ஹதீஸ்களை ஏளனம் செய்பவர்களுக்கு மறுப்பவர்களுக்கு.. இந்த பதிவு சமர்ப்பணம்...


அபூ முஆவியா என்ற அறிஞர் கூறுகின்றார்...


 நான் அறிஞர் அல் அஃமஸ் அவர்களது ஹதீஸ்களை கலீபா ஹாரூன் ரஷீத் அவர்களுக்கு வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தேன். நபி(ச) அவர்கள் கூறினார்கள் என்று கூறும் போதெல்லாம் கலீபா ஹாரூன் ரஷீத் அவர்கள், எனது தலைவர்! எனது எஜமான்! என நபி(ச) அவர்களைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். நான் ஆதம்(ர) நபியும் மூஸா(ர) நபியும் சந்தித்தனர்… என்ற ஹதீஸைக் கூறிய போது கலீபாவின் சாச்சா அபூமுஆவியாவே எங்கே சந்தித்தனர் என (ஏளனமாகக்) கேட்டார். இது கேட்ட ஹாரூன் ரஷீத் கடுமையாகக் கோபம் கொண்டார். எனது வாளும் சவுக்கும் எங்கே? என்றார். அவை கொண்டு வரப்பட்டன. கூட இருந்தவர்கள் கலீபாவின் சாச்சாவுக்காகப் பரிந்து பேசினர்.” எனவே, கலீபா அவரைச் சிறையிலிட்டார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்தக் கேள்வியை(யும் ஹதீஸை மறுக்கும் போக்கையும்) இவரிடம் கொண்டு வந்தது யார்? எனக் கூறும் வரையில் இவரைச் சிறையிலிருந்து விடுவிக்க மாட்டேன் என்றும் சத்தியம் செய்தார். பின்னர் கலீபாவின் சாச்சா இந்தக் கருத்தைத் தனக்கு யாரும் சொல்லவில்லை என்றும் இது தனது வாயில் இருந்து சாதாரணமாக வந்த வார்த்தை என்றும் தான் அந்த ஹதீஸை நம்புவதாகவும், தனது தவறுக்காக வருந்தி தவ்பா செய்வதாகவும் கூறிய போது அவரை சிறையிலிருந்து விடுவித்தார்.” (ஸியர் அஃலாமுன் னுபலா:9ஃ288)


 தனது அறிவுக்கு எட்டாத போது ஹதீஸ்களை ஏளனமாகப் பேசுவது, அலட்சியம் செய்வது என்பது ஆபத்தான போக்கு என்பதில் குர்ஆன், ஹதீஸை ஏற்றுக் கொள்ளும் அறிஞர்களிடம் இருந்த உறுதியை இந்த செய்தி எடுத்துக் காட்டுகின்றது...

أحدث أقدم