முகஸ்துதி வியாதி, பெருமை வியாதி ஆகிய இரண்டுக்கும் மருந்துண்டு அல்fபாத்திஹா அத்தியாயத்தில்!

          அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           “உள்ளத்திற்கு இருபெரும் வியாதிகள் ஏற்படுகின்றன. அவ்விரண்டையும் ஒருவர் பயந்து, தவிர்ந்து நடக்கவில்லையென்றால் கட்டாயம் அவை அழிவில் கொண்டுபோய் அவரைத் தள்ளிவிடும். *'முகஸ்துதி, பெருமை'* ஆகியவையே அந்த இரண்டு வியாதிகள். (அல்fபாத்திஹா அத்தியாயத்தில், 04 ஆம் வசனமாக வருகின்ற)  *“(இரட்சகனே!) உன்னையே நாம் வணங்குகிறோம்”* என்பது முகஸ்துதிக்கான மருந்தாகும். *“உன்னிடமே நாம் உதவி தேடுகிறோம்!”* என்பது பெருமைக்கான மருந்தாகும்.

       *“உன்னையே நாம் வணங்குகிறோம்!”* என்பது முகஸ்துதியைத் தடுக்கும் என்றும், *“உன்னிடமே நாம் உதவி தேடுகிறோம்!”* என்பது பெருமையைத் தடுக்கும் என்றும் (எனது ஆசிரியர்) ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அதிகமாகக் கூறுவதை நான் கேட்டிருக்கின்றேன்.

      *“உன்னையே நாம் வணங்குகிறோம்!”* ௭ன்பதன் மூலம் முகஸ்துதி என்ற வியாதியிலிருந்தும், *“உன்னிடமே நாம் உதவி தேடுகிறோம்!”* என்பதன் மூலம் பெருமை என்ற வியாதியிலிருந்தும்,  *“எங்களை நீ நேரான வழியில் செலுத்துவாயாக!”* என்பதன் மூலம் வழிகேடு மற்றும் அறியாமை என்ற வியாதியிலிருந்தும் ஒருவர் ஆரோக்கியமளிக்கப்பட்டு விட்டால் அவர், தனது சாதாரண, நாள்ப்பட்ட (உள) வியாதிகள் பலவற்றிலிருந்து  ஆரோக்கியமளிக்கப்பட்டு விடுகிறார். அத்துடன் அவர், ஆரோக்கிய ஆடைகளுக்குள் வைத்து  பெருமைப்படுத்தப்படுகிறார்; அருட்கொடையும் அவர் மீது பூர்த்தியடைந்து விடுகிறது; (அல்லாஹ்வால்) அருள்பாலிக்கப்பட்ட (நல்ல)வர்களிலும் அவர் ஆகிவிடுகிறார்! சத்தியத்தை அறிந்து, அதிலிருந்து விலகி, நோக்கமும் மோசமாக இருந்து (அல்லாஹ்வின்) கோபத்திற்குள்ளானவர்களில் உள்ளவராகவும் அவர் இருக்கமாட்டார்;  சத்தியத்தை அறியாத மடையர்களாக இருந்து, அறிவில் மோசமான நிலையடைந்து வழிகெட்டுப்போனவர்களில் உள்ளவராகவும் அவர் இருக்கமாட்டார்!”.

{ நூல்: 'மதாரிஜுஸ் ஸாலிகீன்', 01/78 }

🌹➖➖➖➖➖➖➖➖🌹

           قال العلّامة إبن القيم رحمه الله تبارك وتعالى:-

          { إن القلب يعرض له مرضان عظيمان، إن لم يتداركهما العبد تراميا به إلى التلف ولا بدّ. وهما الرّياء والكبر، فدواء الرّياء ب *« إيّاك نعبد »*، ودواء الكبر ب *« إيّاك نستعين »*.

         كثيرا ما كنت أسمع شيخ الإسلام إبن تيمية رحمه تعالى يقول: *« إيّاك نعبد »* تدفع الرّياء، *« وإيّاك نستعين »* تدفع الكبرياء.

          فإذا عوفي من مرض الرّياء ب *« إيّاك نعبد »*، ومن مرض الكبرياء والعجب ب *«إيّاك نستعين»*، ومن مرض الضلال والجهل ب *« إهدنا الصّراط المستقيم »* عوفي من أمراضه وأسقامه، ورفل في أثواب العافية، وتمّت عليه النّعمة، وكان من المنعم عليهم غير المغضوب عليهم وهم أهل فساد القصد الذين عرفوا الحق وعدلوا عنه، والضّالّين وهم أهل فساد العلم الذين جهلوا الحق ولم يعرفوه }

[ المصدر: 'مدارج السّالكين' ، ١/٧٨ ]

🌹➖➖➖➖➖➖➖➖🌹

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم