நேர்வழியில் நிலைத்திருக்க தொடர்ந்து நாம் அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்


🎯 வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம் பின்வருமாறு கூறினார்கள்:

        *“..... என் அடியார்களே! உங்களில் யாரை நான் நேர்வழியில் செலுத்தினேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் வழி தவறியவர்களே. ஆகவே, என்னிடமே நேர்வழியில் செலுத்துமாறு நீங்கள்  கேளுங்கள். உங்களை நான் நேர்வழியில் செலுத்துவேன்... ”* (நூல்: முஸ்லிம், ஹதீஸ் இலக்கம் - 5033)

            இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்:-

         “எப்போது நீ அல்லாஹ்விடம் உண்மையான முறையில், அவனிடம் தேவையுள்ள அமைப்பில், தொடர்ச்சியாக நேர்வழியில் செலுத்துமாறு கேட்கிறாயோ அப்போது அல்லாஹ் உன்னை நேர்வழியில் செலுத்துவான். எனினும், எம்மில் அதிகமானோர் இவ்விடயத்தைப் புறக்கணிப்போராகவே இருக்கின்றனர். நம்மில் பெரும்பாலானோர் வணக்க வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். என்றாலும், நேர்வழியைக் கேட்பதில் அல்லாஹ்விடம் நாம் தேவையுடையவர்கள் இல்லை என்றவாறு மக்கள் செய்து வருவது போலவும், சம்பிரதாயப்படியுமே இதில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், நேர்வழியை எப்போதும் நாம் அல்லாஹ்விடம் கேட்பதே பொருத்தமானதாகும். 

           ஒவ்வொரு தொழுகையிலும், *“யா அல்லாஹ்! என் பாவங்களை எனக்காக நீ மன்னிப்பாயாக; எனக்கு நீ அருள் புரிவாயாக; நேர்வழியில் என்னை நீ செலுத்துவாயாக!”* என்று ஒவ்வொரு தொழுகையிலும்,(இரு சுஜூதுகளுக்கிடையில்)  மனிதன் சொல்கிறான். மாறாக, ஒவ்வொரு தொழுகையிலும், *“நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக! 🔅 (அது) நீ யார் மீது அருள் புரிந்தாயோ அவர்களின் வழியாகும்”*. (அல்குர்ஆன், 01:05,06)

            தொழக்கூடிய நிறையபேர் அல்குர்ஆனில் வரக்கூடிய இவ்வசனத்தை ஓதவே செய்கின்றார்கள். தண்ணீர் இன்றி ஓடக்கூடிய மேகம் செல்வதைப் போன்றும், எந்தவொரு பயனும் இல்லாதவாறுமே  இவ்வசனமும் தொழக்கூடியவனிடம் வந்து போகிறது. ஆனால், அதை அவன் சிந்தித்துப் பார்ப்பதில்லை; அது குறித்து சிந்திப்பதுதான் எமக்குப் பொருத்தமானதாகும். நேரான வழிக்கு பிறரை அழைத்து, இதுதான் நேரான வழி என்று அவர்களுக்குக் காட்டுதல் என்ற கருத்துடைய “ஹிதாயதுல் இர்ஷாத்” - هداية الإرشاد ), அல்லது (அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான)  “நேர்வழியில் செலுத்துதல்” என்ற  “ஹிதாயதுத் தவ்fபீ்க்” - هداية التوفيق) ஆகிய இரு நேர்வழியையும் பெற்றுக்கொள்ள அல்லாஹ்வின்பால் நாம் தேவையுடையவர்களாகவே இருக்கிறோம் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். எனவே, நேர்வழியில்  செலுத்துமாறு அல்லாஹ்விடம் எப்போதும் நாம் கேட்பது கட்டாயமானதாகவே இருந்து கொண்டிருக்கின்றது”.

[ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்', 02/124 ]


            عن أبي ذرّ رضي الله عن النّبي صلّى الله عليه وسلم فيما روى عن الله تبارك وتعالى أنه قال: *{ .... يا عبادي! كلّكم ضالّ إلّا من هديته، فاستهدوني أهدكم .... }* « رواه مسلم، رقم الحديث - ٥٠٣٣ »

            قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

            { فمتى طلبت الهداية من الله بصدق وافتقار إليه وإلحاح فإن الله يهديك. ولكن أكثرنا معرض عن هذا، فأكثرنا قائم بالعبادة لكن على العادة وعلى ما يفعل النّاس، كأننا لسنا مفتقرين إلى الله سبحانه وتعالى في طلب الهداية، فالذي يليق بنا أن نسأل الله دائما الهداية.

          والإنسان في كلّ صلاة يقول: *" ربّ اغفر لي، وارحمني، واهدني"*، بل إنه في كلّ صلاة يقول: *« إهدنا الصراط المستقيم🔅 صراط الذين أنعمت عليهم »* < سورة الفاتحة، الآية - ٥،٦ >، ولكن أين القلوب الواعية؟.

           إن أكثر المصلين يقرأ هذه الآية وتمرّ عليه مرّ الغيم الذي يجري بدون ماء وبدون شيئ، ولا ينتبه لها. والذي يليق بنا أن نتنبه، وأن نعلم أننا مفتقرون إلى الله عزّ وجلّ في الهداية سواء الهداية العلمية أو الهداية العملية - أي هداية الإرشاد والدلالة أو هداية التوفيق - ، فلا بدّ أن نسأل الله دائما الهداية }.

[ المصدر: 'شرح رياض الصالحين'، ٢/١٢٤ ]

🌠➖➖➖➖➖➖➖➖🌠

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم