நிகாஹ் செய்வதின் நோக்கம்

بسم الله الرحمن الرحیم

அல்லாஹ் நிகாஹ்வை உயர்வான நோக்கத்திற்காக மார்க்கத்தில் ஏற்படுத்தியுள்ளான். அவற்றை சுருக்கமாக பார்ப்போம்.

1. கற்பை பாதுகாப்பதற்கு:

அல்லாஹ் மனிதனை படைத்து அவனுக்குள் உடல் சார்ந்த ஆசைகளையும் ஏற்படுத்தியுள்ளான். மனிதன் தனது ஆசைகளை பூர்த்தி செய்வதற்காக அல்லாஹ் நிக்காஹ்வை ஏற்படுத்தியுள்ளான்.

2. கணவன் மற்றும் மனைவிக்கு மத்தியில் அன்பையும், இரக்கத்தையும், நிம்மதியையும் ஏற்படுத்துவதற்காக நிகாஹ் ஏற்படுத்தப்பட்டு்ள்ளது.

وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً   اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 30:21)

3. சந்ததியை பாதுகாப்பதற்கும், உறவுகளில் நெருக்கத்தை உண்டாக்குவதற்கும் நிகாஹ் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

4. மனித சந்ததிகளின் இருப்பை உறுதி செய்வதற்கும், முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகமாக்குவதற்கும் நிகாஹ் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

5. விபச்சாரம், ஒழுக்கமற்ற வாழ்விலிருந்து விலகியிருந்து தூய நெறியுடன் வாழ்வதற்காக நிகாஹ் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆதாரம்: அல் ஃபிக்ஹுல் முயஸ்ஸர் ஃபீ லௌயில் கிதாபி வஸுன்னா
أحدث أقدم