ஈமானிய பலமே எம்மைப் புனிதர்களாக மாற்றும்


        கலாநிதி அஹ்மத் பரீத் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “மனிதனுடைய ஈமான் பலவீனமடைந்துவிட்டால் அவன் பாவங்களை விட்டோ, சந்தேகங்களை விட்டோ பேணுதலாக இருக்கமாட்டான்.  அவன் கடமையான வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதிலும் சோம்பேறித்தனம் காட்டுவான். நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:  

*“அடியான் விபச்சாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு விபச்சாரம் புரியமாட்டான். அவன் திருடுகிறபோது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான்.....”*. 

(நூல்: புகாரி, ஹதீஸ் இலக்கம் - 6809)

        மனிதனது உள்ளத்தில் (ஆழப் பதிந்திருக்க வேண்டிய) ஈமானிய மரம் பலவீனமானதாக இருந்தால் மனோ இச்சைகள், அல்லது சந்தேகங்கள் என்ற  புயல் காற்றுகள் அதனிடம் வருகின்றபோது அது உறுதியாக இருக்காது. எனவே, ஈமானில் உறுதியாக இருக்கவும், அல்லாஹ்வுக்கு மாறு செய்வதை விட்டும் தூரமாகியிருக்கவும்  யார் விரும்புகிறாரோ அவர் ஈமானிய மரத்தை பலப்படுத்த வேண்டியது அவசியமாகும். அத்தோடு இறையச்சத்தை ஏற்படுத்தும் விடயங்களை உயிர்ப்பித்து, அல்லாஹ் கண்காணித்து்க் கொண்டிருக்கிறான் என்ற உணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதும் அவருக்கு அவசியமாகும். அல்லாஹ் கூறுகிறான்: *“நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடனேயே இருக்கின்றான். இன்னும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்”*. (அல்குர்ஆன், 57:04)

           'இஹ்ஸான்' என்பதன் படித்தரத்தை விளக்கப்படுத்துகின்ற விடயத்தில் நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி) வசல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: *“இஹ்ஸான் என்பது, அல்லாஹ்வை (நேரில்) நீ காண்பதைப் போன்று அவனை நீ வணங்குவதாகும். நீ அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்”*. (நூல்: புகாரி, ஹதீஸ் இலக்கம் - 50). 

          ஈமானின் சுவையையும், அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற விடயத்தையும்  உள்ளம் உணர்கின்ற போதெல்லாம் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யவோ, அவனின் விலக்கலை எடுத்து நடக்கவோ உள்ளம் வெட்கப்படும்”.

[ 'அல்fபுர்கான்' அரபு சஞ்சிகை, இதழ் - 863, திகதி: 04/04/2016 ]

         

        قال الدكتور أحمد فريد حفظه الله تعالى:-

             { إذا ضعف إيمان العبد صار لا يتورع عن المعاصي والشبهات، ويتكاسل عن الطاعات الواجبات؛ وقد قال النّبي صلّى الله عليه وسلم: *« لا يزني الزاني حين يزني وهو مؤمن، ولا يسرق السارق وهو مؤمن.... »* < رواه البخاري، رقم الحديث ٦٨٠٩ >

           فإذا كانت شجرة الإيمان ضعيفة في قلب العبد فإنها لا تثبت إذا أتتها عواصف الشهوات أو الشبهات. فمن أراد الثبات على الإيمان والبعد عن معصية الملك الديان فعليه بتقوية شجرة الإيمان، وإحياء وازع التقوى، واستشعار مراقبة الله عزّ وجلّ له. قال تعالى: *« وهو معكم أين ما كنتم والله بما تعملون بصير »* (سورة الحديد، الآية - ٤ ).

           وقال النّبي صلّى الله عليه وسلم في بيان درجة الإحسان: *« أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه، فهو يراك »* ( رواه البخاري، رقم الحديث - ٥، ٤٧٧٧) .مهما استشعر القلب حلاوة الإيمان والمراقبة فإنه يستحي من مخالفة أمره، وارتكاب نهيه }.

[ مجلة الفرقان، العدد - ٨٦٣، التاريخ ٢٠١٦/٤/٤م ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم