அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“இஸ்லாமியப் பேரறிஞர், 'ஷைகுல் இஸ்லாம்' இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கடுமையாக வேதனை செய்யப்பட்டார்கள்; சிறைக்குள்ளேயே அவர்கள் மரணித்தும் போனார்கள்; என்றாலும், அவர்களுடைய (ஏகத்துவப்) பிரச்சாரம் அதற்குப் பின்னர் வெற்றியடைந்தது. ஏன் வெற்றியடைந்தது? என்றால், அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னா ஆகிய இவ்விரண்டு அடிப்படைகள் மீதும் அமைந்த தூய்மையான பிரச்சாரமாக அவர்களின் (ஏகத்துவப்)
பிரச்சாரம் இருந்தது. இதைத்தான் அல்லாஹ் கூறுகிறான்: *“அவனே வானத்திலிருந்து நீரை இறக்கினான். ஓடைகள் அதன் அளவுக்கேற்ப ஓடுகின்றன. வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கிறது. ஆபரணம், அல்லது வேறு பொருள் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இதுபோன்ற நுரை உள்ளது. இவ்வாறே அல்லாஹ் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் உதாரணம் கூறுகிறான். நுரையோ (பயனற்று) அழிந்து போகின்றது. மனிதர்களுக்குப் பயனளிக்கக்கூடியது பூமியில் நிலைத்து விடுகின்றது. இவ்வாறே அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகின்றான்”* (அல்குர்ஆன், 13: 17)
வழிகேட்டின் பக்கம் அழைக்கும் பிரச்சாரகர்களைப் பொறுத்தவரை, அவர்களைச் சூழ பல இலட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டாலும் அது வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லும் சருகைப் போன்றுதான் இருக்கும்.
சரியான அழைப்புப் பணியின் நன்மையும், அதன் தாக்கமும் பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்திருக்கும். பிழையான பிரச்சாரம், அல்லது உலக இலாபங்களையும் வேறு பல நன்மைகளையும் நோக்கமாகக்கொண்ட பிரச்சாரம் ஆகியவற்றைப் பொறுத்தளவில், அதைச் சுற்றி எந்நேரத்தில் மக்கள் திரண்டாலும் அதில் இறையருள் வளம் இருக்காது; எந்தவொரு நன்மையும் அதில் காணப்படாது; மக்களிடத்திலும் நலவு எதையும் அது ஏற்படுத்திவிடாது!”.
{ நூல்: 'இஆனதுல் முஸ்தfபீத் பி ஷர்ஹி கிதாபித் தவ்ஹீத்', 01/159 }
☪➖➖➖➖➖➖➖➖☪
قال العلّامة صالح فوزان الفوزان حفظه الله تعالى:-
{ هذا شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى عذّب ومات في السجن لكن نجحت دعوته فيما بعد. لماذا ؟ لأنها دعوة أصيلة ترتكز على الكتاب والسنة، كما قال تعالى: *« أنزل من السّماء ماءا فسالت أودية بقدرها فاحتمل السّيل زبدا رّابيا، وممّا يوقدون عليه في النّار ابتغاء حلية أو متاع زبد مثله، كذلك يضرب الله الحق والباطل، فأمّا الزّبد فيذهب جفاءا وأمّا ما ينفع النّاس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال »* (سورة الرعد، الآية - ١٧)
أمّا دعاة الضّلال حتى ولو تجمهر حولهم مئات الألوف فإن هذا غثاء كغثاء السّيل.
فالدّعوة الصحيحة يبقى خيرها وأثرها على مرّ الأجيال، أمّا الدّعوة غير الصحيحة أو الدّعوة المغرضة التي يقصد منها أشياء أخرى فهذه وإن تجمهر النّاس حولها في وقت من الأوقات إلّا أنّها لا بركة فيها ولا خير فيها، ولا تؤثّر في النّاس خيرا }
[ المصدر: 'إعانة المستفيد بشرح كتاب التوحيد' ، ١/١٥٩ ]
☪➖➖➖➖➖➖➖➖☪
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா