லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்

“லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்!” என்பதன் அர்த்தம்தான் என்ன?

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்!” என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?

விடை: "الحول"(அல்ஹவ்ல்) என்ற இந்த அறபு மொழிச் சொல்லுக்கு, 'ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு திரும்புதல்' என்பது மொழி ரீதியான  அர்த்தமாகும். அதாவது, “அல்லாஹ்வைக்கொண்டே தவிர ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குச் செல்வதற்கான அதிகாரம் பெறவோ, சக்தி பெறவோ எந்த ஒருவருக்கும் முடியாது. அல்லாஹ்வை நினைவுபடுத்தி, அவனிடம் உதவி தேடுதல் மூலமே இதை அவரால் பெற்றுக்கொள்ள  முடியும்” என்பதுதான் இதன் விளக்கமாகும். இதனால்தான், ஒருவர் ஒன்றைச் செய்ய நாடி, பின்னர் அது நடக்க வேண்டும் என்பதற்காக அவர் முயற்சி செய்தும்கூட அவருக்கு அது நடக்காமல் போவதை நாம் பார்க்கிறோம். ஏனெனில், அல்லாஹ் அவருக்கு அதை நாடவில்லை. இன்னும் பலரை நாம் பார்க்கிறோம்; அவர்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நாடி, அதற்காக அல்லாஹ்விடம் உதவியையும் அவர் வேண்டி, அவ்விடயத்தை அவனிடம் அவர் ஒப்படைத்தும் விடுகின்றபோது அவருக்கு அல்லாஹ் உதவி செய்கிறான்; அவ்விடயத்தையும் அவருக்கு அவன் இலகுவாக்கிக் கொடுக்கிறான்.

இங்கேதான் இன்னொரு விடயம் குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.  அதாவது: 'ஹய்ய அலஸ் ஸலாத்; ஹய்ய அலல் fபலாஹ்' (தொழுகைக்காக விரைந்து வாருங்கள்; வெற்றி பெற விரைந்து வாருங்கள்!) என்று அதானில் வருகின்ற வாசகத்தை முஅத்தின் சொல்வதை ஒருவர் கேட்கும்போது, 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்!' என்று கூறுவது அவருக்கு அவசியமானதாக இருக்கிறது. அதாவது, “நான் இருந்துகொண்டிருக்கின்ற இந்நிலையிலிருந்து தொழுகைக்குச் செல்வதற்கோ, அதற்காகச் சக்தி பெறுவதற்கோ அல்லாஹ்வைக்கொண்டே தவிர எனக்கு முடியாது!” என்பதுதான் இதன் அர்த்தமாகும்.  மனிதன் தன் நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக உதவி வேண்டிப் பிரார்த்திக்கும் ஓர் வார்த்தைப் பிரயோகமே இந்த 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்!' எனும் வார்த்தைப் பிரயோகமாகும்”.

{ நூல்: 'நூருன் அலத் தர்ப்b', பக்கம்: 224 }

➖➖➖➖➖➖➖➖

          قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

            { *ما معنى "لا حول ولا قوّة إلا باللّه"؟*

*الجواب:* معنى لا حول ولا قوّة إلا باللّه: "لا تحوّل من حال إلى حال". *الحول* بمعنى التحوّل، يعني: لا أحد يملك أن يتحوّل من حال إلى حال، ولا أحد يقوي على ذلك إلاّ باللّه عزّ وجلّ. يعني إلا بتذكير الله، والإستعانة به. ولهذا نجد الإنسان يريد الشيء، ثم يحاول أن يحصل عليه، ولا يحصل؛ لأنّ الله لم يرد ذلك. ونرى أيضا كثيرا من الناس إذا أراد الشيء واستعان بالله، وفوّض الأمر إليه فإن الله تعالى يعينه وييسّر له الأمر.

            ومن ثم كان ينبغي إذا أجاب المؤذّن أن يقول عند قول المؤذّن: حيّ على الصّلاة، حيّ على الفلاح لا حول ولا قوّة إلاّ باللّه. يعني: لا أستطيع أن أتحوّل من حالي التي أنا عليها إلى الصلاة، ولا أقوى على ذلك إلاّ باللّه عزّ وجلّ. فهي كلمة إستعانة يستعين بها الإنسان على مراده }

[ المصدر: نور على الدرب ]

➖➖➖➖➖➖➖➖

தமிழில்: 

அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம், வவுனியா

Previous Post Next Post