மாணவரொருவருக்கு ஆசிரியர் செய்தஉபதேசம், எம் எல்லோருக்குமான உபதேசமாக இருக்கட்டும்!


இமாம் ஷாfபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், தனது மாணவர் 'அல்முஸனீ' (ரஹிமஹுல்லாஹ்) என்பவருக்கு இவ்வாறு உபதேசித்தார்கள்:

          

“அல்லாஹ்வை நீ அஞ்சிக்கொள்; உன் உள்ளத்தில் மறுமையை நீ நிறுத்திப் பார்; உன் கண்கள் இரண்டிற்கும் முன்னால் மரணத்தை வைத்துக்கொள்! அல்லாஹ்வுக்கு முன் நிற்பதை நீ மறந்து விடாதே; அல்லாஹ்விடமிருந்து வரும் விடயங்களில் நடுக்கத்துடனும்  அச்சத்துடனும் இரு!

          

மேலும், அவன் தடுத்தவற்றைத் தவிர்ந்துகொள்; அவனின் கடமைகளை நிறைவேற்று; எங்கிருந்த போதிலும் சத்தியத்துடனேயே நீ இரு! உன்மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகள் குறைவாக இருப்பினும் அவற்றை அற்பமாகக் கருதாது நன்றியுடன் அவற்றை எதிர்கொள்!

         

இன்னும், உன் மெளனம் சிந்தனைக்குரியதாகவும், உன் பேச்சு நினைவூட்டலாகவும், உன் பார்வை படிப்பினையாகவும் இருக்கட்டும்! அத்தோடு, இறையச்சத்தின் மூலம் நரகத்திலிருந்து அல்லாஹ்விடம் நீ பாதுகாப்பைத் தேடிக்கொள்!”


நூல்: 'மனாகிபுbல் இமாம் அஷ்ஷாfபிஈ', 02/294

 

قال الإمام الشافعي لتلميذه المزني رحمهما الله تعالى:


[ إتّق الله، ومثّل الآخرة في قلبك، واجعل الموت نصب عينيك، ولا تنس موقفك بين يدي الله، وكن من الله على وجل!

           

واجتنب محارمه، وأدّ فرائضه، وكن مع الحق حيث كان،ولا تستصغرنّ نعم الله عليك وإن قلّت، وقابلها بالشكر.


وليكن صمتك تفكّرا، وكلامك ذكرا، ونظرك عبرة، واستعذ بالله من النار بالتقوى! ]


{مناقب الإمام الشافعي، ٢/٢٩٤}

   


தமிழில்: அஷ்ஷெய்க். N.P.ஜுனைத் (காஸிமி,மதனி)

أحدث أقدم