பெரும்பாவங்கள்

بسم الله الرحمن الرحیم

தைசலா இப்னு மியாஸ் என்பவர் அறிவிக்கிறார்கள்:

நான் நஜதாத் கூட்டத்தாருடன் இருந்தபோது. சில பாவங்களைப் பெரும் பாவங்கள் என்று கருதி அதைப் பற்றி இப்னு உமர் (رضی الله عنه) அவர்களிடம் விளக்கம் கேட்டேன். "அவை என்ன?" என்று அவர் கேட்க, "இன்னின்ன பாவங்கள்" என்று கூறினேன். "அவை பெரும்பாவங்கள் அல்ல. பெரும்பாவங்கள் ஒன்பதாகும்.

1. அல்லாஹ்வுக்கு இணைவைப்பது,

2. உயிரைக் கொல்வது

3. (அல்லாஹ்வின் பாதையில் நடக்கும்) போர்க்களத்திலிருந்து வெருண்டோடுவது

4. பத்தினிப்பெண்ணை (விபச்சாரம் புரிந்ததாக) அவதூறு கூறுவது

5. வட்டியை புசிப்பது

6. அநாதையின் பொருளைச் சாப்பிடுவது

7. பள்ளிவாசலில் இறைவரம்புகளை மீறுவது

8. (மக்களைச் சிரிக்கவைக்க ஒருவரைப்) பரிகாசம் செய்வது

9. நோவினை செய்து பெற்றோரை அழவைப்பது" 

என்பதாக இப்னு உமர் (رضی الله عنه) அவர்கள் கூறிவிட்டு, "நரகத்தை நீர் பயந்து சுவர்க்கத்தில் புக விரும்புகிறீரா?" என்று என்னிடம் கேட்டார்கள். "அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ஆம்" என்றேன். "உம் பெற்றோர் உயிரோடு உள்ளார்களா?" என்று கேட்டார். "என் தாயார் இருக்கிறார்" என்று கூறினேன். "அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீர் அவரிடம் மென்மையாக பேசி அவரை உணவு உண்ண வைத்து நீர் பெரும் பாவங்களைத் தவிர்த்து கொண்டால் அவசியம் நீர் புகுவீர்" என்று இப்னு உமர் (رضی الله عنه) கூறினார்கள்.

ஆதாரம்: அல் அதபுல் முஃப்ரத் - 8
أحدث أقدم