ஏகத்துவ மரத்தை உரமிட்டு வளர்ப்போம்! இணைவைப்பு மரத்தை வேரோடு ஒழிப்போம்!


          அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “ஏகத்துவமும், உளத் தூய்மையும் உள்ளத்தில் வளர்கின்ற மரமாகும். நற்செயல்கள் அதன் கிளைகளாகும்; இவ்வுலகில் கிடைக்கும்   நல்ல வாழ்க்கையும், மறுமையில் கிடைக்கும் நிரந்தர இன்பமுமே அதன் (நல்ல) கனிகளாகும். இல்லாமல் போகாமலும், தடுக்கப்படாமலும் சுவர்க்கத்தின் கனிகள் கிடைத்துக்கொண்டிருப்பது போலவே ஏகத்துவத்தினதும் உளத்தூய்மையினதும் கனி இவ்வுலகில் கிடைத்துக்கொண்டிருக்கும்!.

          *இணைவைப்பு, பொய், முகஸ்துதி* ஆகியன உள்ளத்தில் வளர்கின்ற (ஒரு வகை) மரமாகும். பயம்,  கவலை, துன்பம், மன நெருக்கடி, உள்ளம் இருளடைதல் என்பன உலகத்தில் இது கொடுத்துக்கொண்டிருக்கும் (மோசமான) கனிகளாகும். நரகவாதிகளுக்கு உணவாகக் கொடுக்கப்படும் (துர்வாடையும் அதிக கசப்பும் நிறைந்த) 'ஸக்கூம்' எனும்  மரமும், நிரந்தர வேதனையுமே இதனுடைய மறுமைக் கனியாகும். அல்குர்ஆனில், இப்ராஹீம் என்ற அத்தியாயத்தில் (ஏகத்துவம், இணைவைப்பு ஆகிய) இவ்விரு மரங்கள் குறித்து அல்லாஹ் கூறியிருக்கின்றான்..... 

        *“(லாஇலாஹ இல்லல்லாஹ் எனும்) தூய வார்த்தைக்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை (நபியே) நீர் பார்க்கவில்லையா? (அது) ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் (பூமியில்) ஆழப் பதிந்ததாகவும், அதன் கிளை வானளாவியதாகவும் இருக்கின்றது.🔅அது தனது இரட்சகனின் அனுமதி கொண்டு எல்லா வேளைகளிலும் அதன் பலனை அளித்துக்கொண்டிருக்கின்றது. மனிதர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அல்லாஹ் அவர்களுக்கு உதாரணங்களைக் கூறுகிறான்.🔅(இணைவைப்பு, நிராகரிப்பு என்ற) கெட்ட வார்த்தைக்கு உதாரணம், கெட்ட மரத்தைப் போன்றதாகும். அது, பூமியின் மேற்பகுதியிலிருந்து பிடுங்கப்பட்டுள்ளது. அதற்கு உறுதியான நிலை கிடையாது!”* (அல்குர்ஆன், 14: 24-26)

[ நூல்: 'அல்fபவாஇத்', 01/164 ]

❇➖➖➖➖➖➖➖➖❇

         قال العلّامة إبن القيم رحمه الله تعالى:-

[ *الإخلاص والتوحيد:* شجرة في القلب.

*فروعها:* الأعمال.

*وثمرها:* طيب الحياة في الدنيا، والنعيم المقيم في الآخرة.

           وكما أن ثمار الجنة لا مقطوعة ولا ممنوعة فثمرة التوحيد والإخلاص في الدنيا كذلك.

*والشرك والكذب والرياء:* شجرة في القلب.

*ثمرها في الدنيا:* الخوف والهمّ والغمّ وضيق الصدر وظلمة القلب.

*وثمرها في الآخرة:* الزّقّوم والعذاب المقيم.

           وقد ذكر الله هاتين الشجرتين في سورة إبراهيم... *« ألم تر كيف ضرب الله مثلا كلمة طيّبة كشجرة طيّبة أصلها ثابت وفرعها في السّماء🔅تؤتي أكلها كلّ حين بإذن ربّها، ويضرب الله الأمثال للنّاس لعلّهم يتذكّرون🔅ومثل كلمة خبيثة كشجرة خبيثة ن اجتثّت من فوق الأرض ما لها من قرار »* (سورة إبراهيم، الآيات : ٢٤ - ٢٦ )

{ المصدر: 'الفوائد' ، ١/١٦٤ }

❇➖➖➖➖➖➖➖➖❇

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم