இப்னு உமர் (ரழி) அவர்களின் மெய் சிலிர்க்கும் கருத்தாழமிக்க துஆ

روى الإمام مالك رحمه الله في " الموطأ " ( ص ١٠٩١ ) : عن نافع رحمه الله ، أنه سمع عبد الله بن عمر رضي الله عنهما ،
وهو على الصفا يدعو ، ويقول :
اللهم إنك قلت : { ادعوني أستجب لكم } و { إنك لا تخلف الميعاد } وإني أسألك كما هديتني للإسلام : أن لا تنزعه مني حتى تتوفاني وأنا مسلم.

இப்னு உமர் (ரழி) அவர்கள் (ஒரு உம்ராவில்) ஸஃபா மலைமீது நின்ற படி: 
யா அல்லாஹ்! "(என்னை நீங்கள் அழையுங்கள். நான் உங்களுக்கு பதிலளிப்பேன்) என்று நிச்சயப்படுத்தி நீ கூறி இருக்கின்றாய்) (நீ வாக்களித்தால் நிச்சயமாக நீ மாறு செய்யாதவன்) என்றும் கூறி உள்ளாய். ஆகவே நீ என்னை  இஸ்லாத்தின் பக்கம் நேர் வழிகாட்டிய மைக்காக அதன் மீதே தவிர ; எனது உயிரை நீ கைப்பற்றி விடக் கூடாது என நான் உன்னிடம் பிரார்ர்திக்கின்றேன்" எனக் கூறிப் பிரார்த்தனை செய்தார்கள். (முவத்தா மாலிக்)

கலாநிதி அலி அவ்தா அல்காமிதியின்  டுவிட்டர் பக்கத்தில் இருந்து...

விளக்கம்
----
(1) இப்னு உமர் (ரழி) அவர்களின் நேரடி மாணவர்தான் இமாம் நாஃபிஃ (ரஹி) அவர்கள்.
இமாம் நாஃபிஃ (ரஹி) அவர்கள் இமாம் மாலிக்கின் நேரடி ஆசிரியராகும். அவர்கள் மூலமே அவர்கள் தனது முவத்தஃ கிரந்தத்தில் இந்த செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள். 

மேற்படி அறிவிப்பு முறை அல்லது அறிவிப்பாளர் வரிசைத் தொடர்
سلسلة الذهب 
 ஹதீஸ்துறையில் தங்கச் சங்கிலித் தொடர் என அறியப்படும். 

(2) அல்குர்ஆனை பொருள் அறிந்து அதன் வழி நடக்கும் அறிஞர்களிடம் இருந்து அதனை  ஓதுவது, அதன் பொருளை சிந்திப்பதன் பயனாக இவ்வாறான  கருத்தாழமிக்க விளக்கங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து 
வெளிப்படுவதுண்டு. அவற்றில் இந்த பிரார்த்தனையும் ஒன்றாகும்.  

(3) இஸ்லாத்திற்கு அல்லாஹ் தனக்கு நேர்வழிகாட்டியதை இன்பமான வாழ்வாக எடுத்துக் கொண்ட மாமேதை இப்னு (ரழி) அவர்கள் தனக்கு
நேர்வழி காட்டிய அதே இரட்சகனிடம் அது பற்றிக் கூறி அதில் நிலையாக இருக்க துஆக் கேட்டல் என்பது ஒரு முஃமினின் தொடரான இஸ்திகாமத்தை பிரதிபலிக்கும் முக்கிய வழிகளில் ஒன்றாகும். 

4) மரணம் என்பதே இல்லை, என்றும் உயிருடன் இருப்பவன், நித்திய ஜீவன் என மாறாத முடிவாகிவிட்ட அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்விடம்  துஆ கேட்க தேவை இல்லை; மாற்றமாக 

ரபீவுல் அவ்வல் ஒரு

பிறை 12 ல் வஃபாத்தான 
கண்மணிகளான இறைத் தூதர் முஹம்மது நபி,
 குதுபு நாயகம்,  
அப்துல் ஜவாத் ஆலிம்,
அப்துல் காதிர் ஜீலானி (ரஹி) மற்றும்,
நாகூரி நாயம்  போன்ற எந்த சக்தியும் அற்ற அடியார்களிடம் பிரார்த்திக்கலாம் எனப் பாமரமௌலவிகளால் போதனை செய்யும்  இணைவைப்புக்கள் சார்ந்த செயற்பாடுகள் பொதுமக்கள் சமூகத்தில் அரங்கேறக் காரணமாக  இருப்பது  தம்மைப் படைத்தவனாகிய அல்லாஹ்வின் மீதும் , உயர்ந்த, யாதொரு குறைபாடும் இல்லாத அவனது பண்புகள் மீதும் முழுயான நம்பிக்கை இன்மையாகும்.

யா அல்லாஹ்! எம்மை இந்த உலகில் முஸ்லிம்களாக வாழ்ந்து மணிக்கவும்  செய்வாயாக! ஆமீன்...

- எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

أحدث أقدم