மூன்று வகையான சூஃபித்துவ சிந்தினை

(1) ஸுஹ்த்- எனப்படும் உலகப் பற்றற்ற வாழ்வு. 
இதனை தஸவ்வுஃப் என சூஃபிககள் கூறுவர். 

இது இஸ்லாமிய மார்க்கத்தில் வரவேற்கப்படுகின்ற ஒரு நல்ல நடைமுறையாகும்.
இதனையே இமாம்கள் தமது ஹதீஸ் நூல்களில்
كتاب الزهد 
எனத் தலைப்பிட்டு போதிக்கின்றனர்.

இந்த வகை #ஸுஹ்தில் இரு கலீஃபாக்களான உமர் பின் கத்தாப், அலீ பின் அபீ தாலிப்  போன்றவர்களோடுஅபுதர்  அல்கிஃபாரி, அபுத்தர்தா, அப்தில்லாஹ் பின் அம்று (ரழி) போன்ற மேலும் பல  நபித்தோழர்கள்  வரிசையில் உமர் பின் பின் அப்துல் அஸீஸ்,  சுஃப்யான் அஸ்ஸவ்ரீ, ஃபுழைல் பின் இயாழ் போன்ற அறிஞர்கள் துறவறத்தில் பயணித்தோர்  என்ற ஆன்மீக வட்டத்தினுள் இடம் பெறுகின்றனர்.

இந்தவகை துறவரத்தில் சுன்னாக் கொள்கை முஸ்லிம்கள் சூஃபிகளோடு உடன்படுகின்றனர்.

(2) பிற்கால சூஃபிகள் ஊடாக தற்கால சூஃபிகளால் ஷரீஆவின் நேரடியான ஆதாரச் சான்றுகளை புறம் தள்ளி, தற்கவியல் மூலம் முன்வைக்கப்படுகின்ற " வஹ்ததுல் உஜூத்" மற்றும் ஹுலுல் இத்திஹாத் சிந்தனை. 

இந்த சிந்தனை வழிகெட்டதும், இறைத்தூதர் கொண்டு வந்த சிந்தனை கிடையாது என்பதும் முஸ்லிம் உலக அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.

سبحاني سبحاني ما أعظم شأني
நானே (குறைகள் எதுவும் அற்ற) தூய இறைவன்.  நானே (குறைகள் எதுவும் அற்ற) தூய இறைவன். நான் எவ்வளவு மகத்துவமானவன் " என்பதும்
أنا الحق 
நானே சத்தியமான அல்லாஹ்வாகியவன்  என்பதும்
هو أنا،  أنا هو 
அவனே நான் !. நானே அவன்! . 
போன்ற இறை மறுப்பு வார்த்தைகளால் இந்த நிலை சூஃபித்துவ சிந்தனை நிரம்பி வழியும்.

வஹ்ததுல் உஜூத் பேசுவோரிடம் இன்றும் இந்த சிந்தனை காணப்படுகின்றனது.

ஆரம்ப நாட்களில் சூஃபித்துவம் பேசிய 

இப்னு அரபி, 
மன்சூர் அல் கல்லாஜ், 
தில்மிஸானீ, 
இப்னுல் ஃபாரிழ் போன்ற சின்தீக்களான இறை பண்பு மறுப்பாளர்களின்  வழிகெட்ட சிந்தனைக்குள் வருகின்ற சூஃபித்துவ சிந்தனையே இந்த இரண்டாம் வகை சிந்தனையாகும்.

இஸ்லாமிய அந்தலூஸியாவில் வாழ்ந்த உலமாக்களின் மார்க்க ஃபத்வாப் பிரகாரம் மன்சூர் அல்-கல்லாஜ் கொலை செய்யப்பட்டதாக வரலாறு சொல்கின்றது.

இவனும், இப்னு அரபி  போன்ற அத்வைதிகளும் கோயிலில் உள்ள பூசாரியும்,  நாயும் பன்றியும் அல்லாஹ் அன்றி வேறு என்னதான் எனக் குதர்க்கம் பேசினர்.

ஷாஃபிஈ இமாம் பெயரில் மறைந்து கொண்டு இவர்களை மகான்களாக மதிப்போரே இலங்கை வாழ் அத்வைதிகள். 

இமாம் இப்னு தகீக்  அல்ஈத் அவர்கள்  பதவி என்ற சூஃபியிடம்  நீ ஏன் தொழுவதில்லை எனக் கேட்க! நான் தினமும் மக்கா சென்று தொழுது வருகின்றேன் என்றானாம். 

ஷேக் அப்துர் ரஹ்மான் அப்துல் காலிக் ரஹி அவர்கள் : 
كتاب فضائح الصوفية [عبد الرحمن بن عبد الخالق]
என்ற தனது நூலில் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃரானீ என்ற சூஃபி ஞானி தபகாத் என்ற அவரது நூலில் தமது அவ்லியாக்கள், இறை நேசர்கள் என்ற ஒரு சாரார் பற்றிய தகவலில்  அலீ வஹீஷ் என்ற அவ்லியா கழுதையோடு புணர்ந்த அசிங்கமான ஒரு கதையையும் பதிவு செய்துள்ளார் என்றால் அத்வைதிகள் எவ்வாறான பண்புள்ளவர்கள்,  அவர்கள் உலகுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்  என்பது நமக்குப் புலனாகும்.

ஷஃரானியின் கழுதைக் காதல் / பாலியல் பற்றி 
தொடர்ந்து வாசிக்கவும்.
இதோ 
"وكان إذا رأى شيخ بلد، أو غيره ينزله من على الحمار ويقول: امسك رأسها حتى أفعل فيها. فإن أبى شيخ البلد تسمر في الأرض ولا يستطيع أن يمشي خطوة. وإن سمع حصل له خجل عظيم والناس يمرون عليه"!! (الطبقات الكبرى ج٢ص١٣٥)
யாராவது ஒருவர் கழுதையில் வருகின்ற போது அதில் இருந்து உடனே  அவரை இறக்கி அவன் முன்னே  வெட்கமின்றி குறித்த கழுதையுடன் பாலியலில் ஈடுபடும் கழுதை போன்ற அவ்லியா என்பது இதன் சுருக்கப் பொருளாகும்.

மேற்படி ஷஃரானீ தன்னை உலகுக்கு நல்லவனாகக் காட்ட சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்ற 
நபித்தோழர்கள் பத்து பேரின் வரலாறை எழுதிய பின்பே பின்வரும் கழிசடை சரித்திரத்தைப்  பதிவு செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கதாகும். 

இது போலவே இலங்கை அத்வைதியான ஞானப்பாவின் மீலாதும் மௌலிதும், அஹ்லுல் பைத் நேசமும் மறைந்து கொள்கின்றன.

(3) பித்ஆக்களை உருவாக்கி அவற்றை வணக்கமாகச்  செயல்படுத்துகின்ற மூன்றாம் பிரிவினரான சூஃபிக்கள்.

இவர்களே பள்ளிகளில் நடன, நாட்டியம் ஆடி, அரபி பாடல் கூத்து கொண்டாட்டங்கள் நடத்துவர்.

நெருப்பில் நடப்பர், கத்திக்குத்து ராதிபு நடத்துவர், கூடவே கஞ்சா அடிப்பர். சிலர் தொழுவர், பலரோ தொழமாட்டார் .

இவர்கள் மரணித்த சிலரை இறை நேசர்கள் எனக் கூறி, மண்ணறைகளைக் கட்டுதல் என்ற நபியின்
 தடுக்கப்பட இஸ்லாமிய போதனையை மீறி, மனணித்த அவர்கள் முன் தம்மை பாவியாக்கி, பர்ஸகில் வாழும் அவர்களை அல்லாஹ்வின் இடைத் தரகர்களாக்கி தமது தேவைகள் அவர்கள் ஊடாக நிறைவேறுவதாக நம்பி அவர்களை  அலாதியான முறையில் வணங்கி வழிபடுவர்.

அவர்களின் மண்ணறைகளை சுற்றி வலம் வருவர். கொடி ஏற்றி பரகத் நார்ஸா பங்கீடும் செய்வர்.  இவ்வாறானவர்களில் பொதுமக்களின் நிலைதான் பரிதாபம். 

சரி! மக்களை திசைதிருப்பிட #வஹ்ஹாபிகள் என இவர்கள் பொய் நாம் சூட்டுவோரால் முன்வைக்கப்படுகின்ற குர்ஆன், ஹதீஸ் போதனைகளைத்தான் இவர்கள் செவிமடுக்க வில்லை என வைத்துக் கொண்டாலும் அல்லாஹ்விடம் கேட்பதை நிறுத்தி,  இறைத் தூதர் எச்சரித்த, இவர்கள் இன்றும் தாம் பின்பற்றுவோராக கூறிக் கொள்கின்ற இமாம்கள் எச்சரித்த  இந்தப் படுபாதக செயலையாவது அவர்களின் போதனை நிமிர்த்தமாகச்சி நிறுத்தலாம் அல்லவா?

மண்ணறை வாசிகளை தரிசிக்கின்ற போது கூறப்பட்டுள்ள 
السَّلامُ عليْكم أَهلَ الدِّيارِ مِنَ المؤمنينَ والمسلمينَ، وإنَّا إن شاءَ اللَّهُ بِكم لَلاحقونَ
துஆப் பிரார்த்தனையைக் கூறி அந்த மகான்டளுக்காக இவர்கள் பிரார்த்தனை செய்வதோடு மாத்திரம் நின்று கொள்ளலாம்
அல்லவா?
அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!!!


குறிப்பு:
---
ஷேக் உஸ்மான் அல்-  கமீஸ் விளக்கும்
கீழ் உள்ள வீடியோவைத் தழுவி மேலதிக செய்திகளோடு எழுதப்பட்டது .

https://youtu.be/bMZybstROzA?si=5xgjVJ7zNcYDpK-g

- எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
أحدث أقدم