ஜபரிய்யாக்கள்‌

ஜபரிய்யாக்கள்‌ என்பவர்கள்‌ கொள்கை ரீதியாக வழிகெட்ட ஒரு பிரிவினர்‌. ஜபரிய்யா என்பது ஜபர்‌ என்ற வார்த்தையிலிருந்து வந்த சொல்லாகும்‌. இதன்‌ பொருள்‌ இயலாமை” என்பதாகும்‌. அதாவது, ஒரு வேலையை நிறைவேற்ற (சக்தியில்லாத) ஒருவரை வற்புறுத்தி குறித்த வேலையை செய்ய வைப்பதைக்‌ குறிக்கும்‌. ஜபரிய்யாக்களது அடிப்படைக்‌ கொள்கைகள்‌ வருமாறு:

1. மனிதன்‌ தனது செயல்கள்‌ மீது நிர்ப்‌பந்திக்கப்பட்டவன்‌ ஆவான்‌. எனவே, மனிதன்‌ சுயமாக தனது விருப்பப்படி சிந்தித்து எதுவும்‌ செய்ய முடியாது.

2. மனிதனுடைய செயல்கள்‌ அனைத்தையும்‌ அல்லாஹ்‌ தானாகவே படைக்கின்றான்‌. அவைகளைச்‌ செய்வதில்‌ மனிதனுக்கு எந்தவிதப்‌ பங்கும்‌ கிடையாது. அதாவது, ஈமான்‌ கொள்ளுதல்‌, இறைவனை நிராகரித்தல்‌, பாவங்களில்‌ ஈடுபடுதல்‌ போன்ற மனிதனால் நிறைவேற்றப்படும் செயல்கள் அனைத்தையும் அல்லாஹவே செய்கிறான் இதில் மனிதனுக்கு எந்த வித தெரிவுச் சுதந்திரமும் கிடையாது. மனிதனின்‌ செயல்கள்‌ அனைத்தும்‌ ‘சிலேடை’ அடிப்படையில்தான்‌ மனிதனுடன்‌ சேர்த்துச்‌ சொல்லப்படுகின்றன. எனவே, மனிதன்‌ செய்தான்‌ என்பது வெறுமனே ஒரு சிலேடை வார்த்தையாகும்‌.

முஸ்லிம்களின்‌ மத்தியில்‌ முதன்‌ முதலில்‌ இக்கொள்கையை அறிமுகம்‌ செய்தவன்‌ ஜஃத்‌ பின்‌ திர்ஹம்‌ என்பவன்‌ ஆவான்‌. இக்கருத்து யூதர்கள்‌ வழியாகவே அவனுக்குக்‌ கிடைத்தது.

இக்கொள்கையைப்‌ பகிரங்கமாகச்‌ சொன்னவர்‌ அல்‌ஜஹம்‌ பின்‌ ஸப்வான்‌ என்பவரே. இவர்‌ ஜஃத்‌ பின்‌ திர்ஹம்‌ என்பவரின்‌ மாணவர்‌ என்பது இங்கு குறிப்பிடத்தக்கது எனவே இவ்வடிப்படையில்‌ பார்க்கும்போது மேற்படி இக்கொள்கையையும்‌ ஆரம்பத்தில்‌ அறிமுகம்‌ செய்தவர்கள்‌ ஜஹமிய்யாக்கள்‌ என்பது தெளிவாகிறது.

மனிதனின்‌ செயல்கள்‌ அனைத்தையும்‌ அல்லாஹ்வே படைக்கிறான்‌; எனினும்‌, அவை மனிதனின்‌ விருப்பு, வெறுப்பிற்கு ஏற்பவே நடைபெறுகின்றன. தனக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தைப்‌ பயன்படுத்தி நற்செயல்கள்‌ புரிவோர்‌ நன்மையடைவர்‌. பாவச்‌ செயல்களில்‌ ஈடுபடுவோரை, அவன்‌ நாடினால்‌ மன்னிப்பான்‌ அல்லது தண்டிப்பான்‌” என்பதே அஹ்லுஸ்‌ ஸுன்னாவினராகிய எமது‌ கொள்கையாகும்‌.

- மெளலவி. எம்‌. எம்‌. ஸக்கி, B.A(Hons) மதினா
Previous Post Next Post