' என்றேன். அதற்கு அவர்கள் புன்னகைத்தார்கள்:." (ஆதாரம் ஸுனன் திர்மிதீ 86, ஸுனன் அபூதாவூத் 181, சுன்பன் அந் நஸாஈ 170)

இந்த ஹதீஸிலிருந்து, ஒருவர் தம் துணைவரை முத்தமிடுவது விரும்பத்தக்கது என விளங்குகிறது. மேலும் அது, ஒருவர் தம் வீட்டிற்கு வரும்போதும், வெளியே போகும்போதும் தம் மனைவியை முத்தமிடுவதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இது அல்லாஹ்வின் அன்புத் தூதரின் வழிமுறையாகும்.

இங்கே, இல்லறத்தம்பதிகளிடம் நாம் ஒரு வினா எழுப்ப வேண்டிய அவசியமிருக்கிறது. உங்களில் எத்தனைப் பேர் வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போது தனது துணைக்கு முத்தமிட்டுச் செல்லும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள்? புதிதாக திருமணமான சில காலங்களுக்கு கணவன் வீட்டைவிட்டு வெளியில் புறப்படும்போது கதவருகில் எவரும் பக்கத்தில் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அவசர அவசரமாக முத்தமிட்டு விடைபெறும் இந்த வழக்கம் மிகவும் சுவையானதுதான், இல்லறத்தின் சுவையை இன்னும் கூட்டக்கூடியதுதான். ஆனால் வெளியில் செல்வதற்கு முன்னும், வீட்டிற்கு வந்த பின்னும் தனது துணைக்கு முத்தமிடுவது சுன்னத்தான ஒரு செயல் என்பது நம்மில் எத்தனைப்பேருக்குத் தெரியும்?! இதுவும்கூட நபிவழிதான் என்பதை இப்போதாவது தெரிந்து கொண்டுவிட்டீர்களா? அல்ஹம்துலில்லாஹ்.

இந்த IN - OUT முத்தமிடும் சுன்னத்தை தம்பதிகள் ஃபாலோ பண்ணிக்கொண்டு வருவார்களானால் "தலாக்" தலைதெறிக்க ஓடாதா...! நபிவழி எனும்போது நன்மையைப்பற்றிக் கேட்பானேன். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? கரும்பு தின்னக்கூட கூலி கொடுக்கின்ற மார்க்கம் தான் இஸ்லாம். இல்வாழ்க்கையை இன்பமயமாக்கும் அத்தனை விஷயங்களுக்கும் இஸ்லாம் இனிதாக வழி காட்டுவதைக் கண்டு பூரித்துப்போகிறீர்களா? ஆம்! இவையனைத்தும் இறைவன் வழங்கியிருக்கும் அனுமதியெனும்போது; தம்பதியர்கள் தங்களுக்குள் இன்பத்தைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கிய அல்லாஹ்வுக்கு அதிகமதிகமாக நன்றி செலுத்தக் கடமைபட்டுள்ளார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். கரும்பு தின்பதற்கும் கூலி அந்த வாய்ப்பை நல்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தும்போது அதற்கும் அதிகமதிகமான கூலி... ஸுப்ஹானல்லாஹ். எவ்வளவு அற்புதமான மார்க்கத்தை அந்த ஏக இறைவன் மனித வர்க்கத்திற்கு வழங்கியிருக்கிறான்! நன்றி செலுத்துவோம் நன்றி செலுத்துவோம், அந்த அருளாளனுக்கு நன்றி செலுத்துவோம்! கரும்பாக இனிக்கும் விஷயங்களைத் தொடர்வோம்....

இவ்வாறு, தம்பதியர்‌ முன்விளையாட்டின்‌ போது ஒருவரையொருவர்‌ உணர்ச்சிப்பூர்வமாக முத்தமிடவேண்டும்‌. அதில்‌ எச்சிலை பரிமாறிக்கொண்டால்‌ தவறில்லை. ஒருவருக்கொருவர்‌ நாவை சுவைப்பதும்‌ சூப்புவதும்‌ அனுமதிக்கப்பட்டது மட்டுமின்றி, அது நபிவழியும்கூட (சுனன் அபூதாவூத் 2378)

ஒருவர்‌ தம்‌ துணைவரின்‌ மேல்‌ அல்லது கீழ்‌ உதட்டையும்‌ சூப்பலாம்‌. உதட்டை லேசாகக்‌ கடிப்பதற்கும்‌ அனுமதியுண்டு. ஆனால்‌, புண்படுத்தாமல்‌ பார்த்துக்கொள்ள வேண்டும்‌.

முத்தமிடக்கூடிய இடங்கள்‌. முத்தமிடுதல்‌ என்பது வாய்‌ மற்றும்‌ உதடுகளுக்கு மட்டுமல்ல. ஒருவர்‌ உடலின்‌ பிற பகுதிகளையும்‌ முத்தமிடலாம்‌. கன்னங்கள்‌, நெற்றி, மூக்கு முனை, காதின்‌ பின்புறம்‌ - அல்லது, காது சுனையை சூப்புதல்‌ - கண்‌ இமை, கழுத்தின்‌ பின்புறம்‌, உள்ளங்கை, கைவிரல்கள்‌, மணிக்கட்டு, முன்கை, இடுப்பு, வயிறு, தொப்புள்‌, நெஞ்சு, மார்பகம்‌, முதுகுத்தண்டு, முழங்கால்‌ பின்புறம்‌, தொடைகள்‌, கால்கள், (முக்கியமாக) பின்னங் கழுத்து‌ என எல்லா இடங்களிலும்‌ முத்தத்தைப்‌ பொழியலாம்‌. இந்த உறுப்புகளை முத்தமிடுவது போலவே, இவற்றை நாவால்‌ சுவைப்புதற்கும்‌ அனுமதியுண்டு. பாலுறுப்புப்‌ பகுதியைப்‌ பொறுத்தவரை, ஒருவர்‌ தம்‌ வாயில்‌ அசுத்தம்‌ படாமல்‌ இருப்பதில்‌ கவனமாக இருக்கவேண்டும்‌. ஏனெனில்‌, அந்த அசுத்தப்‌ பொருள்களை உட்கொள்வது தெளிவாகத்‌ தடைசெய்யப்பட்டுள்ளது.

அன்புக் கடி: 

துணைவரின்‌ உடலைக்‌ கடிப்பது, நாவால்‌ துழாவுவது அல்லது சூப்புவுதால்‌ - குறிப்பாகக்‌ கழுத்து‌ அச்சுகளில்‌, அன்புக்‌ கடிகள்‌ பதிந்துவிடக்கூடும்‌.

வெளியில்‌ தெரியும்‌ பகுதி மீது அச்சுப்‌ பதித்து, அதன்‌ மூலம்‌ தம்பதியருக்கு இடையில்‌ என்ன நடந்தது என்பதை மக்கள்‌ விளங்கிக்கொள்ளும்படி விடுவதற்கு அனுமதியில்லை.

கழுத்தில்‌ ஒர்‌ அச்சு விடப்பட்டால்‌, அது மறையும்வரை அதை கவனமாக மறைப்பது அவசியம்‌. தன்‌ துணைவர்‌ தன்‌ உடலில்‌ அச்சுப்‌பதித்து விட்டுள்ளார்‌ என்பதைப்‌ பெருமையாகக்‌ காட்டிக்கொள்வது இஸ்லாத்திற்குப்‌ புறம்பானது. இது விலக்கப்பட்ட செயல்‌.

அத்துடன்‌, இவ்வாறான அன்புக் கடிகளானது துணைக்கு வலி, இரத்தக் காயம் ஏற்படாதவாறும், சைக்கோத்தனமாக இல்லாதவாறும் அமையவேண்டும்.

சிலர் உடலுறவில் குரூர இன்பம் காண்பதற்காக துணையின் உடலில் நகங்களினால் கீறுதல், சிகரட்டினால் சுடுதல் போன்ற வக்கிரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இது இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லாத தன் துணையின் உடல் மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறையாகும். மேலும், இவை சட்டத்துக்கு பொறுப்பானவர்களிடம் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டு தண்டனை பெற்று கொடுக்கப்பட வேண்டிய குற்றங்களாகும்.

மார்புகள்‌ மூலம்‌ கிளர்ச்சியூட்டுதல்‌:

மனைவியின்‌ மார்பகங்களை முத்தமிடுவது, நாவால்‌ துழாவுவது, சூப்புவது மற்றும்‌ பொதுவாகப்‌ பிசைவது அனுமதிக்கப்பட்டது மட்டுமின்றி, அவளுக்குப்‌ பாலியல்‌ ரீதியாகக்‌ கிளர்ச்சி ஏற்படுத்துவதற்கும்‌ மிகத்‌ திறனுள்ளதொரு வழி. எனவே, கணவன்‌ இதை அலட்சியமாக விட்டுவிடக்கூடாது.

மனைவியும்‌ தன்‌ கணவனின்‌ நெஞ்சு மற்றும்‌ முலைக்‌ காம்புகளை முத்தமிடவும்‌ சூப்பவும்‌ செய்யலாம்‌. இதற்கு ஷரீஆவில்‌ எந்தவொரு தடையும்‌ இல்லை.
(பாலூட்டும் மனைவியின் மார்பிலிருந்து கணவன் பால் குடிக்கலாமா என்பதை பின்னர் பார்ப்போம்.. இன்ஷா அல்லாஹ்)

உடலைப்‌ பிடித்துவிடுதலும்‌ தடவுதலும்‌:

பிசைதலும்‌ வருடுதலும்‌. முன்விளையாட்டின்‌ ஒரு பகுதியாக, தம்பதியர்‌ இருவரும்‌ ஒருவருக்கொருவர்‌ உடல்களை மென்மையாகப்‌ பிடித்துவிடுதலும்‌ பிசைதலும்‌ தடவி, நீவி வருடுதலும்‌ அவசியம்‌. இது
பாலியல்‌ கிளர்ச்சியூட்டுவதற்குக்‌ திறன்மிக்கதொரு வழியாகும்‌. ஒருவர்‌ கைகள்‌, தோள்பட்டைகள்‌, முதுகு, வயிறு, தொடைகள்‌, கால்கள்‌, பாதங்கள்‌ உட்பட உடலின்‌ எல்லாப்‌ பகுதிகளையும்‌ தடவிக்‌ கோதி,
இச்சையைத்‌ தூண்டும்‌ வகையில்‌ பிடித்துவிடலாம்‌. எண்ணெய்‌ அல்லது நறுமணப்‌ பொடிகள்‌ (பவுடர்‌) போன்ற மசகு பொருளைப்‌ பயன்படுத்தி இதைச்‌ செய்யலாம்‌.

தம்பதியர்‌ இருவரும்‌ ஒருவருக்கொருவர்‌ “கிளர்ச்சி மண்டலங்‌களை: - உடலில்‌ உச்ச பாலுணர்வைக்‌ கிளப்பக்கூடிய பகுதிகளை - தேடியறியவேண்டும்‌. இந்தப்‌ பகுதிகள்‌ ஒருவரின்‌ உடல்வாகைப்‌
பொறுத்து வேறுபடும்‌. இவை உடலின்‌ எந்தப்‌ பகுதியாக வேண்டுமானாலும்‌ இருக்கலாம்‌. எனினும்‌, பெரும்பாலான மக்களுக்கு பொதுவான சில “கிளர்ச்சி மண்டலங்கள்‌: இருக்கின்றன. எடுத்துக்‌ காட்டாக ஆண்குறி, கிளிடோரிஸ்‌ (கந்து/மதனபீடம்‌) இரண்டும்‌ நுண்ணுணர்வுள்ள மண்டலங்களாகும்‌.

அதிக நுண்ணுணர்வு பகுதிகளுள்‌ காதுகள்‌, பிடரி, மார்பகங்கள்‌, மற்றும்‌ முலைக்காம்புகள்‌, தொடைகளின்‌ உட்பகுதி, முழங்கால்‌
பின்பகுதி, பிட்டம்‌, உள்ளங்கால்‌, கால்விரல்கள்‌, இயல்பாகவே ஆண்குறி மற்றும்‌ பெண்குறி ஆகியன அடங்கும்‌. இந்தப்‌ பகுதிகளை மென்மையாகப்‌ பிடித்துவிடுவதும்‌ நீவிக்கொடுப்பதும்‌ துணைவருக்குப்‌
பாலுணர்வுக்‌ கிளர்ச்சியூட்ட உதவும்‌. ஒருவர்‌ தம்‌ துணைவருக்கு இன்பம்‌ தருவது, இன்ஷா அல்லாஹ்‌ நற்கூலிக்குரிய ஒரு நற்செயல்‌ என்பதை மனதில்‌ வைத்துக்கொள்ளுங்கள்‌.

பாலுறுப்புக்களைத்‌ தொடுவதும்‌ கொஞ்சுவதும்‌:

துணைவரின்‌ பாலுறுப்பைத்‌ தொட்டு, நீவி, கொஞ்சுவதில்‌ தவறேதுமில்லை. உண்மையில்‌, முன்விளையாட்டின்‌ ஒரு பகுதியாக தம்பதியர்‌ ஒருவருக்கொருவர்‌ பாலுறுப்புகளை நீவி விளையாடுவது ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
மனைவி கணவனின்‌ ஆணுறுப்பைப்‌ பிடிக்து நீவலாம்‌, கணவன்‌ அவள்‌ பெண்குறியைத்‌ தொட்டு வருடலாம்‌. இவை, துணைவரை உடலுறவுக்கு
ஆயத்தமாக்குவதற்கு திறனுள்ளதொரு வழியாகும்‌. இது விஷயமாகப்‌ பெண்ணின்‌ கந்துவை (கிளிடோரிஸ்‌) கிளர்ச்சியூட்டுவது முக்கியம்‌.
அது பெண்ணுடைய பிறப்புறுப்பில்‌ பெண்குறியின்‌ முன்பாகத்தில்‌ உள்ள சிறிய நுண்ணுணர்வுமிக்க, நிமிர்வுபெறக்கூடிய ஒரு பகுதி. இதனால்‌, ஆழ்ந்த பாலியல்‌ இசைவு ஏற்படும்‌.

கைகொண்டு பரவசநிலை அடையச்செய்தல்:

கணவன்‌ தன்‌ கைகளையும்‌ கைவிரல்களையும்‌ பயன்படுத்தி மனைவியைப்‌ பரவசநிலை
அடையச்செய்வதற்கு அனுமதியுண்டு. அதேபோல்‌, மனைவியும்‌ தன்‌ கைகளால்‌ கணவனைப்‌ பரவசநிலை அடையச்‌ செய்யலாம்‌. குறிப்பாக, கணவன்‌ இதை மனைவிக்குச்‌ செய்துவிடுவது ஊக்குவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில்‌, பெண்களுக்குப்‌ பரவசநிலையை அடைய கூடுதல்‌ நேரம்‌ பிடிக்கும்‌.

இமாம்‌ இப்னு ஆபிதின்‌ தம்முடைய ரத்‌ அல்‌-முஹ்தாரில்‌, தம்பதியருக்கிடையில்‌ ஒருவருக்‌கொருவர்‌ கைகளைக்கொண்டு பரவசநிலை அடைந்துகொள்வதைப் பற்றி கூறும்போது:

ஒருவர்‌ திருப்திபெற அனுமதிக்கப்பட்ட ஒரு பொருளிலிருந்து - தன்‌ துணைவரின்‌ உடல்‌ பாகத்திலிருந்து - தன்னைத்‌ திருப்திப்‌படுத்திக்‌ கொள்கிறார்‌. ஆம்‌, அவளின்‌ முழு உடலவிலிருந்தும்‌ அவர்‌ பாலியல்‌ திருப்தி பெறுவதற்கு உரிமையுண்டு. (ரத்‌ அல்‌-முஹ்தார்‌ அலா அல்‌-தூர்‌ அல்‌-மு.ஃக்தார்‌ 2:399)

முழு நிர்வாணமாக இருப்பதற்கும் அனுமதியுண்டா? 

துணையின் உடலுறுப்புக்களை தடவி விடுவதும், வருடிவிடுவதும் முன்விளையாட்டின் ஒரு பகுதியே. அதுபோன்று மனைவியின் மார்பை கரங்களாலும் உதடுகளாலும், வாயாலும் விளையாடுவதும் அனுமதிக்கப்பட்டதே. மனைவியை ஒருவரையொருவர் நிர்வாணமாகப் பார்த்துக்கொள்வதுகூட தவறான செயலல்ல. இதுவும்கூட தம்பதிகளின் உணர்ச்சிகளைத்தூண்டும் முன்விளையாட்டின் ஒரு அங்கமாகக்கொள்ளலாம்.

மறைவான பகுதிகளைப்பாத்தல் :

தம்பதியர் ஒருவர் மற்றவரின் பாலுறுப்பைப் பார்க்கும் விஷயத்திலும், பெரும்பாலும் எல்லா அறிஞர்களுமே அனுமதி அளிக்கின்றனர்.

திருமண இணைவு மூலம் கணவன், மனைவி இருவரும் ஒருவரையொருவர் உடலின் பாலுறுப்புக்கள் உட்பட எந்தப் பகுதியை வேண்டுமானாலும் பார்ப்பதற்கு ஷரீஆ அனுமதிக்கிறது.

பஹ்ல் இப்னு ஹகீம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தம் பாட்டனாரிடமிருந்து (முஆவியா இப்னு ஹய்தா) தம் தந்தை தம்மிடம் அறிவித்ததாகக் கூறுகிறார். நான் (முஆவியா) கேட்டேன், "அல்லாஹ்வின் தூதரே! எங்களின் மறைவு பாகங்களில் எவற்றை வெளிக்காட்டலாம், எவற்றைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?" இதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "உங்கள் மறைவு பாகங்களை (அவ்ரா) காத்துக்கொள்ளுங்கள். உங்களின் மனைவி அல்லது அடிமைப் பெண்களைத் தவிர... " என்று கூறினார்கள். (ஆதாரம்: ஸுனன் திர்மிதீ 2769, ஸுனன் இப்னு மாஜா 1920)

இமாம் அப்துர் ரஸ்ஸாக் அல்ஸன் ஆனி ரஹ்மதுல்லாஹி அலைஹி தம் அல்-முஃஜம் அல்-கபீரிலும், ஸஅத் இப்னு மஸ் ஊத் அல்-கிந்தி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த ஹதீஸைப்பதிவு செய்துள்ளார்கள்.

உஸ்மான் இப்னு மஃஸூன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி என் மறைவு பாகங்களைப் பார்ப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது' என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'ஏன் அப்படியிருக்க(வெட்கப்பட) வேண்டும்? அல்லாஹ்தான் உங்களை அவர்களுக்கு ஆடையாகவும், அவர்களை உங்களுக்கு ஆடையாகவும் ஆக்கியுள்ளானே!..." (நூல்: அல்-முஸன்னஃப் 6:85, அல்-ம்ஃஜம் அல்-கபீர் 9:37)

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: "உங்கள் பார்வையைத் தாழ்த்திக்கொள்ளுங்கள், உங்கள் அடிமைப்பெண் அல்லது மனைவியைத் தவிர". மேலும் மனைவியின் மறைவுப்பாகங்களைத் தொடுதல், உடலுறவு கொள்ளுதல் இரண்டுமே அனுமதிக்கப்பட்டிருக்க, வெறுமனே அதைப் பார்ப்பதற்கு இன்னும் கூடுதல் அனுமதியுண்டு எனும் அடிப்படையையும் அவர் முன்வைக்கிறார்கள். (நூல்: அல்-ஹிதாயா 4:461)

அல்-ஃபதாவா அல் ஹிந்திய்யாவில் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு கூறுவதுண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. "உடலுறவின் போது கணவன் தன் மனைவியின் பாலுறுப்பை பார்ப்பது சிறந்தது. ஏனெனில், அதனால் முழு இன்பமும் நிறைவும் கிடைக்கும்.". (நூல்: அல்-ஃபதாவா அல் ஹிந்திய்யா 5:328)

அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ‘அதா’வு என்பவர் இதுபற்றி நேரடியாக கேட்டபோது, பார்ப்பதற்கு அனுமதி உள்ளதாக சூசகமாக உணர்த்தினார்கள் என்ற ஹதீஸ் இப்னு ஹப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை மேற்கொள் காட்டி ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி இமாம் அவர்கள் "ஆண் தன் மனைவியின் மர்மஸ்தலங்களையும் பெண் தன் கணவனின் மர்மஸ்தலங்களையும் பார்க்கலாம் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும் என்று குறிப்பிடுகிறார்கள். (பத்ஹுல் பாரி, பாகம்-1, பக்கம்-290)

"மறைவுப் பாகங்களைப் பார்ப்பதால் கண்கள் குருடாகிவிடும்" எனும் ஹதீஸ் பலவீனமானது அல்லது புனையப்பட்டது ஆகும் என இமாம் இப்னு ஹிப்பான் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், இமாம் இப்னு அல்-ஜவ்ஸி ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்ற ஹதீஸ் அறிஞர்கள் கருதியுள்ளனர். (ஆதாரம்: முக்னி அல்-முஹ்தாஜ் 3181)

முன்விளையாட்டின் ஒருபகுதியாக, முழுமையான உடலுடன் உடல் சேர்தலுக்கும் அனுமதியுண்டு. அதாவது, ஒருவர் தம் துணைவரின் உடலைத் தம் உடலோடு முழுமையாக இணைக்கலாம். இதில் கட்டியணைத்தல், மோகமாகப்பிடித்து நீவுதல், கொஞ்சுதல், ஒருவர் மீது ஒருவர் புரளுதல், துணைவரின் உடலோடு தன் உடலைத் தேய்த்தல், முற்றிலும் துணைவர் மீது ஏறிப்படுப்பது ஆகிய எல்லாம் அடங்கும். இவற்றை ஆடையுடனோ, ஆடையின்றியோ செய்வதற்கு அனுமதியுண்டு.

திருமணம் மூலம் ஒன்றுசேர்வதன் வாயிலாக தம்பதியர் ஒருவருக்கொருவர் இன்பம் பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு எனும் கோட்பாட்டின்படி தம்பதியர் இருவரும் தங்கள் பாலுறுப்புகளை ஒருவர் மற்றவரின் உடல் மீது தேய்த்து பரவசநிலை அடைந்துகொள்ளவும் அனுமதியுண்டு.

அடுத்து கணவனும் மனைவியும் நெருக்கம் பெறுவதற்காகவும் முன்விளையாட்டுக்காகவும் ஒன்றுசேர்ந்து குளிப்பதும், நீராடுவதும் அனுமதிக்கப்பட்டதே. ஒன்றுசேர்ந்து நீராடுவதை அனுமதிக்கிறது எனும்பொழுது இதுபற்றிய மற்ற விஷயங்களை இன்னும் விரிவாக விளக்க வேண்டிய அவசியமில்லை என்றே கொள்ளலாம்.

உணவுப்‌ பொருட்களைக்கொண்டு கிளர்ச்சியூட்டுதல்:

ஒருவர்‌ தன்‌ துணையாளின்‌ உடல்‌ மீதுள்ள உணவுப்‌ பொருட்களை உண்ணுவது அல்லது நாக்கால்‌ சுவைப்பது குறித்து அடிக்கடி கேட்கப்படுகிறது.

இப்பழக்கம்‌ இஸ்லாமிய ஒழுங்குக்கும்‌ ஒழுக்கநெறிக்கும்‌ மார்க்கப்‌ பேணுதலுக்கும்‌ புறம்பானது. உணவை நேரடியாக வாயால்‌
கவ்வி உண்பது கூடாது. அதைக்‌ கையால்‌ எடுத்து உண்ணவேண்டும்‌. மேலும்‌, உண்ணுதல்‌ தொடர்பான பல ஒழுங்குகளும்‌ நபிவழிகளும்‌ இங்கே நிறைவேறாமல்‌ போகின்றன. உணவு அல்லாஹ்வுடைய அருட்‌கொடை (நிஃமா). அதை உண்பதற்கு இஸ்லாமியச்‌ சட்டம்‌ (ஷரிஆ) பல ஒழுங்குகளை விதித்துள்ளது: அல்லாஹ்வின்‌ பெயரைக்கொண்டு துவங்குதல்‌, முடித்ததும்‌ அல்லாஹ்விற்கு நன்றிசெலுத்துதல்‌, முன்னால்‌
இருப்பதை எடுத்து உண்ணுதல்‌, வலக்‌ கையால்‌ உண்ணுதுல்‌, ஒன்றின்மீது சாய்ந்த நிலையில்‌ உண்ணாதிருத்தல்‌ எனப்‌ பல விதிமுறைகள்‌ உள்ளன.
எனவே, எவ்விதத்திலும்‌ உணவுக்கு அவமரியாதை செய்வது - உடல்‌ மீது, அதுவும்‌ அசுத்தமான பாகங்களுக்கு நெருக்கமாக வைப்பது இதில்‌ அடங்கும்‌ - இஸ்லாமியப்‌ போதனைகளுக்குப்‌ புறம்பானது. இப்பழக்கம்‌ முற்றிலும்‌ தவிர்க்கப்பட வேண்டும்‌. ஏனெனில்‌, இவையின்றி, இஸ்லாமிய ஒழுங்குக்கும்‌ உன்னத முறைகளுக்கும்‌ ஏற்ப முன்விளையாட்டுக்கு வேறு பல இன்பமான வழிகள்‌ உள்ளன.


பாலியல்‌ துணைக்‌ கருவிகளையும்‌ சாதனங்களையும் தம்பதிகள் உடலுறவின் போது பயன்படுத்தலாமா?

பாலியல்‌ துணைக்கருவிகள்‌ என்பது, தம்பதிகள்‌ சாதனங்களைக்‌ கொண்டு பரவசநிலையோ இதர பாலியல்‌ செயல்பாடுகளில்‌ தூண்டுதலுக்காக அல்லது பாலியல்‌ கிளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவோ
அல்லது பரவசநிலை அடைவதற்காகவோ பயன்படுத்தப்படும்‌ ஒரு பொருள்‌. 

மிக அதிகமாக வழக்கில்‌ உள்ள சில துணைக்கருவிகள்‌:

டில்டோ, வைப்ரேட்டர்ஸ், கிளிட்டோரஸ் கிளர்ச்சியூட்டிகள்‌, நீட்சி ஆணுறைகள்‌, பெண்குறி பந்துக்கள்‌ மற்றும்‌ பல்வேறு பசைகள்‌, களிம்புகள்‌.

இன்று முஸ்லிம்‌ தம்பதிகள்‌ மத்தியில்‌, உடலுறவுச்‌ செயல்திறனை மேம்படுத்துவதற்காகப்‌ பாலியல்‌ துணைக்கருவிகளைப்‌ பயன்படுத்தும்‌ வழக்கம்‌ அதிகரித்து வருகிறது. ஆனால்‌, இதுகுறித்து இஸ்லாமியரீதியாக சில விஷயங்களைக்‌ கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது.

அ. ஒருவருக்கு சிரமத்தை ஏற்படுத்தினால்‌ என்ன செய்வது? 

ஒருவா்‌ சுயதீங்கு விளைவித்துக்கொள்வதை ஷரீஆ அனுமதிப்பதில்லை. எனவே, பாலியல்‌ துணைக்கருவிகள்‌ தம்பதியர்‌ இருவருள்‌ ஒருவரை பாதித்தால்‌ கூட அதற்கு அனுமதியில்லை. தம்பதியர்‌ இருவருக்கும்‌ அது எவ்விதத்‌ தீங்கும்‌ விளைவிக்காமல்‌ இருப்பது அவசியம்‌.

ஆ. உயிரினங்களின்‌ உருவத்தில்‌ இருக்கலாமா? 

சில பாலியல்‌ துணைக்‌ கருவிகள்‌ உயிரினங்களின்‌ உருவத்தில்‌ இருக்கலாம்‌. அவற்றுக்கு அனுமதியில்லை. ஏனெனில்‌, உருவங்கள்‌ செய்வது (தஸ்வீர்‌) விலக்கப்பட்டது.

இ. மசகுப்‌ பொருட்களைப்‌ பயன்படுத்தலாமா?

 லூப்ரிகன்கள்‌, லோஷன்கள்‌, ஜெல்கள்‌, க்ரீம்கள்‌ ஆகியவற்றுக்கு தடையேதும் இல்லை. எனினும்‌, அவை எவ்விதத்‌ தீங்கும்‌ ஏற்படுத்தக்கூடாது.

ஈ. வைப்ரேட்டர்களை‌ கிளர்ச்சியூட்டுவதற்குப்‌ பயன்படுத்தலாமா? 

வைப்ரேட்டர் போன்ற சாதனத்தைப்‌ பயன்படுத்தி பாலுறுப்புகளைகத்‌ தவிர உடலின்‌ பிற பகுதிகளையோ மனைவியுடைய கிளிட்டோரஸ் உள்பட பெண்‌ குறியின்‌ புறப்‌ பகுதியையோ கிளர்ச்சியூட்டுவதற்கு தடையில்லை. இதற்கு நிபந்தனை, அதை அவருடைய துணைவர்‌ செய்துவிட வேண்டும்‌; மேலும்‌, துணைவரைக்‌ கொண்டு சாதனங்களைப்‌ பயன்படுத்துவதால்‌ அது ஒருவர்‌ தனியாக இருக்கும்பொழுதும்‌ பயன்படுத்த வழிவகுக்கும்‌ என அஞ்சினால்‌, அவற்றைத்‌ தவிர்த்தல்‌ வேண்டும்‌.

பாலியல்‌ சாதனங்களைப்‌ பயன்படுத்துவது உறவில்‌ பாதிப்புகள்‌ ஏற்படுத்தலாம்‌. ஆண்‌ சோம்பேறித்தனம்‌ அடைந்துவிடலாம்‌. கணவன்‌ - மனைவி இடையே இயற்கையான உடலுறவில்‌ ஏற்படும்‌ இன்ப உறவை
அது தடுக்கலாம்‌. மனைவி, தன்‌ கணவன்‌ இயற்கையாகத்‌ தன்னைத்‌ திருப்திப்படுத்த தகுதியற்றவன்‌ எனக்‌ கருதி அவர்மீது மரியாதை இழக்கலாம்‌. ஆக, பாலியல்‌ கருவிகளை மொத்தமாகச்‌ தவிர்ப்பது மிகச்‌ சிறந்தது - அது உறவுகளை மெருகூட்டும்‌ நோக்கில்‌ செய்யப்பட்டாலும்‌ கூட. விதிவிலக்காக கணவன் நிரந்தர ஆண்குறி விறைப்புத்தன்மையின்மை, நாட்பட்ட நோய்கள், விபத்துக்கள் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு மனைவியை தன் ஆண்குறி கொண்டு திருப்திப்படுத்த முடியாமல் போகின்ற சந்தர்ப்பங்கள் தவிர. மேலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் மனைவி விரும்பினால் கணவனிடமிருந்து விவாகரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.


கட்டிப்போடுதலும்‌ கசையடியும்‌:

கட்டிப்போடுதல்‌ என்பது தம்பதியர்‌ ஒருவரை உடல்ரீதியாக நகர விடாது கட்டுப்படுத்துதல்‌ அல்லது கட்டிப்போடுதல்‌ மூலம்‌ 'பாலுறவு இன்பம்‌” அடையும்‌ ஓர்‌ உடலுறவுப்‌ பழக்கமாகும்‌. இது. தம்பதியருக்கு
இடையில்‌ பாலியல்‌ முனைப்பு மற்றும்‌ மந்தப்‌ பாத்திரங்களை வரையறுப்பதற்கான வழியாக இருக்கலாம்‌. கட்டுப்படுத்தலில்‌ கைவிலங்குகள்‌, கயிறுகள்‌, சங்கிலிகள்‌, பெல்டுகள்‌, விலங்குகள்‌, கண்‌
கட்டுகள்‌, கழுத்துவார்கள்‌ போன்றவை அடங்கும்‌. கசையடி என்பது சாட்டையால்‌ அடித்தல்‌, பிட்டத்தில்‌ அறைதல்‌, மற்றும்‌ பாலியல்‌ கிளர்ச்சியூட்டுவுதற்காக துணைவர்‌ மீது பொதுவாக வலி ஏற்படுத்துதல்‌.

இஸ்லாமிய ரீதியாக, இவை நிச்சயமாக மனித இயல்புக்குப்‌ (ஃபித்ரா) புறம்பாக உள்ளதால்‌ இவற்றை முடிந்த அளவு‌ தவிர்த்தல் வேண்டும்‌.
கணவன்‌ தன்‌ மனைவியிடம்‌ மிகுந்த பண்பாக, மென்மையாக இருக்க வேண்டுமென இஸ்லாம்‌ பணிக்கிறது. மேலும்‌ ஒரு விஷயம்‌, தாம்பத்திய உறவின்‌ அடிப்படையே அது 'நல்வழியில்‌” (பில்‌ - மஃரூப்‌) அமையவேண்டும்‌ என்பதுதான்‌. இதை அல்லாஹ்‌ திருக்குர்‌ஆனில்‌ கூறியிருக்கிறான்‌. தம்பதியர்‌ ஒருவருக்‌கொருவர்‌ உரிமைகளை அளிக்க முனைவார்கள்‌. இதில்‌ பாலியல்‌ தேவைகளின்‌ நிறைவேற்றமும்‌ அடங்கும்‌. எனினும்‌, 'நல்வழி’ எனக்‌ கருதப்படும்‌ எல்லைகளுக்கு உட்பட்டு இது செய்யப்படவேண்டும்‌.


பாலியல்‌ கிளர்ச்சியூட்டக்கூடிய நடனமும்‌ இசையும்:
இசையுடன்‌ கூடிய நடனம்‌ - அது பாலியல்‌ உசுப்பேற்றக்கூடியதோ இல்லையோ - விலக்கப்பட்ட, பாவமான செயல்‌ என்பது பொதுவான விதி. இசை கேட்பது இஸ்லாமியச்‌ சட்டத்தில்‌ ‌ திட்டவட்டமாகத்‌ தடைசெய்யப்பட்டது. அது பல சுய, சமூகக்‌ கோளாறுகளை விளைவிக்கும்‌.

பிரத்யேகமாக களிப்புக்கும்‌ நடனத்துக்கும்‌, மற்றும்‌ கேட்போரைக்‌ கவர்ந்திழுக்கக்கூடிய வகையில்‌ வடிவமைக்கப்பட்டுள்ள இசைக்‌ கருவிகள்‌ தடைசெய்யப்பட்டவையாகும்‌, அவற்றுடன்‌ மனிதகுரல்‌ இல்லாவிட்டாலும்‌ சரி. அதாவது கொட்டு, வீணை, ஆறு நரம்பு யாழ்‌, பிடில்‌, புல்லாங்குழல்‌, லூட்‌, மன்டோலின்‌, ஆர்மோனியம்‌, பியானோ ஆகிய அனைத்தையும்‌ பயன்படுத்துவதும்‌ கேட்பதும்‌ தவறு. இதற்கான ஒரே விதிவிலக்கு தஃப்‌ (பறை போன்றது) மட்டுமே. இது “சலசல” மணிகள்‌ இல்லாத ஒரு சாதாரணத்‌ தம்போரின்‌. இதுகுறித்து நபித்‌ தோழர்கள்‌ (சஹாபா), அவர்களைப்‌ பின்பற்றியவர்கள்‌ (தாபியீன்‌), சட்டவியலாளர்கள்‌ :புகஹா) அறிஞர்கள்‌ ஆகியோரின்‌ காலகட்டம்‌ தொட்டு ஒருமித்த கருத்து உள்ளது. (பதாயி அல்‌-சனாயி 6:269 முக்னீ அல்‌-முஹ்தாஜ்‌ 4:429 அல்‌-முக்னீ 12:39)

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) இவ்வாறு கூறுவதைத்‌ தாம்‌ செவியுற்றகாக அபூமாலிக்‌ அல்‌-அஷ்‌அரி (ரழி) அறிவிக்கிறார்‌:

விபச்சாரக்தையும்‌ பட்டுத்‌ துணியையும்‌ மதுவையும்‌ இசைக்‌ கருவிகளையும்‌ ஆகுமானதாகக்‌ கருதும்‌ மக்கள்‌ என்‌ உம்மத்தில்‌ தோன்றுவார்கள்‌. (சஹீஹ்‌
அல்‌-புஹாரி5268)

இசையின்‌ தடை பற்றி ஏராளமான நபிமொழிகள்‌ (ஹதீஸ்கள்‌) உள்ளன. இமாமாம் இப்னு ஹஜர்‌ அல்‌-ஹய்தமி (ரஹ்‌) இந்த ஹதீஸ்கள்‌ அனைத்தையும்‌ (சுமார்‌ நாற்பது) தம்முடைய அருஞ்சிறப்பான நூலில்‌(கஃப்‌ அல்‌-ராஅ அன்‌ முஹாரமத்‌ அல்‌-லஹ்வ்‌ வ அல்‌-சமா) திரட்டி, இதுபற்றிக்‌ கூறுகிறார்‌: 'எல்லாவகை இசைக்கருவிகளும்‌ விலக்கப்‌பட்டவை என்பதற்கு இவையனைத்தும்‌ தெளிவான, வெளிப்படையான, வலுவான புனித உரை ஆதாரங்களாகும்‌.” (2:870)

ஆக, மனைவி எவ்விதத்திலும்‌ “இசை நடனம்”‌ ஆடுவது பாவம்‌. எனெனில்‌, இசைகேட்பதே தடைசெய்யப்பட்டுள்ளது. இதை அவள்‌
தன்‌ கணவனுக்காகத்‌ தங்களின்‌ சொந்த அறையில்‌ தனியாக இருக்கும்‌ பொழுது செய்தாலும்‌ அது விலக்கப்பட்டதே.

எனினும்‌, இசையின்றி தன்‌ துணைவரின்முன்‌ நடனம்‌ ஆடுவதற்கு தடையில்லை. எனினும்‌, அது கபடமற்றதாகவும்‌ ஒழுக்க நாகரிகமுடையதாகவும்‌ இருக்கவேண்டும்‌. (இச்சையைக்‌ தூண்டுவதாகவும்‌
உசுப்பேற்றுவதாகவும்‌ இருப்பதில்‌ தவறில்லை).


ஆபாசப்‌ படம்‌:

தம்பதியர்‌ புணர்ச்சிக்குமுன்‌ பாலியல்‌ கிளர்ச்சியூட்டுவதற்காக ஆபாசப்‌ படம்‌ பார்ப்பதற்கு அனுமதியுண்டா? திட்டவட்டமாக, அழுத்தம்‌ திருத்தமாக 'இல்லை” என்பதே இந்தக்‌ கேள்விக்கான பதில்‌. ஆபாசப்‌ படம்‌ - அது ஒளிக்காட்சிப்‌ படங்கள்‌, திரைப்படங்கள்‌, புதினங்கள்‌, நாடகங்கள்‌, படங்கள்‌, புகைப்படங்கள்‌ ஆகிய எதுவாயினும்‌ விலக்கப்பட்டது, வெட்கக்கேடானது, பாவமானது என்பதில்‌ சந்தேகமேயில்லை. அம்மணக்‌ கோலத்தைப்‌ பார்ப்பதோ பிறர்‌ உடலுறவுகொள்வதைக்‌ கண்ணுறுவதோ இஸ்லாத்தில்‌ தெளிவாகத்‌ தடைசெய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்‌ கூறுகிறான்‌:

இறைநம்பிக்கையுள்ள ஆண்களிடம்‌ கூறுங்கள்‌, அவர்கள்‌ தங்கள்‌ பார்வைகளைத்‌ தாழ்த்திக்கொள்ளட்டும்‌ மற்றும்‌ பாலுறுப்புகளைக்‌ காத்துக்‌கொள்ளட்டும்‌ என்று. இது அவர்களின்‌ ஒழுக்கத்துக்கு அதிக உகந்ததாகும்‌. நிச்சயமாக அவர்கள்‌ செய்வது குறித்து அவன்‌ சகலவற்றையும்‌ அறிந்தவனாக இருக்கின்றான்‌. மேலும்‌, இறைநம்பிக்கையுள்ள பெண்களிடம்‌ கூறுங்கள்‌, அவர்கள்‌ தங்கள்‌ பார்வைகளைத்‌ தாழ்த்திக்கொள்ளட்டும்‌ மற்றும்‌ பாலுறுப்புகளைக் காத்துக்கொள்ளட்டும்‌ [...] (குர்‌ஆன்‌ 24:30-31)

இவ்வசனங்களில்‌ ஆண்‌, பெண்‌ ஆகிய இருபாலருக்கும்‌ தங்கள்‌ பார்வைகளைத்‌ தாழ்த்திக்கொள்ளுமாறும்‌ பிறரின்‌ மறைவான பகுதிகளைப்‌ பார்ப்பதைத்‌ தவிர்க்குமாறும்‌ கட்டளையிடப்பட்டுள்ளது. ஒருவரின்‌ பார்வை நாட்டமின்றி, தன்னிச்சையாக இன்னொருவரின்‌
மறைவான பகுதிகள்மீது பட்டுவிட்டால்‌, அவர்‌ சட்டெனத்‌ தன்‌ பார்வையைத்‌ திருப்பிக்கொள்ள வேண்டும்‌. ஜரீர்‌ இப்னு அப்துல்லாஹ்‌ (ரழி) அறிவிக்கிறார்‌:

தன்னிச்சையான பார்வை குறித்து நான்‌ அல்லாஹ்வின்‌ தூதரிடம்‌ வினவினேன்‌. அவர்கள்‌ என்னிடம்‌ பார்வையைத்‌ திருப்பிக்கொள்ளுமாறு
கட்டளையிட்டார்கள்‌. (சஹீஹ்‌ முஸ்லிம்‌ 2159 சுனன்‌ அல்‌-திர்மிதீ 2776, இங்கு திர்மிதியின்‌ சொற்களே இடம்பெற்றுள்ளன)

இந்த நபிமொழிக்கான தம்‌ கருத்துரையில்‌ இமாம்‌ நவவி கூறுகிறார்‌:
தன்னிச்சையான பார்வை' என்பதன்‌ பொருள்‌, ஒருவரின்‌ பார்வை நாட்டமின்றி மஹ்ரம்‌-அல்லாத பெண்‌ ஒருத்தி மீது பட்டுவிடுவதாகும்‌. முதல்‌ பார்வை பாவம்‌ இல்லை. எனினும்‌, அவர்‌ உடனடியாகக்‌ தம்‌
பார்வையைத்‌ திருப்பிக்கொள்ள வேண்டும்‌. அவர்‌ தம்‌ பார்வையை உடனடியாகத்‌ இருப்பிக்கொள்வார்‌ எனில்‌, அவர்மீது பாவம்‌ இல்லை. எனினும்‌, அவர்‌ தொடர்ந்து பார்வை செலுத்திக்கொண்டிருந்தால்‌,
இந்த ஹதீஸின்படி. அவர்‌ பாவச்‌ செயலைச்‌ செய்கிறார்‌. ஏனெனில்‌, அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) தம்‌ தோழரிடம்‌ பார்வையைத்‌ திருப்பிக்‌
கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்‌; மற்றும்‌, அல்லாஹ்‌: கூறுகிறான்‌: “இறைநம்பிக்கையுள்ள ஆண்களிடம்‌ கூறுங்கள்‌: அவர்கள்‌ தங்கள்‌
பார்வைகளைக்‌ தாழ்த்திக்கொள்ளட்டும்‌; மேலும்‌ பாலுறுப்புகளைக்‌ காத்துக்கொள்ளட்டும்‌ என்று” (அல்‌-பின்ஹுஜ்‌ ஷரஹ்‌ சஹீஹ்‌ முஸ்லிம்‌ ப.1618)
 
அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அபூசயீத்‌ அல்‌-ஃகுத்ரி (ரஹி) அறிவிக்கிறார்‌:

ஓர்‌ ஆண்‌ இன்னொரு ஆணின்‌ மறைவு பாகங்களைப்‌ பார்க்கக்கூடாது. ஒரு பெண்‌ இன்னொரு பெண்ணின்‌ மறைவு பாகங்களைப்‌ பார்க்கக்கூடாது...
(சுனன்‌அல்‌-திர்மிதி 2793)

ஜர்ஹத்‌ அல்‌-அஸ்லமியின்‌ தொடை வெளியே தெரியும்‌ நிலையில்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவரைக்‌ கடந்துசென்றதாக அவரே அறிவிக்கிறார்‌. அப்போது அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறினார்கள்‌:

உன்‌ தொடையை மறைத்துக்கொள்‌. அது மறைக்க வேண்டிய பாகங்களில்‌ ஒன்று. (சுனன்‌ அல்‌-திர்மிதி 2798)

ஆபாசப்‌ படங்கள்‌ தம்பதியரின்‌ பாலியல்‌ வாழ்விற்குத்‌ துணை புரிவதில்லை. மாறாக, அதை அழித்துவிடுகிறது. ஆபாசப்‌ படம்‌ பார்த்தல்‌, ஒருவரை மிகுதியாக அடிமைப்படுத்தக்‌ கூடிய நோயாகும்‌.
அது சுய தீங்கிற்கும்‌ தற்புணர்ச்சிக்கும்‌ வழிவகுக்கும்‌ என்பது நியதி. நிர்வாணப்‌ படங்களைப்‌ பார்ப்பதாலும்‌ ரசிப்பதாலும்‌ ஆணும்‌ பெண்ணும்‌ இயற்கை வழியில்‌ ஒருவருக்கொருவர்‌ கிளர்ச்சி அடைந்து
கொள்ளும்‌ திறனை இழந்துவிடுகின்றனர்‌. அவர்கள்‌ தங்கள்‌ துணையாள்களின்‌ மூலம்‌ உசுப்பேற சிரமப்படுகின்றனர்‌. ஆனால்‌, ஆபாசப்‌ படம்‌ மூலம்‌ எளிதாக உசுப்பேறுகின்றனர்‌. இதனால்தான்‌, உலகில்‌
உளவியல்ரீதியான மலட்டுத்தன்மைக்கு ஆபாசப்‌ படம்‌ மிகப்‌ பொதுவான காரணமாக இருக்கிறது. ஆபாசப்‌ படம்‌ பார்க்கும்‌ வழக்கமுள்ள முஸ்லிம்‌ தம்பதிகள்‌, அதன்‌ காரணமாக நாளடைவில்‌ தங்கள்‌ பாலியல்‌ வாழ்வில்‌ பிரச்னைகள்‌ ஏற்படும்‌ என்பதை உணர வேண்டும்‌. எனவே, அவர்கள்‌ செழிப்பான தாம்பத்தியம்‌ நடத்த நாடினால்‌, இந்த இழிவான, வழிகெட்டுப்போன ஓழுக்கக்கேட்டை அவர்கள்‌ உடனடியாக நிறுத்தவேண்டும்‌.


எதிர்பாலினரின்‌ உடையணிதலும்‌ 'டிரான்ஸ்வெஸ்டிஸமும்‌”:

எதிர்பாலினரின்‌ உடையணிதல்‌ என்பது, மாற்று பாலர்‌ தொடர்பான ஆடையை அல்லது உள்ளாடையை அணிதலாகும்‌. அல்லது, சில வேளைகளில்‌, அலங்காரம்‌ செய்வதையும்‌ அது குறிக்கும்‌. இந்த மாற்று உடையணிதல்‌ பாலியல்‌ காரணங்களுக்காக இருப்பின்‌ அது “டிரான்ஸ்வெஸ்டிஸம்‌” எனப்படுகிறது. ஒரு டிரான்ஸ்வெஸ்டியர்‌, மற்ற பாலரின்‌ ஆடைகளை அணிந்துகொள்வதில்‌ அல்லது பெருமையாக நடைபோடுவதில்‌ பாலியல்‌ இன்பம்‌ பெறுகிறான்‌/ள்‌. 

பெரும்பாலான சந்தாப்பங்களில்‌ 'டிரான்ஸ்வெஸ்டிஸத்தின்‌’ உள்நோக்கம்‌ என்னவெனில்‌, மாற்று பாலரின்‌ ஆடை, அணிகலன்கள்‌ மீது ஒருவகையான மூடக்‌ களியாட்டக்‌ கவர்ச்சி கொள்வதாகும்‌. சிலவேளைகளில்‌, அது மாற்று பாலரின்‌ செயல்‌ பாத்திரம்‌ மீதுள்ள கவர்ச்சியாகவும்‌ இருக்கலாம்‌. இதற்கு ஆடை ஓர்‌ அடையாளச்‌ சின்னமாக விளங்குகிறது. ஆக, தன்‌ மனைவியின்‌ உடைகளையோ கீழ்‌ உள்ளாடைகளையோ அணியும்‌
கணவனும்‌, தன்‌ கணவனின்‌ உடைகளையோ கீழ்‌ உள்ளாடைகளையோ அணியும்‌ மனைவியும்‌ 'டிரான்ஸ்வெஸ்டியர்‌' எனப்படுகின்றனர்‌. இஸ்லாத்தில்‌ மாற்று உடையணிதலுக்கோ டிரான்ஸ்வெஸ்டிஸத்‌திற்கோ இடமில்லை. மாற்றுப்‌ பாலரின்‌ பாத்திரத்தை வகிப்பது, அவர்களைப்போல்‌ நடந்துகொள்வது, ஆடைகளை அணிவது ஆகியவை
கடுமையாக வெறுக்கப்பட்டுள்ளன; சபிக்கப்பட்டுள்ளன.

அப்துல்லாஹ்‌ இப்னு அப்பாஸ்‌ (ரழி) அறிவிக்கிறார்‌:
பெண்களைப்‌ போல்‌ நடந்துகொள்ளும்‌ ஆண்களையும்‌, ஆண்களைப்‌ போல்‌ நடந்துகொள்ளும்‌ பெண்களையும்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) சபித்தார்கள்‌.
(சஹீஹ்‌ அல்‌-புஹாரி 5546)

அப்துல்லாஹ்‌ இப்னு அப்பாஸ்‌ (ரழி) அறிவிக்கிறார்‌:

பெண்மையுடைய ஆண்களையும்‌, ஆண்மையுடைய பெண்களையும்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) சபித்து, 'அவர்களை உங்கள்‌ வீடுகளைவிட்டு வெளியேற்றிவிடுங்கள்‌” எனக்‌ கூறினார்கள்‌. (மேலும்‌) இப்னு அப்பாஸ்‌ கூறினார்‌, அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) இன்ன, இன்ன ஆளை வெளியேற்றினார்கள்‌' மற்றும்‌ உமர்‌ இன்ன, இன்ன ஆள்களை வெளியேற்றினார்கள்‌.
(சஹிஹ்‌ அல்‌-புஹாரி 5547)

அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்‌:
 
பெண்ணின்‌ உடையை அணியும்‌ ஆணையும்‌, ஆணின்‌ உடையை அணியும்‌ பெண்ணையும்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) சபித்தார்கள்‌.
(சுனன்‌ அபூ தாவத்‌ 4095)

இமாம்‌ இப்னு ஹஜர்‌ அல்‌-அஸ்கலானி, சஹீஹ்‌ அல்‌-புஹாரிக்கான தம்‌ விரிவுரையில்‌ இதுபற்றி விளக்குகிறார்‌. ஆண்கள்‌, பெண்களைப்‌ போல்‌ நடந்துகொள்வதும்‌, அலங்காரம்‌ செய்வதும்‌, பேசுவதும்‌ விலக்கப்பட்டுள்ளன. மறுபுறம்‌ பெண்ணுக்கும்‌ இது பொருந்தும்‌.
ஆடைகளைப்‌ பொறுத்தவரை, இது ஒருவரின்‌ நகர வழக்காற்றைச்‌ சார்ந்துள்ளது என்கிறார்‌. சில பண்பாடுகளில்‌ ஆண்‌, பெண்‌ ஆடைகள்‌
வேறுபாடின்றி இருக்கலாம்‌; வெறுமனே ஹிஜாப்‌ மற்றும்‌ மேலங்கியை வைத்தே பெண்கள்‌ அடையாளப்படுத்தப்படலாம்‌ (இதுபோன்ற
இடங்களில்‌ ஒருபாலர்‌ உடையை அணிவதற்கு அனுமதியுண்டு). பேச்சு மற்றும்‌ உடல்‌ அசைவுகளின்‌ பாவனை விஷயத்தில்‌, வேண்டுமென்றே செய்பவர்மீது மட்டுமே குற்றம்சாரும்‌. ஒருவர்‌ அந்த இயல்பிலேயே
படைக்கப்பட்டிருந்தால்‌, அவரைக்‌ குற்றம்சாட்ட இயலாது. எனினும்‌, அவர்‌ தம்‌ நடத்தையைப்‌ படிப்படியாக மாற்றிக்கொள்ள வேண்டும்‌.
அவர்‌ முயற்சிசெய்து தம்மை மாற்றிக்‌ கொள்ளாவிட்டால்‌ - குறிப்பாக,
அதுபோன்ற நடத்தையிலேயே மனநிறைவு கொண்டிருந்தால்‌ - அவர்‌ மீது குற்றம்‌ உண்டு. ஆயினும்‌, முயற்சிகளுக்குப்‌ பின்பும்‌, அவரால்‌
தம்மை மாற்றிக்கொள்ள இயலாவிட்டால்‌, அவர்மீது குற்றமில்லை,
(பத்ஹ்‌ அல்‌-பாரி ஷரஹ்‌ சஹீஹ்‌ அல்‌-புஹாரி 10:409)

மேற்கூறியவற்றிலிருந்து, மாற்றுப்‌ பாலரைப்‌ போன்று உடையணிவதோ குணநலனைப்‌ பாவிப்பதோ பாவச்செயல்‌ என்பது தெளிவாகிறது. இந்த நடத்தையின்‌ தீங்கு தனிமனிதரையும்‌ மொத்த சமூகத்தையும்‌ சேர்த்து பாதிக்கிறது. இது இயற்கை ஒழுங்குக்கு எதிரான கலகமாகும்‌.

ஆண்களுக்கும்‌ பெண்களுக்கும்‌ தனித்தனியாக அவர்களுக்கேயுரிய பண்புகள்‌ உள்ளன. எனவே, ஆண்கள்‌ பெண்மை உடையவர்களாகவோ பெண்கள்‌ ஆண்மை உடையவர்களாகவோ ஆகிவிட்டால்‌, இயற்கை ஒழுங்கு தலைகீழாய்‌ மாறி சிதறிவிடும்‌.

ஆகவே, உடலுறுவின்போதும்‌ முன்விளையாட்டின்போதும்‌ கணவன்‌
தன்‌ மனைவியின்‌ ஆடையையோ உள்ளாடையையோ அணிந்து, மனைவியின்‌ பாத்திரத்தை வடிப்பது பாவமாகும்‌. மறுபுறம்‌ மனைவிக்கும்‌ இது பொருந்தும்‌. ஆண்‌ ஆணாகத்தான்‌ இருக்கவேண்டும்‌; ஆணின்‌ பாத்திரத்தையே வகிக்கவேண்டும்‌. பெண்‌ பெண்ணாகத்தான்‌ இருக்க வேண்டும்‌; பெண்ணின்‌ பாத்திரத்தையே வகிக்கவேண்டும்‌. பாலியல்‌ முன்விளையாட்டின்போது பாத்திரங்களைத்‌ தலைகீழாக மாற்றிக்‌ கொள்வது பாவமும்‌ தரக்குறைவான செயலும்‌ மட்டுமின்றி, அது
படுக்கை அறைக்கு வெளியே தம்பதியரின்‌ உறவில்‌ நேரடி செல்வாக்குச்‌ செலுத்தும்‌.


சிறுநீர்‌ விளையாட்டு:

சிறுநீர்‌ விளையாட்டு என்பது ஒரு விநோதமான பாலியல்‌ மூடக்‌ களியாட்டமாகும்‌. இதில்‌ ஈடுபடுபவர்கள்‌ மூத்திரத்திலிருந்தும்‌ மூத்திரம்‌ அடிப்பதிலிருந்தும்‌ இன்பம்‌ பெறுகின்றனர்‌. இது தம்பதியரில்‌ ஒருவர்‌ மற்றவர்‌ மீது 'பொன்‌ மழை: பெய்யும்‌ ஒருவகை பாலியல்‌ முன்விளையாட்டு. சிலர்‌ தம்‌ துணைவரின்‌ மூத்திரத்தைக்‌ குடிக்கும்‌
அளவிற்குச்‌ செல்கின்றனர்‌!

சிறுநீர்‌, மலம்‌, அசிங்கம்‌ போன்றவற்றிலிருந்து சுகம்‌ பெறுவது, நல்ல இயல்பான நிலையில்‌ உள்ள மனிதரால்‌ கற்பனைகூட செய்து பார்க்கவியலாத ஓர்‌ அபத்தமாகும்‌. அது ஒரு நோய்‌; வழிகெட்டுப்‌போன ஒரு மூடக்‌ களியாட்டம்‌. அதற்கு ஒருபோதும்‌ இஸ்லாத்தில்‌ அனுமதியில்லை. தூய்மையும்‌ பரிசுத்தமும்‌ (தஹாரா) இஸ்லாத்தின்‌
அடிப்படைகளாகும்‌. நபிமொழி திரட்டுகளும்‌ சட்ட (ஃபிச்ஹு) நூல்களும்‌, அசிங்கத்தைக்‌ தவிர்க்கும்‌ விதிகள்கொண்ட பக்கங்களால்‌ நிரம்பியுள்ளன. கிட்டத்தட்ட ஓவ்வொரு ஹதீஸ்‌ நூலிலும்‌ பிக்ஹு நூலிலும்‌ அலசப்படும்‌ முதல்‌ விஷயம்‌, தஹாராதான்‌. தூய்மை இறைநம்பிக்கையின்‌ பாதியாகும்‌; தொழுகையின்‌ திறவுகோலாகும்‌. இறை
நம்பிக்கையாளர்‌ தூய்மையாக இருந்து, தூய்மையை நேசித்து, அசுத்தத்தையும்‌ அசிங்கத்தையும்‌ தவிர்க்கவும்‌ வெறுக்கவும்‌ வேண்டும்‌.

எனவே, ஒருவர்‌ தம்‌ துணைவரின்‌ மீது மூத்திரம்‌ அடிப்பதை முன்‌ விளையாட்டின்‌ ஒரு பகுதியாகச்‌ செய்வதற்கு அனுமதி இல்லை. அது பாவமானது என்பதில்‌ எவ்விதச்‌ சந்தேகமுமில்லை. சிறுநீர்‌ தெறித்தலைத்‌ தவிர்க்காமல்‌ இருப்பது மண்ணறையின்‌ தண்டனைக்கு ஒரு காரணமாகும்‌.

அப்துல்லாஹ்‌ இப்னு அப்பாஸ்‌ (ரழி) அறிவிக்கிறார்‌:

ஒருமுறை அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) இரண்டு மண்ணறைகளைக்‌ கடந்து சென்றபோது, '(மண்ணறையில்‌ உள்ள) இவர்கள்‌ வேதனை செய்யப்படுவது, தவிர்க்கவேண்டிய பெரிய விஷயங்களுக்காக அல்ல” என்று கூறிவிட்டு, ஆம்‌
(பெரிய பாவங்களுக்காகத்தான்‌ வேதனை செய்யப்படுகிறார்கள்‌), ஒருவர்‌ அவதூறு பேசிக்கொண்டு திரிபவர்‌, மற்றவர்‌ சிறுநீர்த்‌ துளிகள்‌ தெறிப்பதிலிருந்து தன்னை ஒருபோதும்‌ காத்துக்கொள்ளாதவர்‌” என்று சேர்த்துச்‌ சொன்னார்கள்‌. இப்னு அப்பாஸ்‌ கூறுகிறார்‌: அடுத்து நபியவர்கள்‌ (ஸல்‌) ஒரு ஈரமான பச்சை இலையை எடுத்து இரண்டு துண்டுகளாகக்‌ கிழித்து, மண்ணறை
ஓவ்வொன்றின்‌ மீதும்‌ ஒரு துண்டை வைத்துக்‌ கூறினார்கள்‌. 'இவ்விரு துண்டுகளும்‌ உலரும்வரை அவர்களின்‌ வேதனை குறையட்டுமாக.

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்‌:

சிறுநீர்த்‌ துளிகள்‌ தெறிப்பதைத்‌ தவிர்த்துக்கொள்ளுங்கள்‌. ஏனெனில்‌, பொதுவாக மண்ணறை வேதனை அதன்‌ விளைவாகவே ஏற்படுகிறது. (சுனன்‌ அல்‌-தாரகுத்னி 1:128)

எனவே அசிங்கத்தைக்‌ தவிர்ப்பது கட்டாயக்‌ கடமையாகும்‌. மலஜலம்‌ கழித்தபின்‌ ஒருவர்‌ அசிங்கத்தை சுத்தம்செய்தல்‌ போன்ற தேவைகள்‌ மட்டுமே இதற்கு விதிவிலக்கு. மூத்திரம்‌ விஷயத்தில்‌, இது கூடுதல்‌ முக்கியத்துவம்‌ பெறுகிறது. ஏனெனில்‌, அது திட்டவட்டமான அசிங்கமும்‌ அசுத்தமும்‌ ஆகும்‌. ஒருவர்‌, பொதுவாக அங்கத்தையும்‌ குறிப்பாக மூத்திரத்தையும்‌ அப்பிக்கொள்வதைக்‌ தவிர்க்கவேண்டும்‌.


புணர்ச்சி:

தம்பதியர்‌ முன்விளையாட்டில்‌ போதிய நேரம்‌ கழித்தபின்‌ தாங்கள்‌ தயாராகிவிட்டதாக உணர்ந்தால்‌, அடுத்து அவர்கள்‌ புணர்ச்சியில்‌ ஈடுபடலாம்‌. இது தொடர்பாக, பல விதிமுறைகளும்‌ ஒழுங்குகளும்‌ உள்ளன.

தனித்திருத்தல்‌ (ப்ரைவஸி):

உடலுறவு கொள்வதை மற்றவர்கள்‌ பார்க்கலாமா?

தம்பதியர்‌ உடலுறவில்‌ ஈடுபடும்பொழுது தனித்திருத்தல்‌ மிக, மிகமுக்கியமான விஷயமாகும்‌. இது, புணர்ச்சியின்போது மட்டுமின்றி
முன்விளையாட்டின்போதும்கூட அவசியம்‌. தாங்கள்‌ குழந்தைகள்‌ உட்பட பிறரின்‌ பார்வைகளிலிருந்து விலகியிருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்‌. 

அப்துல்லாஹ்‌ இப்னு உமர்‌ (ரழி) தம்‌ மனைவியுடன்‌ உடலுறவுகொள்ள நாடும்‌ பொழுது, பால்குடிக்கும்‌ சிறிய குழந்தையைக்கூட அறையைவிட்டு வெளியேற்றிவிடுவார்‌ என இப்னு அல்ஹாஜ்‌ அல்‌-மாலிகி தம்முடைய அல்‌-மத்‌ஃகலில்‌ குறிப்பிடுகிறார்‌.
அறிஞர்கள்‌ சிலரின்‌ கூற்றில்‌, உடலுறவின்போது அந்த அறையில்‌ ஒரு பூனை இருப்பதுகூட விரும்பத்தகாததாகும்‌. (உகுல்‌ அல்‌-நஆஷரா
அல்‌-ஸவ்ஜிய்யா ப.67)

இந்த விஷயத்தில்‌, தவறுதலாகக்கூட எவரும்‌ தம்பதியர்‌ கூடும்‌ அறைக்குள்‌ நுழையாமல்‌ இருப்பதற்குக்‌ கதவுகளை அடைத்துத்‌
தாழிட்டுக்‌ கொள்ளவேண்டும்‌. தப்பித்‌ தவறிக்கூட அக்கம்பக்கத்தார்‌ உள்ளே பார்த்துவிடுவதைத்‌ தவிர்க்க ஜன்னல்களை அடைத்துத்‌ திரைகளால்‌ சரிவர மறைத்தல்வேண்டும்‌. வீடு, அடுக்கு மாடிக்‌ கட்டிட வளாகத்திலோ, மக்கள்‌ நெரிசல்‌ உள்ள பகுதியிலோ அமைந்திருந்தால்‌ இதற்குக்‌ கூடுதல்‌ முக்கியத்துவம்‌ அளிக்கவேண்டும்‌. இதற்கு உரிய
முக்கியத்துவம்‌ தராத தம்பதிகள்‌, தாங்கள்‌ உடலுறவில்‌ ஈடுபடுவதைப்‌ பிறர்‌ பார்ப்பதற்கு வாய்ப்பளித்ததாக ஆகிவிடும்‌. இது வெட்கங்‌
கெட்ட, பாவமான, ஒருபோதும்‌ அனுமதிக்கவியலாத செயலாகும்‌.

ஒருவரின்‌ நிர்வாணக்‌ கோலத்தை - குறிப்பாக, உடலுறவு வேளையில்‌ - பிறர்‌ முன்‌ மறைப்பது ஷரீஆவின்‌ முக்கியமானதொரு கடமையாகும்‌.
காட்சியளித்தல்‌, மாற்றுப்‌ பாலரின்‌ உறுப்புகளைக்‌ கண்டு ரசித்தல்‌ ஆகியவற்றுக்கு இஸ்லாத்தில்‌ இடமில்லை என்பது தெளிவான விஷயம்‌.
சிலர்‌ தங்களின்‌ உடல்களை அல்லது உடலுறவுச்‌ செயல்களை வெளிக்‌ காட்டுவதன்‌ மூலம்‌ இன்பம்‌ பெறுகின்றனர்‌. இதுபோன்ற வழிகெட்ட
பாலியல்‌ தணிப்புப்‌ பழக்கங்களை இஸ்லாம்‌ முற்றிலும்‌ மறுத்துக்‌ கண்டிக்கிறது. எனவே, பிறர்‌ பார்க்கக்கூடிய பொது இடங்களில்‌ - தோட்டங்கள்‌, பொது பூங்காக்கள்‌, கார்கள்‌, கடற்கரைகள்‌, அடுக்கு மாடிக்‌ கட்டிடங்களின்‌ வெளிப்புறத்திலுள்ள மாடி முகப்பு அல்லது உள்முற்றங்கள்‌ - உடலுறவுகொள்வது திட்டவட்டமாக விலக்கப்‌பட்டதும்‌ பாவமானதுமாகும்‌. மேலும்‌, பல நாடுகளில்‌, பொது இடங்‌களில்‌ உடலுறவுகொள்வது சட்டத்துக்குப்‌ புறம்பானது. ஆக, அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ சட்டத்தை மீறுவது மட்டுமின்றி, தங்கள்‌ நாட்டின்‌ சட்டத்கையும்‌ மீறி, இழிவுக்கு ஆளாகின்றனர்‌; மேலும்‌, ஒழுக்க
நாகரிகமற்ற செயலுக்காகக்‌ கைது நடவடிக்கைக்கும்‌ ஆளாகலாம்‌.

உடலுறவில்‌ ஏற்படும்‌ ஓசைகளை மற்றவர்கள்‌ கேட்கலாமா?

தம்பதியர்‌, தங்கள்‌ உடலுறவுச்‌ செயல்பாட்டைப்‌ பிறர்‌ காதில்‌ விழாத வண்ணம்‌ மறைப்பதில்‌ கவனமாக இருக்கவேண்டும்‌. உடலுறவின்போது பிறர்‌ செவியுறும்‌ அளவுக்கு சப்தம்‌ போடுவதை கணவன்‌, மனைவி இருவரும்‌ தவிர்க்கவேண்டும்‌. தம்பதியர்‌
அளவுக்கதிகமாகப்‌ பேசுவதிலிருந்தும்‌ அதிக சப்தம்‌ போடுவதிலிருந்தும்‌ தவிர்ந்திருப்பது உடலுறவு ஒழுங்கின்‌ ஒரு பகுதியாகும்‌. அதுவும்‌, அடுத்த அறையில்‌ பெற்றோர்கள்‌ போன்ற பிறர்‌ இருக்கும்‌ நிலையில்‌ இது மென்மேலும்‌ முக்கியத்துவம்‌ பெறுகிறது. சில தம்பதியர்‌, தங்கள்‌
உடலுறவைத்‌ தங்கள்‌ குடும்பத்தினரோ அக்கம்‌ பக்கத்தினரோ செவியுறுவது பற்றிக்‌ கவலைப்படுவதில்லை. இது பாவச்செயல்‌ மட்டுமின்றி, அவர்களின்‌ கண்ணியக்குறைவான நடத்தையையும்‌ காட்டுகிறது. உடலுறவின்போது முயன்றும்‌ சப்தத்தைக்‌ கட்டுப்படுத்தவியலாத
தம்பதியர்‌, பிறர்‌ அருகில்‌ இருக்கும்போது உடலுறவில்‌ ஈடுபடுவதைத்‌ தவிர்ப்பது அவசியம்‌. பிறர்‌ செவியுறாத இடத்திற்குச்‌ சென்று அதில்‌ ஈடுபடுவதற்கான வழிதேடிக்கொள்ள வேண்டும்‌. பார்வையற்ற ஒருவர்‌
இருக்கும்‌ இடத்தில்‌ உடலுறவு கொள்வதுகூட விலக்கப்பட்டது; ஏனெனில்‌, அதை அவரால்‌ கேட்க முடியும்‌ எனச்‌ சட்டவியலாளர்கள்‌
கூறுகின்றனர்‌. (காண்க: ரத்‌ அல்‌-முஹ்தார்‌ 8:208 மற்றும்‌ அல்‌- முக்னி 8:145)


ஒரே சமயத்தில்‌ இரு மனைவிகளிடம்‌ உடலுறவு கொள்ளுதல்‌:

இரு மனைவி உடைய ஓர்‌ ஆண்‌, அவர்கள்‌ இருவருடனும்‌ ஒரே நேரத்தில்‌ - அதாவது, முத்தரப்பாக(த்ரீஸம்) - உடலுறவுகொள்வது அல்லது ஒரு மனைவியின்‌ முன்னிலையில்‌ மற்றவளுடன்‌ உடலுறவுகொள்வது விலக்கப்பட்டது. இச்செயலுக்கு அவர்களிருவரும்‌ ஒப்புதல்‌ அளித்தாலும்‌ கூட அனுமதியில்லை. இதற்கு இரண்டு காரணங்கள்‌ உள்ளன;

முதலாவதாக, ஒரு பெண்‌ இன்னொருத்தியின்‌ மறைவிடங்களைப்‌ (அவ்ரா) பார்ப்பதற்கு அனுமதியில்லை. அது அவளுடைய சகக்‌
கிழத்தியாய்‌ இருப்பினும்‌ சரி. பிற முஸ்லிம்‌ பெண்களின்‌ முன்னிலையில்‌ ஒரு முஸ்லிம்‌ பெண்‌ தன்னுடைய அவ்ராவை- அதாவது தொப்புள்‌ முதல்‌ முழங்கால்‌ வரையுள்ள பகுதிகளை - மறைத்தாகவேண்டும்‌. (அல்‌-ஹிதாயா 4:461) மேலே குறிப்பிட்ட ஹதீஸில்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறினார்கள்‌: '...ஒரு பெண்‌ இன்னொரு பெண்ணின்‌ மறைவான பகுதியைப்‌ (அவ்ரா) பார்க்கக்கூடாது. ' (சுனன்‌ அல்‌-திர்மிதி 2793) இதில்‌, சகக்கிழத்திக்கும்‌ வேறொரு பெண்ணுக்கும்‌ இடையில்‌ நபியவர்கள்‌ (ஸல்‌) வேறுபாடு காட்டவில்லை.

இரண்டாவதாக, உடலுறவில்‌ ஈடுபடும்‌ இருவருக்குள்‌ அது இரகசியமாக வைக்கப்படவேண்டும்‌. கணவன்‌, மனைவி தங்கள்‌ உடலுறவுச்‌ செயல்பாட்டின்‌ விவரங்களைப்‌ பிறருடன்‌ கலந்துரையாடுவதை
இஸ்லாம்‌ தடுத்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே நாம்‌ மேற்கோளிட்ட ஹதீஸில்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) இவ்வாறு கூறுகிறார்கள்‌: 'தீர்ப்பு நாளன்று அல்லாஹ்வின்‌ பார்வையில்‌ மனிதர்‌களிலேயே மிகக்‌ கொடியவர்‌ யாரெனில்‌, அந்த மனிதர்‌ தம்‌ மனைவியுடன்‌ உடலுறவுகொண்டு அவளும்‌ அவருடன்‌ உடலுறவு கொண்டு விட்ட பின்‌ அவளின்‌ இரகசியத்தை வெளிப்படுத்துபவர்‌. ' (சஹிஹ்‌
முஸ்லிம்‌ 1487) ஒருவர்‌ தம்‌ உடலுறவுச்‌ செயல்பாட்டின்‌ விவரங்களை வெளிப்படுத்துவதைவிட, இன்னொருவர்‌ இருக்கும்‌ நிலையில்‌ உடலுறவு கொள்வது நேரடியானதொரு விஷயம்‌ என்பதால்‌, அந்தச்‌
செயல்‌ விலக்கப்பட்டதும்‌ பாவமானதுமாகும்‌.

இமாம்‌ இப்னு குதாமா தம்முடைய அல்‌-முக்னியில்‌ கூறுகிறார்‌: 'இரு மனைவிகளுள்‌ ஒருத்தி
தன்‌ கணவனுடன்‌ உடலுறவுகொள்ள, மற்றவள்‌ அதைப்‌ பார்த்து இரசிப்பது என இருவரும்‌ உடன்பாடு செய்துகொண்டாலும்கூட அதற்கு அனுமதியில்லை. ஏனெனில்‌, அது ஒழுக்கங்கெட்ட, மடத்தனமான, மரியாதை உணர்வையே (முரூஆ) நீக்கிவிடக்கூடிய ஒரு செயல்‌, எனவே, அவர்கள்‌ இசைவு தெரிவித்தாலும்கூட இதற்கு அனுமதியில்லை.' (அல்‌-முக்னி 8:137. மேலும்‌ பார்க்க: முக்னி அல்‌-முஹ்தாஜ்‌ 3:234 மற்றும்‌ ஷரஹ்‌ அல்‌-குர்ஷீ அலா மூஃக்தஸர்‌
அல்‌-ஃகலீல்‌ 4:6)


குழந்தைகளின்முன்‌ உடலுறவு கொள்ளுதல்:

‌சிறு குழந்தைகளின்‌ முன்னிலையில்‌ உடலுறவுகொள்ளும்‌ விஷயத்தில்‌, குழந்தை விவரம்‌ அறியும்‌ பருவம்‌ (தம்யீஸ்‌) எய்தி, தன்‌ முன்னிலையில்‌
நடப்பதை விளங்கிக்கொள்ளும்‌ திறன்‌ பெற்றுவிட்டால்‌ - அந்தத்‌ திறன்‌ ஓரளவு இருந்தாலும்கூட. - அதன்‌ முன்னிலையில்‌ தம்பதியர்‌ உடலுறவுகொள்வது தடுக்கப்பட்ட விதத்தில்‌ விரும்பத்தகாததும்‌ பாவமும்‌ ஆகும்‌. (ரத்‌ அல்‌-முஃக்தார்‌ 4:208)

முஸ்லிம்‌ தம்பதிகள்‌ சிலர்‌ இதில்‌ மிகவும்‌ கவனக்குறைவாக இருக்கின்றனர்‌. தங்கள்‌ பாலியல்‌ செயல்களைத்‌ தங்களின்‌ சிறு குழந்தைகள்‌ மற்றும்‌ பிற குடும்ப உறுப்பினர்களின்‌ முன்னிலையில்‌
வெளிப்படையாகக்‌ காட்டுகின்றனர்‌. பொதுவிடத்தில்‌ நெருக்கத்தை வெளிப்படுத்தும்‌ விஷயம்‌ குறித்து இஸ்லாம்‌ தெளிவாகக்‌ கருத்துரைத்‌துள்ளது. குழந்தைகள்‌ உள்ளிட்ட பிறர்‌ முன்னிலையில்‌ முத்தமிடுதல்‌, கட்டித்தழுவுதல்‌, தடவிக்‌ கொடுத்தல்‌ ஆகியவற்றை அது தடை செய்கிறது.

அல்லாஹ்‌ கூறுகிறான்‌:

இறைநம்பிக்கை கொண்டவர்களே, உங்களுக்குச்‌ சொந்தமான அடிமைகளும்‌ உங்களுள்‌ பருவம்‌ அடைந்திராதவர்களும்‌ (குழந்தைகள்‌) மூன்று சந்தர்ப்பங்‌களில்‌ (உங்கள்‌ முன்னிலையில்‌ வருவதற்குமுன்‌) அனுமதி பெறவேண்டும்‌:
ஃபஜ்ர்‌ தொழுகைக்கு முன்‌, நண்பகலில்‌ நீங்கள்‌ உங்கள்‌ ஆடைகளைக்‌ கழற்றும்போது மற்றும்‌ இஷா தொழுகைக்குப்‌ பின்‌; இவையே உங்களின்‌ மூன்று தனித்திருக்கும்‌ நேரங்களாகும்‌. (குர்‌ஆன்‌ 24:58) 

அதே அத்தியாயம்‌ (சூரா) வசனம்‌ 27இல்‌, ஒருவர்‌ இன்னொருவரின்‌ வீட்டிற்குள்‌ அனுமதியின்றி நுழையக்கூடாது எனும்‌ வரம்பை அல்லாஹ்‌ விதித்திருக்கிறான்‌. எனினும்‌, அதே வீட்டில்‌ வசிக்கும்‌ குழந்தைகள்‌ மற்றும்‌ அடிமைகளுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு உண்டு என்பதால்‌, அவர்கள்‌ குறிப்பான அனுமதியின்றி வீடுகளுக்குள்‌ நுழையலாம்‌. இருப்பினும்‌, இவர்களும் கூட மூன்று தனிமை வேளைகளில்‌ அனுமதி கோரவேண்டும்‌. இமாம்‌ இப்னு கஸீர்‌ கூறுகிறார்‌: 'தனிமை நேரங்‌களில்‌ பணியாட்களும்‌ குழந்தைகளும்‌ வீட்டின்‌ பெரியவர்கள்‌ உள்ள இடத்தில்‌ நுழையவேண்டாம்‌ என கட்டளையிடப்பட்டுள்ளது. ஏனெனில்‌, (இந்நேரங்களில்‌) அவர்‌ தம்‌ மனைவியுடன்‌ உடலுறவிலோ பிற பாலுறவு நெருக்கச்‌ செயல்களிலோ ஈடுபட்டிருக்கலாம்‌ என அஞ்சப்படுகிறது. ' (த.ஃப்சீர்‌ அல்‌-குர்‌ஆன்‌ அல்‌-அழிம்‌ 3:404)

அறைக்குள்‌ நுழையும்முன்‌, குழந்தைகள்‌ அனுமதி கோருமாறு இஸ்லாமியச்‌ சட்டவியல்‌ (ஷீரிஆ) பணிக்கிறது என்பது இங்கு கவனிக்கத்‌தக்கது. ஏனெனில்‌, தம்பதியருக்கு இடையில்‌ நிகழும்‌ எதையாவது அவர்கள்‌ கண்டுவிடக்‌ கூடும்‌. ஆக, இவ்வாறு கட்டுப்பாடு இருக்கும்‌ நிலையில்‌, பிறர்‌ முன்னிலையில்‌ பாலுறவுச்‌ செயல்களைத்‌ தெரிந்தே வெளிப்படையாகச்‌ செய்தல்‌ எவ்வளவு அவமரியாதையானது?

அப்துல்லாஹ்‌ இப்னு உமரிடமிருந்து நாஃபி அறிவிக்கிறார்‌:
அவருடைய (இப்னு உமர்‌) குழந்தை விவரம்‌ அறியும்‌ பருவத்தை எய்தியதும்‌ அவனை (தன்‌ அறையிலிருந்து) அகற்றி விடுவார்‌. அதன்‌ பிறகு, தன்‌ அனுமதியின்றி அவன்‌ (குழந்தை) உள்ளே நுழைய முடியாது.” (இமாம்‌ புஹாரியின்‌ அல்‌-அதப்‌ அல்‌-முஃப்ரத்‌ 1058)

மூஸா இப்னு தல்ஹா கூறுகிறார்‌: நான்‌ என்‌ தந்தையுடன்‌ என்‌ தாயின்‌ அறைக்குள்‌ நுழைய முயன்றேன்‌. அவர்‌ உள்ளே சென்றார்‌. நானும்‌ அவரைப்‌ பின்தொடர்ந்தேன்‌. அப்போது அவர்‌ திரும்பி தன்‌
நெஞ்சால்‌ என்னைத்‌ தள்ளினார்‌. நான்‌ பின்புறமாகக்‌ கழே விழுந்தேன்‌. “அனுமதியின்றி உள்ளே நுழைகிறாயா?'” என அவர்‌ கூறினார்‌.”
(அல்‌-அதப்‌ அல்‌-மு.ஃப்ரத்‌ 1061)

பாலியல்‌ செயல்களைத்‌ தங்கள்‌ குழந்தைகள் முன்‌ வெளிக்காட்டும்‌ முஸ்லிம்‌ பெற்றோர்கள்‌ ஒரு மோசமான தவறைச்‌ செய்கின்றனர்‌ என்பதை உணரவேண்டும்‌. இவர்கள்‌ வெறும்‌ சிறு குமந்தைகள்தாமே; இவர்களுக்கு இதுபோன்ற விஷயங்களைப்‌ புரிந்துகொள்ளும்‌ திறன்‌
இல்லையே என அவர்கள்‌ எண்ணுவது தவறு. உண்மையில்‌, இச்செயல்பாடு குழந்தைகளின்‌ வளர்ப்பில்‌ மிகுந்த தீய பாதிப்பை
ஏற்படுத்தக்கூடியது. குழந்தைகள்‌ எல்லா விஷயத்திலும்‌ தங்கள்‌ பெற்றோர்களைப்‌ போலவே நடக்கும்‌ இயல்புடன்‌ படைக்கப்‌ பட்டுள்ளனர்‌. எனவே, அவர்கள்‌ தங்கள்‌ பெற்றோர்களைப்‌ பின்பற்ற முனைந்து - அது விளையாட்டுக்காக இருந்தாலும்கூட - பிற குழந்தைகளுடன்‌ இதைச்‌ செய்யக்கூடும்‌. இதன்‌ அழிவுப்பூர்வமான விளைவு இன்று தெளிவாக உள்ளது.

மேலும்‌, இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாகச்‌ செய்வது நாணத்துக்கும்‌ ஓழுக்க நாகரிகத்துக்கும்‌ புறம்பானது. இஸ்லாம்‌, தன்‌ வழி
நடப்பவர்களுக்குக்‌ கண்ணியத்தைப்‌ போதிக்கிறது; ஒழுக்கக்கேடான சூழலுக்கு வழிவகுக்கும்‌ எந்தவொரு செயலிலும்‌ அவர்கள்‌ ஈடுபடுவதைத்‌ தடுக்கிறது.

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) வெட்கம்‌, நாணம்‌ ஆகிய பண்புகளுக்கு நடைமுறை முன்மாதிரியாக விளங்கினார்கள்‌. 
அபூ சயீத்‌ அல்‌-குத்ரி (ரழி) அறிவிக்கிறார்‌:

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌), திரைமறைவிற்குப்‌ பின்னுள்ள (அல்லது, தன்‌ தனி அறையில்‌ உள்ள) ஒரு கன்னிப்பெண்ணைக்‌ காட்டிலும்‌ அதிக நாணம்‌ கொண்டவர்கள்‌. அவர்கள்‌ ஓரு விஷயத்தை விரும்பாவிட்டால்‌, அதை அவருடைய முகத்திலிருந்தே நாங்கள்‌ அறிந்துகொள்வோம்‌.
(சஹீஹ்‌ முஸ்விம்‌ 2480)

எனவே, தம்பதியர்‌ சிறு குழந்தைகளின்‌ முன்னிலையில்‌ புணர்வது அல்லது முத்தமிடுதல்‌, கட்டியணைத்தல்‌, தடவுதல்‌, பிடித்து விளையாடுதல்‌ போன்ற பாலுறவுச்‌ செயல்களில்‌ ஈடுபடுவதைத்‌ தவிர்த்தல்‌ வேண்டும்‌. இன்னும்‌, குழந்தை விவரம்‌ அறியும்‌ பருவத்தை எட்டி விட்டால்‌, இவை பாவமான செயல்களாகும்‌.

பச்சைக்குழந்தை தூங்கும்‌ அறையில்‌ உடலுறவுகொள்வதைப்‌ பொறுத்தவரை, இதுவும்‌ இயன்றளவு தவிர்க்கப்படவேண்டும்‌. ஏற்கனவே நாம்‌ நம்‌ முன்னோர்களை (சலப்‌) பற்றி கூறினோம்‌. அதாவது அவர்கள்‌; பாலூட்டும்‌ வயதில்‌ - இரண்டுக்கும்‌ குறைவான வயதில்‌ - உள்ள குழந்தையோ விலங்கோ இருக்கும்‌ அறையில்கூட உடலுறவு கொள்வதைத்‌ தவிர்ப்பார்கள்‌. இவ்வாறிருக்க, அது போன்ற குழந்தைகளின்‌ முன்னிலையில்‌ உடலுறவுகொள்வது சற்று விரும்பத்தகாதது. எனினும்‌, அது விலக்கப்பட்டது (ஹராம்‌) எனக்‌ கூறிவிடமுடியாது.


தம்பதியினர்‌ தம்‌ உடலுறவுச்‌ செயல்பாட்டைப்‌ படமெடுத்தல்‌:

தம்பதியர்‌ ஒருவரையொருவர்‌ உடலுறவுக்‌ கோலத்தில்‌ படம்‌ பிடித்து அல்லது உடலுறவுகொள்வதைத்‌ தாங்களே ஒளிப்பதிவு செய்து, பின்னர்‌ அந்தப்‌ புகைப்படத்தையோ ஒளிக்காட்சியையோ பார்த்து
ரசிப்பது கூடுமா என்று கேட்கப்பட்டது.

புகைப்படம்‌ குறித்ர சட்டத்தீர்ப்பு விஷயத்தில்‌ சமகால இஸ்லாமிய அறிஞர்களிடையே நிலவும்‌ கருத்து வேறுபாடு எதுவாயினும்‌ புகைப்‌படம்‌ எடுப்பது, உயிருள்ள ஜீவராசிகள்‌ மற்றும்‌ மனிதர்களைச்‌ சித்திரம்‌ இட்டுதல்‌ (தஸ்வீர்‌) என்னும்‌ தலைப்புக்குக்கீழ்‌ வரும்‌ என்பது அறிஞர்கள்‌ பலரின்‌ நிலைப்பாடு. இது இருபதுக்கும்‌ மேற்பட்ட மிக மிக நம்பகமான ஹதீஸ்களில்‌ தெளிவாகத்‌ தடைசெய்யப்பட்டுள்ளது. புகைப்படம்‌ பற்றிய இஸ்லாமிய அறிஞர்களின்‌ கருத்துவேறுபாடு ஒருபுறமிருக்க, ஒருவர்‌ தம்‌ துணையாளை நிர்வாணக்‌ கோலத்தில்‌ படம்பிடித்து
அல்லது தங்கள்‌ உடலுறவை ஒளிப்பதிவுசெய்து, அதைக்‌ கண்டு ரசிப்பதை எவ்விதத்திலும்‌ அனுமதிக்கப்பட்ட ஒன்றாகக்‌ கருதமுடியாது.

இதற்கான காரணம்‌ தெளிவாக உள்ளது. இதுபோன்ற ஆபாசப்‌ படங்களைப்‌ பிடிப்பது மூலம்‌, ஒரு தம்பதியர்‌ தங்கள்‌ நிர்வாணக்‌ கோலத்தைப்‌ பிறர்‌ காண்பதற்கான வாய்ப்பு அளிக்கும்‌ சாத்தியம்‌ உள்ளது. ஆகவே, இதற்கு அனுமதியில்லை. பாலியல்‌ படங்களை
இடம்மாற்றி வைப்பதற்கோ தொலைத்துவிடுவது மூலம்‌ அந்நியரின்‌ கைகளுக்குச்‌ சென்றுவிடுவதற்கோ சாத்தியம்‌ உண்டு. இந்தப்‌ படங்‌களோ ஒளிப்பதிவுகளோ தம்பதியருடைய குழந்தைகளின்‌ கைகளுக்கு எப்படியோ சென்றுவிட்டால்‌ என்ன நடக்கும்‌ என்பதை யோசித்துப்‌ பாருங்கள்‌!

இந்தப்‌ படங்களைப்‌ பாதுகாத்து, ஒளித்து மறைத்து வைத்தாலும்‌ கூட, அனைத்து முன்னெச்சரிக்கைகளையும்‌ மீறி எவராவது பார்த்து
விடக்கூடும்‌ சாத்தியம்‌ இருக்கவே செய்கிறது. வழக்கத்திற்கு மாறான ஒரு நிகழ்வு மூலம்‌ மூன்றாவது ஆளின்‌ கைகளுக்கு இந்தப்‌ படங்கள்‌ செல்லக்கூடும்‌. ஒரு தீங்கு அசலில்‌ நிகழுமுன்‌ அதைத்‌ தடுப்பது,
இஸ்லாமியச்‌ சட்டவியலின்‌ நன்கு நிறுவப்பட்டதொரு கோட்பாடாகும்‌.

மேலும்‌ இந்தச்‌ செயல்கள்‌, இஸ்லாம்‌ கட்டளையிடும்‌ நாணத்திற்கு முரணாக உள்ளன. தம்பதியர்‌ ஒருவரையொருவர்‌ நிர்வாணக்‌ கோலத்தில்‌ பார்க்கலாம்‌ என்பது உடலுறவின்போது அதற்கான
தேவை இருப்பதாலேயே அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்பொழுதும்‌ கூட, அதைத்‌ தவிர்ப்பது மேன்மையானது.

முடிவாக, தம்பதியர்‌ தங்களின்‌ நிர்வாணப்‌ படங்களை எடுத்து வைத்துக்‌ கொண்டு, பின்னர்‌ அவற்றைக்‌ கண்டு ரசிப்பதற்கு இஸ்லாமியச்‌ சட்டத்தில்‌
அனுமதி இல்லை. அத்துடன்‌, புகைப்படத்திற்கு அனுமதியில்லை என்று கூறும்‌ அறிஞர்களின்‌ கருத்தை அலட்சியப்படுத்துவதாகவும்‌ உள்ளது.


புணரும்‌ நிலைகள்‌ (உடலுறவு நிலைகள்‌):

உடலுறவுக்கான பொருத்தமான நிலையைத்‌ (பொஷிஷன்) தெரிந்தெடுக்கும்‌ விஷயத்தில்‌, தம்பதியர்‌ ஒருவருக்கொருவர்‌ உடன்படும்‌ எந்தவொரு நிலையையும்‌ தெரிந்தெடுக்க இஸ்லாம்‌ பொதுவான அனுமதி வழங்குகிறது. எனினும்‌, அது ஆசனவாயில்‌ அல்லாது, பெண்குறியில்‌ இருக்க வேண்டும்‌. ஆசனவாய்ப்‌ புணர்ச்சி திட்டவட்டமாகத்‌ தடை செய்யப்‌பட்டுள்ளது. இதைப்‌ பின்னர்‌ விரிவாகப்‌ பார்ப்போம்‌. ஒரு தம்பதியினருக்கு குறிப்பிட்ட உடலுறவு முறை கூடுதல்‌ வசதியாகவும்‌ சுகமாகவும்‌ இருக்கலாம்‌. இன்னொரு தம்பதியினருக்கு முற்றிலும்‌ வேறுவிதமான நிலை இன்ப உணர்வு அளிக்கலாம்‌. எனவே, அவர்‌களுக்குரிய மிகப்‌ பொருத்தமான வழியை அவர்களே தேர்ந்தெடுத்துக்‌ கொள்ளலாம்‌. உடல்‌ வசதி, திருப்தி, இன்பக்களிப்பு ஆகியவற்றைக்‌
கருதி இதை அமைத்துக்‌ கொள்ளலாம்‌.

அல்லாஹ்‌ கூறுகிறான்‌:
உங்கள்‌ மனைவிகள்‌ உங்களுக்கான விளைநிலங்களாவர்‌. எனவே, நீங்கள்‌ விரும்பிய புறங்களிலிருந்து உங்கள்‌ விளைநிலங்களை அணுகுங்கள்‌. எனினும்‌, முன்னதாக உங்களுக்கென சில நற்செயல்களை செய்துகொள்ளுங்கள்‌; மற்றும்‌, அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்‌. (குர்‌ஆன்‌ 2:224)

இந்த வசனத்தில்‌ அல்லாஹ்‌ ‘ஹா்ஸ்’‌ எனும்‌ சொல்லைப்‌ பயன்படுத்தியுள்ளான்‌. அதற்கு விளைநிலம்‌ எனப்‌ பொருள்‌. பெண்ணிற்கும்‌ விளை
நிலத்திற்கும்‌ இடையில்‌ உள்ள ஒப்புமையிலிருந்து, ஓருவர்‌ தம்‌ மனைவியின்‌ பெண்குறி வாயிலாகவே அவளுடன்‌ உடலுறவு கொள்ளலாம்‌ எனப்‌ புலப்படுகிறது. எனெனில்‌, இதன்‌ மூலமே வித்துக்களை விளைக்க இயலும்‌ மற்றும்‌ அவள்‌ கர்ப்பம் தரிக்க இயலும்‌. எனினும்‌, அந்த இடத்தை
அணுகுவதற்கு எந்த நிலை அல்லது பக்கத்தை வேண்டுமானாலும்‌ - முன்னால்‌, பின்னால்‌, அல்லது அவள்‌ முகம்‌ குப்புற மண்டியிட்ட நிலையில்‌ - அமைத்துக்கொள்ளலாம்‌. (அல்‌-மின்ஹாஜ்‌ ஷரஹ்‌ சஹீஹ்‌ முஸ்லிம்‌ ப.1084).

மேலும்‌, இந்த வசனத்தை விளக்குகின்ற, அது இறக்கி அருளப்‌பட்ட சந்தர்ப்ப சூழ்நிலையை (சபப்‌ அல்‌-நுஸூல்‌) குறிப்பிடும்‌ பல அறிவிப்புகள்‌ நபிமொழித்‌ தொகுப்புகளில்‌ உள்ளன. அவற்றில்‌ சில
இங்கு தரப்பட்டுள்ளன:

ஜாபிர்‌ இப்னு அப்தில்லாஹ்‌ (ரஹி) அறிவிக்கிறார்‌:

'ஒருவர் தம்‌ மனைவியைப்‌ பின்னாலிருந்து (ஆனால்‌) அவளின்‌ பெண்குறியை அணுகுவாரெனில்‌, (அவள்‌ கர்ப்பம் தரிக்கும்‌) குழந்தை மாறுகண்‌ உடையதாகப்‌ பிறக்கும்‌' என யூதர்கள்‌ கூறிவந்தனர்‌. எனவே, இந்த வசனம்‌ இறங்கியது:
"உங்கள்‌ மனைவிகள்‌ உங்களுக்கான விளைநிலங்களாவர்‌. எனவே, நீங்கள்‌
விரும்பிய புறங்களிலிருந்து உங்கள்‌ விளைநிலங்களை அணுகுங்கள்‌. ' (சஹீஹ் ‌
அல்‌-புகாரி 4254, சஹீஹ்‌ முஸ்லிம்‌ 1435 சுனன்‌ அல்‌-திர்மிதி 2978, இங்கு முஸ்லிமின்‌ சொற்களே இடம்பெற்றுள்ளன)

அப்துல்லாஹ்‌ இப்னு அப்பாஸ்‌ (ரழி) அறிவிக்கிறார்‌:

உமர்‌ (ரழி) அல்லாஹ்வின்‌ தூதரிடம்‌ வந்து, அல்லாஹ்வின்‌ தூதரே! நான்‌ அழிந்துவிட்டேன்‌' என்றார்‌. 'என்ன விஷயம்‌ உம்மை அழித்துவிட்டது?” என நபியவர்கள்‌ (ஸல்‌) வினவினார்கள்‌. நேற்றிரவு நான்‌ என்னுடைய சேணத்தை மாற்றிவிட்டேன்‌ (தன்‌ மனைவியுடன்‌ பின்புறமிருந்து, ஆனால்‌ பெண்குறியில்‌
புணர்ச்சிகொள்வதைக்‌ குறிக்கும்‌ சொற்வழக்கு).” இதற்கு அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) எதுவும்‌ கூறவில்லை. பின்னார்‌ இந்த வசனம்‌ அல்லாஹ்வின்‌
தூதருக்கு இறங்கியது: 'உங்கள்‌ பெண்கள்‌ உங்களுக்கான விளைநிலங்கள்‌.
எனவே, நீங்கள்‌ விரும்பிய புறங்களிலிருந்து உங்கள்‌ விளைநிலங்‌களை அணுகுங்கள்‌.” எனவே, நபியவர்கள்‌ (ஸல்‌) கூறினார்கள்‌: அவளை முன்னாலோ பின்னாலோ அணுகிக்கொள்ளுங்கள்‌. ஆனால்‌, ஆசனவாயையும்‌ மாதவிடாயையும்‌ (காலத்தை) தவிர்த்துவிடுங்கள்‌.” (சுனன்‌ அல்‌-திர்மிதி
2980 மற்றும்‌ நஸயீ தன்‌ இஷ்ரத்‌ அல் நிஸாவில்‌ 94)

அப்துல்லாஹ்‌ இப்னு அப்பாஸ்‌ (ரழி) அறிவிக்கிறார்:

(இஸ்லாம்‌ வருகைக்குமுன்‌) சிலைவணங்‌கிளாய்‌ இருந்த இந்த அன்சாரி கோத்திரம்‌, வேதக்கார மக்களான யூதர்களோடு கூடி வசித்தனர்‌. அவர்கள்‌
(அன்சாரிகள்‌) கல்வியறிவு விஷயத்தில்‌, தங்களைவிட அவர்கள்‌ (யூதர்கள்‌) மேன்மையானவர்கள்‌ என்பதை ஏற்றிருந்தனர்‌. என்வே, அவர்களின்‌ அநேகச்‌
செயல்களைப்‌ பின்பற்றிவந்தனர்‌. வேதக்கார மக்கள்‌ (இங்கு யூதர்கள்‌) தங்கள்‌ பெண்களை ஓரேயோரு பக்கத்தில்‌ மட்டும்‌ அணுகுவார்கள்‌ (அதாவது, அவள்‌
மல்லாந்து படுத்திருக்கும்‌ நிலையில்‌). ஏனெனில்‌, இதுவே பெண்ணுக்கு மிக மறைவான நிலையாக இருந்தது. ஆக, அந்த அன்சாரிக்‌ கோத்திரமும்‌
அவர்களிடமிருந்து (யூதர்கள்‌) இதையே பின்பற்றினர்‌. (எனினும்‌), குறைஷி குலத்தாரோ, தங்கள்‌ பெண்களின்‌ மறைப்பை முழுவதுமாக அகற்றிவிட்டு,
அவர்களுடன்‌ முன்னாலும்‌ பின்னாலும்‌ அவர்கள்‌ மல்லாந்து படுத்திருக்கும்‌ நிலையிலும்‌ சுகம்‌ தேடுவார்கள்‌. முஹாஜிரீன்‌ (புலம்பெயர்ந்தவர்கள்‌) மதீனா வந்தபோது, அவர்களுள்‌ ஒருவர்‌ ஓர்‌ அன்சாரிப்‌ பெண்ணைத்‌ திருமணம்‌ செய்தார்‌. அவளுடன்‌ அதே விதமான காரியங்களை (அதாவது, குறைஷிகளின்‌ வழக்கத்திற்கு ஏற்ப) செய்ய விரும்பினார்‌. ஆனால்‌, அவள்‌ அதற்கு இணங்க மறுத்து இவ்வாறு கூறிவிட்டாள்‌: “எங்களை ஒரு பக்கத்திலிருந்து
மட்டும்தான்‌ அணுகுவார்கள்‌ (அதாவது, நாங்கள்‌ மல்லாந்து படுத்திருக்கும்‌ நிலையில்‌). எனவே, அதே விதமாகச்‌ செய்யுங்கள்‌. இல்லாவிட்டால்‌,
என்னிடமிருந்து விலகிக்கொள்ளுங்கள்‌. ” அவர்களின்‌ இந்த விவகாரம்‌ பற்றி செய்தி பரவி, அல்லாஹ்வின்‌ தூதரை எட்டியது. எனவே, அல்லாஹ்‌ இவ்வாறு இறக்கிவைத்தான்‌: “உங்கள்‌ மனைவிகள்‌ உங்களுக்கான விளைநிலங்களாவர்‌. எனவே. நீங்கள்‌ விரும்பிய புறங்களிலிருந்து உங்கள்‌ விளைநிலங்களை அணுகுங்கள்‌.” அதாவது முன்னால்‌, பின்னால்‌ அல்லது அவள்‌ மல்லாந்து படுத்திருக்கும்‌ நிலையில்‌. எனினும்‌, இந்த வசனம்‌
குழந்தை பிறக்கும்‌ உறுப்பை (பெண்குறியை) மட்டுமே குறிப்பிட்டது. (சுனன்‌ அபூ தாவூத்‌ 2157)

“உங்கள்‌ மனைவிகள்‌ உங்களுக்கான விளைநிலங்களாவர்‌. எனவே, நீங்கள்‌ விரும்பிய புறங்களிலிருந்து உங்கள்‌ விளைநிலங்களை அணுகுங்கள்‌” எனும்‌ வசனம்‌ குறித்து உம்மு சலமா (ரழி) அல்லாஹ்வின்‌தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அறிவிக்கிறார்‌: அதன்‌ பொருள்‌, ஒரேயொரு துவாரத்தில்‌ (பெண்குறி) மட்டுமே என்பதாகும்‌. (சுனன்‌ அல்‌-திர்மிதி 2979)

இந்தக்‌ குர்‌ஆனின்‌ வசனத்திலிருந்தும்‌ இதற்கு விளக்கமளிக்கும்‌ ஹதீஸ்களிலிருந்தும்‌, தம்பதியர்‌ தங்குதடையின்றி தாங்கள்‌ விரும்பும்‌ எந்த நிலையில்‌ வேண்டுமானாலும்‌ உடலுறவு கொள்ளலாம்‌ என்பது
தெளிவாகப்‌ புலப்படுகிறது. இந்த ஹதீஸ்களில்‌ மேற்கோள் காட்டப்‌பட்டுள்ள எடுத்துக்காட்டுகள்‌ வகை வேறுபாடுகளையே கூறுகின்றன; வரம்புகளை அல்ல. எனவே, வேறு எந்த நிலையைத்‌ தம்பதியர்‌ தேர்ந்தெடுத்துக்கொள்வதும்‌ சரியானதே. ஓரே நிபந்தனை: அது பெண்குறிப்‌ புணர்ச்சியாக இருக்கவேண்டும்‌; ஆசனவாயில்‌ அல்ல. பின்னது திட்டவட்டமாக விலக்கப்பட்டது.

இவ்வாறு நாம் செய்யும் போது கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்ளலாம் ஏனெனில் கிறிஸ்தவ மிஷனரிகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே உடலுறவு நிலை பெண் தன் கால்கள் இரண்டையும் விரித்து மல்லாந்து படுத்திருக்க கணவன்‌ அவள்‌ மீது தட்டையாகச்‌ சாய்ந்து புணர்வது மாத்திரமே. இதன் காரணாகவே அது மிஷனரி பொஷிஷன் என்று உலகளாவிய ரீதியில் அழைக்கப்படுகிறது. இன்றும் கூட அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு உடலுறவு பொஷிஷனும் மிஷனரியே ஆகும். எனினும் ஓர் முஸ்லிம் இவ்வாறாக மிஷனரி பொஷிஷனில் தன் மனைவியுடன் புணர தடையேதுமில்லை மாறாக அல்குர்ஆன் ஸுன்னா அதையும் அங்கீகரிக்கவே செய்கிறது. அவற்றை அடுத்து நோக்குவோம்.

குறிப்பிட்ட சில நிலைகளைப்‌ பொறுத்தவரை, உடலுறவு ஒழுங்குகள்‌ பற்றி எழுதப்பட்டுள்ள நூல்கள்‌ பின்வரும்‌ தகவல்களைக்‌ கூறுகின்றன:

அ. ஆண்‌, மேலிருந்து புணரும்‌ நிலை: 

ஆண்‌ மேல்புறம்‌ இருப்பதே, இயல்பான, மிக வழக்கமான உடலுறவு நிலையாகும்‌. இதில்‌ ஒரு வடிவம்‌, பெண்‌ மல்லாந்து படுத்து தன்‌ கால்களை விரித்துவைத்திருக்க, கணவன்‌ அவள்‌ மீது தட்டையாகச்‌ சாய்ந்து தன்‌ உடலால்‌ அவள்‌ உடலை மறைப்பது (மிஷனரி பொஷிஷன்). எனினும்‌, இந்த நிலையில்‌ கணவன்‌ தன்‌ எடை அனைத்தையும்‌ அவள்‌ மீது சாத்தி அழுத்தாமல்‌ இருப்பதில்‌ கவனமாக இருக்கவேண்டும்‌. ஏனெனில்‌, இது அவளுக்குக்‌ தொல்லையாக இருக்கலாம்‌. அவர்‌ தம்‌ எடை முழுவதையும்‌ அல்லது பகுதியைக்‌ தம்‌ முழங்கைகள்‌, கைகள்‌ அல்லது முழங்கால்‌களால்‌ தாங்கிக்கொள்ளலாம்‌.

இந்த நிலை பற்றிய மறைமுகமான சுட்டுதல்‌ குர்‌ஆனில்‌ உள்ளதாக அறிஞர்கள்‌ கூறுகின்றனர்‌. அல்லாஹ்‌ கூறுகிறான்‌:

அவனே உங்களை ஓர்‌ ஆன்மாவிலிருந்து படைத்து, அவரிலிருந்து அவரின்‌ மனைவியை உருவாக்கினான்‌, அதன்‌ மூலம்‌ அவர்‌ அவளிடம்‌ இன்பம்‌ பெற்றுக் கொள்ளலாம்‌ என்பதற்காக. ஆக, அவர் தன்னைக்கொண்டே அவளை மறைக்கும் பொழுது, அவள்‌ இலகுவான சுமையை சுமக்கிறாள்‌ மற்றும்‌ அதை தூக்கிக்கொண்டு அங்குமிங்கும்‌ செல்கிறாள்‌. அதன்பின்‌, அவளின்‌ சுமை கூடும்போது, அவர்களிருவரும்‌ தங்கள்‌ இறைவனாகிய அல்லாஹ்விடம்‌ பிரார்த்திக்கின்றனர்‌: 'நீ எங்களுக்கு பரிபக்குவமான குழந்தையைஅருளினால்‌, தாங்கள்‌ நன்றியுடையவர்களாக இருப்போம்‌.” எனினும்‌, நாம்‌
அவர்களுக்கு பரிபக்குவமான குழந்தையை அருளியபின்‌, அவர்களுக்கு அவன்‌ அருளிய விஷயத்தைப்‌ பொறுக்கதே அவர்கள்‌ அவனுக்கு இணை கற்பிக்கின்றனர்‌. நிச்சயமாக அவர்கள்‌ அவனுடன்‌ இணை கற்பிப்பவற்றை
விட அவன்‌ மிக்க உயர்ந்தவன்‌. (குர்‌ஆன்‌ 7:189-190)

இந்த வசனம்‌, ஆதம்‌, ஹவ்வா (அலை) ஆகியோரின்‌ படைப்பு குறித்து சுட்டுகிறது. மேலும்‌, இவர்களின்‌ சந்ததியினரில்‌ இணைவைப்பவர்களின்‌ மனப்பாங்கையும்‌ அது வெளிப்படுத்துகிறது. அவர்களில்‌ ஒருவர்‌ தம்‌ மனைவியை முழுவதுமாக மூடிய வண்ணம்‌ அவளுடன்‌ உடலுறவு கொண்டு அவள்‌ கருத்தரிக்கும்பொழுது, அவர்களிருவரும்‌ தங்களுக்கு ஒர்‌ ஆரோக்கியமான, பரிபக்குவமான குழந்தையை அருளுமாறு அல்லாஹ்விடம்‌ வேண்டுகின்றனர்‌. எனினும்‌. குழந்தை பிறந்தபின்‌ அவர்கள்‌ அதை, தங்களின்‌ கற்பிதக்‌ கடவுள்களின்‌ அருள்‌ எனக்‌ கூறிக்‌ கொள்கின்றனார்‌. (காண்க: த மீனிங்ஸ்‌ ஆஃப்‌ த நோபில்‌ குர்‌ஆன்‌ (ஆங்‌.) 1:315)

இந்த வசனத்தில்‌ வரும்‌, “அவர்‌ தன்னைக்கொண்டே அவளை மறைக்கும்பொழுது” எனும்‌ சொற்றொடர்‌, கணவன்‌ மனைவி மீது படுத்து தன்‌ உடலைக்கொண்டு அவளை முழுவதுமாக மறைக்கும்‌ நிலையைச்‌ சுட்டுகிறது.

இதேபோன்ற நிலையில்‌, பெண்‌ மல்லாந்து படுத்து தன்‌ கால்களை தன்‌ நெஞ்சோடு அணைக்கும்‌ அளவுக்குத்‌ தூக்கி, முழங்கால்களை உயர்த்திக்‌ கொள்கிறாள்‌. கணவன்‌ ஏறத்தாழ அமர்ந்த அல்லது குந்திய நிலையில்‌ அவளைப்‌ புணர்கிறான்‌.

இந்த நிலையைப்‌ பின்வரும்‌ நபிமொழி மறைமுகமாகச்‌ சுட்டுகிறது: அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்‌:

ஒரு மனிதர்‌ அவளின்‌ (தன்‌ மனைவியின்‌) நான்கு பாகங்களுக்கு மத்தியில்‌ அமர்ந்து அழுத்தம்‌ கொடுப்பாராயின்‌, அவர்‌ மீது குளிப்பு (குஸ்லு) கடமையாகி விடுகிறது. (சஹீஹ்‌ மூஸ்லிம்‌ 348)

இமாம்‌ நவவி கூறுகிறார்‌: அந்த “நான்கு பாகங்கள்‌ (ஷுஅப்‌ அல்‌-அர்ப)” என்பது எவற்றைக்‌ குறித்து கூறப்பட்டது என்பதில்‌ அறிஞர்கள்‌ கருத்துவேறுபடுகின்றனர்‌. சிலர்‌, அது கைகளையும்‌ கால்‌களையும்‌ குறிப்பதாகக்‌ கூறுகின்றனர்‌. வேறு சிலர்‌, அது கால்களையும்‌ தொடைகளையும்‌ குறிப்பதாகக்‌ கூறுகின்றனர்‌. இன்னும்‌ சிலர்‌, அது
கால்களையும்‌ பாலறுப்புப்‌ பகுதியின்‌ ஓரங்களையும்‌ குறிப்பகாகக்‌ கூறுகின்றனர்‌. காழி இயாழ்‌ அவர்களோ, பெண்குறியைச்‌ சுற்றியுள்ள நான்கு பகுதிகள்‌ எனும்‌ பொருளைத்‌ தேர்வு செய்துள்ளார்‌....”
(அல்‌-மின்ஹாஜ்‌ ஷரஹ்‌ சஹிஹ்‌ முஸ்லிம்‌ ப.400)

உள்ளபடியே, அந்த 'நான்கு பாகங்கள்‌: குறித்த விளக்கங்களில்‌, பெண்ணின்‌ கால்களும்‌ தொடைகளும்‌ அடங்குகின்றன. இதில்‌, மனைவி மல்லாந்து படுத்துத்‌ தன்‌ முழங்கால்களை மடக்கிவைக்கிருக்கும்‌ நிலையில்‌ கணவன்‌ ஏறத்தாழ அமர்ந்த நிலையில்‌ அவளைப்‌ புணர்‌கிறான்‌. அப்போது, அவளுடைய தொடைகளும்‌ முழங்காலுக்குக்‌ கீழுள்ள சதைகளும்‌ நான்கு பாகங்களாக அமைகின்றன. இதையே
இந்த விளக்கம்‌ சுட்டுவகாகக்‌ தெரிகிறது.

மேலும்‌ ஆண்‌ மேலே இருந்து புணரும்‌ நிலைகளில்‌ பலவிதங்கள்‌ உள்ளன. அவற்றுக்கிடையில்‌ சிறு சிறு வித்தியாசங்களே நிலவுகின்றன. ஆண்‌ மேலே இருந்து புணரும்‌ நிலையே, பெண்‌ கருத்தரிப்பதற்கு மிக ஏதுவானது என அறிஞர்களும்‌ நிபுணர்களும்‌ ஒருமித்த கருத்தைக்‌ கூறுகின்றனர்‌. இதில்‌, மிகுந்த உடலுடன்‌ உடல்‌ தொடுதலுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது; மற்றும்‌, தம்பதியர்‌ ஒருவரையொருவர்‌ ஒரே சமயத்தில்‌
முத்தமிட்டுக்‌ கட்டியணைத்துக்கொள்ள வசதியளிக்கிறது. (அல்‌-திப்‌ அல்‌-நபவி ப.182)

ஆ. பின்புறத்திலிருந்து புணரும்‌ நிலை:

இது மனைவி தன்‌ பின்புறத்தைக்‌ கணவனுக்குக்‌ காட்ட, அவர்‌ அவளைப்‌ புணரும்‌ நிலையாகும்‌. இது, முன்பு மேற்கோள்காட்டப்‌பட்ட சில ஹதீஸ்களில்‌ (நபிமொழிகளில்‌) தெளிவாக, வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒர்‌ அறிவிப்பில்‌, மனைவியைச்‌ சித்தரிப்பதற்கு ‘முஜப்பத்‌’ எனும்‌ சொல்‌ பயன்படுத்தப்படுகிறது. அதாவது, அவள்‌ சிரம்பணிந்த நிலையில்‌ கீழ்‌ நோக்கி முகம்‌ வைத்திருக்‌கிறாள்‌ என்பது இதன்‌ அடிப்படைப்‌ பொருள்‌. மனைவி தன்‌ கைகள்‌ மற்றும்‌ முழங்கால்கள்‌ மீது இருக்க, கணவன்‌ அவளுக்குப்‌ பின்னால்‌ மண்டியிட்டுக்‌ கொள்வதும்‌ சரிதான்‌. இந்த நிலைக்கு அனுமதியுள்ளது என்பதில்‌ ஐயமில்லை.

எனினும்‌, ஏற்கனவே நாம்‌ விவாதித்தபடி, பின்னாலிருந்து புணரும்‌ நிலை என்பது ஆசனவாய்‌ (குதவழி) உடலுறவு அல்ல என்பதை மனதில்‌ வைத்துக்கொள்ள வேண்டும்‌. அதாவது புறத்திலிருந்து புணரும்‌ நிலையில்‌, மனைவி தன்‌ பின்புறத்தைக்‌ கணவனுக்குக்‌ காட்ட, அவன்‌ பெண்குறியில்‌ புணர்கின்றான்‌. ஆனால்‌, ஆசனவாய்‌ உடலுறவிலோ, கணவன்‌ அவளுடைய ஆசனவாயில்‌ புணர்கின்றான்‌. பின்னது இஸ்லாத்தில்‌ முற்றிலும்‌ தடை செய்யப்பட்டுள்ளது.

இ. பக்கவாட்டிலிருந்து புணரும்‌ நிலை:

இந்த நிலையில்‌, தம்பதியர்‌ ஒருவரையொருவர்‌ நோக்கும்‌ விதமாக ஒரு பக்கம்‌ திரும்பிப்‌ படுத்துள்ளனர்‌. அல்லது, அவர்களிருவரும்‌ பக்க வாட்டில்‌ படுத்திருக்க, கணவன்‌ பின்பக்கமாக அவளின்‌ பெண்‌ குறிக்குள்‌ புணா்கின்றான்‌. இந்த நிலை பற்றியும்‌ எந்தவொரு கேள்வியும்‌ இல்லை. இதற்கு அனுமதியுண்டு, இது, கர்ப்பத்தின்‌ முதிர்ந்த காலகட்டங்களில்‌ பெண்ணின்‌ வயிற்றுக்கு இதமளிப்பதால்‌ வசதியான ஒரு நிலையாகும்‌.

ஈ. நின்றுகொண்டு புணரும்‌ நிலை:

'எனவே, நீங்கள்‌ விரும்பிய புறங்களிலிருந்து உங்கள்‌ விளைநிலங்களை அணுகுங்கள்‌” என்ற குர்‌ஆனிய வசனத்தின்‌ விளைவை விரிவுரையாளர்கள்‌ பொதுமைப்‌படுத்தி, அதில்‌ அமர்வு மற்றும்‌ நிற்கும்‌ நிலைகளையும்‌ உட்படுத்துகின்றனர்‌. எனவே, நிற்கும்‌ நிலையில்‌ குளிப்பதற்கான அனுமதிக்கு கூடுதல்‌ தகுதி உண்டு. ஏனெனில்‌, அது உடலுறவைவிட எளிதான
விஷயமே. (வேறு விதத்தில்‌ கூறுவோமானால்‌, நிற்கும்‌ நிலையில்‌ ஒருவர்‌ தம்‌ துணைவருடன்‌ உடலுறவுகொள்ள அனுமதியுள்ள போது, அந்த நிலையில்‌ (ஒன்றாகக்‌) குளிப்பதற்கு சந்தேகமின்றி அனுமதியுள்ளது).

தம்பதியர்‌ இருவரும்‌ நின்றாலும்‌ சரி அல்லது ஒருவர்‌ மட்டும்‌ நின்ற நிலையில்‌ இருந்தாலும்‌ சரி, நிற்கும்‌ நிலை உடலுறவு அனுமதிக்கப்‌பட்டதே. இருவரும்‌ ஒருவரையொருவர்‌ நோக்கும்‌ விதத்தில்‌ இருக்‌கலாம்‌. அல்லது, மனைவி தன்‌ பின்புறத்தைக்‌ கணவனுக்குக்‌ காட்ட, அவர்‌ பின்பக்கமாக அவளுடைய பெண்குறியில்‌ புணரலாம்‌.

உ. உட்கார்ந்துகொண்டு புணரும்‌ நிலை:

ஒருவர்‌ தம்‌ துணைவருடன்‌ உட்கார்ந்திருக்கும்‌ நிலையில்‌ உடலுறவு கொள்வதற்கும்‌ நிச்சயமாக அனுமதியுள்ளது. “எனவே, நீங்கள்‌ விரும்பிய புறங்களிலிருந்து உங்கள்‌ விளைநிலங்களை அணுகுங்கள்‌: எனும்‌ குர்‌ஆனிய வசனத்தின்‌ ஒளியில்‌ இது அனுமதிக்கப்பட்‌டது.

ஊ. பெண்‌, மேலேயிருந்து புணரும்‌ நிலை:

இஸ்லாமியரீதியாக, மனைவி கணவனுக்கு மேலே உள்ள உடலுறவு நிலையும்‌ அனுமதிக்கப்பட்டதே. இதற்கு ஆதாரம்‌, இந்த நூலில்‌ பல முறை மேற்கோளிடப்பட்ட அந்த குர்‌ஆனிய வசனத்தின்‌ பொதுவான நோக்குதான்‌. இதில்‌, கணவன்‌ மல்லாந்து படுத்திருக்க, அவர்‌ மேல்‌ மனைவி அமர்ந்திருப்பதும்‌ அல்லது அவர்‌ மீது தன்‌ உடல்‌ முழுவதையும்‌ கொண்டு படுத்திருப்பதும்‌ அடங்கும்‌.

சில கணவன்மார் தான் மல்லாந்து படுத்திருக்க மனைவி தன்மேல் ஏறிப் புணர அனுமதிப்பதையும், சில புது மாப்பிள்ளைமார் முதலிரவு அன்றைக்கு உடலுறவில் ஈடுபடாமலிருப்பதையும் தமது ஆண்மைக்கு இழுக்காக நினைக்கின்றனர். இதெல்லாம் தங்கள் மனோ இச்சை அடிப்படையில் ஏற்படுத்திக் கொண்டதே தவிர மார்க்கம் இவற்றை கூறவில்லை.

இறுதியாக, தம்பதியர்‌ ஒரு உடலுறவு சந்திப்பின்போதே - பலமுறை கூட - தங்கள்‌ நிலைகளை மாற்றிக்கொள்வதில்‌ தவறேதுமில்லை. மேலும்‌, உடலுறவு நிலைகளில்‌ பலதரப்பட்ட வகைகளும்‌ லாவகமான மாறுதல்களும்‌ மார்க்க ஓழுங்குக்கோ பண்பான நடத்தைக்கோ ஒழுக்க
நாகரிகத்துக்கோ புறம்பானவை அல்ல. இதுபோன்ற செயலை நாணக்‌ குறைவின்‌ அடையாளமாக எண்ணுவது தவறு. அல்லாஹ்வே சட்டப்‌ படி திருமணமான தம்பதிகள்‌ தங்குதடையின்றி பல்வேறு உடலுறவு நிலைகளில்‌ ஈடுபடுவதை அனுமதித்துள்ளான்‌. எனவே, இவ்விஷயத்தில்‌
தம்பதியருக்குக்‌ குற்றவுணர்வோ சங்கடமோ ஏற்படவேண்டியதில்லை.


மனைவியின் மார்பகங்களை சுவைகலாமா? அவற்றிலிருந்து பால் அருந்தலாமா?

மார்பகங்களைச் சுவைத்தல் போன்ற காரியங்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. பால் இருப்பின் அது குழந்தைக்குரிய உணவு என்பதால் அதை தவிர்த்துக் கொள்ளலாம் என்று தான் கூறமுடியுமே தவிர. ஹராம் என்று கூறிவிட முடியாது. பால் குடித்து விட்டால் உறவு மாறி விடும். குழந்தை தாய் உறவு என்றாகி விடும் என்று சிலர் கூறுவர். இது தவறு என்பதை இந்த ஹதிஸ் முலம் நாம் அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

பால்குடி பருவத்தில் இரைப்பையைச் சென்றடையும் விதமான பாலுட்டுதல் தவிர மற்றவை (திருமண உறவை) ஹராமாக்காது. இது பால்குடி மறக்கடிக்கப் படுவதற்கு முன்பு நிகழ வேண்டும்.

அறிவிப்பவர் : உம்மூஸாமா (ரலி) நூல்: திர்மிதி.

மேலும் அல்குர்ஆனின் இந்த வசனமும் இதற்க்கு சான்று

(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குரான் 2-233)

மற்றும்

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (அல்குரான் 31-14)

இந்த இரண்டு வசனங்கள் படி பால்குடி வயது என்பது அதிகபட்சம் இரண்டு வருடங்கள் என்பது விளங்குகிறது. எனவே அந்த வயதுக்கு மேல் உள்ள ஒருவன் தன் மனைவியிடம் பால் குடித்துவிட்டால் மகனாகி விடுவான் என்று சொல்வது தவறு.

எனவே கணவன் தனது மனைவியின் மார்பகங்களை சுவைக்கலாம் இதற்க்கு இஸ்லாத்தில் தடை இல்லை.


மலப்பாதையில் உடலுறவு செய்யலாமா ? 

மலத் துவாரத்தில் உடலுறவு கொள்வதை பின்வரும் ஹதீஸ்கள் கடுமையாகக் கண்டிக்கின்றன. எனவே இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட(ஹராமான) செயல் ஆகும்

யார் தன்னுடைய மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அபூதாவூத் 2162

யார் ஆணிடமோ, அல்லது பெண்ணிடமோ மலத் துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : திர்மிதீ 1165

இதுபோன்ற மேலும்‌ பல ஆதாரங்களிலிருந்து, ஒருவர்‌ தம்‌ மனைவியுடன்‌ ஆசனவாய்‌ மூலமாக உறவுகொள்வதற்கு அனுமதியில்லை என்பது தெளிவாகிறது. இது மட்டுமின்றி, ஆசனவாய்‌ உறவு தேவை யற்ற வலி ஏற்படுத்துகிறது. மேலும்‌, இன்றைய ஒழுக்கங்கெட்ட சமுதாயத்தில்‌ பரவியுள்ள பல நோய்களின்‌ ஊற்றாக இருக்கிறது.

எனவே, கணவன்‌ தன்‌ மனைவியின்‌ ஆசனவாயில்‌ புணர்தல்‌ விலக்கப்பட்ட, பாவமான செயலாகும்‌. எனினும்‌, இயல்பு நிலையில்‌, ஆசனவாயின்‌ சுற்றுப்‌ புறத்தையும்‌ வெளிப்பகுதியையும்‌ தொடுவதற்கு
அனுமதியுண்டு. மேலும்‌, அவளுடைய பிட்டத்திற்கு இடையில்‌ அல்லது கச்சைப்பகுதியில்‌ ஆண்குறியை வைத்துத்‌ தேய்ப்பதற்கும்கூட. அனுமதியுண்டு. ஓரே நிபந்தனை, அவளின்‌ ஆசனவாயினுள்‌ புணரக்கூடாது;
மேலும்‌ பின்‌ பாகங்களில்‌ அசுத்தமாக இருக்கக்கூடாது. கணவன்‌ தன் மனைவி உடலின்‌ எந்தப்‌ பகுதியை வேண்டுமானாலும்‌ தொட்டுப்‌
பிடித்துப்‌ பிசைய, நீவ அனுமதியுண்டு. இதில்‌ ஆசனவாயின்‌ புறப்பகுதியும்‌ அடங்கும்‌. எனினும்‌, அவர்‌ ஆசனவாயினுள்‌ புணர்வதை உறுதியாகத்‌ தவிர்க்க இயன்றாலே இதற்கு அனுமதியுண்டு. இல்லாவிட்டால்‌,
அவர்‌ அந்தப்‌ பகுதியிலிருந்து முற்றிலும்‌ தவிர்ந்திருப்பது அவசியம்‌.


நோன்பின் இரவில் உடலுறவு கொள்ளலாமா ? 

நோன்பின் பகலில் தான் உடலுறவு கொள்ளக் கூடாதே தவிர இரவில் தாராளமாக, உடலுறவில் ஈடுபடலாம். சிலர் ரமலான் இரவிலும் கூட உடலுறவில் ஈடுபடக்கூடாது என்று கருதி ஒதுங்கியே வாழ்கின்றனர். இது முற்றிலும் தவறாகும். இரவில் உடலுறவில் ஈடுபடலாம் என்பதற்கு பின்வரும் இறைவசனம் சான்றாகும்.

அல்லாஹ் கூறுகிறான்.

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குரான் 2:187 )


உடலுறவின் போது பேசலாமா?

உடலுறவில் ஈடுபடும் போது பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அதிகமாக பேச கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்க்கு பின்வரும் செய்தியை ஆதாரமாகக் கூறுகின்றனர்.

உடலுறவு கொள்ளும் போது அதிகம் பேசாதிர்கள். பேசினால் ஊமைத் தன்மை (அல்லது) திக்கு வாய் ஏற்படும்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் ஹதீஸை இப்னு அசாகிர் அவர்கள் பதிவு செய்து உள்ளார்கள். ஆனால்.!

இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானதாகும். இதில் ஸுகைர் இப்னு முஹமது அல்குராசனி என்ற ஹதீஸ்களை இட்டுக்கட்டி சொல்லக்கூடியவர் இடம் பெறுகிறார். எனவே இது நபி(ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக் கட்டப்பட்டதாகும்.

உடலுறவின் போது பேசுபவர்களே அதிகம். பேசுபவர்கள் ஊமையாகிவிடுவர். திக்குவாய்களாகி விடுவர் என்பது உண்மையானால் ; உலகில் இன்று பலர் அந்த நிலைக்கு வந்து இருக்க வேண்டும். இப்படி ஆகவில்லை என்பதிலிருந்தே இது ஒரு இட்டுகட்டப் பட்ட செய்தியே என்பது தெளிவாகிறது..

மேலும் இமாம் இப்னு ஸீரின்(ரஹ்) (மரணம் ஹிஜ்ரி 110) அவர்களிடம் “உடலுறவின் போது காம இச்சையை வெளிப்படுத்தும் விதமாக பேசலாமா” எனக் கேட்கப்பட்டபோது  “காமமாக பேசிக்கொண்டு ஈடுபடக்கூடிய உடலுறவுதான் அதிக சுகம் தரக்கூடியது” எனப் பதிலளித்தார்கள் (நவாதிர் அல்அய்க் அஸ்ஸுயூத்தி பக்கம் 48)

எனவே உடலுறவின் போது பேசலாம்.. அதிலும் காதல் மொழியிலேயே பேசலாம், தவறேதும் இல்லை.


மர்மஸ்தானத்தை சுவைக்கலாமா? வாய்வழி உறவு கொள்ளலாமா?

ஆபாசப்படங்களின்‌ பரவலால்‌ வாய்வழி உறவுப்‌ பழக்கம்‌ அதிகரித்‌துள்ளது. இன்று பொதுவாகப்‌ பல தம்பதியர்கள்‌ இதைப்‌ பின்பற்றுகின்றனர்‌. எனவே, வாய்வழி உறவு குறித்த இஸ்லாமியக்‌ கண்ணோட்டம்‌
பற்றி முஸ்லிம்கள்‌ அடிக்கடி கேட்கின்றனர்‌. துரதிர்ஷ்டவசமாக, சிலர்‌ இதுபற்றிக்‌ கலந்துரையாடுவதிலிருந்து வெட்கப்பட்டு முற்றிலும்‌
ஒதுங்கிவிடுகின்றனர்‌. வேறுசிலர்‌, இது குறித்த எந்தவொரு கலந்துரையாடலும்‌ அத்துமீறிய செயலெனக்‌ கருதுகின்றனர்‌. இந்த இரு
அணுகுதல்களும்‌ சரியானவையல்ல. தம்‌ பாலியல்‌ வாழ்வு, இஸ்லாமிய போதனைகளுக்கு ஒத்திசைவாக இருப்பதை உறுதிசெய்வதற்கு, வாய்வழி உறவு குறித்த இஸ்லாமியக்‌ கண்ணோட்டம்‌ பற்றி விரிவாக
அலசுவது முக்கியம்‌.

வாய்வழி உறவு என்பது, ஒருவர்‌ மற்றவரின்‌ பிறப்புறுப்பை கிளர்ச்சியூட்டுவதற்குத்‌ தன்‌ வாயையோ நாவையோ பயன்படுத்துவதாகும்‌. ஆணுறுப்பை வாய்வழி கிளர்ச்சியூட்டுவதற்கு ஆங்கிலத்தில்‌
ஃபெல்லாஷியோ என்றும்‌ பெண்ணுறுப்பை வாய்வழியாக கிளர்ச்சியூட்டுவதற்கு கன்னிலிங்சஸ்‌ என்றும்‌ அழைப்பர்‌. வாய்வழி உறவு எனும்‌ சொல்‌, விரிவான செயல்வகைகளை உள்ளடக்கியுள்ளது. அதில்‌, வெறுமனே பிறப்புறுப்பை முத்தமிடுவது முதல்‌ அதை வாய்க்குள்‌ எடுத்து, பாலுறவுத்‌ திரவங்களை உட்கொள்ளும்வரை பல செயல்கள்‌ அடங்கும்‌. எனவே, இந்தச்‌ சொல்‌ குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில்‌ எதைக்‌ குறிக்கின்றது என்பதைப்‌ பொறுத்து இஸ்லாமியச்‌ சட்டத்தீர்ப்பும் அமையும்‌.

இது சம்மந்தமாக பல தம்பதிகளிடையே பலத்த சந்தேகம் உள்ளது. மர்மஸ்தான உறுப்புகள் அசிங்கமான உறுப்புக்கள் என்பது பலரது எண்ணம். ஆனால் அவை அசிங்கமான உறுப்புகள் அல்ல. உடலின் இதர உறுப்புக்கள் போன்று தான் மர்ம உறுப்பும்.

தல்க் இப்னு அலி(ரலி) அறிவிக்கிறார்கள் : ஒரு மனிதர் தனது மர்ம உறுப்பைத் தொட்டால் அவர் உளுச் செய்வது அவசியமா ? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதுவும் உனது உறுப்புகளில் ஒன்று தானே என நபி(ஸல்) பதில் அளித்தார்கள். (நூல் : திர்மிதி )

எனவே மர்ம உறுப்பை அசிங்கமாக கருத வேண்டியது இல்லை. கணவனும், மனைவியும் இச்சை உணர்வை அதிகப்படுத்த இதர உறுப்புகளில் சரச விளையாட்டுகளில் ஈடுபடுவது போல மர்ம உறுப்பையும் பயன்படுத்துவதில் தவறில்லை.

அதே வேளையில் உடலுறவில் ஈடுபடும் முன் இச்சையின் அறிகுறிக்கு காமநீர் வெளிப்படும் இந்த காமநீர் அசுத்தமானது என்பதை ஹதீஸ்கள் முலம் புரிய முடிகிறது.

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பாலுணர்வு கிளர்ச்சி நீர் (மதீ) அதிகமாக வெளிப்படும் ஆடவனாக இருந்தேன். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்க வெட்கப்பட்டுக் கொண்டிருந்தேன். நபியவர்களின் புதல்வியார் (ஃபாத்திமா) என் துணைவியாராக இருந்ததே இதற்குக் காரணம். எனவே, நான் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களிடம் (இது குறித்து நபியவர்களிடம் கேட்குமாறு) கூறினேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பிறவி உறுப்பைக் கழுவிக்கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ள வேண்டும் (குளிக்க வேண்டியதில்லை) என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம்: 508., அத்தியாயம்: 3. மாதவிடாய்)

காமத்தின் சூழல் காரணமாக தம்பதியர் மர்மஸ்தானத்தை சுவைக்கும் செயலில் ஈடுபட்டாலும் காமநீர் அசுத்தமானது என்பதை புரிந்து அசுத்தத்தை உட்கொள்ளுவது சரி அல்ல என்பதையும் புரிந்து கொள்ளல் அவசியமாகும். 

எனினும் ஆணின் மர்மஸ்தானத்திலிருந்து வெளிப்படும் விந்து அசுத்தமானது அல்ல என்பதை பின்வரும் ஹதீஸ்களில் இருந்து விளங்கி கொள்ளலாம்:

அல்கமா (ரஹ்) மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
ஒரு மனிதர் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (விருந்தினராகத்) தங்கினார். அவர் காலையில் தமது ஆடையைக் கழுவினார். (இதைக் கண்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், அது உமது ஆடையில் தென்பட்டால் அந்த இடத்தைக் கழுவினால் போதும். அவ்வாறு அது தென்படாவிட்டால் அந்த இடத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்துவிடுவீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில்பட்ட இந்திரியத்தை நன்கு சுரண்டிவிடுவேன். அந்த ஆடையை அணிந்துகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம்: 485., அத்தியாயம்: 2. தூய்மை)

அஸ்வத் (ரஹ்) மற்றும் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
இந்திரியம் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகையில், அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து சுரண்டிவிடுவேன் என்று குறிப்பிட்டார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்: 486., அத்தியாயம்: 2. தூய்மை)


மாதவிடாய்ப் பெண்ணுடன் உடலுறவு கூடுமா? 

பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அவளின் கணவன் அவளிடம் உடலுறவு கொள்ளக் கூடாது. இந்த மாதவிடாய் என்பது குறைந்தது முன்று நாட்கள் முதல் அதிகபட்சமாக பத்து நாட்கள் காரை கூட ஏற்படும் இந்த நாட்களில் உடலுறவு வைத்து கொள்ளக் கூடாது. 

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: 

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” (அல்குரான் : 2:222)

அனஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

யூதர்கள் மாதவிடாய்க்காரியுடன் வீட்டில் சேர்ந்து அமர மாட்டார்கள்: பருக மாட்டார்கள். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடமும் கூறப்பட்டது. அப்போது "மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அது தொல்லை தரும் தீட்டு ஆகும். எனவே மாதவிடாய் சமயத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்" அதை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் பொழுது "உடலுறவை தவிர மற்ற அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்" என்றார்கள்.
நூல்: முஸ்லிம்

திருமறை வசனமும் ஹதிஸும் மாதவிடாய் ஏற்பட்ட மனைவியுடன் உடலுறவு கொள்வதை வன்மையாகக் கண்டிக்கின்றன. மாதவிடாய் நீங்கும் வரை பொறுத்திருக்க வேண்டும். 

எனினும் மாதவிலக்குக் காலத்தில் மனைவியை அணைத்துக் கொள்ள, முத்தமிட அனுமதி உள்ளது; உடலுறவு மட்டும்தான் விலக்கப்பட்டுள்ளது என்பதை மேலே குறிப்பிடப்பட்ட யூதர்கள் ஹதீஸ் மற்றும் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து உறுதியாக அறியலாம்:


''எங்களில் ஒருவருக்கு மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும்போது கீழாடைக் கட்டிக் கொள்ளுமாறு அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள் (ஆடை கட்டிக் கொண்ட) பின்னர் அணைத்துக்கொள்வார்கள்'' அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா(ரலி) அன்னை மைமூனா (ரலி)

 நூல்கள்: புகாரி, முஸ்லிம்.


நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ''மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது, கணவன் அவளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்குஆயிஷா (ரலி) அவர்கள், ''தாம்பத்திய உறவைத் தவிர மற்றவை அனைத்தும் (அனுமதிக்கப்பட்டுள்ளன)'' என்றுபதிலளித்தார்கள். (தாரிமீ)



அஸ்ல் செய்வது கூடுமா?


அஸ்ல் செய்வது – அதாவது பென்ணுறுப்பின் வெளியில் விந்தை வெளிப்படுத்துவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது. இது குறித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளது.

“குர்ஆன் இறங்கிக்கொண்டிருந்த காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்வோராக இருந்தோம்”  என்று ஜாபிர் அறிவித்தார். [புஹாரி, முஸ்லிம்,   ]
மற்றோர் அறிவிப்பில்  “நாங்கள் நபியின் (ஸல்) காலத்தில் அஸ்ல் செய்வோராக இருந்தோம், அது நபி (ஸல்) அவர்களுக்கு தெரிய வந்தது ஆனால் அவர் எங்களை தடுக்கவில்லை” என்று அறிவிக்கிறார் [முஸ்லிம் ]

அபூ சயீத் அல் குத்ரி  அறிவிக்கிறார், “ஒரு மனிதர் நபியிடம் (ஸல்) வந்து ‘என்னிடம் ஒரு பெண் அடிமை உள்ளார். அவளிடம் நான் அஸ்ல் செய்கிறேன், ஆண்களுக்கு தேவைப்படுவது எனக்கும் தேவையாக உள்ளது . ஆனால் யூதர்கள் அஸ்ல் செய்வது சிறிய சிசுக்கொலை என்கிறார்கள்?’ என்றார். அதற்க்கு நபி (ஸல்) ‘யூதர்கள் பொய் சொல்கிறார்கள், யூதர்கள் பொய் சொல்கிறார்கள். அல்லாஹ் ஒரு உயிரை படைக்க நாடினால், நீ அதை மாற்ற முடியாது.’ என்றார்கள். [நஸாயீ, அபூ தாவூத், தஹாவீ, அஹ்மது ஆகியோர் ஸஹீஹான ஸனதுடன் அறிவிக்கிறார்கள்]

ஜாபிர் அறிவிக்கிறார்: ஒரு மனிதர் நபியிடம் (ஸல்) வந்து  “என்னிடம் ஒரு அடிமைப்பெண் இருக்கிறார் அவள் எங்களுக்கு உதவுகிறார், எங்கள் பேரீத்த தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாள். சில நேரம் நான் அவளிடம் செல்கிறேன், அவள் கர்பமாவதை நான் விரும்பவில்லை” என்று கூறினார். அதற்க்கு நபி (ஸல்) “நீங்கள்  நாடினால் அஸ்ல் செய்யுங்கள். ஆனால் அல்லாஹ் அவளுக்கு விதித்தது அவளுக்கு கிடைத்தே தீரும்”  என்றார்கள். சில காலம்  கழித்து அவர் நபியிடம் (ஸல்) வந்து “அந்த பெண்  கர்ப்பமாகி விட்டார்” என்றார். நபி (ஸல்) “அல்லாஹ் அவளுக்கு  விதித்தது நடக்கும் என்று நான் கூறினேன் அல்லவா” என்றார்கள். [முஸ்லிம், அபூ தாவூத்,அஹ்மத்,  பைஹகீ  ]


உடலுறவு செய்து முடித்த பின்பு மறுமுறை உடலுறவு செய்வதற்கு முன்பு உளு செய்ய வேண்டுமா?


ஒரு தடவை உடலுறவு கொண்ட பிறகு மறுமுறை உடலுறவு கொள்ள ஒருவர் உளுச் செய்து கொள்ள வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


"தம் மனைவியுடன் ஒருவர் உறவு கொண்டு விட்டு மீண்டும் உறவு கொள்ள விரும்பினால் அவர் உளுச் செய்து கொள்ளட்டும்"


அறிவிப்பாளர் : அபூஸயித் அல்குத்ரீ(ரலி) நூல் : முஸ்லிம்.


எனவே ஒரு தடவைக்குப் பிறகு மீண்டும் உறவு கொள்ள விரும்புவோர் உளு செய்தல் நபிவழியாகும். 



அடுத்தடுத்த உடலுறவுக்கிடையே குளிப்பது அவசியமா?


அடுத்தடுத்து பலமுறை உடலுறவுகொள்ளும்‌ போது, அவற்றுக்‌ கிடையில்‌ குளிப்பு அவசியமில்லை என்பதில்‌ அறிஞர்களிடையே முழுக்‌ கருத்தொற்றுமை நிலவுகிறது. ஒவ்வொரு முறையும்‌ குளிப்பது

அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) விரும்பிய வழக்கமாக இருந்ததெனினும்‌, அவர்கள்‌ அடுத்தடுத்து உடலுறவுகொண்டுவிட்டு இறுதியில்‌ ஒரே

ஒருமுறை குளித்ததாகவும்‌ அறிவிப்பு உள்ளது.


அனஸ்‌ (ரழி) அறிவிக்கிறார்‌:


அல்லாஹ்வின்‌ தாதர்‌ (ஸல்‌) தம்முடைய (பல்வேறு) மனைவிகளுடன்‌ உடலுறவில்‌ ஈடுபட்டுவிட்டு, ஓரே ஒருமுறை குளிப்பார்கள்‌. (சஹீஹ்‌ மூஸ்லிம்‌ 309, சுனன்‌ அல்‌-திர்மிதி 140, சுனன்‌ அபூ தாவூத்‌ 820 மற்றும்‌ பிற நூல்கள்‌)


அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) ஒன்றுக்கும்‌ மேற்பட்ட தம்‌ மனைவியருடன்‌ உடலுறவில்‌ ஈடுபட்டுவிட்டு, இறுதியில்‌ ஒருமுறை மட்டும்‌ குளிப்பார்கள்‌ என்பதே இந்த ஹதீஸின்‌ பொருள்‌. ஆக, ஒரு மனைவியுடனோ வெவ்வேறு மனைவியுடனோ அடுத்தடுத்து உடலுறவில்‌

ஈடுபடுவதற்கு இடையில்‌ குளிப்பது அவசியமில்லை என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும்‌.


எனினும்‌, ஒவ்வொரு உடலுறவிற்கும்‌ தனித்தனி குளியல்‌ மேற்‌கொள்வது மேன்மையாளனதும்‌ விரும்பத்தக்கதுமாகும்‌. அபூ ராஃபி (ரழி) அறிவிக்கிறார்‌:


'ஒரு நாள்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) தம்முடைய (பல்வேறு) மனைவிமார்‌களுடன்‌ உடலுறவுகொண்டுவிட்டு, இதற்கு ஒரு முறையும்‌ அதற்கு ஒரு முறையும்‌ என (தனித்தனி) குளியல்‌ மேற்கொண்டார்கள்‌." அவர்‌ கூறுகிறார்‌:

'நான்‌ கூறினேன்‌, “அல்லாஹ்வின்‌ தூதரே, நீங்கள்‌ ஏன்‌ ஒரே ஒருமுறை மட்டும்‌ குளிக்கக்கூடாது?” அதற்கு அவர்கள்‌, “இது கூடுதல்‌ தூய்மையானதும்‌ சிறந்ததும்‌ பரிசுத்தமானதும்‌ ஆகும்‌.” (சுனன்‌ அபூ தாவூத்‌ 221, சுனன்‌ இப்னு மாஜா 590 மற்றும்‌ முஸ்னத்‌ அஹ்மது, இங்கு அபூ தாவூதின்‌ சொற்களே இடம்பெற்றுள்ளன)



தம்பதியினரிடையே தொலைபேசி வழிப்‌ பாலுறவு:


“தொலைபேசிப்‌ பாலுறவு” என்பது, இருவர்‌ ஒருவரையொருவர்‌ பாலியல் ரீதியாகத்‌ தூண்டுவதற்குத்‌ தொலைபேசி மூலம்‌ உரையாடுவது. தொலைபேசி உரையாடலின்‌ போது, தற்புணர்ச்சி செய்துகொள்வது நோக்கமல்ல; வெறுமனே தம்பதியர்‌ நெருக்கவுணர்வுக்காக மட்டுமே

குலாவுகின்றனர்‌ என்றால்‌, அதற்கு அனுமதியுண்டு. இதுபோன்ற நெருக்கமான உரையாடலில்‌ தவறேதுமில்லை. தம்பதியர்‌ ஒரே இடத்தில்‌ இருந்தாலும்‌ தொலைவில்‌ இருந்தாலும்‌ இது ஆகுமானதே. ஒரே நிபந்தனை, தற்புணர்ச்சி அல்லது பிற விலக்கப்பட்ட செயல்கள்‌ நடந்துவிடும்‌ அச்சம்‌ இருக்கக்கூடாது. எனினும்‌, துணைவருடன்‌ நெருக்கமாகப்‌ பேசுவதாலேயே புணர்ச்சிப்‌ பரவசம் (ஆர்கஸம்)‌ ஏற்பட்டால்‌ அது விலக்கப்பட்ட செயல்களின்‌ வட்டத்துக்குள்‌ வராது.



புணர்ச்சிக்குப்பின்


பாலுறவு குறித்த இஸ்லாமிய போதனைகள்‌, தம்‌பதியரின்‌ புணர்ச்சியோடு முடிந்துவிடுவதில்லை. அதையும்‌ தாண்டிச்‌ செல்கிறது. 'புணர்ச்சிக்குப்பின்‌’ அல்லது 'பின்விளையாட்டு' என அழைக்கப்படக்‌

கூடிய புணர்ச்சிக்குப்‌ பிந்தைய நிலை, முன்விளையாட்டு மற்றும்‌ புணர்ச்சி போன்றே முக்கியமானது. இது விஷயத்தில்‌, பல முக்கிய

விதிகளையும்‌ ஒழுங்குகளையும்‌ மனத்தில்‌ நிறுத்துவது அவசியம்‌.


1. பாசத்துடன்‌ இருத்தல்‌


உடலுறவில்‌ உச்சநிலை (பரவசநிலை) அடைந்தபின்‌, தம்பதியர்‌ இருவரும்‌ அதே நிலையில்‌ சிறிது நேரம்‌ இருந்துவிட்டு, பின்னர்‌ பிரிய வேண்டும்‌. தம்பதியர்‌, உடலுறவின்‌ போது மட்டுமல்லாமல்‌ எல்லா வேளைகளிலும்‌ ஒருவருக்கொருவர்‌ தாராளமாகவும்‌ அன்போடும்‌ பாசத்தோடும்‌ இருக்குமாறு இஸ்லாம்‌ போதிக்கிறது. புணர்ச்சிக்குப்பின்‌ நுண்ணுணர்வும்‌ மறுவினையும்‌ இல்லாமல்‌ கணவன்‌ இருந்தால்‌, அவன்‌ தன்னுடைய இச்சை தணிப்புக்கு மட்டும்தான்‌ தன்மீது ஆர்வம்‌ கொண்டிருந்தான்‌ என்பதுபோல மனைவிக்குத்‌ தோன்றும்‌. எனவே, புணர்ச்சிக்குப்‌ பின்னரும்கூட, அன்பையும்‌ பாசத்தையும்‌ பரிமாறிக்‌

கொள்ளுதல்‌ வேண்டும்‌.


2. தூய்மையும்‌ சுத்தம்‌ செய்துகொள்வதும்‌


புணர்ச்சிக்குப்பின்‌ தம்பதியர்‌ இருவரும்‌ தங்கள்‌ பாலுறுப்புகளை சுத்தமான துணிகள்‌ அல்லது கைதுடைப்புக்‌ காகிதங்கள்‌ கொண்டு

சுத்தம்‌ செய்துகொள்ளவேண்டும்‌. புணர்ச்சிக்கு முன்னர்‌ தங்களுக்கு அடியில்‌ ஒரு விரிப்பையோ துணியையோ விரித்துக்கொள்வது சிறந்தது.

அதையே பின்னர்‌ சுத்தம்‌ செய்வதற்கும்‌ பயன்படுத்திக்கொள்ளலாம்‌. அல்லது, தனியாக வேறு துணியையும்‌ பயன்படுத்தலாம்‌.


இமாம்‌ இப்னு குதாமா தம்முடைய அல்‌-முக்னியில்‌ கூறுகிறார்‌:

புணர்ச்சிக்குப்பின்‌ கணவன்‌ தன்னை துடைத்துக்கொள்வதற்குப்‌ பயன்படுத்தும்‌ வகையில்‌, மனைவியிடம்‌ ஒரு துணி இருப்பது விரும்பத்‌தக்கது. இதுபற்றி ஆயிஷா (ரழி) கூறினார்கள்‌: 'ஒரு கூர்மதியான பெண்‌ தன்‌ வசம்‌ ஒரு துணியை வைத்துக்கொண்டு, கணவன்‌ தன்னுடன்‌ புணர்ந்தபின்‌ அதை அவரிடம்‌ கொடுப்பாள்‌. இதன்மூலம்‌ அவர்‌

தன்னைத்‌ துடைத்துக்‌ கொள்ளவும்‌, அவள்‌ தன்னைக்‌ துடைத்துக்‌ கொள்ளவும்‌ இயலும்‌.” (அல்‌-முக்னி 8:136)


புணர்ச்சிக்குப்பின்‌ சுத்தம்செய்வது மிக மிக அவசியமானது. முஸ்லிம்‌ தம்பதியர்‌ இந்த விஷயத்தில்‌ மிகவும்‌ பொடுபோக்காக உள்ளனர்‌. தங்களின்‌ படுக்கை விரிப்பும்‌ ஆடைகளும்‌ தூய்மை கெட்டிருக்கலாம்‌ எனும்‌ விஷயத்தை அலட்சியப்படுத்துகின்றனர்‌.


உடலுறவுக்கென்று தனியொரு துணி விரிப்பைப்‌ பயன்படுத்துவது பலமாக ஊக்குவிக்கப்படுகிறது. அதைப்‌ பின்னர்‌ சலவைசெய்வதற்கு வசதியாய்‌ இருக்கும்‌. பாலுறுப்புத்‌ இரவங்கள்‌ ஒருவரின்‌ துணிமணிகளிலோ உடலுறுப்புகளிலோ பட்டுவிட்டால்‌, தொழுகைக்குமுன்‌ அவற்றைத்‌ தண்ணீரால்‌ தூய்மைப்படுத்துவது அவசியம்‌. இல்லா

விட்டால்‌, தொழுகை கூடாமல்‌ போய்விடும்‌. அதேபோல்‌, படுக்கையில்‌ பாலுறுப்புத்‌ திரவங்கள்‌ பட்டுவிட்டால்‌ அதையும்‌ மாற்றவேண்டும்‌.


மதன நீர்‌ - விந்து வெளியேறுவதற்குமுன்‌ வரும்‌ திரவம்‌ (மதி) தூய்மையற்றது என அனைத்து செவ்விய அறிஞர்களும்‌ கருதுகின்றனர்‌ என்பதை தம்பதியர்‌ நினைவில்‌ வைப்பது அவசியம்‌. மதி என்பது,

பாலியல்‌ கிளர்ச்சி ஏற்பட்டு விந்து இன்னும்‌ வெளியேறாதபோது ஆண்‌ அல்லது பெண்ணில்‌ இருந்து வேகமின்றி வெளிவரும்‌ ஒரு மெல்லிய நிறமற்ற திரவம்‌. அது பெரும்பாலும்‌ ஒருவர்‌ அறியாமலே வெளியேறி விடும்‌. மற்றும்‌, ஆணைவிட பெண்ணுக்கு அதிகமாக ஏற்படும்‌. மதி

வெளியானால்‌ ஒளு மட்டுமே அவசியம்‌. எனினும்‌, சட்டரீதியில்‌ அது தூய்மையற்றதாக (நஜீஸ்‌) கருதப்படுவதன்‌ காரணமாக, அது உடலின்‌ பிற பாகங்களிலோ ஆடையிலோ பட்டுவிட்டால்‌ அதைக்‌ கழுவிவிடுவது கட்டாயம்‌. மதி தூய்மையற்றது என்பதில்‌ முஸ்லிம்‌ உம்மா முழுவதும்‌ கருத்தொற்றுமை கொண்டுள்ளது என இமாம்‌ நவவி

கூறுகிறார்‌. (காண்க: ஹாஷியா அல்‌-தஹ்தாவி அலா மராகி அல்‌-பலாஹ்‌ ப 100, அல்‌-மஜ்மூஃ ஷரஹ்‌ அல்‌-முஹத்தப்‌ 2:395 அல்‌-முக்னி 1:162)


ஒரு நாளைக்கு எத்தனை தடவை உடலுறவு கொள்வது?


பகலிலோ இரவிலோ ஒரு நேரத்தில்‌ ஒன்றுக்கும்‌ மேற்பட்ட தடவை தம்பதியர்‌ உடலுறவுகொள்வதற்கு இஸ்லாம்‌ அனுமதியளிக்கிறது.

இமாம்‌ இப்னு அல்‌-கையூம்‌ அல்‌-ஐவ்ஸிய்யா தம்முடைய அல்‌-திப்‌ அல்‌-நபவியில்‌ இதுபற்றி கூறுகிறார்‌. பாலுறவு ஆசை முதிர்ந்து இருக்கும்‌

பொழுதே ஒருவர்‌ உடலுறவு கொள்ளவேண்டும்‌. ஒன்றை நினைப்‌பதையோ பார்ப்பதையோ சாராமல்‌, ஆணுக்கு இயல்பாக விறைப்பு ஏற்பட வேண்டும்‌. பாலுறவு ஆசையை (ஷஹ்வா) ஒருவர்‌ தம்‌ மீது

வலுக்கட்டாயமாக உண்டாக்கிக்கொள்வது சரியானதல்ல. (அல்‌-திப்‌ அல்‌-நபவி ப.181)


ஆக, மீண்டும்‌ உடலுறவுகொள்வதற்கு உண்மையான விருப்பம்‌ இருப்பின்‌, தம்பதியர்‌ அதில்‌ ஈடுபடலாம்‌. இல்லாவிட்டால்‌, அவர்கள்‌ முழுமையாக புத்துணா்வும்‌ புதுத்தெம்பும்‌ அடையும்வரை காத்திருப்பது

மேல்‌. இந்த விஷயத்தில்‌, தம்பதியர்‌ இருவரும்‌ தத்தமது துணைவரின்‌ உடல்நிலை குறித்து மிகவும்‌ எச்சரிக்கையாகவும்‌ மரியாதையுடனும்‌

இருப்பது அவசியம்‌. இல்லையெனில்‌, ஒருவர்‌ ஆயத்தமில்லாத ஒரு விஷயத்துக்கு நிர்ப்பந்திக்கப்பட்டது போல ஆகிவிடும்‌.


உடலுறவுக்குப்‌ பிறகு குளிக்காமல்‌ தூங்கலாமா?


ஒருவா்‌ குளிக்காமல்‌ உறங்க விரும்பினால்‌, அவர்‌ ஒளு செய்து கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்‌.


அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்‌:


அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) குளிப்பு கடமையான நிலையில்‌ உறங்கச்‌ செல்ல விரும்பினால்‌ அவர்கள்‌ தம்‌ பாலுறுப்புகளைக்‌ கழுவி, தொழுகைக்காக

செய்வதுபோன்ற ஒளு செய்துகொள்வார்கள்‌. (சஹீஹ்‌ அல்‌-புஹாரி 284 மற்றும்‌ சஹீஸ்‌ முஸ்விம்‌ 305, இங்கு புஹாரியின்‌ சொற்களே இடம்பெற்றுள்ளன)


அல்லாஹ்வின்‌ தூதரிடம்‌ உமர்‌ இப்னு அல்‌-கத்தாப்‌ (ரழி) வினவினார்கள்‌: 'குளிப்பு கடமையான நிலையில்‌ எங்களுள்‌ ஒருவார்‌ உறங்கலாமா? அதற்கு நபியவர்கள்‌ (ஸல்‌) பதிலளித்தார்கள்‌:


ஆம்‌, ஒளு செய்துகொண்டால்‌ ஒருவர்‌ குளிப்பு கடமையான நிலையிலேயே உறங்கலாம்‌. (சஹீஹ்‌ அல்‌-புஹாரி 283, சஹீஹ்‌ மூஸ்விம்‌ 306 மற்றும்‌ சுனன்‌ அல்‌-திர்மிதி 120, இங்கு புஹாரியின்‌ சொற்களே இடம்பெற்றுள்ளன)


இரவில்‌, தாம்‌ ஜுனுப்‌ ஆகிவிடுவதாக உமர்‌ இப்னு அல்‌-கத்தாப்‌ (ரழி) அல்லாஹ்வின்‌ தூதரிடம்‌ கூறினார்‌: இதற்கு அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவரிடம்‌ இவ்வாறு பதிலுரைத்தார்கள்‌: ஒளு செய்து, உம்‌ பாலுறுப்புகளைக்‌ கழுவிக்கொண்டபின்‌ உறங்கச்‌ செல்லவும்‌. (சஹீஹ்‌ அல்‌-புஹாரி 286, சஹீஸ்‌ முஸ்லிம்‌ 306)


இறுதியாக.


உடலுறவு இரகசியங்கள்‌ 


கணவனையும்‌ மனைவியையும்‌ ஒருவருக்கொருவர்‌ ஆடைகளாக அல்லாஹ்‌ ஆக்கியுள்ளான்‌: அவன்‌ கூறுகிறான்‌:


நோன்புகால இரவுகளில்‌ உங்களுடைய மனைவிகளுடன்‌ உடலுறவு கொள்வது உங்களுக்கு ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது. அவர்கள்‌ உங்களுக்கு ஆடைகளாவர்‌. நீங்கள்‌ அவர்களுக்கு ஆடைகளாவீர்‌... (குர்‌ஆன்‌ 2:187)


ஓர்‌ ஆடை நீளமாகவும்‌, முழுமையாகவும்‌, தாராளமாகவும்‌ இல்லாவிட்டாலோ, ஓட்டைகளும்‌ கிழிசல்களுமாய்‌ இருந்தாலோ அது மானத்தை மறைக்கத்‌ தகுதியானதல்ல என்பதை நாம்‌ அறிவோம்‌.

அதேபோல்‌, தம்பதியரும்‌ ஒருவருக்கொருவர்‌ ஆடைகளாவர்‌. அவர்கள்‌ ஒருவருக்கொருவர்‌ இரகசியம்‌ காக்கத்‌ தவறினால்‌, தங்களின்‌ கடமை நிறைவேற்றத்தில்‌ தவறுகிறார்கள்‌ என்று பொருள்‌. தாம்பத்திய உறவு என்பதே வாக்குறுதி, நம்பிக்கை மற்றும்‌ இரகசியத்தின்‌அடிப்படையில்‌ அமைந்துள்ளது. எனவே, இந்த வாக்குறுதி மற்றும்‌ நம்பிக்கையின்‌ அடிப்படையில்‌ துணைவர்‌ வெளிப்படுத்தும்‌ இரகசியங்‌களை மறைத்துவைப்பது தம்பதியர்‌ இருவரின்‌ மீதும்‌ கடமையாகும்‌.


பாலுறவு விஷயங்களில்‌ இரகசியம்‌ பேணுதல்‌ அதிக முக்கியத்துவம்‌ பெற்றது. கணவனும்‌ மனைவியும்‌ தங்கள்‌ பாலுறவு இரகசியங்களைப்‌ பிறரிடம்‌ வெளிப்படுத்துவது திட்டவட்டமாகத்‌ தடைசெய்யப்‌பட்டுள்ளது (ஹராம்‌) அது அல்லாஹ்வின்‌ தூதரால்‌ அழுத்தம்‌ திருத்தமாகக்‌ கண்டித்துரைக்கப்பட்டதொரு மானங்கெட்ட, விலக்கப்பட்ட செயலாகும்‌.


அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறியதாக அபூ சயீத்‌ அல்‌-குத்ரி (ரழி) அறிவிக்கிறார்‌:


தீர்ப்பு நாளன்று அல்லாஹ்வின்‌ பார்வையில்‌ மனிதர்களிலேயே மிகக்‌ கொடியவர்‌ யாரெனில்‌, அந்த மனிதர் தம்‌ மனைவியுடன்‌ உடலுறவு கொண்டு அவளும்‌ அவருடன்‌ உடலுறவுகொண்டுவிட்ட பின்‌ அவளின்‌ இரகசியத்தை வெளிப்படுத்துபவர்‌. (சஹீஹ்‌ முஸ்னிம்‌ 1437)


பாலுறவு இரகசியங்களை வெளிப்படுத்துவுதற்கு எதிரான எச்சரிக்கை ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும்‌ பொருந்தும்‌. படுக்கை அறையில்‌ நடப்பதைப்‌ பிறருடன்‌ கலந்துரையாடுவது விலக்கப்பட்டது. பாலுறவு விவகாரங்கள்‌ தனிப்பட்ட விஷயங்கள்‌. எனவே, அவற்றை அதே அந்தஸ்தில்‌ வைத்துக்‌ காக்கவேண்டும்‌. அவற்றைப்‌ பிறரிடம்‌ பகிர்ந்துகொள்வதால்‌, அவர்களுடைய மனதுக்குள்‌ எண்ணங்கள்‌ பல உருவாகி, இதயத்தின்‌ விபச்சாரத்திற்கு வழிவகுக்கும்‌ சாத்தியம்‌ உள்ளது. மேலும்‌, அது துணைவருக்குக்‌ கேடு விளைவிக்கும்‌ ஒரு வழியுமாகும்‌. ஏனெனில்‌, அவர்‌ அல்லது அவள்‌ தங்களின்‌ பாலியல்‌ நடத்தை விவரங்களைப்‌ பிறரிடம்‌ வெளிப்படுத்துவதை விரும்பமாட்டார்‌.


அஸ்மா பின்த்‌ யஸீது (ரழி) அறிவிக்கிறார்‌:


தாங்கள்‌ ஆண்களும்‌ பெண்களுமாக அல்லாஹ்வின்‌ தூதருடைய சமூகத்தில்‌ அமர்ந்திருந்தோம்‌. அப்போது அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) கூறினார்கள்‌:

'ஓர்‌ ஆண்‌ தனக்கும்‌ தன்‌ மனைவிக்கும்‌ இடையில்‌ நடக்கும்‌ விஷயத்தைப்‌ (பிறரிடம்‌) பேசுவாரா? மற்றும்‌, ஒரு பெண்‌ தன்‌ கணவனுடன்‌ ஈடுபடும்‌ விஷயத்தைப்‌ (பிறரிடம்‌) பேசுவாரா?” மக்கள்‌ அமைதியாக இருந்தனர்‌. பதில்‌ எதுவும்‌ கூறவில்லை. எனவே, நான்‌ கூறினேன்‌, 'ஆம்‌, அல்லாஹ்வின்‌ தூதரே! அல்லாஹ்வின்‌ மீது ஆணையாக, ஆண்களும்‌ இதைச்‌ செய்கின்றனர்‌. பெண்களும்‌ இதைச்‌ செய்கின்றனர்‌. ' அதற்கு அவர்கள்‌ கூறினார்கள்‌: அவ்வாறு செய்யாதீர்‌. ஏனெனில்‌, அதற்கான உவமை, ஓர்‌ ஆண்‌ ஷைத்தான்‌ ஒரு பெண்‌ ஷைத்தானை சாலையின்‌ நடுவில்‌ சந்திப்பது போன்றது. அங்கே மக்கள்‌ பார்த்துக்கொண்டிருக்க அவன்‌ அவளுடன்‌ உடலுறவு கொள்‌கிறான்‌.' (தபரானியின்‌ அல்‌-முஃஜம்‌ அல்‌-கபீர்‌ 24:162-163. இதையொத்த அறிவிப்புகள்‌ சுனன்‌ அபூ தாவூத்‌ மற்றும்‌ முஸ்னத்‌ அஹ்மதில்‌ பதிவுசெய்யப்‌பட்டுள்ளன)


தங்கள்‌ உடலுறவுச்‌ சந்திப்புகள்‌ குறித்து நண்பர்களிடம்‌ வர்ணனை அளிக்கும்‌ போக்கு சிலரிடம்‌ உள்ளது. சில ஆண்கள்‌, படுக்கையில்‌ தங்களுடைய செயல்திறன்‌ குறித்தும்‌ தங்கள்‌ மனைவிகள்‌ தங்களிடம்‌ ஈடுபடும்‌ விஷயங்கள்‌ குறித்தும்‌ தம்பட்டம்‌ அடித்துக்கொள்வார்கள்‌.


இதே போல்‌, சில பெண்கள்‌ தங்கள்‌ கணவன்களுடனான உடலுறவு குறித்து பெருமை பேசிக்கொள்வதில்‌ மகிழ்ந்து இளைப்பார்கள்‌. இதுபோன்றவர்களைக்‌ கட்டுப்படுத்துவதற்கு மேற்கூறிய நபிமொழி போதுமானவை. அவர்கள்‌ தீர்ப்பு நாளன்று அல்லாஹ்விடம்‌ பதில்‌ அளிக்கவேண்டும்‌ என்பதை உணர்ந்து, இதுபோன்ற வெட்கங்கெட்ட நடத்தைகளை முற்றிலும்‌ ஒதுக்கி தள்ளிவிட வேண்டும்‌.


பாலுறவு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்கான இந்தத்‌ தடை, வழக்கமான சூழ்நிலைகளுக்கே கூறப்பட்டுள்ளது. எனினும்‌, ஒருவர்‌ தம்‌ தாம்பத்திய விவகாரங்களைக்‌ கலந்தாலோசிக்க வேண்டிய

உண்மையான தேவை இருப்பின்‌ - உதாரணமாக, மார்க்க வழி காட்டுதல்‌ அல்லது ஆலோசனை கேட்கும்பொழுது; அல்லது, ஒருவா்‌ அநீதியால்‌ பாதிக்கப்பட்டு, அதிகாரத்தில்‌ உள்ளவர்களிடம்‌ புகார்‌ அளிக்கும்பொழுது - இந்தத்‌ தடைக்கு தற்காலிக விலக்கு உண்டு. ஆயினும்‌, இதிலும்கூட, கூறத்‌ தேவையில்லாத வர்ணனைகளை வெளிப்படுத்துவது கூடாது. (காண்க: அல்‌-மின்ஹாஜ்‌ ஷரஹ்‌ சஹீஹ்‌

மூஸ்லிம்‌, ஹதீஸ்‌ எண்‌: 1437இன்‌ விரிவுரை)



முற்றும்

அல்லாஹு அஃலம்

Previous Post Next Post