இமாம் ஷாஃபிஈ ரஹி அவர்களின் கல்வித் தேடல் பற்றிய தொடர் பற்றி படிக்கின்ற போது இமாம் மாலிக் வரை அவரது ஆசிரியர் தொடர் சென்றடைகின்றது. இமாம் மாலிக்கின் ஆசிரியரான இமாம் நாஃபிஃ ரஹி அவர்கள் தாயீன்களில் ஒருவர் என்றும், அவரது ஆசிரியரான நபித்தோழர் இப்னு உமர் (ரழி) என்றும் அவரது முதன்மையான வழிகாட்டி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்றும் வரலாறு கூறுகின்றது.
அப்படிப் பார்க்கின்ற போது இமாம் மாலிக்கின் தெளிவான அகீதா கோட்பாடு இறைத் தூதர் மற்றும் நபித்தோழர்கள், தாபியீன்கள் வழி வந்த கொள்கை கோட்பாடு என்பதும் அதுவே ஷாஃபி இமாமின்
கோட்பாடு என்பதும் முடிவாகும்.
மாத்திரமின்றி, இமாம் மாலிக்கின் கல்வி வழியில் இமாம் ஷாஃபிஈ அவர்களும் சென்றிருப்பதும்
புலனாகும்.
இமாம் மாலிக் அவர்கள் தனது காலத்தில் கேள்விப்பட்ட சூஃபிகளைப் பைத்தியக்காரர்கள்
எனக் கூறியதைப் போன்று இமாம் ஷாஃபிஈ அவர்களும் காலையில் சூஃபியாக இருப்பவன் நடுப்பகலில் பைத்தியம் பிடித்திருப்பான் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் ஷாஃபிஈ (ரஹி) அவர்கள் ஸலஃப் அகீதாவுடையவர் என்பதை அவரது
அதி சிரேஷ்ட மாணவரான முஸனி என்பவரின் சுன்னா என்ற நூலும் மற்றும் பல நூல்களும் சான்றுகளாக விளங்குகின்றன.
அத்துடன், இமாம் ஷாஃபிஈ (ரஹி)வின் அகீதா கோட்பாடு பற்றித் தேடினாலும் இமாம் ஷாஃபிஈ (ரஹி) அவர்கள் அல்லாஹ்வின் யதார்த்தமான பண்புகளாக இடம் பெறும் இஸ்திவா எனும் அர்ஷின் மீதிருப்பது, சிரிப்பு, முகம், இருகரம் போன்ற அல்லாஹ்வுடைய யதார்த்தமான பண்புகளை பொருளால் நிலைப்படுத்தி, அவற்றை சிதைக்காது முறையால் நிலைப்படுத்தாதும், நம்பி வாழ்ந்ததே பதிவு செய்யப்பட்டுள்ளது.
இமாம் ஷாஃபிஈ ரஹி அவர்கள் அல்லாஹ் அர்ஷின் மீதிருப்பவன் அவன் அடியார்களை நெருங்கிவருவனபவன் என்ற தனது நிலைப்பாட்டை இமாம்களான சுஃப்யான், மாலிக் போன்றவர்களிடம் இருந்தும் கற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளதை ஷாஃபி மத்ஹபினர் இன்று அறியாதிருப்பது போல அஷ்அரி இமாம் தவ்பாச் செய்த குல்லாபிய்யா கொள்கையில் இருப்பதையும் தாம் அறியாதவர்களாக இருக்கின்றனர் என்பதே யதார்த்தம்.
قال الشّافعي رحمه الله :
"القول في السّنة التي أنا عليها ، ورأيت أصحابنا عليها أهل الحديث الذين رأيتهم وأخذت عنهم مثل ؛ سفيان ومالك وغيرهما : الإقرار بشهادة أن لا إله إلا الله ، وأنّ محمدا رسول الله ، وأنّ الله تعالى على عرشه في سمائه يقرب من خلقه كيف شاء ، وأن الله تعالى ينزل إلى سماء الدنيا كيف شاء ".
رواه ابن قدامة في اثبات صفة العلو ١٨٠والذهبي في العلو ١٢٠ وغيرهم. (منقول من صفحة)
நான் இருக்கும் வழி என்பதும், ஹதீஸ் வழி நடப்போரான சுஃப்யான், மாலிக் போன்றோர் நடக்க நான் பார்த்த வழியுமாவது வணங்கிவழிபடத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் மனதாற ஏற்றுக் கொள்வதும், நிச்சயமாக அல்லாஹ் தனது அர்ஷின் மீது, தான் நாடியபடி இருக்கின்றான். அவன் தான் நாடியபிரகாரம் தனது படைப்புகளை அண்மிக்கின்றான்.அவன் தான் நாடியபடி அடிவானத்திற்கும் இறங்குகின்றான் என்பதாகும்.
(பார்க்க: இப்னு குதாமா, அல்உலு)
அரபுலகிலகிலும் இலங்கை, தென்னிந்திய அரபி மத்ரஸாக்களிலும் மிகவும் மரியாதையாக பேசப்படும் அறிஞர்தான் அல்ஹாஃபிழ் இப்னு
ஹஜர் அல்அஸ்கலானி (ரஹி) அவர்கள்.
அவர்கள் இஸ்திவா தொடர்பாக தரும் பின்வரும் கருத்தை அஷ்அரிய்யா ஷாஃபிக்கள் சற்று சிந்திப்பது கடமையாகும்.
அவ்ஸாயீ (ரஹி) மூலம் இமாம் பைஹகி அவர்கள் குறிப்பிடுவதாக பின்வருமாறு கூறுகின்றார்கள் .
قال ابن حجر العسقلاني : [[ أَخْرَجَ الْبَيْهَقِيُّ بِسَنَدٍ جَيِّدٍ عَنِ الْأَوْزَاعِيِّ قَالَ كُنَّا وَالتَّابِعُونَ مُتَوَافِرُونَ نَقُولُ إِنَّ اللَّهَ عَلَى عَرْشِهِ وَنُؤْمِنُ بِمَا وَرَدَتْ بِهِ السُّنَّةُ مِنْ صِفَاتِهِ..]] | فتح الباري (13-406)
நாமும் பலதரப்பட்ட தாபியீன்களும் அல்லாஹ் தனது அர்ஷின்மீதிருக்கின்றான் எனக் கூறுவோராக இருந்தோம். சுன்னாவில் அவனது பண்புகள் வந்த படியே நாம் நம்பிக்கை கொள்வோராகவும் இருந்தோம்.(( ஃபத்ஹுல் பாரி))
அதாவது அல்லாஹ்வின் பண்புகளை வெளிப்படையான பொருளில் நிலைப்படுத்துவது தாபியீன்களின் வழியாகும்.
ஷாஃபிஈ மத்ஹபினர் அகீதாவில் அஷ்அரீ க்களாக தடம் புரண்ட கதை
-----
ஷாஃபிஈ மத்ஹபினர் ( கப்ரு வணங்கிகள்+ கப்ரு வணங்காத சாதாரண பித்அத்வாதிகளான அஷ்அரிக்கள்) இருசாராரும் இமாம் ஷாஃபி (ரஹி) அவர்களை அகீதாவில் சரிகாணாது அவர்களை உதறித் தள்ளிவிட்டு , அவரது மத்ஹபில் பற்றாளர்களாக இருப்பது பற்றி அரபிக் கல்லூரி மாணவர்கள் ஏன் இந்த முரண்பாடு என்ற கேள்வி எழுப்புவது அந்த முரண்பாட்டை தீர்க்க உதவும் .
ஷாஃபிஈ மத்ஹபினர் அகீதாவிலும் மத்ஹபிலும் ஷாஃபிகளே! என்ற ஆரம்ப கால நிலை மாறி, அகீதாவில் அஷ்அரிக்கள் என்றும் மத்ஹபில் ஷாஃபியாக்கள் என்றும் பிற்காலத்தில் கூறுகின்ற நிலை மாறிய சரித்திரப் பின்னணி பற்றி இமாம் இப்னுல் ஜவ்ஸியின் பின்வரும் கருத்துரை சற்று ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியவை.
قال ابن الجوزي : الأشعري مخالف للإجماع ولأهل السنة وكان يخاف على نفسه من القتل لمخالفته أهل السنة وأنه مسبب للفتن، والأشاعرة مخالفون لعقيدة الشافعي ولم تقم لهم قائمة الا بنصرة السلاطين لمذهبهم .
அஷ்அரி அவர்கள் சுன்னாக்களின் ஏகோபித்த கருத்திற்கும் அஹ்லுஸ்ஸுன்னாவிற்கும் முரண்பட்டவராகும்.
அஹ்லுஸ்ஸுன்னாகொள்கைக்கு மாற்றமாக அவர் நடந்ததால் தான் கொலை செய்யப்படுவதை அஞ்சினார். அவரே இந்தக் கொள்கை குழப்பத்தின் சூத்திர தாரியும் கூட.
அஷ்அரிக்கள் இமாம் ஷாஃபியின் அகீதாவிற்கு மாறுபட்டவர்களே! ஆட்சித் தலைவர்கள் சிலரது ஆட்சியில்தான் அவர்களின் கொள்கைக்கு உயர்மட்டப்பட்டன.
தொடர்ந்து அவர்கள் கூறுகின்ற போது:
قال ابن الجوزي:
على بن اسماعيل أبو الحسن الأشعري المتكلم ولد سنة ستين ومائتين، وتشاغل بالكلام، وكان على مذهب المعتزلة زمانا طويلا، ثم عنّ له مخالفتهم، وأظهر مقالة خبطت عقائد الناس وأوجبت الفتن المتصلة، وكان الناس لا يختلفون فِي أن هذا المسموع كلام الله، وأنه نزل به جبريل عليه السلام على محمد صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فالأئمة المعتمد عليهم قالوا أنه قديم، والمعتزلة قالوا هُوَ مخلوق، فوافق الأشعري المعتزلة في أن هذا مخلوق، وقال: ليس هذا كلام الله، إنما كلام الله صفة قائمة بذاته، ما نزل ولا هو مما يسمع.
وما زال منذ أظهر هذا خائفًا على نفسه لخلافه أهل السنة، حتى أنه استجار بدار أبي الحسن التميمي حذرا من القتل، ثم تبع أقوامٌ من السلاطين مذهبه فتعصبوا له وكثر أتباعه، حتى تركت الشافعية معتقد الشافعي رَضِيَ اللَّه عَنْهُ ودانوا بقول الأشعري .
அலி பின் இஸ்மாயீல் என்ற இயற் பெயரில் அறியப்பட்ட
தர்க்கவிலாளரான.
அபுல் ஹஸன் அல்அஷ்அரி அவர்கள் ஹிஜ்ரி 260 பிறந்தார். அவர் தர்க்கவியலில் ஈடுபாடு காட்டி வந்தார். நீண்ட நெடும் காலமாக
முஃதஸிலா - (பகுத்தறிவை வணக்கமாக எடுப்போர்) பிரிவினரோடு இருந்த அவர் திடீரென அவர்களுக்கு முரணாகப் பேசினார். அவர் கூறிய கருத்தால் மக்கள் தொடர் குழப்பத்தில் வீழ்ந்தனர். மக்கள் தாம் செவிமடுக்கும் இந்த வேதம் (குர்ஆன்) அல்லாஹ்வின் யதார்த்தமான பேச்சு என்பதிலும் ஜிப்ரீல் மூலம் அதனை முஹம்மது (ஸல்) மீது இறக்கிவைத்தான் என்பதிலும் ஒருமித்த கருத்தில் இருந்து வந்தனர் . நம்பத்தகுந்த இமாம்கள் அது பழமையானது என்ற பொருள் தந்தனர்.
அஷ்அரி என்பவரோ இல்லை அது அல்லாஹ்வுடைய பேச்சுக் கிடையாது.
அல்லாஹ்வுடைய பேச்சு என்பது அவனில் நிலையான பண்பாகும். அது இறக்கப்பட்டது கிடையாது அது காதால் செவிமடுக்கப்படும் ஒன்றுமில்லை எனக் கூறினார் .
அஹ்லுஸ் ஸுன்னாவின் கோட்பாட்டிற்கு மாற்றமாக அவர் கூறிய இந்த கருத்தின் காரணமாக கொலை அச்சம் கொண்டிருந்தததால் அபுல் ஹஸன் அத்தமீமி என்பவரின் வீட்டில் தஞ்சமடைந்தார்.
பி்ன்னர், அவரது கருத்தை அக்கால அரச மட்டத்தில் உள்ள பலர் பிடிவாதமாகப் பின் பற்றியதால் அவருக்கு ஆதரவாளர்கள் அதிகரித்தனர். காலப் போக்கில் ஷாஃபிஈ மத்ஹபினரும் தமது மத்ஹப் இமாமின் நம்பிக்கையை துறந்து விட்டு அஷ்அரியின் நம்பிக்கையை மார்க்காக்கிக் கொண்டனர். இதுவே ஷாஃபிஈ மத்ஹபினர் அஷ்அரிக்களாக மாறிய சரித்திரச் சுருக்கமாகும்.
இமாம் இப்னுல் ஜவ்ஸி ரஹி
நூல் விபரம் :
ا[[ لكتاب: المنتظم في تاريخ الأمم والملوك الجزء: 14 الصفحة: 29]]
المؤلف: جمال الدين أبو الفرج عبد الرحمن بن علي بن محمد الجوزي (المتوفى: 597هـ)
المحقق: محمد عبد القادر عطا، مصطفى عبد القادر عطا
الناشر: دار الكتب العلمية، بيروت
الطبعة: الأولى، 1412 هـ – 1992 م
எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி