1. அபூபக்ர் அல் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு. அல்லாஹ்வின் தூதரின் கலீஃபா, சொர்க்கவாதி என்று நன்மாராயம் கூறப்பட்டவர்களில் ஒருவர்.
2. உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு, இரண்டாம் கலீஃபா, சொர்கத்தை நன்மாராயமாக கூறப்பட்ட 10 நபர்களில் ஒருவர்.
3. உஃதுமான் பின் அஃப்ஃபான் ரளியல்லாஹு அன்ஹு. மூன்றாம் கலீஃபா, சொர்க்கவாதி என்று நன்மாராயம் கூறப்பட்டவர்களில் ஒருவர்.
4. அலீ பின் அபீ தாலிப் ரளியல்லாஹு அன்ஹு, நான்காவது ஃகலீஃபா, சொர்க்கத்தை நன்மாராயம் கூறப்பட்ட 10 நபர்களில் ஒருவர்.
5. ஜூபைர் பின் அவ்வாம் ரளியல்லாஹு அன்ஹு, சொர்க்கத்தை நன்மாராயம் கூறப்பட்டவர்களில் ஒருவர்.
6. அபூ உபைதாஹ் பின் அல் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹு, சொர்க்கத்தை நன்மாராயம் கூறப்பட்டவர்களில் ஒருவர்.
7. ஸஅது பின் அபி வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, சொர்க்கத்தை நன்மாராயம் கூறப்பட்ட 10 நபர்களில் ஒருவர்.
8. ஸஅது பின் ஜைது ரளியல்லாஹ அன்ஹு, சொர்க்கத்தை நன்மாராயம் கூறப்பட்ட 10 நபர்களில் ஒருவர்.
9. தல்ஹாஹ் பின் உபைதுல்லாஹ் ரளியல்லாஹு சொர்க்கத்தை நன்மாராயமாக கூறப்பட்ட 10 நபர்களில் ஒருவர்.
10. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹ அன்ஹு. சொர்க்கம் நன்மாராயமாக கூறப்பட்ட 10 நபர்களில் ஒருவர்.
11. அபூ அல் தர்தாஃ உவைமிர் பின் ஜைத் ரளியல்லாஹு அன்ஹு, இச்சமுதாயத்தின் மா மேதை.
12. அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரலியல்லாஹு, மதீனாவின் ஆரம்ப நாட்களில் இவரது வீட்டில் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்தார்கள்.
13. அபூ துஜானா ஸம்மாக பின் ஃகர்ஷஹ் ரளியல்லாஹு அன்ஹு, அல்லாஹ்வின் தூதரின் வாளை கையில் ஏந்தியவர்
14. அபூதர் அல் ஙிஃபாரி ரளியல்லாஹு அன்ஹு,
15. அபூ ஸுஃப்யான் பின் ஹாரிஃத ரளியல்லாஹு அன்ஹு
16. அபூ தல்ஹஹ் ரளியல்லாஹ அன்ஹு, படையில் இவரின் சப்தம் ஆயிரம் நபர்களுக்கு நிகரானதாக இருக்குமாம்.
17. அபூ உபைதஹ் பின் ஜர்ராஹ் ரலியல்லாஹு அன்ஹு, இச்சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரம்.
18. அபூ மஹ்தூரஹ் ரலியல்லாஹு அன்ஹு, மக்காவில் முஅஃதீஃதினுர் ரஸுலாக இருந்தவர்.
19. அபூ மூஸா அல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு. யமனில் ஸஹாபாக்களுக்கிடையே சிறந்த மார்க்க சட்ட வல்லுனராக திகழ்ந்தவர்.
20. அபூ ஹுரைராஹ் ரலியல்லாஹு அன்ஹு, அல்லாஹ் ரஸுலின் நடைமுறைகளை அறியத் தருபவர் ஸஹாபாக்களில் முஹத்திஸாக திகழ்ந்தவர்கள்.
21. உபய்யு பின் கஃபு ரலியல்லாஹு அன்ஹு, அல்குர்ஆனை அழகுற ஓதுவதில் தலையாயவர்
22. உஸாமாஹ் பின் ஜைத் ரளியல்லாஹ அன்ஹு. நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனின் மகன்.
23. அஸ்அது பின் ஜராரஹ் அல் அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு.
24. உஸைத் பின் ஹுளைர் ரளியல்லாஹ அன்ஹு, இவர்கள் குர்ஆன் ஓதினால் மலக்குமார்கள் இறங்கி வருவார்கள்.
25. அனஸ் ரளியல்லாஹு அன்ஹு - நபியவர்களுக்கு 10 ஆண்டுகள் பணிவிடை செய்தார்கள்.
26. அஹ்பான் பின் அக்வஃ ரளியல்லாஹ அன்ஹு.
27. அல் பர்ராஉபின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு.
28. பிலால் பின் ரபாஹ் ரலியல்லாஹு அன்ஹு, முஅதீதினுர் ரஸுல் என்று பெயர் பெற்றவர்.
29. தமீம் அத் தாரி ரலியல்லாஹு அன்ஹு, தஜ்ஜாலை நேரில் கண்டவர்கள்.
30. தாபித் பின் கைஸ் ரளியல்லாஹ அன்ஹு, அல்லாஹ்வின் தூதரின் பேச்சாளர் ஃகதீப் என்று பெயர் பெற்றவர்.
31. ஜாபிர் பின் ஸம்ரஹ் ரளியல்லாஹு அன்ஹு, ஆயிரம் முறைக்கு மேல் நபிகளோடு தொழுதுள்ளார்கள்.
32. ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, ஸாஹிபுத் தஆம் என்று பெயர் பெற்றவர்.
33. ஜுபைர் பின் முத்இம் ரளியல்லாஹ அன்ஹு, குர்ஆனில் உள்ள ஸுரத்துத்-தூர் ஓதக் கேட்டு இஸ்லாமனவர்.
34. ஜரீர் பின் அப்துல்லாஹ் அல் பிஜ்லி ரளியல்லாஹு அன்ஹு, யமனில் வாழ்ந்த ஸஹாபாக்களில் மிகச் சிறந்தவர்.
35. ஜஃபர் பின்அபி தாலிப் ரளியல்லாஹு அன்ஹு, அஷ் ஷஹீத் அதீஃதய்யார் என்பது அவர்களின் பட்டப்பெயர். அடையாளப் பெயர் அபுல் மஸாகன்.
36. ஹாரிஃதஹ் பின் அல் நுஃமான் ரளியல்லாஹு அன்ஹு.
37. ஹுஜ்ரு பின் அஃதிய்யி ரளியல்லாஹு.
38. ஹுஃதைஃபஹ் பின் யமான் ரளியல்லாஹு அன்ஹு, நபிகளின் ரகசியம் காத்தவர்கள்.
39. ஹஸ்ஸான் பின் ஃதாபித் ரளியல்லாஹு அன்ஹு.
40. அல் ஹஸன் பின் அலீ பின் அபி தாலிப் ரலியல்லாஹு த ஆலா அன்ஹு, நபிகளின் பேரன், இரு மலர்களில் ஒரு மலர்.
41. அல் ஹுஸைன் பின் அலீ பின் தாலிப் ரளியல்லாஹு த ஆலா அன்ஹுமா, நபிகளாரின் பேரன். இரு மலர்களில் ஒரு மலர்.
42. ஹகீம் பின் ஹஜ்ம் ரளியல்லாஹு அன்ஹு.
43. ஹம்ஜா பின் அப்துல் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹு, அல்லாஹ்வின் சிங்கம், ஷுஹதாக்களில் தலையாயவர்.
44. அல் ஹுவைரிஃத் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு.
45. ஃகாலித் பின் வலீத் ரளியல்லாஹு அன்ஹு, அல்லாஹ்வின் போர் வாள்.
46. குஃபைப் பின் அதிய்யி ரளியல்லாஹு அன்ஹு.
47. குஜைமஹ் பின் ஃதாபித் ரளியல்லாஹு அன்ஹு, இவர் ஒருவரின் சாட்சியை இரு சாட்சிக்கு சமமாக கருதும் படி நபியவர்கள் கூறினார்கள்.
48. திஹ்யதுல் கல்பி ரளியல்லாஹு அன்ஹு, இவர்களின் தோற்றதீதில் ஜிப்ரீல் (அலை) நபியவர்களிடத்தில் வருவார்கள்.
49. ஜைத் பின் அர்கம் ரளியல்லாஹு அன்ஹு, இவர்களை அல்லாஹ்வே உண்மைபடுத்தினான்.
50. ஜைத் பின் ஃதாபித் ரலியல்லாஹு அன்ஹு, இவர்கள் இந்த சமுதாயத்தில் அனந்தரச் செத்து பாகப் பிரிவினை சம்மந்தமான அறிஞராக இருநதார்கள்.
51. ஜைத் பின் ஹாரிஃதஹ் ரளியல்லாஹ அன்ஹு, ஸஹாபாக்களில் இவர்களின் பெயர் மட்டுமே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
52. ஸாலிம் பின் உமைர் ரளியல்லாஹு அன்ஹு, இவர்கள்தான் இஸ்லாமுக்கு இடைஞ்சலும் நபிகளாருக்கு நோவினையும் தந்த உஸமாவு பின் மர்வானை கொன்றவர்கள்.
53. ஸாலிம் பின் மஃகல் ரளியல்லாஹு அன்ஹு. அபூ ஹுஃதைஃபஹ் அவர்களின் அடிமை, இவர்களை இஸ்லாமியரில் ஒருவராக ஆக்கியதற்காக நபியவர்கள் (ஸல்) அல்லாஹ்வைப் புகழ்ந்துள்ளார்கள்.
54. ஸஃத் பின் ரபீவு ரளியல்லாஹு அன்ஹு, ஒரு நாள் சொர்க்க வாடையை நுகர்ந்த ஸஹாபாக்களில் ஒருவர்.
55. ஸஃத் பனீ உபைத் ரளியல்லாஹு அன்ஹு, நாயகம் காலத்தில் குபா மஸ்ஜிதின் இமாமாக பணியிலிருந்தார்கள்.
56. ஸஃத் பின் உப்பாதஹ் ரளியல்லாஹ அன்ஹு, கஜ்ரஜ் குலத்தவரின் தலைவர்.
57. ஸஃத் பின் முஆத் ரளியல்லாஹு அன்ஹு, அவ்ஸ் கூட்டத்தாரின் தலைவர், இவரின் மரணத்தின் போது அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது.
58. ஸல்மான் அல் ஃபாரிஸிய்யி ரளியல்லாஹு அன்ஹு, பல வேதங்களில் நம்பிக்கை கொண்டு பின் கடைசியாக நபிகளின் வருகையை எதிர்பார்த்திருந்து இஸ்லாம் ஆனவர்கள். போர் தந்திரங்களை நபிகளார் இவர்களோடு ஆலோசனை செய்துகொள்வார்கள்.
59. ஸலமஹ் பின் அக்வஃ ரளியல்லாஹ அன்ஹு, ஸஹாபாக்களில் மிக விரைவானவர்கள்.
60. ஷத்தாத் பின் அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு.
61. ஸுஹைப் பின் ஸினான் அல் ரூமிய்யி ரளியல்லாஹ அன்ஹு.
62. அல் ளஹ்ஹாக் பின் ஸுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு, நூறு குதிரை வீரர்களுக்கு சமமானவர்.
63. ஆஸிம் பின் ஸஃதாபித் ரளியல்லாஹு அன்ஹு.
64. ஆமிர் பின் ஃபுஹைராஹ் ரளியல்லாஹு அன்ஹு.
65. அப்துல்லாஹ் அல் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு.
66. அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் ரளியல்லாஹு அன்ஹு, இவரைப் பற்றி ‘அபஸ’ என்ற ஒரு ஆயத்தை அல்லாஹ் இறக்கினான்.
67. அப்துல்லாஹ் பின் அனீஸ் ரளியல்லாஹ் அன்ஹு,
இவர்களுக்கு ஒரு தடியை நபியவர்கள் தந்துள்ளார்கள் கியாமத் நாளில் இருவருக்குமிடையில் அடையாளமாக.
68. அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹு.
69. அப்துல்லாஹ் பின் ரவாஹஹ் ரளியல்லாஹு அன்ஹு, கவிஞர்களில் தலைவர், முஅத்தஹ் போரில் தலைமை தாங்கியவர்.
70. அப்துல்லாஹ் பின் ஜைத் ரளியல்லாஹ அன்ஹு, பாங்கை(அதானை) கனவில் கண்டவர்.
71. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு, அன்ஹு இந்த சமுதாயத்தின் அறிஞர்.
72. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் ரளியல்லாஹு அன்ஹு, மலக்குமார்கள் தங்களது இறக்கைகளால் இவருக்கு நிழல் தந்தார்கள்.
73. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரளியல்லாஹ அன்ஹு, இவருடைய அமல்கள் உஹது மலையை விட கனமானதாக இருக்கும்.
74. அப்துல்லாஹ் ஃதுல் பஜாதீன் ரலியல்லாஹு அன்ஹு.
75. உஃதீ(ஸ்)மான் பின் மழ்சளன் ரளியல்லாஹு அன்ஹு, மரண தருவாயில் அவரின் கன்னத்தில் நபியவர்கள் முத்தமிட்டார்கள்.
76. உக்காஷஹ் பின் மிஹ்ஸன் ரளியல்லாஹு அன்ஹு, கேள்வி கணக்கின்றி சொர்க்கத்தில் நுழையக்கூடிய தகுதி பெற்றவர்கள்.
77. இகரிமஹ் பின் அபூ ஜஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு, யர்மூக யுத்தத்தின் போது மரணத்தின் மீது ஒப்பந்தம் செய்தவர்.
78. அம்மார் பின் யாசிர் ரளியல்லாஹு அன்ஹு, மணமிக்கவரின் மகன் மணமிக்கவர்.
79. இம்ரான் பின் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு, மலக்குமார்கள் அவருக்கு ஸலாம் சொல்வார்கள்.
80. அம்ர் பின் அக்யஸ் ரளியல்லாஹு அன்ஹு, அல் உஸைரிம் என்றே மக்களால் அறியப்பட்டவர் ஒரு தொழுகை கூட தொழாமல் சொர்க்கம் நுழைந்த ஸஹாபி.
81. அம்ரு பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு.
82. உமைர் பின் அப்து அம்ரு பின் நள்லஹ் ரளியல்லாஹு அன்ஹு.
83. உமைர் பின் அஃதிய்யி ரளியல்லாஹு அன்ஹு.
84. உவைம் பின் ஸாஇதஹ் ரளியல்லாஹ அன்ஹு, அல்லாஹ் விரும்பும் அளவு பரிசுத்தமானவர் .
85. கதாதஹ் பின் நுஃமான் ரளியல்லாஹு அன்ஹு, உஹதில் அவரின் கண் பாதிக்கப்பட்டது உடனே அவரை தனியாக ஆக்கி கவனம் செலுத்தினார்கள்.
86. கஃபு பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் இருந்த மூன்று நபர்களில் ஒருவர் பின்பு தவ்பா செய்து மீண்டு விட்டார்.
87. முஹம்மது பின் முஸ்லிமாஹ் ரளியல்லாஹு அன்ஹு, ஃபித்னாஹ் அவரை இடைஞ்சல் செய்யாது .
88. மிராரஹ் பின் அல் ரபீவு ரளியல்லாஹு அன்ஹு, தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாமலிருந்தவர்களில் மூன்று நபர்களில் ஒருவர், பின்பு தவ்பாஹ் செய்து மீண்டார்.
89. முஸ்அப் பின் உமைர் ரளியல்லாஹு அன்ஹு, பத்ருப் போரில் முஸ்லிம்களின் கொடியை சுமந்தவர்.
90. முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு, இந்த சமுதாயத்தில் ஹலால் ஹராமை நன்கறிந்தவர்.
91. முஆவியாஹ் பின் அபி ஸுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு, வஹி எழுதுபவர்.
92. அல் முன்ஃதிர் பின் அம்ர் அஸ் ஸாஇதீ ரளியல்லாஹு அன்ஹு.
93. ஹிலால் பின் உமய்யஹ் ரளியல்லாஹு அன்ஹு, தபூக்கில் கலந்து கொள்ளாமல் பின்பு தவ்பாஹ் செய்த மூவரில் ஒருவர்.
94. வஹ்ஷீ பின் ஹர்ப் ரளியல்லாஹ அன்ஹு.
95. அபு அல் தஹ்தாஹ் அல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு.
96. அல் முஙிரஹ் பின் ஷாஃபஹ் ரளியல்லாஹு அன்ஹு, அரபுகளில் மிக வீரமானவர்.
97. ராஃபிஉ பின் ஃகதீஜ் ரளியல்லாஹு அன்ஹு.
98. அல் துஃபைல் பின் உமர் அல் தூஸிய்யி ரலியல்லாஹு அன்ஹு.
99. அப்துல்லாஹ் பின் உமர் பின் அல் ஃகத்தாப் ரளியல்லாஹு அன்ஹுமா.
100. அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் ரலியல்லாஹ அன்ஹு.
101. அம்ரு பின் மஃதீகரிப் ரளியல்லாஹு அன்ஹு.