கோள் சொல்லுதல் ஒரு பெரும் பாவம்

வரைவிலக்கணம்:

النَّمِيمَة: (نَـقْلُ الحديث من قومٍ إلى قوم على جهة الإفْسادِ والشَّرِّ)
النهاية في غريب الحديث لابن الأثير 5/256
இப்னுல் அஸீர் (றஹிமஹுமல்லாஹ்) கூறினார்:
கோள் சொல்லுதல் என்பது சீர்குலைக்கும், கெடுதி ஏற்படும் வகையில் ஒரு சாராரிடமிடமிருந்து இன்னொரு சாராருக்குப் பேச்சைக் கடத்துதல்.

கோளுக்கும் புறத்திற்கும் இடையிலுள்ள வித்தியாசம்:

قال الحافظ ابن حجر: النَّمِيمَة نقل حال شخص لغيره على جهة الإفساد بغير رضاه، سواء كان بعلمه أم بغير علمه.
والغيبة ذكره في غيبته بما لا يرضيه، فامتازت النَّمِيمَة بقصد الإفساد، ولا يشترط ذلك في الغيبة.
فتح الباري 10/473
இமாம் இப்னு ஹஜர் (றஹிமஹுமல்லாஹ்) கூறினார்கள்:

கோள் என்பது (ஒற்றுமை) சீர்குலைவை ஏற்படுத்தும் விதத்தில் ஒருவருடைய நிலையை அவரது விருப்பத்திற்கு மாறாக இன்னொருவருக்குத் தெரியப்படுத்துவது; அதனை அவர் அறியும் விதத்தில் செய்தாலும், அவர் அறியாத விதத்தில் செய்தாலும் அது கோளாகும். 

புறம் என்பது அவர் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றி அவர் விரும்பாததைக் கூறுதல்.

எனவே, கோளில் (ஒற்றுமை) சீர்குலைவை ஏற்படுத்தும் நோக்கம் இருக்கும். புறம் பேசுவதில் அந்த நோக்கம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதில்லை.

கோள் பற்றி அல்குர்ஆனில்:

-{وَلا تُطِعْ كُلَّ حَلاَّفٍ مَّهِينٍ هَمَّازٍ مَّشَّاء بِنَمِيمٍ مَنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ} [القلم: 10-12]
அல்லாஹ் கூறுகின்றான்:
{அதிகமாக சத்தியம் செய்பவனான, இழிவானவனான, குறை (புறம்) பேசுபவனான, *கோள் சொல்லித் திரிபவனான,* நல்ல விடயங்களை அதிகமாக தடுப்பவனான, வரம்பு மீறுபவனான, பாவியான ஒவ்வொருவருக்கும் வழிப்படாதீர்.} [அல்குர்ஆன் 68:10-12]

قال ابن كثير في قوله تعالى: (مَّشَّاء بِنَمِيمٍ يعني: الذي يمشي بين الناس، ويحرش بينهم وينقل الحديث لفساد ذات البين وهي الحالقة)
تفسير ابن كثير 8/191

'மஷ்ஷாஇன் பினமீம்' என்ற அல்லாஹ்வின் மேற்படி வார்த்தைக்கு விளக்கமாக இப்னு கஸீர் (றஹிமஹுமல்லாஹ்) கூறினார்கள்:
மனிதர்களுக்கு மத்தியில் சென்று, அவர்களைத் தூண்டிவிட்டு, ஒற்றுமையைக் குலைப்பதற்காக (மற்றவர்களின்) பேச்சுக்களை எடுத்துக்  கூறுபவன். இத்தகைய செயல் தான் (மார்க்க உணர்வை) மழித்துவிடக் கூடியது.

கோள் பற்றி ஸுன்னாஹ்வில்:

 عن حذيفة بن اليمان رضي الله عنهما مرفوعا: لا يَدْخُلُ الجَنَّةَ قَتّاتٌ. وفي رواية لمسلم: نمّام.
البخاري ٦٠٥٦ ومسلم ١٠٥
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: கோள் சொல்பவர் சுவனம் நுழையமாட்டார்.
அறிவிப்பவர்: ஹுதைஃபஹ் (றழியல்லாஹு அன்ஹு)
புகாரி 6056, முஸ்லிம் 105.

குறிப்பு: அதாவது நரகமே நுழையாத ஆரம்பத்திலேயே சுவனம் நுழையும் வெற்றியாளர்களுடன் கோள் பேசுபவர் இருக்கமாட்டார். இவர் முஃமினாக இருந்தாலும்  அல்லாஹ் மன்னித்தாலே தவிர நரகில் தண்டனை பெற்ற பிறகே சுவனம் நுழைய முடியும். மேற்படி ஹதீஸ் கோள் மூட்டுவது பெரும் பாவம் என்பதை உறுதிசெய்கின்றது.

عن عبدالله بن عباس رضي الله عنهما: خَرَجَ النبيُّ ﷺ مِن بَعْضِ حِيطانِ المَدِينَةِ، فَسَمِعَ صَوْتَ إنْسانَيْنِ يُعَذَّبانِ في قُبُورِهِما، فَقالَ: يُعَذَّبانِ، وما يُعَذَّبانِ في كَبِيرٍ، وإنَّه لَكَبِيرٌ، كانَ أحَدُهُما لا يَسْتَتِرُ مِنَ البَوْلِ، وكانَ الآخَرُ يَمْشِي بالنَّمِيمَةِ ثُمَّ دَعا بجَرِيدَةٍ فَكَسَرَها بكِسْرَتَيْنِ أوْ ثِنْتَيْنِ، فَجَعَلَ كِسْرَةً في قَبْرِ هذا، وكِسْرَةً في قَبْرِ هذا، فَقالَ: لَعَلَّهُ يُخَفَّفُ عنْهما ما لَمْ يَيْبَسا.
البخاري ٦٠٥٥،  ومسلم (٢٩٢) 
இப்னு அப்பாஸ் (றழியல்லாஹு அன்ஹுமா) கூறினார்கள்: 
நபி ﷺ அவர்கள் மதீனஹ்வின் தோட்டம் ஒன்றிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தபோது தம் மண்ணறைகளில் (கப்றுகளில்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு மனிதர்களின் (கூக்) குரலைச் செவியுற்றார்கள். அப்போது நபி ﷺ அவர்கள் '(இவர்கள்) இருவரும் (மண்ணறைக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு பெரும் செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. ஆனாலும், அது ஒரு பெரிய (பாவச்) செயல்தான். இவர்களில் ஒருவர் சிறுநீரில் இருந்து (அதாவது அது உடலிலும், உடையிலும் படுவதில் இருந்து) தற்காத்துக் கொள்ளமாட்டார். இன்னொருவர் (மக்களிடையே) *கோள் சொல்லித் திரிந்துகொண்டிருந்தார்'* என்று கூறினார்கள்.  
பிறகு நபி ﷺ அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை 'இரண்டு துண்டாக' அல்லது 'இரண்டாக' உடைத்து ஒரு துண்டை இவரின் மண்ணறையிலும் மற்றொரு துண்டை மற்றவரின் மண்ணறையிலும் (ஊன்றி) வைத்தார்கள். அப்போது 'இவ்விரண்டின் ஈரம் உலராத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம்' என்று கூறினார்கள். 
 புகாரி 6055, முஸ்லிம் 292.

குறிப்பு: அல்லாஹ் நபி ﷺ அவர்களுக்கு விஷேடமாக கப்ரில் நடக்கும் வேதனையை செவியுறச் செய்கின்றான். கோள் பேசுபவருக்கு நரகத்தில் மாத்திரமன்றி கப்ரிலும் தண்டனை வழங்கப்படும். கோள் சொல்லுதல் என்பது பெரும் பாவம் என்பதை இந்த ஹதீஸும் உறுதிசெய்கின்றது.

عن عبدالله بن مسعود رضي الله عنه، قال: إنَّ مُحَمَّدًا ﷺ قالَ: أَلا أُنَبِّئُكُمْ ما العَضْهُ؟ هي النَّمِيمَةُ القالَةُ بيْنَ النّاسِ. وَإنَّ مُحَمَّدًا ﷺ قالَ: إنَّ الرَّجُلَ يَصْدُقُ حتّى يُكْتَبَ صِدِّيقًا، ويَكْذِبُ حتّى يُكْتَبَ كَذّابًا.
مسلم ٢٦٠٦
முஹம்மத் ﷺ அவர்கள் கூறினார்கள்: எது 'அழ்ஹ்'? என்று உங்களுக்குத் தெரியுமா? அது தான் மனிதர்களுக்கு மத்தியில் அதிகம் பேசப்படும் கோளாகும். 
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (றழியல்லாஹு அன்ஹுமா)
முஸ்லிம் 2606.

குறிப்பு: 'அழ்ஹ்' என்ற சொல்லுக்கு பொய், இட்டுக்கட்டு, சூனியம் போன்ற கருத்துக்கள் உள்ளன. அதாவது கோள் பெரும்பாலும் பொய் கலந்ததாக இருக்கும். மேலும், சூனியம் எவ்வாறு மனிதர்களுக்கு மத்தியில் பிரிவினையையும் பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றதோ, அவ்வாறே புறம் எனும் ஒருவரின் பேச்சை இன்னொரிடம் கொண்டு செல்லும் செயலும் அவர்களுக்கு மத்தியில் பிரிவினையையும் பிரச்சினையையும் ஏற்படுத்துகிறது. 
எனவே, கோள் மூட்டுவது பெரும் பாவம் என்பதையும் அது இஸ்லாம் மனிதர்களுக்கு மத்தியில் ஏற்படுத்த முயலும் ஒற்றுமையைச் சீர்குலைத்து, உள்ளங்களுக்கு மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் மோசமான செயல் என்பதையும் இந்த ஹதீஸும் உறுதிப்படுத்துகின்றது.
உதாரணமாக பார்க்க: 
النهاية في غريب الحديث، (عضه)، 3/253
القول المفيد على كتاب التوحيد، لابن عثيمين، 1/525
الجمهرة معلمة مفردات المحتوى الإسلامي 

قال النبي ﷺ: خيارُ عِبادِ اللهِ الذين إذا رُؤوا؛ ذُكِرَ اللهُ، وشِرارُ عِبادِ اللهِ المشّاؤونَ بالنَّميمةِ، المُفرِّقونَ بينَ الأحِبَّةِ، الباغونَ البُرَآءَ العَنَتَ.
المسند ١٧٩٩٨  
قال الألباني: حسن لغيره، وقال ش الأرناؤوط: حسن بشواهده.  
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் அடியார்களில் சிறந்தவர்கள் யாரெனில் அவர்களைப் பார்த்தால் அல்லாஹ் நினைவு கூரப்படுவான். அல்லாஹ்வின் அடியார்களில் கெட்டவர்கள் யாரெனில் புறம் பேசித் திரிபவர்கள், நேசம் வைத்திருப்பவர்களுக்கிடையில் பிரிப்பவர்கள், குற்றமற்றவர்களுக்கு சிரமத்தை / குறையை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள்.
அஹ்மத் 17998.

இந்த ஹதீஸ் 'ஹஸன் லிகைரிஹ்' என்ற தரத்திலுள்ள ஆதாரபூர்வமான  ஹதீஸ் என்று அல்பானி மற்றும் ஷுஐப் அல்-அர்னாஊத் ஆகிய ஹதீஸ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்பு: கோள் சொல்லித் திரிபவர்கள் பெரும் பாவிகள்; அவர்களது செயலால் இஸ்லாம் தடைசெய்கின்ற பிரிவினையும், வெறுப்புணர்வும், அநீதியும் ஏற்படுகின்றன என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. 

-ஸுன்னா அகாடமி
أحدث أقدم