உலக வாழ்க்கையின் இரகசியத்தை நீங்கள் புரிந்து கொண்டால் ......எவ்வாறு அதனுடன் நடந்து கொள்ளலாம் என்பதை புரிந்து கொள்வீர்கள்...

ஏன் நாம் நினைப்பதெல்லாம்  உலகத்தில் நடப்பதில்லை ?

ஸுப்ஹானல்லாஹ் !! 
(அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்)

இந்த உலகம்  மனிதனுக்கு நிலையான ஒன்றாக  இருக்காது .

செல்வம் வந்தால் நிம்மதி இருக்காது. நிம்மதி வந்தால் செல்வம் இருக்காது. நிம்மதியும் செல்வமும் வந்தால் மனதிற்கு பிடித்தமான (ஸாலிஹான )மனைவி கிடைக்காமல் போய்விடுவாள்.
மனதிற்கு பிடித்தமான மனைவி கிடைத்தால் நற்குணங்கள் கொண்ட பிள்ளைகள் கிடைக்காது !!!

நல்ல பிள்ளைகள் கிடைத்தால், அவர்களுக்கு செலவு செய்யும் அளவுக்கு போதுமான வருமானம் நமக்கு கிடைக்காது!!

நமது தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான வருமானம் கிடைத்தால், துர்குணம் கொண்ட பிள்ளைகள் கிடைப்பார்கள்!!!

நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்து விடயங்களும் நமக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தால், நாம் உடல் ஆரோக்கியமற்றவராக இருப்போம் !!!

இமாம் ஸவுரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்...

"இவ்வுலகம் ஓர் நிலையான இன்பங்கள் கொண்ட இல்லம் அல்ல,  
இன்பங்களும் துன்பங்களும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட இல்லம்"

இவ்வுலகம் துன்பமும் இன்பமும் மாறி மாறி வரும் ஓர் வீடாகும்.

இதை அறிந்து கொண்டால், நிம்மதியான தருணங்களில் நாம் அதிகம் மகிழ்ச்சி அடைய தேவையுமில்லை !!

துன்பமான தருணங்களில் அதிகம் கவலை கொள்ள தேவையில்லை !!

அல்லாஹ் இவ்வுலகத்தை, நமக்கு சோதனையாக ஆக்கி வைத்துள்ளான்.
மறுமையை, நமக்கு நிலையான ஒரு தங்குமிடமாக ஆக்கி வைத்திருக்கிறான்.

அதனால் தான், அல்லாஹ் இவ்வுலகத்தின் சோதனையை மறுமையின் வெகுமதியாக ஆக்கி உள்ளான்.

மறுமையின் வெகுமதியை, இவ்வுலகத்தின் சோதனைக்கு பகரமாக ஆக்கியுள்ளான்.

 உலகில் நாம் பெற்ற நலவுகள் அனைத்தையும் மற்றவர்களுக்கு  வழங்குவதற்காகவும்,  இறைவனால் 
சோதிக்கப்படுவதெல்லாம் அவனிடமிருந்து நற்கூலி வழங்கப்படுவதற்காகவும் மட்டுமே என்பதை விளங்க வேண்டும்.

இவ்வுலகம் ஓர் சீர் பெற்ற இல்லம் அல்ல, சீரற்ற இல்லமே.

இவ்வுலகில் எப்பொழுதும் பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். நமக்கு பிடித்த விதத்தில் இவ்வுலகத்தில் எதுவும் கிடைக்காது!!

இவ்வுலகம் குறை உடையதாக இருப்பதே நமக்கு ஓர் அருள்தான் !!

நாம் விரும்பி அடிப்படையில் உலகம் நம்முடன் நடந்து கொண்டால், அது நமக்கு சோதனையே இன்றி வேறு ஏதும் இல்லை !!

காரணம், நாம் இவ்வுலக இன்பங்களில் மூழ்கி விடுவோம் . அல்லாஹ்வின் சந்திப்பை நாம் கொஞ்சம் கொஞ்சமாக வெறுத்து விடுவோம்!!

யா அல்லாஹ்!!
மரணம் வரும் வரை சத்தியத்தில் நிலைத்திருக்க தவ்பீஃக் செய்வாயாக !! (வாய்ப்பளிப்பாயாக) !!

நன்றி - அஷ்ஷேக் நிஜாமுதீன் மதனி
 
-தமிழில்
உஸ்தாத் SM.இஸ்மாயீல் நத்வி 

سر من أسرار الدنيا لو فهمته عرفت كيف تتعامل معها

لماذا لا تسير الأمور في الدنيا كما نريد ؟

سبحان الله .. لا تستقيم هذه الدنيا لإنسان !

يأتيه المال ويفقد الطمأنينة ، تأتيه الطمأنينة ويفقد المال ، يأتيه المال والطمأنينة فيفقد الزوجة الصالحة ، تأتيه الزوجة الصالحة فيفقد الأولاد الأبرار ، يأتيه أولاد أبرار لكن ليس له دخل يكفيهم ، يأتيه دخل يكفيهم وأولاده أشرار ، كلّ شيءٍ حوله على ما يُرام لكن صحّته معلولة !!

يقول الثوري رحمه الله 
" إن هذه الدنيا دار التواء لا دار استواء، ومنزل ترحٍ لا منزل فرح، فمن عرفها لم يفرح لرخاء، ولم يحزن لشقاء، قد جعلها الله دار بلوى، وجعل الآخرة دار عقبى، فجعل بلاء الدنيا لعطاء الآخرة سبباً، وجعل عطاء الآخرة من بلوى الدنيا عوضاً، فيأخذ ليعطي، ويبتلي ليجزي "

إذاً هي دار إلتواء - لا دار استواء ..
يعني لا تستوي أبداً ، مُحال أن تستقيم لك الأمور كلّها ..

رُكِّبت هذه الدنيا على النقص رحمةً بنا ، و لو جاءت  لك الأمور كما تشتهي فهذه أكبر مصيبة ، لأنه لو تمَّت لك الأمور كما تريد، لركنت إلى الدنيا ، ولكرِهت لقاء الله عزَّ وجلَّ...اللهم الثباااات حتى الممات .

    منقول
أحدث أقدم