கண்ணேறு உண்மையே

1) அல்லாஹ் சொல்லுகிறான்:

1. وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ

(முஹம்மதே!) இந்த அறிவுரையைச் செவியுற்ற போது (ஏகஇறைவனை) மறுப்போர் உம்மைத் தமது பார்வைகளால் வீழ்த்தப் பார்க்கின்றனர். "இவர் பைத்தியக்காரர்'' என்றும் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன்  68:51

2. وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
பொறாமை கொள்ளும் போது ஏற்படும் பொறாமை காரணின் தீங்கை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்

2) கண்ணேறு பற்றி நபியவர்கள்
கூறியுள்ள செய்திகள்.

3. صحيح البخاري  – (15  84)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَيْنُ حَقٌّ وَنَهَى عَنْ الْوَشْمِ
இறைத்தூதர் (ﷺ) அவர்கள் ‘கண்ணேறு (திருஷ்டிபடுவது) உண்மைதான்” என்று கூறினார்கள். மேலும், பச்சை குத்துவதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி)
ஆதாரம் : புஹாரி

4. صحيح مسلم – (7 13)
عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « الْعَيْنُ حَقٌّ وَلَوْ كَانَ شَىْءٌ سَابَقَ الْقَدَرَ سَبَقَتْهُ الْعَيْنُ وَإِذَا اسْتُغْسِلْتُمْ فَاغْسِلُوا ».

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். கண்ணேறு உண்மையாகும். இறை நிர்ணயத்தை முந்தக் கூடிய ஒன்றிருக்குமானால் அதைக்  கண்ணேறு முந்தியிருக்கும். கழுவித் தருமாறு நீங்கள் கேட்கப்பட்டால் கழுவிக் கொடுங்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்

5. صحيح البخاري  – (14  382)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ أَمَرَ أَنْ يُسْتَرْقَى مِنْ الْعَيْنِ

இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கண்ணேறுவி(ன் தீயவிளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி ‘கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி)
ஆதாரம் : புஹாரி

6. صحيح البخاري  – (14  383)
عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى فِي بَيْتِهَا جَارِيَةً فِي وَجْهِهَا سَفْعَةٌ فَقَالَ اسْتَرْقُوا لَهَا فَإِنَّ بِهَا النَّظْرَةَ

நபி(ﷺ) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி(ஸல்) அவர்கள், ‘இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண்ணேறுபட்டிருக்கிறது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரழி)
ஆதாரம் : புஹாரி

3) நபி (ﷺ) அவர்கள் தமது பேரப்பிள்ளைகளுக்காக ஓதிப் பாதுகாப்புத் தேடிய துஆ.

عن ابن عباس رضي اللّه عنهما قال:
"كان رسولُ اللَّه صلى اللّه عليه وسلم يعوّذ الحسن والحسين:

3371. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் 
நபி(ஸல்) அவர்கள், ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் தேடி வந்தார்கள்.

أُعِيذُكُما بِكَلِماتِ اللَّهِ التَّامَّةِ
அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டும்

 مِنْ كُلِّ شَيْطانٍ وَهامَّةِ،

ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும்

وَمِنْ كُلّ عَيْنٍ لامَّة
ٍ தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் தேடுகிறேன்'

ويقول: إنَّ أباكُما كان يُعَوِّذُ بِها إسْماعِيلَ وَإسْحاقَ" صلى اللّه عليهم أجمعين وسلم.

 '   எனும் இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல்(அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் - என்று கூறுவார்கள். 

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்

4) நபி(ﷺ) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்காக ஜிப்ரீல் அலைஸலாம் ஓதிப்பார்க்கும் பிரார்த்தனை.

4172 حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ الدَّرَاوَرْدِيُّ ، عَنْ يَزِيدَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ أُسَامَةَ بْنِ الْهَادِ ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ عَائِشَةَ ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَنَّهَا قَالَتْ : *كَانَ إِذَا اشْتَكَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَقَاهُ جِبْرِيلُ

4402. நபி (ﷺ) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்,   ஓதிப்பார்ப்பார்கள்.

 ، قَالَ : بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ ،
அல்லாஹ்வின் பெயரால் (ஓதிப் பார்க்கிறேன்). அவன் உங்களுக்கு குணமளிப்பானாக!

وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ ،
அனைத்து நோயிலிருந்தும் உங்களுக்குச் சுகமளிப்பானாக.

 وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ،

பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது ஏற்படும் தீமையிலிருந்தும்

وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ

கண்ணேறு உள்ள ஒவ்வொருவரின் தீமையிலிருந்தும் (காப்பானாக!).

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 39. முகமன் (சலாம்)


நட்புடன்:
_அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ_
_இலங்கை_
أحدث أقدم