ஷீஆக்களால் எதிர்ப்பார்க்கப்படும் மஹ்தி 12வது இமாம்

بسم الله الرحمن الرحیم

[இது பெரும்பொய்யர்களான ஷீஆக்களின் பொய்யான மஹ்தியைக் குறித்த விழிப்புணர்வுக்கான பதிவாகும்.]

(ஷீஆக்களால்) எதிர்ப்பார்க்கப்படும் மஹ்தி (12வது இமாம்):

உலகில் வாழும் ஒவ்வொரு சமுதாயமும் ஏதோவொரு அடிப்படையில் ஒருவரை எதிர்ப்பார்த்திருக்கின்றது. யூதர்கள் தஜ்ஜாலை எதிர்ப்பார்க்கின்றனர், கிறிஸ்தவர்கள் ஈஸா (علیه السلام) அவர்களை எதிர்பாபார்த்திருக்கின்றனர், முஸ்லிம்களும் எதிர்ப்பார்த்திருக்கின்றனர்.

அதுபோலவே ஷீஆக்களும் மஹ்தியை எதிர்ப்பார்த்திருக்கின்றனர். ஷீஆக்கள் பல குழுக்களாகக் காணப்பட்டாலும் அவர்கள் எல்வோரும் மஹ்தி விடயத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால் யார் அந்த மஹ்தி என்பதில் அவர்களிடம் பலமான கருத்துமுரண்பாடுகள் நிலவுகின்றன.

ஆரம்பம்:

ஷீஆக்களுக்கு மத்தியில் 'எதிர்ப்பார்க்கப்படும் மஹ்தி' எனும் கொள்கையை முதலில் விதைத்தவன் அவர்களின் தந்தை இப்னு ஸபஃ எனும் யூதனாவான். ஆனால் அவன் நபியவர்களே இந்த உலகுக்கு மீண்டுவருவார் என்று வாதிட்டு வந்தான், பின்பு அலீ (رضی الله عنه) அவர்கள் மரணித்தபோது அவர் மரணிக்கவில்லை. மறைந்திருக்கிறார் என்றும், அவர் இந்த உலகுக்கு  வருவார், நீதத்தால் இந்த உலகை நிறப்புவார் என்றும் வாதிட்டான்.
[பிரகுஷ்ஷீஆ]

இதன் பின்பு ஒவ்வொரு காலகட்டத்தில் வந்த ஷீஆக்களின் இமாம்கள் மரணித்த பின்பும், ஷீஆக்களில் சிலர் அவர் மரணிக்கவில்லை என்றும் எதிர்காலத்தில் மீண்டும் வருவார் என்றும் வாதிட்டனர். இதன்போது பல பிரிவுகளாகப் பிரிவது இவர்களது வழமையாக இருந்தது. இவர்கள் அனைவரும் தங்களுக்கு மத்தியில் உயிருடன் வாழ்ந்த ஒருவர் விடயத்தில் இவ்வாறு வாதிட்டனர்.

ஆனால் ஷீஆக்களின் ராபிழா எனும் குழுவைப் பொறுத்தவரை (தற்போது இருப்பவர்கள்) அவர்கள் கற்பனையான ஒரு மஹ்தியைப் பற்றிப் பேசுகிறார்கள். அது தொடர்பாகவே விரிவாக நாம் இங்கே எழுதுகின்றோம்.

யார் இந்த (ஷீஆக்களின்) மஹ்தி:

மற்றொரு அறிவிப்பின்படி ஹஸன் அவர்கள் இன்றிரவு மஹ்தி பிறப்பார் என்று கூறினாராம். ஆனால், அவரது தாய்க்கு இது பற்றிச் சொல்லப்பட்ட போது அப்படி எந்த அடையாளமும் அவரில் காணப்படவில்லையாம். மற்றும் அதற்கான வலியும் இருக்கவில்லையாம். ஆனால் சரியாக ஸுபஹ் நேரத்தில் ஹஸன் சொன்னதைப் போன்று மஹ்தி பிறந்தாராம். பிறந்ததும் ஸலாம் சொன்னாராம். பின்பு ஸுஜுதில் வீழ்ந்தாராம். பின்பு அஸ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ். என்னுடைய பாட்டன் அல்லாஹ்வின் தூதர். எனது தந்தை முஃமீன்களின் தலைவர் என்று சொன்னாராம். மற்றவர்கள் வளர்ந்ததைப் போன்றல்லாமல், மற்றவர்கள் ஒரு வருடத்தில் வளரும் அளவு ஒரு மாதத்தில் வளர்ந்ததாகவும், மற்றவர்கள் ஒரு மாதத்தில் வளரும் அளவு ஒரு வாரத்தில் வளர்ந்ததாகவும், மற்றவர்கள் ஒரு வாரத்தில் வளரும் அளவு ஒரு நாளில் வளர்ந்ததாகவும் அற்புதம் பாடுகின்றார்கள் ஷீஆக்கள்.

இது மாத்திரமா அவரின் பிறப்பில் உள்ள இன்னுமொரு அற்புதத்தைப் பாருங்கள்: எல்லோரும் பிறப்பதைப் போன்று அவர் பிறக்கவில்லையாம். மாறாக, தாயின் வலது காலின் தொடையிலிருந்து பிறந்தாராம். இதைவிட இன்னுமொரு அற்புதம் என்ன தெரியுமா? மஹ்தி பிறந்தபோது அவரின் தந்தையிடம் கொடுத்தார்களாம். அவரின் தந்தை அவருக்கு ஸலாம் சொல்லி அவருடன் பேசினாராம். அப்போது மஹ்தியின் தலைக்கு மேல் பறவைகள் வட்டமிட்டதாம். அந்த பறவைகளிடம் மஹ்தியைக் கொண்டு சென்று வளர்க்குமாறு அவரின் தந்தை கொடுத்தனுப்பினாராம். அவைகளே அவரை வளர்த்தனவாம். 

இதற்கு மேலும் சொல்லவேண்டுமா? ஷீஆக்களின் மஹ்தி பிறந்தபோது அல்லாஹ் அவரை அழைத்து வருமாறு இரண்டு மலக்குகளை அனுப்பினானாம். அந்த இரண்டு மலக்குகளும் அவரை அல்லாஹ்வின் அர்ஷுக்கு கொண்டு சென்றனராம். அல்லாஹ் அவரை வரவேற்றானாம். (அஸ்தஃபிருல்லாஹ்)

(பார்க்க: கமாலுத்தீன், பிஹாருல் அன்வார், இத்பாதுல் வஸிய்யா, தலாயிலுல் இமாமா, அல்மனாகிப்)

ஆயிரத்தி ஓர் இரவு கதை வாசிப்பதைப்போன்று இருக்கிறதா? நிச்சயமாக இவற்றைச் சொன்னவர்கள் முஸ்லிம்களாக இருக்கவே முடியாது. ஒரு முஸ்ரிக்கான பெண்ணுக்கு நபியவர்கள்(ﷺ) திருமணம் முடித்துக் கொடுத்தார்களாம், பாத்திமா (رضی الله عنها) அவர்கள் சொன்னதன் பின்புதான் அவள் இஸ்லாத்திற்கு வந்தாளாம். கனவில் குடும்ப வாழ்க்கை நடத்தி பிள்ளை பிறக்கிறதாம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

இன்னும் கேளுங்கள். இந்தக் கூட்டம் மனோ இச்சையை கடவுளாக்கிக் கொண்டதைப் பாருங்கள்.

இவ்வாறு பிறந்த மஹ்தி மற்றவர்களின் பார்வைக்குப் படாமல் இன்றுவரை உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றும் அவர் இன்னும் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உயிர்வாழ்வார் என்றும் நம்புகின்றனர். தற்போது அவரது வயது 1176 என்று 2011ல் குவைத்தில் அச்சிட்டு எமது பிரதேச ஷீஆக்கள் விநியோகம் செய்துள்ள "உண்மை உண்மையாக ஷீஆக்கள் யார்?  அவர்கள் சொல்வதென்ன?" என்ற நூலில் 16ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்னர்.

நபியின் சமுதாயத்தில் வந்த ஒருவர் இவ்வளவு காலம் எப்படி உயிர் வாழ முடியும்? இது பகுத்தறிவுக்கு சாத்தியப்படுமா? என்று கேட்டுவிடாதீர்கள், இவ்வளவு காலம் எப்படி மற்றவர்களின் கண்ணில் படாமல் வாழ்கிறார். அவருக்குத் தேவையான உணவுகளெல்லாம் எப்படிக்கிடைக்கிறது? மன்னித்துவிடுங்கள். இருப்பவரைப் பற்றித்தாேனே இப்படியெல்லாம் கேட்க வேண்டும். 

சரி இவ்வளவு காலம் ஏன் அவர் மறைந்திருக்கிறார் என்று ஷீஆக்களிடம் கேட்டால் அதிலும் நிறைய கருத்து முரண்பாடுகள் அவர்களிடம் காணப்படுகின்றது.

சிலர், இவ்வாறு மறைந்திருப்பதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும் என்று சொல்கின்றனர்.

இன்னும் சில அறிவிப்புகளில் இமாம் மறைந்திருப்பது மனிதர்களுக்கு அன்பு செலுத்துவதாகவே உள்ளது. இமாம் இல்லாமல் இந்தபூமி இருக்க முடியாது. அல்லாஹ்வின் நாட்டப்படி இத நடந்திருக்கிறது.

சிலரின் கருத்துப்படி, இந்த மறைவு என்பது அல்லாஹ் மக்களை சோதிப்பதற்காக செய்தான். அதனை எமது புத்தியால் தெரிந்து கொள்ள முடியாது. 

ஷீஆக்களின் இன்னும் சில அறிவிப்பு்களின்படி அந்த இமாம் மறைந்திருந்தது, அவரைக் கொலை செய்துவிடுவார்கள் என்று பயந்ததினாலாகும். இதைத் தவிர வேறு காரணங்கள் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

(பார்க்க: இத்பாதுல் வஸிய்யா, அல்ஹைபா, தலாயிலுல் இமாமா, அஸ்லுஸ்ஷீஅதி வ உஸுலுஹா, அல் மஹ்தி, அல்காபி, அஷ்ஷாபி பில் இமாமா)

எனவே, இங்கே ஷீஆக்கள் பல கருத்துக்களை அதற்கு சொல்வதின் மூலம் ஒருவருக்கு ஒருவர் நேர் எதிராக முரண்படுகின்றனர். இதன் மூலம் இதற்குள் ஏதோ உட்சதி இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.

(ஷீஆக்களின் பார்வையில்) எதற்காக இந்த மஹ்தி:

ஒரு பொய் சொன்னால் அதை மறைப்பதற்கு ஒன்பது பொய் சொல்ல வேண்டும் என்று சொல்வார்கள். அதுபோல் ஷீஆக்கள் இமாம்களின் எண்ணிக்கை விடயத்தில் சொன்ன பொய்யை மறைப்பதற்காகவே இந்த மஹ்தி பற்றிய பொய்யும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

ஷீஆக்களின் கருத்துப்படி அஹ்லுல் பைத்தைச் சேர்ந்த 12 இமாம்கள் இந்த உலகத்தை ஆழாதவரை மறுமை நாள் வராது. ஒவ்வொரு இமாமும் அவருடைய தந்தையின் வஸிய்யத்தின் அடிப்படையிலேயே பதவியேற்க வேண்டும். ஆனால், ஷீஆக்கள் தங்களின் 11வது இமாமாகக் குறிப்பிடும் ஹஸன் அல் அஸ்கரி அவர்கள் தனது இளம் வயதில் (28ம் வயதில்) மரணித்துவிடுகிறார். அவருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ஷீஆக்களின் பிரதானக் கொள்கையில் பெரியதொரு இடைவெளி தோன்றியது. இதன் காரணமாக ஷீஆ என்ற மதமே அழிந்துபோகும் அபாயம் தோன்றியது. இதை நன்கு உணர்ந்துகொண்ட யூத பரம்பரையினரான ஷீஆக்களின் தலைவர்கள் திட்டமிட்ட அடிப்படையில் இந்தக் கொள்கையை உருவாக்கினர்.

ஹஸன் அல் அஸ்கரி அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும் மற்றவர்களின் கண்களில் படாமல் அதை அவர் மறைத்ததாகவும் புதிய கதையை இட்டுக்கட்டினர். இதனால் சமகாலத்தில் வாழ்ந்தவர்களுக்கு ஒரு ஆறுதலையும் மறுமை வரை ஷீஆ மதத்தை ஏற்றுக்கொள்பவர்களிடம் ஒரு எதிர்பார்ப்பையும் உருவாக்கினர். (நிச்சயமாக அல்லாஹ் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளனாக இருக்கின்றான்.)

ஷீஆக்களுக்கு மத்தியில் அவ்வப்போது ஏற்படும் குழப்பங்களைத் தணிப்பதற்காக மஹ்தி வந்து சொன்னதாகவும், அவருடைய பிரதிநிதிகள் அறிவித்ததாகவும் புதிய புதிய சட்டங்களையும் விதிகளையும் உருவாக்கிக் கொள்கின்றனர். 

இதனால், அதிகமான முன்பின் முரண்பாடுகளையும் காலத்திற்கு ஒவ்வாத பல சட்டங்களையும் கொண்டிருக்கின்ற ஷீஆ மதத்தை முற்றுப்பெறாத, அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்ற, புதிதாக சேர்க்கவும், நீக்கவும்படுகின்ற ஒரு கொள்கையாகப் பேணி வருகின்றனர்.

அவர் (ஷீஆக்கள் எதிப்பார்க்க்கூடிய மஹ்தி) செய்யப்போவது என்ன?

தங்களின் பன்னிரன்டாவது இமாமான மஹ்தி வந்தால் சில வேலைகளைச் செய்வதாக ஷீஆக்கள் குறிப்பிடுகின்றனர். இந்த அறிவிப்புகளை முழுமையாகப் பார்த்தால் ஷீஆக்கள் சொல்லும் மஹ்தி ஒரு யூதனாக இருக்க வேண்டும் அல்லது தஜ்ஜாலாக இருக்க வேண்டும். மூன்றாம் நபராக இருக்க முடியாது என்பது தெளிவாகின்றது. இதை நீங்களும் தெளிவாக அறிந்துகொள்ள அது தொடர்பாக அவர்களின் நூல்களில் வந்திருக்கும் அறிவிப்புகள் சிலவற்றைப் பாருங்கள்.

1. ஆபூபக்ர் (رضی الله عنه), உமர் (رضی الله عنه) , ஆயிஷா (رضی الله عنها) போன்றவர்களைப் பழிவாங்குதல்
2. அரேபியர்களைக் கொலை செய்வார்
3. ஹஜ்ஜாஜிகளைக் கொலை செய்வார்
4. மக்கா பள்ளிவாயல், மதினா பள்ளிவாயல், நபியவர்களின் அறை போன்றவற்றை உடைத்தல்
5. தாவூத் (علیه السلام) அவர்களின் சட்டங்களை நடைமுறைபடுத்துவார்
6. நபி (ﷺ), அலீ (رضی الله عنه), ஹஸன் (رضی الله عنه), ஹுஸைன் (رضی الله عنه) அவர்கள் போன்று அவர் நடக்கமாட்டார்
7. வாரிசுரிமை மாற்றப்படும்

[இவை ஒவ்வொன்றையும் குறித்து விரிவாக பின்வரும் பதிவுகளில் காணலாம் இன்ஷா அல்லாஹ்]


அவர் (ஷீஆக்கள் எதிர்ப்பார்க்கக் கூடிய மஹ்தி) செய்யப்போவதுஎன்ன?

01. அபூபக்ர் (رضی الله عنه), உமர் (رضی الله عنه), ஆயிஷா (رضی الله عنها) போன்றவர்களைப் பழிவாங்கல்: 

எதிர்ப்பார்த்திருக்கும் மஹ்தி வந்தால் அபூபக்ரையும், உமரையும் உயிர்ப்பிப்பார். பின்பு அவர்கள் இருவரையும் ஈத்தம் குற்றியிலே அறைவார். பின்பு ஒவ்வொரு நாளும் அவர்கள் இருவருக்கும் ஆயிரம் கசையடிகளை வழங்குவார். 
[ஈகாழும் மினல் ஹஜ்ஆ]

வேறொரு அறிவிப்பில் மூஸா (علیه السلام) அவர்கள் ஸாமிரியின் மாட்டை எரித்ததைப்போல அவர்கள் இருவரையும் எரிப்பார். அவர்கள் இருவரையும் நேசிப்பவர்களையும் கொலை செய்வார் என்றுள்ளது.

ஷீஆக்களின் முக்கியமான அறிஞர் மஜ்லிஸி என்பவர் குறிப்பிடுகின்றார்: "எதிர்ப்பார்க்கப்படும் மஹ்தி வந்தால் ஆயிஷாவை உயிர்ப்பிப்பார். அவருக்கு விபச்சாரத்திற்கான தண்டனையை வழங்குவார்."
[ஹக்குல் யகீன்]

(நவூதுபில்லாஹ், ஷீஆக்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!)

02. அரேபியர்களைக் கொலை செய்வார்: 

ஷீஆக்களின் இமாம்களில் ஒருவர் சொல்கிறார்: "எங்களுக்கும் அரேபியர்களுக்கும் மத்தியில் (அவர்களைக்) கொலை செய்வதைத் தவிர வேறெதுவும் இல்லை." 
[பிஹாருல் அன்வார்]

நபியவர்கள், பாதிமா, அலி, ஹஸன், ஹுஸைன், அஹ்லுல் பைத்தில் வந்தவர்கள் அனைவரும் அரேபியராக இருக்க ஏன் இவர் அரேபியர்களை கண்டபடி கொலை செய்ய வேண்டும்....?

"அரேபியர்கள் பயந்துகொள்ளட்டும் (எங்கள் மஹ்தி வந்தால்) நிச்சயமாக அவர்களுக்கு மோசமான ஒரு செய்தி காத்திருக்கிறது."
[பிஹாருல் அன்வார்]

03. ஹஜ்ஜாஜிகளைக் கொலை செய்வார்:

மஹ்தி வந்தால் அவர் ஸபா மர்வாவுக்கு இடையில் ஹஜ்ஜாஜிகளைக் கொலை செய்வார் என்று பிஹாருல் அன்வார் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் தான் என்னவோ இமாம்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்படும் இவர்களது அறிஞர்கள் இருப்பதால், கொமைனியின் ஆட்சியில் மக்காவில் குண்டுகளை வைப்பதற்காக ஹி.1407ல் குண்டுகள் கொண்டுவரப்பட்டபோது அது பிடிபட்டது.

பின்பு ஹி. 1409ல் மக்காவின் சில இடங்களில் ஷீஆக்களினால் குண்டுகள் வைக்கப்பட்டன. சில ஹஜ்ஜாஜிகள் இதனால் பாதிக்கப்பட்டனர்.

04. மக்கா பள்ளிவாயல், மதீனா பள்ளிவாயல், நபியவர்களின் அறை என்பவற்றை உடைத்தல்:

மஹ்தியின் இன்னுமொரு முக்கிய பணியாக ஷீஆக்கள் குறிப்பிடுவது: அவர் வந்தால் இறைவனால் இந்த உலகத்தில் உருவாக்கப்பட்ட முதல் ஆலயம் கஃபதுல்லாஹ்வையும், மதினாவில் நபியவர்களால் உருவாக்கப்பட்ட அவரது பள்ளியையும், அவர் குடியிருந்த அறையையும் உடைப்பார் என்பதாகும். இது தொடர்பாக அவர்களின் முக்கிய நூல்களில் வந்திருக்கும் செய்தியைப் பாருங்கள்.

"நிச்சயமாக மஹ்தி வந்தால் மஸ்ஜிதுல் ஹராத்தை (மக்காப் பள்ளியை) உடைப்பார், மேலும் மதினாப் பள்ளிவாயலையும் உடைப்பார்" (தூஸி என்பவருக்குரிய அல்கைபா என்ற நூல்)

மஹ்தி வருவதற்கு கால தாமதமாகியதாலோ என்னவோ ஷீஆக்களின் ஒரு பிரிவினரான கராமிதாக்கள் ஹி: 317ல் மக்காவுக்கு எதிராக படையெடுத்தபோது கஃபாவை உடைத்தனர். அதிலிருந்து ஹஜருல் அஸ்வத்தை பஹ்ரைனுக்கு எடுத்துச் சென்றனர். 22 ஆண்டுகள் அவர்களிடம் ஹஜருல் அஸ்வத் இருந்தது. ஷீஆக்களின் மஹ்தி சொல்வதாக சொல்கிறார்கள்: "நான் வந்தால் யத்ரீபுக்கு (மதீனாவுக்குச்) செல்வேன். நபியவர்களின் அறையை உடைப்பேன். (பிஹாருல் அன்வார்)

இந்தக் கனவை நிறைவு செய்வதற்காகவோ என்னவோ கொமைனி ஆட்சியை கைப்பற்றியபோது முஸ்லிம்களின் இரண்டு கஃபாவையும் (கஃபதுல்லாஹ், பைதூல் மக்திஸ்) காபிர்களின் கரங்களிலிருந்து நாம் மீட்போம் என்பது அவரின் முக்கிய சுலோகமாக இருந்தது. அதாவது கஃபதுல்லாஹ் காபிர்களின் கரங்களில் இருப்பதாக அவர் உணர்கிறார். அல்லாஹ் போதுமானவன்.

05. தாவூத் (علیه السلام) அவர்களின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவார்:

தற்போது யூதர்கள் தாவூத் (علیه السلام) அவர்களின் சட்டங்களைப் பின்பற்றுவதாக சொல்கின்றனர். ஆனால், முஸ்லிம்கள் முஹம்மத் (ﷺ) அவர்களின் சட்டங்கபை் பின்பற்றுகின்றனர். ஷீஆக்கள் எதிர்ப்பார்த்திருக்கும் மஹ்தி வந்தால் அவர் தாவூதின் சட்டங்களைத்தான் நடைமுறைப்படுத்துவாராம்.

இமாம் மஹ்தி வெளியேறினால் அவர் தாவூதின் சட்டத்தையும் தாவூதின் குடும்பத்தாரின் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவார்
[அல் காபி]

மற்றும் சில அறிவி்புகளில் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்துவார் என்றுள்ளது.

மஹ்தி வந்தால் அவர் ஒரு முறை ஆதத்தின் சட்டத்தைக் கொண்டு அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவார். மற்றொரு முறை தாவூதின் சட்டத்தைக் கொண்டு தீர்ப்பு வழங்குவார். இன்னுமொரு முறை இப்ராஹீமின் சட்டத்தைக்கொண்டு தீர்ப்பளிப்பார். இந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவர்களின் தோழர்களில் சிலர் முரண்படுவார்கள். அவர்களின் கழுத்துக்களை துண்டிப்பார். நான்காவது தடவையாக முஹம்மத் (ﷺ) அவர்களின் சட்டத்தைக்கொண்டு தீர்ப்பளிப்பார். அதற்கு எவரும் முரண்படமாட்டார்கள்.
[பிஹாருல் அன்வார்]

மஹ்தி வந்தால் தவ்றாத்தையும் ஏனைய வேதங்களையும் அன்தாகியாவில் உள்ள ஒரு குகையிலிருந்து வெளியாக்குவார். தவ்றாத்தை ஏற்றுக்கொண்டவர்களிடம் தவ்றாத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பார். இன்ஜீலை ஏற்றுக் கொண்டவர்களிடம் இன்ஜீலைக் கொண்டு தீர்ப்பளிப்பார். ஸபூரை ஏற்றுக் கொண்டவர்களிடம் ஸபூரைக் கொண்டு தீர்ப்பளிப்பார். குர்ஆனை ஏற்றுக் கொண்டவர்களிடம் குர்ஆனைக் கொண்டு தீர்ப்பளிப்பார்.
[நுஃமானி என்பவருக்குரிய கைபா என்ற நூலில்]

கஃபதுல்லாஹ்வின் ருக்னுக்கும் மகாமுக்கும் இடையில் வைத்து புதியதொரு வேதத்தின் மீது மக்கள் மஹ்திக்கு பைஅத் செய்வார்கள். அது அரேபியர்கள் மீது மிகவும் கடுமையானதாக இருக்கும். 
[ஸிராதுல் முஸ்தகீம்]

சகோதரர்களே! ஷீஆக்கொள்கை யூதர்களின் உருவாக்கம் என்பது இப்போதாவது புரிகிறதா?

06. நபி (ﷺ), அலி (رضی الله عنه), ஹுஸைன் (رضی الله عنه) அவர்கள் போன்று அவர் நடக்கமாட்டார்:

"நிச்சயமாக அலியும், ஹுஸைனும் நபியவர்களின் வழிமுறையைப் பின்பற்றினர். நிச்சயமாக நபியவர்கள் இந்த சமுதாயத்திற்கு அருளாக அனுப்பப்பட்டார்கள். ஆனால் மஹ்தி இந்த சமுதாயத்திற்கு தண்டனையாக அனுப்பப்படுவார்."
[பிஹாருல் அன்வார்]

ஷீஆக்களின் இமாம்களில் ஒருவரிடத்தில், மஹ்தி நபியவர்களின் விழியைப் பின்பற்றுவாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்: இல்லை, நபியவர்கள் மன்னிப்பு, இரக்கம் என்பவற்றைப் பின்பற்றினார்கள் என்று கூறினார்.
[பிஹாருல் அன்வார்]

07. வாரிசுரிமை மாற்றப்படும்:

ஒருவர் மரணித்ததன் பின்பு, அவரின் குடும்பத்தார் அவரின் சொத்துக்கு அனந்தரக்காரர்களாக மாறுகின்றனர். அவர்கள் வாரிசுகள் என்றும், அவர்களுக்கு அந்த சொத்திலிருந்து கிடைக்கவேண்டிய பகுதி அவர்களின் உரிமையாகவும் கருதப்படுகின்றது.

ஆனால், ஷீஆக்கள் எதிர்ப்பார்த்திருக்கும் மஹ்தி வந்தால் இந்த முறை மாற்றப்படும் என்பது ஷீஆக்களின் நூல்கள் குறிப்பிடுகின்ற கருத்தாகும்: 

"அல்லாஹ் மனிதர்களைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உயிர்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினான். மஹ்தி வந்தால் பிறப்பின் மூலம் வந்த சகோதரர்கள் அன்றி அல்லாஹ் ஏற்படுத்திய சகோதரர்களே அனந்தரச் சொத்தைப் பெறுவார்கள்."
[அல் இஃதிகாதாத்]

அல்ஹம்துலில்லாஹ். ஷீஆக்களின் பொய்யான மஹ்தி குறித்த விவரங்களை ஷெய்க். M.B.M. இஸ்மாயில் மதனி அவர்களின் 'யார் இந்த ஷீஆக்கள்?' என்ற நூலின் மூலம் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு அறிந்தோம். 

மஹ்தி (علیه السلام) குறித்த தவறான நம்பிக்கைகளும், போலியான செய்திகளும் நாளுக்கு நாள் அதிகமாகப் பரப்பப் பட்டு வருகின்றன. சிலர் மஹ்தி இந்த மாதத்தில் வெளிப்படுவார், இல்லை அடுத்த மாதம் வெளிப்படுவார் என்பதைப் போன்ற போலியான செய்தியை, தங்கள் அறிவுக்கு எட்டாத விஷயங்களைக் குறித்து இறையச்சம் இன்றி பேசித் திரிகீன்றனர். நிச்சயமாக, இவ்வாறு கூறுபவர்களுக்கு மத்தியில் ஷீஆக்களின் கொள்கைத் தாக்கமே இருக்கின்றது என்பதில் எவ்வித சந்கேமும் இல்லை. ஏனெனில், ஷீஆக்கள் தான் மஹ்தி (علیه السلام) அவர்களுக்குத் தான் நாங்கள் கட்டுப்படுவோம் என்றும், அவர் கொண்டுவரக் கூடிய வழிதான் சத்தியமான வழி என்று கூறிக்கொண்டும், அதனோடு  நிறுத்திவிடாமல் தாங்களாகவே மனோஇச்சையின் அடிப்படையில் ஒரு பொய்யான, கற்பனையான மஹ்தியின் மார்க்கத்தை வரையரை செய்து வைத்துள்ளார்கள்.

ஆனால், மஹ்தி (علیه السلام) குறித்த அஹ்லுஸ்ஸுன்னாஹ்வின் நிலை அவ்வாறானதல்ல. நபி(ﷺ) அவர்கள் இந்த மார்க்கத்த்தில் நேரான பாதையில் இருக்கக்கூடிய ஒரு கூட்டம் மறுமை நாள் வரை இருந்துக்கொண்டே இருக்கும் என்றும், அந்த கூட்டத்தினருக்கு மத்தியிலேயே ஈசா இப்னு மர்யம் (علیه السلام) அவர்கள் (தஜ்ஜாலைக் கொல்வதற்காக) இறங்குவார்கள் என்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்கள். நிச்சயமாக, வரவிருக்கக்கூடிய மஹ்தியின் பெயர் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் ஆகும். அவர் அஹ்லுல் பைத்தைச் சார்ந்தவர். அவர் முஸ்லிம்களுக்குரிய தலைவராய், நீதமான ஆட்சியாளராக இருக்கும் போதே ஈசா இப்னு மர்யம் (علیه السلام) அவர்கள் வானிலிருந்து இறங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், அவர் வந்தால் மட்டும்தான் இந்த உலகத்தில் நேரான பாதை இருக்கும் என்பதல்ல. அவர் வரக்கூடிய காலத்தில், நேரான பாதையில் இருக்கக்கூடிய ஒருசமூகம்தான் அவரிடத்தில் பைஅத் செய்யும் என்பதே ஸுன்னாவாகும். அதை, உண்மை படுத்துவதில் நாமே முதலாமவர்களாக இருக்க விரும்ப வேண்டும். அல்லாஹ் அவர் வரவிருக்கக்கூடிய நேரத்தில் எந்த தாமதமுமின்றி அவன் நாட்டப்படி அவரை வெளிப்படுத்துவான். 

அதற்காக, அவர் ஒருவருடைய வழிகாட்டுதலுக்காக மட்டும் ஏங்கி அதற்கென அவரை எதிர்ப்பார்ப்பதையே மார்க்கமாக்கிக் கொள்வதை விட்டுவிட்டு, இந்த சமூகத்தில் நிலைபெற்றுருக்கக்கூடிய அந்த நேரான பாதையினை குர்ஆன் ஹதீஸை அடி்படையாகக் கொண்டு, ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉ தாபியீன்கள் எவ்வாறு வளங்கினார்களோ அதைப் போன்று விளங்க முயற்சி செய்யுங்கள், அல்லாஹ் நமக்கு உதவி செய்வான்.

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

أحدث أقدم