நிய்யத் வைத்தல் :
எல்லா செயல்களும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன!
(நூல் : புஹாரி :1 )
இஃதிகாப் இருப்பதாக உள்ளத்தில் நிய்யத் வைத்து கொண்டால் போதுமானது!
இதற்க்கு துஆ என்று எதுவும் கிடையாது! நிய்யத் உள்ளத்தில் வைத்து கொள்ள வேண்டும் வாயினால் சொல்ல வேண்டும் என்று அவசியம் கிடையாது!
பள்ளிவாசலில் இஃதிகாப் இருத்தல் :
இஃதிகாப் கட்டாயம் பள்ளியில் தான் இருக்க வேண்டும்!
குறிப்பிட்ட பள்ளியில் தான் இஃதிகாப் இருக்க வேண்டும் என்று கிடையாது! அல்லாஹ் குர்ஆனில் கூறும் பொழுது பொதுவாக பள்ளி என்றே கூறி உள்ளான் அதனால் நாம் எந்த பள்ளியில் வேண்டும் என்றாலும் இஃதிகாப் இருக்கலாம்!
(அல் குர்ஆன் : 2 : 187)
சில மார்க்க அறிஞர்கள் : 5 வேளை தொழுகை நடக்கும் எந்த பள்ளியிலும் இஃதிகாப் இருக்கலாம் என்று கூறி உள்ளார்கள் இன்னும் சிலர் ஜூம்ஆ தொழுகை நடக்கும் பள்ளியில் இஃதிகாப் இருக்கலாம் என்று கூறி உள்ளார்கள்!
நோன்பும் & இஃதிகாபும் :
நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலத்திலும் இஃதிகாப் இருக்கலாம். நோன்பு காலத்தில் இஃதிகாப் இருப்பது மிகச் சிறந்தது.
ரமலான் கடைசி 10 நாட்களில் இஃதிகாப் இருப்பதை நபி அவர்கள் அதிகம் வலியுறுத்தி கூறி உள்ளார்கள்!
நோன்பு வைத்த நிலையிலும் நோன்பு வைக்காமலும் இஃதிகாப் இருக்கலாம்!
(நூல் : புஹாரி : 2042)
இஃதிகாப் மூலம் கிடைக்கும் நன்மைகள் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இஃதிகாப் இருப்பவர் பாவங்களை விட்டும் பாதுகாக்கப்படுகிறார்; நற்செயல்கள் அனைத்தையும் செய்பவரைப் போன்ற நன்மைகள் அவருக்கு எழுதப்படுகின்றன
(நூல்: இப்னுமாஜா : 1781)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மன உறுதியோடும், நன்மையை எதிர்பர்த்தும் இஃதிகாஃப் இருப்பவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்!
(நூல் : தைலமீ : 21356)
இஃதிகாப் இருப்பதன் நோக்கம் :
1) ரமலான் கடைசி 10 நாட்கள் இஃதிகாப் இருப்பதால் லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்ள முடியும்!
2) உலக விசியங்களை விட்டு ஒதுங்கி தனித்திருந்து அல்லாஹ்வை நெருக்க முயற்சி செய்தல்!
3) உள்ளத்தை சீர் செய்தல்!
4) முழுவதும் அல்லாஹ்வை சார்ந்து அமல்களில் மட்டும் ஈடுப்படுதல்!
5) மன இச்சைகளின் தூண்டுதல்களை விட்டு தூரமாகி இருத்தல்!
இஃதிகாப் இருக்கும் போது அனுமதிக்கப்பட்டவைகள் & தடுக்கப்பட்டவைகள் :
அனுமதிக்கப்பட்டவைகள் :
1) உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாரேனும் பள்ளிக்கு வந்தால் நாம் அவர்களை பள்ளியின் வாசல் வரை சென்று வழி அனுப்பி வைக்கலாம்!
(நூல் : புஹாரி : 2035)
2) இஃதிகாப் இருக்கும் நிலையில் முடி களைதல், நகம் வெட்டுதல், தலை வாறுதல்! இது போன்ற சுத்தம் பேணும் விடயங்களில் ஈடுபடலாம்.
3) மலம் ஜலம் போன்ற அவசியத் தேவைக்காக பள்ளியை விட்டும் வெளியேறலாம்.
4) சாப்பிடுதல் , பருகுதல், தூங்குதல் போன்ற செயல்களில் இடுப்படலாம்!
தடுக்கப்பட்டவைகள் :
1) வீணான காரியங்களில் ஈடுப்படுதல்!
2) அரட்டை அடித்தல், புறம் பேசுதல்!
3) இஃதிகாப் முழுவதும் துக்கத்திலேயே கழித்தல்!
4) இச்சைகளை தூண்டும் காரியங்களில் ஈடுப்படுதல்!
இஃதிகாபை முறிக்கும் செயல்கள் :
1) எந்தத் தேவையுமின்றி வேண்டுமென்றே பள்ளியில் இருந்து வெளியேறுதல்!
2) ஹைலு (மாதவிடாய்) , நிபாஸ் ஏற்படுதல்!
( குறிப்பு : இஸ்திஹாலா (தொடர் உதிரி போக்கு) ஏற்பட்டால் இஃதிகாப் முறியாது அவர்கள் தொடர்ந்து இஃதிகாப் இருக்கலாம்! )
(நூல்: புகாரீ : 309)
இஃதிகாப் முடிவு :
ரமலான் கடைசி 10 நாட்களில் இஃதிகாப் இருக்க கூடியவர்கள்! 29 ம் நோன்பின் மஹ்ரிப் முடிந்த பின்பு வீட்டுக்கு செல்லலாம்!
சில ஊர்களில் ஷவ்வால் மாதம் பிறை பிறந்த பிறகு தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறுவார்கள் ஆனால் இதற்க்கு எந்த ஆதாரமும் கிடையாது!
அன்று மாலை வரை இஃதிகாப் இருக்க வேண்டும் ஒரு நாள் இஃதிகாப் இருக்க கூடியவர்கள் மஹ்ரிப் தொழுது விட்டு வீட்டுக்கு திரும்பி விடலாம் தொடர்ந்து இஃதிகாப் இருக்க கூடியவர்கள் தொடர்ச்சியாக அப்படியே இஃதிகாப் இருக்கலாம்!
(நூல்: முஸ்லிம் : 2183)