இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!* (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!)

அல்லாஹ் கூறுகிறான்: “பொறுமையாளர்களுக்கு (நபியே) நீர் நன்மாராயம் கூறுவீராக! அவர்கள் யாரெனில், தமக்குத் துன்பம் நேரிடும்போது 'இன்னா லில்லாஹி வ இன்னா  இலைஹி ராஜிஊன்' (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்!) என்று கூறுவார்கள். இத்தகையோருக்கே அவர்களின் இரட்சகனிடமிருந்து புகழுரைகளும், கருணையும் கிடைக்கும். இவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள்”. (அல்குர்ஆன், 155 -157)

அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

 “துன்பத்தால் பீடிக்கப்பட்டவன் கூறும் *இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!* என்ற இவ்வார்த்தை, அவனது இவ்வுலக வாழ்க்கை மற்றும் மறு உலக வாழ்க்கைக்கு சிறந்த நிவாரணியாகவும், மிகப் பயனுள்ளதாகவும் இருக்கின்றது. ஏனெனில் இது, இரு பெரும் அடிப்படைகளை உள்ளடக்கியுள்ளது. இதை ஒருவர் சரியாக  அறிந்து செயல்படுத்தினால் அவர் தனது துன்பத்திலிருந்து நிம்மதி பெற்று ஆறுதல் அடைந்து கொள்வார்.

01) ஒரு மனிதனும், அவனது குடும்பம், அவனது சொத்து செல்வங்கள் என எல்லாமே யதார்த்தத்தில் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையாகும். மனிதனிடம் இதை அல்லாஹ் இரவலாகக் கொடுத்து வைத்துள்ளான். எனவே, இதை அவனிடமிருந்து அல்லாஹ் எடுத்து விட்டால், இரவல் கொடுத்தவன் தனது பொருளை இரவல் வாங்கியவனிடமிருந்து திருப்பி எடுத்துவிட்டது போலத்தான் அது இருக்கும்.

02) உண்மையான இரட்சகனான அல்லாஹ்விடமே மனிதன் திரும்பிச் செல்ல வேண்டும். உலகத்தை தனது முதுகுக்குப் பின்னால் அவன் வைத்து விட்டு குடும்பம் இல்லாமல், சொத்து செல்வமில்லாமல், உறவினர்கள் இல்லாமல் எப்படி ஆரம்பத்தில் அவனை அல்லாஹ் படைத்தானோ அதேபோன்று தனது இரட்சகனிடம் அவன் தனியாகவே வர வேண்டும்.  ஆயினும், நன்மை தீமைகளோடு அவன் வருவான்!.

எனவே, இருப்பதை வைத்து எப்படி அவன்  மகிழ்ச்சியடைய முடியும்? இழந்ததற்காக எப்படி அவன் கைசேதப்பட முடியும்?”.

{ நூல்: 'ஸாதுல் மஆத்', 04/189 }

           قال العلّامة إبن القيم رحمه الله تعالى:-

 قال الله تعالى: *« وبشّر الصّابرين الّذين إذا أصابتهم مصيبة قالوا إنّا للّه وإنا إليه راجعون أولئك عليهم صلوات من رّبّهم ورحمة وأولئك هم المهتدون »* (سورة البقرة، الآيات : ١٥٥-١٥٧) 

           { وهذه الكلمة من أبلغ علاج المصاب وأنفعه له في عاجلته وآجلته، فإنها تتضمّن أصلين عظيمين، إذا تحقق العبد بمعرفتها تسلى عن مصيبته:

*أحدهما:* أن العبد وأهله وماله ملك للّه عزّ وجلّ حقيقة، وقد جعله عند العبد عارية، فإذا أخذه منه فهو كالمعير يأخذ متاعه من المستعير.

*والثاني:*  أن مصير العبد ومرجعه إلى الله مولاه الحق، ولا بدّ أن يخلف الدنيا وراء ظهره ويجيئ ربّه فردا كما خلقه أول مرّة بلا أهل ولا مال ولا عشيرة، ولكن بالحسنات والسّيّئات.

        فكيف يفرح بموجود أو يأسى على مفقود؟ ففكره في مبادئه ومعاده من أعظم علاج هذا الداء }.

[ زاد المعاد، ٤/١٨٩ باختصار ]


தமிழில்:

அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம், வவுனியா


Previous Post Next Post