முதல் பெண்மணி

بسم الله الرحمن الرحیم

சுத்தீ (رحمه الله) அவர்கள், இப்னு அப்பாஸ் (رضی الله عنه) மற்றும் நபித்தோர்கள் சிலரிடமிருந்து பின்வரும் தகவலைக் குறிப்பிடுகிறார்கள்:

சொர்க்கத்திலிருந்து ஷைத்தான் வெளியேற்றப்பட்டான். பின்பு அதில் ஆதம் (علیه السلام) அவர்கள் குடியமர்த்தப்பட்டார்கள். அவர்கள் தனிமனிதராகவே அதில் உலவி வந்தார்கள். நிம்மதி அளிக்கும் வகையில் எந்தத் துணையும் அவர்களுக்கு இருக்கவில்லை. இந்நிலையில், சற்று தூங்கி எழுந்தார்கள். அப்போது, அவர்களின் தலைக்கு அருகே பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். அல்லாஹ் அந்தப் பெண்ணை ஆதம் (علیه السلام) அவர்களின் விலா எலும்பிலிருந்து 
படைத்திருந்தான்.

அப்பெண்ணிடம், 'நீ யார்?' எனக் கேட்டார்கள். 'நான் ஒரு பெண்' என அவர் கூறினார். 'நீ எதற்காகப் படைக்கப்பட்டாய்?' எனக் கேட்டார்கள். 'நீங்கள் என்னிடம் அமைதி பெறுவதற்காக' என்று அவர் பதிலளித்தார்.

அப்போது, ஆதம் (علیه السلام) அவர்கள் பெற்றிருந்த ஞானத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வகையில் வானவர்கள், 'ஆதமே! அந்தப் பெண்ணின் பெயர் என்ன?' என்று கேட்டனர். அதற்கு, 'ஹவ்வா' எனப் பதிலளித்தார்கள். "ஏன் ஹவ்வா எனப் பெயர் சூட்டப்பெற்றது?" எனக் கேட்டனர். அதற்கு, "அந்தப் பெண் உயிருள்ள ஒன்றிலிருந்து படைக்கப்பட்டிருப்பதால்" என்று கூறினார்கள். ('ஹவ்வா' என்பது 'ஹய்யு' (உயிருள்ளது) என்பதிலிருந்து மருவியது என்பர்.)

ஆதாரம்: தஃப்சீர் இப்னு கஸீர்
أحدث أقدم