ஸலபு & ஸலபிகளின் வாழ்வு/கூற்றுகளிலிருந்து..
தொகுப்பு: அமீர் இப்னு அப்துர்ரஹ்மான்
1. இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறாரகள் :
"சுன்னாஹ்வுடைய மக்கள், மக்களின் கருத்துக்களை விட்டுவிடுவார்கள் சுன்னாஹ்விற்காக.! ஆனால் 'பித்அத்'உடைய மக்களோ சுன்னாஹ்வை விட்டுவிடுவார்கள் மக்களின் கருத்துக்காக"
(அஸ் ஷவாய்க் 4/1603 |அல் ஹாபித் இமாம் இப்னுல் கய்யிம் رحمه الله)
2. இம்மனிதருக்கு நல்ல அமல்களால் எந்த ஒரு பலனும் கிடையாது..!
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் :
"நாம் செய்யக்கூடிய இபாதத்தில் அல்லாஹ்விற்காக செய்கிறேன் என்ற மனத்தூய்மையும், மற்றும் நபியின் முன்மாதிரி சுன்னாவும் இல்லையென்றால். இதற்கு உதாரணம் ஒரு பிரயாணி தன்னுடைய பயணத்தில் தன்னிடம் உள்ள பையில் மண்ணைக்கொண்டு நிரப்பியிருக்கிறார். அதுவோ மிகக்கனமாக உள்ளது.ஆனால் அது இம்மனிதருக்கு எந்த ஒரு பயனுமளிக்காது"
(அல் பாவாயித் 1/49 | இமாம் இப்னு அல் கையிம் رحمه الله)
3. மார்க்க அறிஞர்களின் சபையை புறக்கணிக்காதே..!
அமீர் அல் முஃமீனின்- உமர் இப்னுல் கத்தாப் (رضي الله عنه) கூறுகிறார்கள் :
"ஒரு மனிதன் தன்னுடைய வீட்டை விட்டு வெளியே வருகின்றான், அவ்வாறு வரும்போது பாவத்தை சுமந்தவாறு வருகின்றான்,அந்த பாவமோ "திஹாமாஹ்" மலை அளவு இருக்கின்றது,பிறகு மார்க்க அரிஞர்களின் சபையில் இருந்து கல்வியை செவியுறுகிறான்.பிறகு அல்லாஹ்ﷻவை பயந்து கொண்டு அல்லாஹ்ﷻவிடம் பாவமன்னிப்பு தேடுகிறான்,ஆதலால் அவன் வீட்டிற்கு திரும்பிச்செல்லும்போது எந்த பாவமும் இல்லாமல் செல்கின்றான்,ஆகவே மார்க்க அறிஞர்களின்
சபையை புறக்கணிக்கதே...!
(மிஃப்தாஹ் தார் அஸ் சதாஹ் 1/122-இப்னு அல் கய்யிம் (رحمه الله)
4. நாம் யார்.?
இமாம் அல் ஃபுதைய்ல் இப்னு ஈய்யாத்(رحمه الله)கூறுகிறார்கள்:
ஓ ஏழை மனிதனே.!
நீயோ பாவம் செய்கிறாய்.!ஆனால் நீயோ தன்னை அதிகம் நன்மை செய்பவராக நினைத்து கொள்கிறாய்.!
நீயோ அறியாமையில் இருக்கிறாய்.!ஆனால் நீயோ தன்னை பெரிய கல்வியாளர் என்று நினைத்து கொள்கிறாய்.!
நீயோ கருமித்தனம் செய்கிறாய்.! ஆனால் நீயோ தன்னை அதிகம் தானம் செய்பவராக நினைத்து கொள்கிறாய்.!
நீயோ மடையன்.! ஆனால் நீயோ தன்னை பெரும் அறிவுள்ளவனாக நினைத்து கொள்கிறாய்.!
உனக்கோ இந்த துன்யாவின் வாழ்க்கைக்காலம் சிறிது.!ஆனால் நீயோ பெரிது என்று நினைத்து கொண்டு இருக்கிறாய்.!
(நூல்-தரிக் அல் இஸ்லாம் 4/942 | ஆசிரியர்-இமாம் அத் தஹபி(رحمه الله)
5. தவ்ஹீதை கொண்டு நாளை துவங்குவோம் தவ்ஹீதை கொண்டு நாளை முடிப்போம்!
இமாம் இப்னு அல் கைய்யிம் அல் ஹன்பலி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்-
"அல்லாஹ்ﷻவுடைய தூதர்ﷺஅவர்கள் சூராஹ் அல் காஃபிரூனையும், சூராஹ் அல் இஹ்லாசையும், பஃஜர் இன் முன் ஸுன்னத்திலும், பிறகு வித்று தொழுகையிலும் ஓதுபவர்களாக இருந்தார்கள்!
ஏன் என்றால் நாளின் துவக்கம் பஃஜர்இன் முன்ஸுன்னத்தில் ஆரம்பித்து வித்ர் தொழுகையில் முடிகிறது! ஆதலால் தவ்ஹீதை கொண்டு அந்நாள் ஆரம்பமாகி தவ்ஹீதை கொண்டே முடிகிறது!
(இஜ்திமா அல் ஜூயூஷ் அல் இஸ்லாமிய்யா | ஆசிரியர் அல் ஹாபித் அல் இமாம் இப்னு அல் கைய்யிம் அல் ஹன்பலி (رحمه الله)
6. உண்மையான அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஹ் என்போர் யார்.?அவர்களது நிலைப்பாடு என்ன.?
இமாம் இப்னு கதீர்(ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்-
"அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஹ்வின்"நிலைப்பாடு என்னவென்றால் ஸஹாபாக்கள் செய்யாத எந்த ஒரு அமலும், ஸஹாபாக்கள் கூறாத எந்த ஒரு கூற்றும் பித்அத் ஆகும்! ஏன் என்றால் அது மார்கத்தில் நலவாக இருந்திருந்தால் அவர்கள் நம்மை முந்தியிருப்பார்கள்!
(தப்ஸீர் இப்னு கதீர்-7/282 | ஆசிரியர் அல் ஹாபித் அல் இமாம் இப்னு கதீர்(رحمه الله)
7. நாம் உடுத்தும் ஆடைகளில் சிறந்த ஆடை எது.?
அல்லாஹ்ﷻகூறுகின்றான்:
ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.
(அல் குர்ஆன்-7:26)
இமாம் அஸ் ஸஃதி(رحمه الله)இந்த வசனத்திற்கு விரிவுரை கூறுகிறார்கள்:
"அல்லாஹ்ﷻ இந்த வசனத்தில் நாம் அணிவதற்காக அவன் கொடுத்த ஆடையை பற்றியும் அத்துடன் சேர்த்து உணவையும், தண்ணீரையும், கால்நடைகளையும், மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பற்றி அல்லாஹ் இங்கே குறிப்பிடுகின்றான்!
ஆனால் இதை இல்லாவற்றையும் விட சிறந்த ஆடை தக்வா (இறையச்சம்-அல்லாஹ்வை பயப்படுவது) எனும் ஆடை தான்.! இந்த தக்வா எனும் ஆடை ஒரு அடியானை பாதுகாப்பதோடு,ஒருபோதும் அது கிளியவும் செய்யாது! அவனுடைய இதயத்தையும் ஆன்மாவையும் அழகாக பலபடுத்துகின்றது!
(தப்ஸீர் அஸ் ஸஃதி | ஆசிரியர்-அஷ்ஷைக் அல் அல்லமாஹ் | அப்துர்ரஹ்மான் இப்னு நாஸிர் அஸ் ஸஃதி (رحمه الله) (ஹிஜ்ரி 1307)
8. அல்லாஹ்ﷻவின் வேதமாகிய அல்குர்ஆனை நடைமுறை படுத்துவோம்.!*
அல் ஃபுதைல் இப்னு இயாத் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:
"அல்குர்ஆன் அருளப்பட்டதிற்கு காரணம் மக்கள் அதை சிந்தித்து வாழ்க்கையில் நடைமுறை படுத்துவதற்கு!
ஆனால் இன்று மக்களோ அதை (அல்குர்ஆனை) வெறும் ஓதுவதை மட்டும் நடைமுறையாக ஆக்கிக்கொண்டார்கள்.!"
(அஹ்லாக் ஹமலத் அல் குர்ஆன் வஅஹ்லிஹ் | ஆசிரியர் அல் இமாம் அபுபக்ர் முஹம்மத் இப்னுல் ஹுசைன் அல் ஆஜுரி(رحمه الله)ஹிஜ்ரி 360)
9. சுன்னாஹ்வை அறிவோம்-அதன் கல்வியை கற்போம்.!
இமாம் அபு ஹனீபாஹ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்-
"சுன்னாஹ்வை(ஹதீஸ்) பற்றிப்பிடியுங்கள்! ஸலப்புகளின் வழிமுறையை பின்பற்றுங்கள்! மார்கத்தில் 'பித்அத்'தை உருவாக்காதீர்கள், நிச்சயமாக ஒவ்வொரு 'பித்அத்'களும் வழிகேடுகளாகும்.!
(ஸவ்ன் அல் மன்தக் வல் கலாம்-இமாம் அஸ் சுயூத்தி ரஹிமஹுல்லாஹ்)
10. இமாம் அஸ் சுன்னாஹ் அஹ்மத் இப்னு ஹன்பல்(رحمه الله) கூறுகிறார்கள் :
"எம்மிடத்திலே சுன்னாஹ்வின் அடிப்படை என்னவென்றால், அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்களின் தோழர்களின் வழிமுறையை பின்பற்றுவது.!
மார்கத்தில் நபித்தோழர்களின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்வது.!
பித்அத்தை விட்டு தவிர்ந்து இருப்பது நிச்சயமாக ஒவ்வொரு
பித்அத்தும் வழிகேடுகளாகும்.!
(ஷரஹ் உஸூல் அஹ்லுஸ் சுன்னாஹ்)
11. இமாம் மாலிக்(رحمه الله) கூறுகிறார்கள்
நபிﷻயின் சுன்னாஹ் என்பது நூஹ் நபியின் கப்பலை போல, யார் அதில் ஏறிக்கொள்வாரோ அவர் வெற்றியடைவார் யார் விட்டுவிடுவாரோ அவர் தோல்வியடைவார்.!
(மஜ்மூ பதவ்வா 4/57 இமாம் இப்னு தைமிய்யாஹ்(رحمه الله)
12. எது உண்மையான வெற்றி..?
அல் இமாம் | முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:
"நீங்கள் இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் வைத்து அடையக்கூடிய வெற்றி அது உண்மையான வெற்றியல்ல.!
மாறாக, உண்மையான வெற்றி என்பது நீங்கள் நாளை மறுமையில் 'நரக' நெருப்பில் இருந்து பாதுகாக்கப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்பட்டால் தான் அது உண்மையான வெற்றியாகும்.!
அல்லாஹ்ﷻ கூறுகின்றான்-
"எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்.
(அல் குர்ஆன் 3:185)
(ஷரஹ் ஸஹீஹ் அல் புகாரீ | அல் அல்லாமாஹ்-முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உதைமீன் (رحمه الله)
13. ஸாலிஹான சிறந்த பெண்மணி யார்.?
அஹ்மத் இப்னு ஹர்ப் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:
"இந்த ஆறு பண்புகளும் ஒரு பென்னிடத்தில் இருந்தல் அவள் ஸாலிஹான சிறந்த பெண்மணியாக இருப்பாள்"
1-அல்லாஹ்ﷻகடமையாக்கிய ஐவேளை தொழுகையை பேணி தொழுவது.
2-தன்னுடைய கணவனுக்கு
கட்டுப்படுவது.
3-தன்னுடைய ரப் அல்லாஹ்ﷻவை திருப்திப்படுத்துவது.
4-புறம் மற்றும் அவதூறு பேசுவதில் இருந்து தன்னுடைய நாவை பேணி பாதுகாப்பது.
5-இவ்வுலக வாழ்க்கையுடைய அற்ப இன்பங்களை வெறுத்து ஒதுக்குவது.
6-சோதனை காலங்களில் பொறுமையாக இருப்பது.
(சியார் ஆலம் அந் நுபாலா | ஆசிரியர்-அல் ஹாபித் அல் இமாம் அத் தஹபி (رحمه الله)
14. அல்லாஹ்ﷻவை உண்மையாக பயப்படும் மனிதர் யார்.?
இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:
"அல்லாஹ்ﷻவை உண்மையாக பயப்படும் மனிதர் வெறும் அழுதுக்கொண்டு மாத்திரம் இருந்து அதன் காரணமாக அவருடைய கண்களில் கண்ணீர் வந்துகொண்டு இருந்தால் மட்டும் போதாது.! மாறாக அவர் அல்லாஹ்ﷻஎதை ஹராமாக தடுத்தானோ அதை விட்டு விலகியிருப்பர்.! அவருடைய மனோஇச்சை அதன்பால் அவரை அழைத்தாலும் சரி அல்லது அந்த காரியத்தை அவரால் செய்ய ஆற்றல் பெற்று இருந்தாலும் சரி.!
(ரஸாயில் இப்னு ரஜப்-1/116 | அல் ஹாபித் அல் இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி-رحمه الله)
15. வாழ்க்கையில் ஒருமுறையேனும் இந்த குர்ஆன் வசனத்தை நடைமுறைப்படுத்துவோம்.!
அல்லாஹ்ﷻ கூறுகின்றான்:
"நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்.எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ்ﷻஅதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
(அல் குர்ஆன்-3:92)
அல் இமாம் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹிமஹுல்லாஹ்) இந்த வசனத்திற்கு விரிவுரை கூறுகிறார்கள்:
"மக்கள் இந்த குர்ஆன் வசனத்தை வாழ்க்கையில் நடைமுறை படுத்தவேண்டும்,அது ஒருமுறையேனும் சரியே.அவுனுடைய செல்வங்களில் இருந்து அவனை ஏதேனும் சந்தோசப்பட செய்தால், அந்த செல்வத்தில் இருந்து அவன் அல்லாஹ்ﷻவின் பாதையில் தானம், செலவு செய்யட்டும். இதன் காரணமாக அவன் (அல் பிர்ர்) நன்மையை அடைவான்.!
(தப்ஸீர் சூராஹ் ஆல இம்ரான் | அல் அல்லமாஹ் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உதைமீன்(رحمه الله)
16. பயனுள்ள கல்வியை கொண்டும் ஸாலிஹான அமலைக்கொண்டும் மட்டும் அல்லாஹ்ﷻவை வணங்கு..!
அல் முஹத்தித் | அல் இமாம் | முஹம்மத் நாஸிருத்தீன் அல் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:
"பயனுள்ள கல்வியை கொண்டும், ஸாலிஹான அமலைக்கொண்டும் மட்டும் அல்லாஹ்ﷻவை வணங்குவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் உள்ள கடமையாகும்.! அறிந்து கொள்ளுங்கள் பயனுள்ள கல்வி ஒருபோதும் பயனளிக்காது எதுவரையென்றால் அந்த கல்வி கிதாபில்லாஹ் (குர்ஆன்) மற்றும் நபிﷺயின் சுன்னாஹ் (ஹதீத்)இல்இருந்து இருந்து பெறாதவரை.! பிறகு ஸலப் உஸ் ஸாலிஹீன்களிடம் இருந்து எது எமக்கு வந்ததோ அதுதான் பயனுள்ள கல்வி.!
(அல் அஜ்விபா அல் அல்பானீயா அலா அசீலத்துள் குவைதிய்யா | அல் இமாம் முஹம்மத் நாஸிருத்தீன் அல் அல்பானி (رحمه الله)
17. எம்மிடித்தலே சுன்னாஹ்வின் அடிப்படைகள்..!
இமாம் அஸ் சுன்னாஹ் அஹ்மத் இப்னு ஹன்பல்(رحمه الله) கூறுகிறார்கள்:
"எம்மிடத்திலே சுன்னாஹ்வின் அடிப்படை என்னவென்றால், அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்களின் தோழர்களின் வழிமுறையை பின்பற்றுவது.!
மார்கத்தில் நபித்தோழர்களின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்வது.!
பித்அத்தை விட்டு தவிர்ந்து இருப்பது
நிச்சயமாக ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடுகளாகும்.!
(ஷரஹ் உஸூல் அஹ்லுஸ் சுன்னாஹ்)
18. எமக்கு நபித்தோழர்கள்தாம் முன்னோர்கள்.!
ஹுதைபாஹ் இப்ன் அல் யமான் (رضي الله عنه) கூறுகிறார்கள்:
"நபித்தோழர்கள் செய்யாத எந்த ஒரு அமல்ளையும், இபாதத்தையும், வணக்கவழிபாடுகளையும்,நீங்கள் செய்யாதீர்கள்.! ஏன் என்றால் உங்களுக்கு முன்சென்ற நபித்தோழர்கள் மார்கத்தில் எந்த ஒரு இடத்தையும் விட்டு செல்லவில்லை பிற்காலத்தில் வரக்கூடிய மக்கள் ஒரு அமல்லையோ, வணக்கவழிபாடுகளையோ மார்கத்தில் சேர்ப்பதற்கு.!
மார்க்க கல்வியை தேடக்கூடியவர்களே, அல்லாஹ்ﷻவை பயந்தது கொள்ளுங்கள்.!உங்களுக்கு முன்சென்ற நபித்தோழர்களின் வழிமுறையை பின்பற்றுங்கள்.!
(இமாம் இப்னு பத்தாஹ் அல் ஹன்பலி(رحمه الله) ஹிஜ்ரி-304 | அல் இபானாஹ்)
19. அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்களின் சுன்னாஹ் தான் என்று தெரிந்தால் அதை விட்டுவிடாதே..!
இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் :
"மார்க்க அறிஞர்கள் அனைவரும் ஒருமிதக்கருத்தாக எடுத்த முடிவு என்னயெனில், ஒரு மனிதருக்கு அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்களின் சுன்னாஹ் தான் என்று தெளிவாக காண்பிக்கப்பட்டு தெரிந்தும், அவர் அஸ்ஸுன்னாஹ்வை எந்த ஒரு மனிதருடைய கருதிற்காகவும் விட்டுவிடக்கூடாது.!"
(இலாம் அல் முவாக்கின்-2/201 |இமாம் ஷாபிஈ رحمه الله)
20. இஸ்லாம் தான் சுன்னாஹ்-சுன்னாஹ் தான் இஸ்லாம்.!
இமாம் பர்பஹாரீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் :
அறிந்துகொள்ளுங்கள்.! இஸ்லாம் தான் சுன்னாஹ்வாக இருக்கின்றது மற்றும் சுன்னாஹ் தான் இஸ்லாம் ஆகா இருக்கின்றது. இவ்விரண்டிலும் ஒன்று இல்லாமல் மற்றொன்றை நிலைநாட்டமுடியாது.!
(ஷரஹ் அஸ் சுன்னாஹ் | இமாம் பர்பஹாரீ (ரஹிமஹுல்லாஹ்) ஹிஜ்ரி 329)
21. எது உண்மையான பணிவு..?
இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் :
"பணிவு என்பது சத்தியத்தை உம்மிடம் யார் கொண்டுவந்தாலும் அதை ஏற்றுக்கொள்வது.
அவர் வயதில் சிறியவராக இருந்தாலும் சரி அல்லது பெரியவராக இருந்தாலும் சரியே..!
அல்லது அம்மனிதரய் நீ நேசித்தாலும் சரி அல்லது வெறுத்தாலும் சரியே..!
இப்படி எவரொருவர் சத்தியத்தை ஏற்று கொள்கிறாரோ அவர்தான் உணமையான பணிவாளி ஆவர்..! ஆனால் எவர் ஒருவர் சத்தியம் என்று தெரிந்தும் அதை ஏற்காமல் தன் பெருமையை மேலாகவைக்கிறாரோ, அல்லது சத்தியத்தை கொண்டுவந்த மனிதரை தன்னுடன்
ஒப்பிட்டு ஏளனமாக பேசுகிறாரா அவர்தான்
தற்பெருமையுடையவர் ஆவர்..!
(ஜாமிஅல் உலூம் அல் ஹிகம்-13|அல் ஹாபித் இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி رحمه الله)
22. அறிவுள்ளவனுக்கும் அறிவற்றவனுக்கும் உள்ள வித்தியாசம்..!
இமாம் இப்னு அப்தில் பர் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் :
"அறிவற்ற மடயனோ சத்தியத்தை கண்டு கோபம் அடைகின்றான்.! அனால் அறிவுள்ள புத்திசாலியா அசத்தியத்தை கண்டு கோபம் அடைகின்றான்.!
[بهجة المجالس ١/١٢٨]
23. உண்மையான அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஅத் யார்..?
இப்னு அப்பாஸ் رضي الله عنه கூறுகிறார்கள்:
"நீ எப்போதும் அஹ்லுஸ் சுன்னாஹ்வில் உள்ள மனிதனை காண்பாய், அவன் மக்களை சுன்னாஹ்வின் பக்கம் அழைப்பவராகவும்,
'பித்அத்'தை விட்டு மக்களை எச்சரிப்பவராகவும் இருப்பார்..!
(ஷரஹ் உஸூல் இத்திகாத் அஹ்லுஸ் சுன்னாஹ்),
24. அல்லாஹ்ﷻவின் அடியர்களே..!
இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் :
அல்லாஹ்ﷻவின் அடியர்களே..! புனிதமிக்க இந்த ரமதான் மாதம் நம்மை விட்டு செல்ல இருக்கின்றது. ஆனால் சில நாட்களோ மீதம் இருக்கின்றது. உங்களில் யாராவது நன்மையை செய்தால்
அதை நன்றாக முழுமையாக முடிக்கட்டும்.!
உங்களில் யாராவது நன்மை செய்யாமல்
இருந்த்திருந்தால்
அவர் மீதமுள்ள நாட்களில்
நன்மையை செய்து கொள்ளட்டும்.!
ஏன்என்றல் முடிவுகள் அனைத்தும் செயல்களை பொறுத்துதான் இருக்கின்றன.!
ஆதலால் மீதமுள்ள இரவையும் பகலையும் நன்மை செய்வதில் பயன்படுத்திக்கொள்ள.!
நீ செய்யும் நன்மை உனக்கு சாட்சியாக இருக்கலாம், அனைத்தையும் அறிந்த அல்லாஹ்ﷻ
விடத்தில்..!
பிறகு இந்த ரமதான் மாதத்தை ஸலாம்மோடு விடைபெறசெய்..!
(லதாய்ப் அல் மாரிஃப்-386| அல் ஹாபித் அல் இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி رحمه الله)
25. அல்லாஹ்ﷻஉன்னை பார்த்துக்கொள்வான்..!
இமாம் சுஃப்யான் அத் தவ்ரி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் :
"நீ உன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நன்றாக நடத்துக்கொள்.! அல்லாஹ்ﷻ உன்னுடைய வெளிப்படையான வாழ்க்கையை நன்றாக பார்த்துக்கொள்வான்.!
"உனக்கும் அல்லாஹ்ﷻவிற்கும் இடையில் உள்ள விஷயங்களை கவனமாக பார்த்துக்கொள்.! உனக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள விஷயங்களை அல்லாஹ்ﷻ பார்த்துக்கொள்வான்.!
"உன்னுடைய மறுமை வாழ்க்கைக்காக அதிகமாக பாடுபடு.! அல்லாஹ்ﷻ உன்னுடைய துன்யா வாழ்க்கையை சீராக்கி பார்த்துக்கொள்வான்.!
"உன்னுடைய துன்யா வாழ்க்கையை மறுமை வாழ்க்கைக்காக விற்றுவிடு.!
இதற்கு உண்டான இலாபத்தை மறுமையில் இரட்டிப்பாக பெற்றுக்கொள்வாய்.! ஆனால் உன்னுடைய துன்யா வாழ்க்கைக்காக மறுமை வாழ்க்கையை விற்றுவிடாதே.!
அப்படிச்செய்தால் மறுமையில் இரண்டியுமே இழந்துவிடுவாய்.!
(ஹில்யத் அல் அவ்லியா-7/35 | இமாம் சுஃப்யான் அத் தவ்ரி رحمه الله)
26. தவ்ஹீதை நிலைநாட்ட நீ போராடு..!
இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:
"தவ்ஹீதை நிலைநாட்ட நீ போராடு, அறிந்துகொள் உன்னை அல்லாஹ்ﷻவிடத்தில் எதுவும் கொண்டுபோய் சேர்க்காது தவ்ஹீதை தவிர..! அத்துடன் தவ்ஹீதுடைய சட்டங்களை அமல்படுத்துவதில் ஆர்வம்கொள்..! அறிந்துகொள் உன்னை நரக நெருப்பில் இருந்து எதுவும் பாதுகாக்காது தவ்ஹீதை தவிர"...!
(கலிமத் உல் இஹ்லாஸ்-அல் ஹாபித் அல் இமாம்-இப்னு ரஜப் அல் ஹன்பலி رحمه الله)
27. உனது பாவங்கள் உன்னை புண்படுத்தினால்...!
இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:
"உனது பாவங்கள் உன்னை புண்படுத்தினால், இரவுவேளையில் உனது கைகளை ஏந்தி அல்லாஹ்ﷻவிடத்தில் துஆ செய்வதன் மூலமாக குணப்படுத்து..! அல்லாஹ்ﷻவின் அருளின் மீது நீ நம்பிக்கை இழக்காதே..!
நிச்சயமாக அல்லாஹ்ﷻவின் அருளின் மீது நம்பிக்கை இழப்பது,
நீ செய்த பாவங்களை விட மிகவும் பாவமானது..!
(அல் ஹாபித் அல் இமாம்-இப்னு ரஜப் அல் ஹன்பலி رحمه الله)
28. நான் கவலைப்படுகிறேன்...!
அமீர் அல் முஃமீனின்- உமர் இப்னுல் கத்தாப் (رضي الله عنه) கூறுகிறார்கள் :
"எனது துஆக்கள் பதில் அளிக்கப்படுமா இல்லையா என்று நான் கவலைப்படவில்லை!
மாறாக நான் கவலைப்படுகிறேன்..! என்னால் அல்லாஹ்ﷻவிடத்தில் துஆ கேட்க முடியுமா அல்லது முடியாத என்று, ஒருவேளை நான் துஆ கேட்பதற்கு அல்லாஹ்ﷻவால் வழிகாட்டப்பட்டால் நான் அறிந்துக்கொள்வேன் கண்டிப்பாக துஆவிற்கு பதில் கிடைக்கும் என்று"
(அல் அவாஇஷா-பக்கம் 117)
29. குழப்பங்கள் அதிகமான காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்..?
இமாம் அத் தஹபி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:
குழப்பங்கள் அதிகமாகும்போது இதனை பின்பற்றுங்கள்..!
முதலாவது-நபியின்ﷺ சுன்னாஹ்வை பலமாக பற்றி பிடித்துக்கொள்ளுங்கள்.
இரண்டாவது- அமைதியாக இருங்கள்.
மூன்றாவது-உங்களுக்கு சம்மந்தமில்லாத, பயனளிக்காத விஷயங்களை விட்டு விலகிக்கொள்ளுங்கள்.
நான்காவது-அல்லாஹ்ﷻவின் பக்கமும் அவனது தூதரின்ﷺ பக்கமும் திரும்புங்கள்.
ஐந்தாவது-அல்லாஹ்ﷻவே மிக அறிந்தவன் என்று கூறுங்கள்.!
(நூல்:சியார் அஃலம் அன் நுபாலா |ஆசிரியர்: இமாம் அத் தஹபி (ரஹிமஹுல்லாஹ்)
30. ஸுன்னாஹ் (நபிவழியை) பின்பற்றும்போது நாம் சந்திக்ககூடும் விளைவுகள் என்னாவாக இருக்கும்..?
அஷ்ஷெய்ஹ் ஸாலிஹ் அல்பவ்ஸான் (حفظه الله) கூறுகிறார்கள்:
"யாரெல்லாம் நபியின்ﷺ சுன்னாவை பின்பற்றுகிறார்களோ அவர்கள் துன்பங்கள், கஷ்டங்கள்,சிக்கல்கள், மிரட்டல்கள் மற்றும் அவமதிப்பை மக்களிடம் இருந்து பெறுவார்கள். எனினும் அவர் பொறுமையாக இருத்தல்
வேண்டும், சத்தியத்தை (சுன்னாஹ்வை) பின்பற்றுவதில் தளர்ந்துவிடவோ அல்லது சமரசித்திற்கோ அல்லது சுன்னாஹ்வில் இருந்து எதையும் விட்டுக்கொடுக்கவோ கூடாது.ஆதலால் தான் நபியின்ﷺ ஹதீஸில் கூறப்பட்டுள்ளது"ஒரு காலம் வரும் அப்போது மார்க்கத்தை (அல்குர்ஆன் மற்றும் சுன்னாஹ்வையும்) பின்பற்றுவது தன் கையிலே நெருப்பு கங்கை வைப்பது போன்று கடினமாக இருக்கும் அல்லது துன்பம் காரணமாக முள் தைப்பது
போன்று இருக்கும். கடுமையான துன்பங்களும் சிக்கல்களும் பிற மக்களால் அவர் சந்திக்க நேரிடும், ஆதலால் இவை அனைத்திற்கும் பொறுமை காத்தல் அவசியமாகும்..!"
(ஷரஹுஸ் சுன்னாஹ் விரிவுரையில் இருந்து-ஸாலிஹ் அல்பவ்ஸான்-பக்கம்/72)
31. இந்த ஈத் உடைய பெருநாள் யாருக்கு.?
இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி(رحمة الله عليهم) கூறுகிறார்கள்-
"இந்த ஈத் உடைய பெருநாளில் வெறும் புத்தாடை மட்டும் உடுத்தும் மனிதருக்கு ஈத் உடைய பெருநாள் கிடையாது! மாறாக யார் அல்லாஹ்(سبحانه وتعالى) விற்கு கீழ்ப்படிவதை அதிகப்படுத்தி கொள்கிறாரோ அவருக்கு தான் இந்த ஈத் உடைய பெருநாள்! அதேபோன்று இந்த ஈத் உடைய பெருநாள் வெறும் அழகான ஆடையையும்,ஆடம்பர வாகனமும் வைத்துஇருக்கும் நபருக்கு இந்த ஈத் உடைய பெருநாள் கிடையாது! மாறாக யாருடைய பாவங்கள் அனைத்தும் அல்லாஹ் (سبحانه وتعالى)வினால் மன்னிக்கப்பட்டுவிட்டதோ அவருக்கு தான் இந்த ஈத் உடைய பெருநாள்!
(நூல்-லதாய்ப் அல் மாரிஃப்-371 | ஆசிரியர்-அல் ஹாபித் அல் இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி(رحمة الله عليهم)
32. ஸஹீஹான ஹதீஸை மறுக்கும் வழிகேடருக்கும் மற்றும் அவரை பின்பற்றும் வழிகேடர்களின் கவனத்திற்கு!!
ஷைக் அல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யாஹ்(رحمه الله تعالى) கூறுகிறார்கள்-
"யாரெல்லாம் அல் குர்ஆனையும், அல்ஹதீஸ் (ஸுன்னாஹ்வையும்) ஸஹாபாக்கள் மற்றும் தாபிஈன்களின் விளக்கத்தை ஏற்க மறுத்து அதற்கு சுயமாக விளக்கம் கொடுக்கிறாரோ நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரிய பொய்யை இட்டுக்கட்டியுள்ளார்.! இது அல்லாஹ்வின் வசனத்தை மறுக்கும் செயலாகும்.! இப்படி பேச்சை திரித்து சுயவெளக்கத்தை கொடுப்பது சரியான கொள்கையை விட்டு திருப்பும் செயலாகும்! இப்படி செய்வது பெரும் தீமையை ஏற்படுத்தும்.! மேலும் இது போன்ற செயல்களால் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு எதிரானவர்களுக்கும், அல்லாஹ்வை நம்ப மற்போருக்கும், அல்லாஹ்வின் மார்கத்தை சிதைத்து அதை குழப்புவதற்கு வழிவகுக்கும்! ஆகையால் இது போன்ற பொய்யான வழிகேடுகளை அறிந்து அவைகளை கண்டிப்பாக இஸ்லாமை விட்டு துரத்தவேண்டும்!
(مجموعة الفتاوى(١٣/ ٢٤٣) لشيخ الإسلام ابن تيمية(رحمه الله تعالى)
(நூல்-மஜ்மஊ அல் பஃத்வா 13/243-ஆசிரியர் ஷைக் அல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யாஹ்(رحمه الله)
33. அல்லாஹ்ﷻகொடுத்த இலவசமான நேரங்களையும், ஆரோக்யமான வாழ்வையும் வீணாக்கிவிடவேண்டாம்.!
இமாம் இப்னு அல் ஜவ்ஸி அல் ஹன்பலி(رحمه الله)கூறுகிறார்கள்-
"யார் ஒருவர் அல்லாஹ்ﷻதனக்கு கொடுத்த இலவசமான நேரங்களையும், ஆரோக்யமான வாழ்வையும், அல்லாஹ்விற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவாறு பயன்படுத்துகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றி அடைந்துகொள்வார்!
ஆனால் யார் ஒருவர் அல்லாஹ்ﷻதந்த இரண்டு அருட்கொடைகளையும் வைத்து அல்லாஹ்விற்கு கீழ்ப்படிய மறுக்கிறாரோ அவர் நிச்சயமாக தோல்வி அடைந்து கொள்வார்! ஏன்என்றால் இலவச நேரங்களை தொடர்ந்து அதிகமான வேலைபழுது வரலாம்!ஆரோக்யமான வாழ்வை தொடர்ந்து நோயுற்ற வாழ்க்கை வரலாம்!
(நூல்-ஃபத்ஹுல் பாரி ஷரஹ் ஸஹீஹ் அல் புஹாரி | ஆசிரியர்-அல் ஹாபித் அல் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி(رحمه الله)
34. அல்லாஹ்ﷻவிற்கு நன்றி செலுத்துவதில் பொடும்போக்காக இருக்காதே.!
இமாம் இப்னு அல் கைய்யிம் அல் ஹன்பலி (رحمه الله) கூறுகிறார்கள்-
"உன்னை படைத்த 'ரப்' அல்லாஹ்ﷻவிற்கு நன்றி செலுத்துவதில் பொடும்போக்காக இருக்காதே!ஏன்என்றால் அவன் தான் உன்னை படைத்தான்,உனக்கு இந்த வாழ்வை கொடுத்தான்,உனக்கு சுவாசிக்க்கும் ஆற்றலை கொடுத்தான்,அத்துடன் உன் வாழ்விற்கு தேவையான அனைத்தையும் கொடுத்தான்.!இவை அனைத்தும் உனக்கு தேவை உடையதாகவே இருக்கின்றன!
(அல் (F)பாவாஈத் பக்கம் 158 | ஆசிரியர்-அல் ஹாபித் அல் இமாம் இப்னு அல் கைய்யிம் அல் ஹன்பலி(رحمه الله)
35. இமாம் அஸ் ஸுன்னாஹ்-அஹ்மத் இப்னு ஹன்பல்(رحمه الله)அவர்களும் அவர்களின் அறிவாற்றலும்!
அல் இமாம் அப்துல் வஹ்ஹாப் அல் வர்ராக்(رحمه الله) இமாம்மை பற்றி கூறுகிறார்கள்-
"என்னுடைய வாழ்க்கையில் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் போன்று மார்கத்தில் அறிவாற்றலை நான் கண்டதில்லை என்று கூறினார்கள்!அப்போது அவர்களிடம் கேட்கப்பட்டது நிறைய கல்வியுடைய அறிஞர்கள் மத்தியில் இமாம் அஹ்மதை மட்டும் கூறுவதற்கு காரணம் என்ன.?
அதற்கு இமாம் அவர்கள் கூறினார்கள் இமாம் அஹ்மத் இடம் அறுபதுஆயிரத்துக்கும் மேற்பட்ட மார்க்க சட்ட விளக்கங்கள் கேட்கப்பட்டது!அதற்கு இமாம் அஹ்மத் அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆதாரத்துடன் பதில் கூறி அதன் அறிவிப்பாளர்கள் யார் என்றும் கூறினார்கள்.!
(நூல்-தபாகத் அல் ஹனபிலாஹ் | ஆசிரியர்-அல் இமாம் அபு யாளா இப்னு அல் பர்ராஹ் அல் ஹன்பலி (رحمه الله)
36. துல்ஹஜ் மாதத்தில் அதிகமாக தக்பீர் கூறுவோம்.!
الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر الله أكبر،
ولله الحمد.!
அல் இமாம் | முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உதைமீன் (رحمه الله) கூறுகிறார்கள்-
"துல்ஹஜ் மாதத்தில் ஆண்களும் பெண்களும் அதிகமாக தக்பீர் கூறுவது ஸுன்னாஹ்வாகும்.!ஆண்கள் மஸ்ஜிதுகளில்,கடைவீதிகளில்,மற்றும் வீடுகளில் சப்தமாக கூறவேண்டும்! பெண்கள் சப்தமில்லாமல் அமைதியாக தக்பீர் கூறவேண்டும்!(ஏன்என்றால் பெண்கள் தங்களின் சப்தத்தை குறைக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளாள்)
(மஜ்மஉ ஃபதவ்வா வரஸாயில் 25/190 | அல் அல்லாமாஹ்-முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உதைமீன் (رحمه الله)
37. அல்-குர்ஆன் உடைய மக்கள் யார்..?
_இப்னு அல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்-_
"அல் குர்ஆன் உடைய மக்கள் யார் என்றால் அவர்கள் அல்குர்ஆனை பொருள் உணர்ந்து ஓதுவார்கள் அதன்படி செயல்படுவார்கள், அவர்கள் அல்குர்ஆனை மனனம் செய்யாமல் இருந்தாலும் சரியே..!"
(ஜாத் அல் மாத் 1/327)
38. நாம் வாழக்கூடிய இந்த இடம் (துன்யா) உலக வாழ்க்கை எதற்காக..?
அல்லமாஹ் இப்னு பாஸ் (ரஹீமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்-
நாம் வாழக்கூடிய இந்த இடம்-துன்யா(உலக வாழ்க்கை) நற்செயல்கள் அதிகமாக செய்யக்கூடிய இடம்.! அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரவேண்டிய இடம்.! நாம் செய்யக்கூடிய அணைத்து செயல்களுக்கும் மறுமையில் கேள்வி கணக்கு உண்டு.! இது மறுமைக்காக தயார் செய்யகூடிய இடம்.!ஆனால் அந்த (ஆஹிரா) மறுமையோ மரணத்திற்கு பின்பு உள்ள வாழ்க்கையோ நாம் செய்த அனைத்திற்கும் வெகுமதி மற்றும் இன்பம் அனுபவிக்கும் இடமாகும்.
(ஷேய்க் அப்துல் அஸீஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ்- (ரஹிமஹுல்லாஹ்)
39. மார்க்க கல்வியை கற்பதற்கான ஆறு விஷயங்கள்..!
இப்னு அல் கைய்யிம் அல் ஹன்பலி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்-
முதலாவது-கேள்வி மற்றும் மார்க்க சந்தேகங்களை அழகான முறையில் கேட்பது.
இரண்டாவது-அமைதி மற்றும் உன்னிப்பாக பதிலை கவனிப்பது.
மூன்றாவது-நன்றாக புரிந்துகொள்வது.
நான்காவது-மனப்பாடம் செய்வது.
ஐய்ந்தவது-பிறருக்கு கற்றுக்கொடுப்பது.
ஆறாவது-கல்வி கற்றதன் படி அமல்செய்வது அதில் வரம்புமீறாமல் இருப்பது.
(மிஃப்தாஹ் தார் அஸ்
சாஅதாஹ்-பக்கம் 283/இப்னு அல் கைய்யிம்)
40. எந்த தொழுகையில் இந்த ஆறு விஷயங்கள் இருக்கின்றதோ அது முனாபிக்கின் அடையாளம் ஆகும்..!
அல்லமாஹ் இப்னு அல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்-
1-தொழுகைக்காக நிற்கும்பொழுது சோம்பேறியாக நிற்பது
2-பிறர் பார்க்கவேண்டும் என்பதற்காக தொழுகுவது
3-தொழுகையை தாமதப்படுத்துவது
4-தொழுகையை வேகமாக தொழுவது
5-தொழுகையில் அல்லாஹ்வை நினைவு கூறாமல் இருப்பது
6-பர்ளான தொழுகையை தொழாமல் விடுவது
(இப்னு அல் கைய்யிம்-ஹுக்ம் தரிக் அஸ்ஸலாத் பக்கம் :105)
41. சத்தியத்தில்(நேர்வழியில்) உள்ள மக்கள் உண்மையை எடுத்து கூறாமல் இருந்தால் என்ன ஆகும்..?
அல்லமாஹ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்-
"சத்தியத்தில்(நேர்வழியில்) உள்ள மக்கள் எது உண்மை எது சத்தியம் என்று அசத்தியத்தியத்தில் உள்ள மக்களுக்கு எடுத்து கூறாமல் இருந்தால், அசத்தியத்தில் உள்ள மக்கள் தவறிலேயே இருப்பார்கள்,பிற மக்களும் அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவார்கள், ஆதலால் உண்மையை எடுத்து கூறாமல் இருந்த காரணத்தினால் அணைத்து பாவங்களும் உண்மையை எடுத்து கூறாமல் அமைதியாக இருந்த மக்கள் மீதே விழும்..!
(மஜ்மூஃ ஃபதாவா 3/72-இப்னு பாஸ் அவர்களின் ஃபத்வா தொகுப்பு)
42. இப்னு அல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் :
"அல்லாஹ் தான் ஏழு கடல்கலையும் படைத்தான் ஆனால் அவனோ உங்கள் கண்களில் இருந்து (அவன் மீது உள்ள பயத்தால்)
வரும் ஒரு துளி கண்ணீரை அவன் விரும்பினான்,ஆனால் உங்கள் கண்களோ அவனது பயத்தால் அழுகவும் இல்லை கண்ணீரும் வரவில்லை"
(இப்னு அல் கைய்யிம்-அல் பவா ஈத்/ 53)
43. இப்னு தய்மிய்யாஹ் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
"யார் ஒருவர் தொழுகையை விடுகிறாரோ அவர் திருடனை விட, விபச்சாரணை விட, மது குடிப்பவனை விட,மிகவும் மோசமானவன் ஆவான்.
(மஜ்மூஃ உல்ஃபதாவா-ஷைகுல் இஸ்லாம் தக்யுதீன் அபுல் அப்பாஸ் அஹ்மத் இப்னு அப்துல் ஹலீம்-இப்னு தய்மிய்யாஹ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஃபத்வா தொகுப்பு-22:50)
44. பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) எனக்கூறுவதன் நன்மை..!
அல்லாமா-முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்-
ஒருவர் ஏதேனும் ஒரு செயலை செய்யுமுன் "பிஸ்மில்லாஹ்" என்று கூறி செய்தால்,அதில் அல்லாஹ் பரக்கத்தை கொடுக்கின்றான்.
[شرح رياض الصالحين ٥/٤٦٢]
45. ஒரேயொரு ஆதாரம் போதுமானது..!
ஷேய்க் அல் அல்பானி (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்-
"சத்தியத்தை தேடும் மனிதருக்கு ஒரே ஒரு ஆதாரம் போதுமானது.! ஆனால் மனோஇச்சையை பின்பற்றும் மனிதருக்கு ஆயிரம் ஆதாரம் கொடுத்தாலும் அவருக்கு போதுமானதாக இருக்காது.!
(அல் ஹூதா வன் நூற்/311)
46. இமாம் பர்பஹாரீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் :
அறிந்துகொள்ளுங்கள்.! இஸ்லாம் தான் சுன்னாஹ்வாக இருக்கின்றது மற்றும் சுன்னாஹ் தான் இஸ்லாம் ஆக இருக்கின்றது.
இவ்விரண்டிலும் ஒன்று இல்லாமல் மற்றொன்றை நிலைநாட்டமுடியாது.!
(ஷரஹ் அஸ் சுன்னாஹ் இமாம் பர்பஹாரீ (ரஹிமஹுல்லாஹ்)
ஆம் சகோதர்களே.! சுன்னாஹ் இதுதான் ஒரு உண்மையான முஸ்லிமின் அடிப்படை! சுன்னாஹ்வை அறிவது, அதன் கல்வியை கல்வியாளர்களிடம் இருந்து கற்பது! அதன் படி அமல் செய்வது!இது தான் ஒரு முஸ்லிமின் உண்மையான வெற்றியாக இருக்கமுடியும்.! ஆனால் இன்று சுன்னாஹ்வையும் அதன் கல்வியையும் புறக்கணித்த வழிகேடர்களோ தங்களுடைய மனோஇச்சையை
'மார்க்கமாக சுன்னாஹ்வாக' ஆக்கிக்கொண்டார்கள். சத்தியம் தெரிந்தும் அதை ஏற்க மறுத்தார்கள்.அதன் காரணமாக வழிகெட்டுப்போனார்கள்.
இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவெனில் மேலே எம்முடைய ஸலப் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ள சுன்னாஹ்வின் கல்வி என்பது வெறும் தொழுகையுடைய சுன்னத்துகளோ அல்லது சாப்பிடுவதின் சுன்னத்துகளையோ பற்றி அல்ல.! மாறாக இங்கே அறிஞர்கள் குறிப்பிடுவது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை 'அல் அகீதத்துல் இஸ்லாமிய்யா'உடைய கல்வியை பற்றி.!
ஒரு முஸ்லீம் அல்லாஹ்ﷻவை எப்படி ஈமான் கொள்ளவேண்டும்? அவனுடைய தூதரைﷺ எப்படி ஈமான் கொள்ளவேண்டும்? எப்படி இபாதத்களை செய்யவேண்டும்? அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஹ் வின் கொள்கைகள் என்ன?
நபியும், நபித்தோழர்களும் எந்த அடிப்படையின் மீது
இருந்தார்கள்?
எந்த வழிமுறையில் இருந்தார்கள்? இதனுடைய கல்வியை தான் இங்கே சுன்னாஹ்வின் கல்வி என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதற்காக தான் எம்முடைய ஸலப் அறிஞர்கள் தன்னுடைய முழு வாழ்வையும் அர்பணித்தார்கள் அப்படி அவர்கள் அர்ப்பணித்து எழுதிய சில கிதாபின் பெயர்கள் பின்வருமாறு.
*கிதாபுல் ஈமான்- ஆசிரியர் அல் இமாம் அல் முஜ்தஹித் அபு உபைத் அல் காசிம்(رحمه الله) (ஹிஜ்ரி 224)*
*கிதாபுல் ஈமான்- ஆசிரியர் இமாம் இப்னு அபீ ஷய்பா(رحمه الله) (ஹிஜ்ரி 235)*
*கிதாபுல் ஈமான் | கிதாப் அத் தவ்ஹீத்-ஆசிரியர் இமாம் புகாரி(رحمه الله) (ஹிஜ்ரி 256)*
*உஸூல் அஸ் சுன்னாஹ்-ஆசிரியர் இமாம் அஸ் சுன்னாஹ் அஹ்மத் இப்னு ஹன்பல்(رحمه الله)(ஹிஜ்ரி 241)*
*அஸ் சுன்னாஹ்- ஆசிரியர் அபு பக்ர் அல் அத்ரம்(رحمه الله (ஹிஜ்ரி 273)*
*கிதாப் அஸ் சுன்னாஹ்- ஆசிரியர் இமாம் அபூ தாவூத்(رحمه الله)(ஹிஜ்ரி 275)*
*அஸ்ல் அஸ் சுன்னாஹ்- ஆசிரியர் இமாம் அபு ஹாதிம் அர் ராஜிஈ(رحمه الله) (ஹிஜ்ரி 277)*
*கிதாப் அஸ் சுன்னாஹ்- ஆசிரியர் இமாம் இப்னு அபி ஆஸிம்(رحمه الله)(ஹிஜ்ரி 287)*
*கிதாப் அஸ் சுன்னாஹ்- ஆசிரியர் இமாம் அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் இப்னு ஹன்பல்(رحمه الله)(ஹிஜ்ரி 290)*
*ஷரஹ் அஸ் சுன்னாஹ் ஆசிரியர் இமாம் ஜரீர் அத் தபரி(رحمه الله)(ஹிஜ்ரி 310)*
*அஸ் சுன்னாஹ்- ஆசிரியர் இமாம் அல் கல்லால்(رحمه الله) (ஹிஜ்ரி 311)*
*அகீதா தஹாவியா- ஆசிரியர் இமாம் அபு ஜாபிர் அத் தஹாவீ(رحمه الله)(ஹிஜ்ரி 321)*
*ஷரஹ் அஸ் சுன்னாஹ் ஆசிரியர் இமாம் பர்பஹாரீ(رحمه الله) (ஹிஜ்ரி 329)*
*அஸ் சுன்னாஹ் ஆசிரியர் இமாம் அஸ்ஸால்(رحمه الله) (ஹிஜ்ரி 349)*
*அஸ் சுன்னாஹ் ஆசிரியர் இமாம் அத் தபரானி(رحمه الله)(ஹிஜ்ரி 360)*
*அல் இபானாஹ்- ஆசிரியர் இமாம் இப்னு பத்தாஹ் அல் அக்பரி அல் ஹன்பலி (رحمه الله) (ஹிஜ்ரி 387)*
*ஷரஹ் உஸூல் இத்தி காத் அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஹ்- ஆசிரியர் இமாம் லாலில்காஈ(رحمه الله)(ஹிஜ்ரி-428)*
*அகீதத்துல் ஸலப் அஸ்ஹாபுல் ஹதீத்- ஆசிரியர் அல் ஹாபித் அல் இமாம் அபு உத்மான் அஸ் ஷாபுனி(رحمه الله) (ஹிஜ்ரி 449)*
*அல் இத்திகாத் அலா மத்ஹப்பிஸ் ஸலப் அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஹ்-ஆசிரியர் இமாம் பைஹக்கி(رحمه الله)(ஹிஜ்ரி 457)*
*அல் அகீதத்துல் வாசித்தியா-ஆசிரியர் ஷைக் அல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா(رحمه الله) (ஹிஜ்ரி 728)*
*கிதாப் அத் தவ்ஹீத்- ஆசிரியர்-ஷைக் அல் இஸ்லாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹாப்(رحمه الله)(ஹிஜ்ரி 1206)*
அல்லாஹ் இவர்கள் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக.! ஆமின்!
ஆம் சகதோதரர்களே இது போன்ற நல்லுபதேசம் தான் மனதுக்கு ஆறுதலாகவும் மேலும் நபியின்ﷺ சுன்னாஹ்வை விட்டுக்கொடுக்காமல் பின்பற்றுவதற்கும் உதவியாக இருக்கின்றது.
அல்லாஹ்ﷻ அஹ்லுஸ் சுன்னாஹ் உலமாக்களும் எமக்கும் அருள் புரிவானாக ஆமீன்..!