நேரம் வீணாகக் கழிகிறதா? உள்ளத்தைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்!


        அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         “உனது நேரங்கள் உன்னிலிருந்து பயனேதுமின்றி வீணாகக் கழிவதாக நீ கண்டால் உனது உள்ளத்தில் கவனம் செலுத்த வேண்டியது உனக்குக் கடமையாகும். அல்லாஹ்வின் நினைவை விட்டும் உள்ளம் பொடுபோக்காக இருப்பதனாலேதான் இவ்வாறு அது இடம்பெகிறது.

            இஸ்லாமிய அறிஞர்கள் நூல்களைத் தொகுத்து எப்படி அவற்றை வெளிக்கொணர்ந்தார்கள்? அவர்களிடம் கற்றவர்கள் கண்ணியமிகு அறிஞர்களாக எப்படி வெளியானார்கள்? என்று கடந்தகால வரலாற்றைக் கொஞ்சம் நீ சிந்தித்துப் பார்த்தால் நீ வாழ்ந்த காலத்தை விட மிகக் குறுகிய காலங்களிலேயே அவர்களுக்கு  இவையெல்லாம் இடம்பெற்றிருப்பதை உன்னால் புரிந்து கொள்ள முடியும். தனது நினைவால் அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் நிரப்பியதுதான்  இதற்கான காரணமே தவிர வேறொன்றுமில்லை. இதனால்தான் ஒரு விநாடி கூட வீணாகாதபடி அவர்களின் கால நேரங்கள் சென்று கொண்டிருந்தது.

            எனவே,  உள்ளத்திற்கு ஏற்படும் இந்த நோய் விடயத்தில் நீ விழிப்பாக இருந்து, அதற்கான சிகிச்சை மேற்கொள்ள நீ விரைவது உனக்கு அவசியமாக இருக்கின்றது. ஏனெனில், உள்ளத்தில் நோய் பரவிவிட்டால் சிலவேளை அது மரணத்து விடுவதுடன் (சத்தியம் சென்றடையாதவாறு) அது திரையிடப்பட்டும் விடும். அப்போது, அவ்வுள்ளம் சத்தியத்தை சத்தியமாகவும் பார்க்காது; அசத்தியத்தை அசத்தியமாகவும் பார்க்காது; அல்லாஹ்விடத்தில் ஆரோக்கியத்தைக் கேட்போமாக!”

{ நூல்: 'தfப்சீரு சூரதில் அஹ்ஸாப்', 01/499 }

⏰➖➖➖➖➖➖➖➖⏰

       قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

          { إذا رأيت من نفسك أنّ أوقاتك ضائعة بلا فائدة فيجب عليك أن تلاحظ قلبك، فإن هذا لا يكون إلاّ من غفلة القلب عن ذكر الله.

           ولو نظرت فيما سبق من التاريخ كيف أنتج العلماء ما أنتجوا من المؤلفات، ومن فطاحل العلماء الذين تخرّجوا على أيديهم في أوقات قد تكون أقلّ من الوقت الذي عشته أنت، وذلك بسبب ما ملأ الله به قلوبهم من ذكره حتى صارت أعمارهم لا يضيع منها لحظة واحدة.

        فعليك أن تنتبه لهذا لمرض القلب وأن تبادر بمداواته، لأنه إذا تفشى المرض في القلب - نسأل الله العافية - قد يموت ويطبع عليه، فلا يحق حقا ولا يبطل باطلا }

[ المصدر: ' تفسير سورة الأحزاب' ، ١/٤٩٩ ]

⏰➖➖➖➖➖➖➖➖⏰

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم