அல்குர்ஆன் : 5:78,79

இஸ்ராயீலின் மக்களில் நிராகரித்தார்களே அத்தகையவர்கள், தாவூத், மர்யமுடைய மகன் ஈஸா, ஆகியோரின் நாவினால் சபிக்கப்பட்டு விட்டனர்,  
அது ஏனென்றால், அவர்கள் மாறுசெய்து கொண்டும், 
இன்னும் வரம்பு மீறுபவர்களாக இருந்தார்கள் என்பதினாலாகும். 
(அல்குர்ஆன் : 5:78)
 
எதனை அவர்கள் செய்து கொண்டிருந்தார்களோ அந்த வெறுக்கப்பட்ட (செயலானதை) விட்டும் ஒருவரையொருவர் தடுக்காதவர்களாக இருந்தனர்,
அவர்கள் செய்து கொண்டிருந்தது நிச்சயமாக மிகக்கெட்டதாகும். 
(அல்குர்ஆன் : 5:79)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: 

இஸ்ரவேலர்கள் தவ்ராத், இன்ஜீல், ஸபூர், ஃபுர்கான் ஆகிய நான்கு வேதங்களிலும் சபிக்கப்பட்டுள்ளனர்.

"அவர்கள், தாம் செய்துகொண்டிருந்த தீமையிருந்து ஒருவரை ஒருவர் தடுக்காமலேயே இருந்துவந்தனர்" என்று அல்லாஹ் தெரிவிக்கின்றான். 

அதாவது அவர்களில் யாரும் யாரையும் பாவங்கள் புரிவதிருந்தும் தடை செய்யப்பட்டவற்றைச் செய்வதிருந்தும் தடுக்காமல் இருந்துவந்தனர்.

அதற்காக அவர்களை அடுத்த தொடரில் அல்லாஹ் கண்டிக்கின்றான். 

அவர்கள் செய்ததைப் போன்று வேறு யாரும் செய்துவிடக் கூடாது என எச்சரிப்பதே இதன் மூலம் அல்லாஹ் வின் நோக்கம் ஆகும். எனவேதான், 

"அவர்கள் செய்துகொண்டிருந்தது மிகவும் மோசமானது" என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

நூல்: இப்னு கஸீர்
أحدث أقدم