وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
(அல்குர்ஆன் : 51:56)
அல்லாஹ்வை வணங்க கடினமாக இருக்கிறது நான் என்ன செய்வது?
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ
நம்பிக்கை கொண்டோரே!
நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்.
(அல்குர்ஆன் : 3:102)
(அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட வேண்டும்; மாறு புரியக் கூடாது. அவனை நினைவுகூர வேண்டும்; மறந்துவிடக் கூடாது. (அவனுக்கு) நன்றி செலுத்த வேண்டும்; நன்றி மறக்கக் கூடாது. இதுவே அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சுவதாகும் என் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சுங்கள் அதாவது (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்படுங்கள்; (அவனுக்கு) மாறு புரியாதீர்கள்.
(அவனுக்கு) நன்றி செலுத்துங்கள்; நன்றி மறவாதீர்கள். (அவனை) நினைவு கூருங்கள்; அவனை மறந்து விடாதீர்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் அடியார் தமது நாவைக் காத்துக்கொள்ளாத வரை,
அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சியவர் ஆகமாட்டார்.
நூல்: இப்னு கஸீர் பாகம் : 3