அருள் மழை அழிவாக மாறாதிருக்க வேண்டும்

 

      கலாநிதி அப்துல் அஸீஸ் பின் ஸாலிஹ் அல்உபைத் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:

           *“தண்ணீர்,* அல்லாஹ் தன் அடியார்களுக்கு வழங்கிய அருட்கொடை என்பதுதான் அடிப்படையாகும். எனினும், மனிதர்களில் அதிகமானோர் இவ்வருட்கொடைக்கு நன்றி செலுத்தாதவர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் தமது நன்றிகெட்ட தனத்திலும், நிராகரிப்பிலும்,  புறக்கணிப்பிலும்  தொடர்ந்திருந்தால் இவ்வருளை அவர்களிடமிருந்து பறித்தெடுத்து விடுவதாகவும், அல்லது முன்னைய சமூகங்கள் சிலருக்கு எதிரானதாக  இதை மாற்றி வேதனை மற்றும் தண்டனையாக  ஆக்கியதைப் போன்று இதை மாற்றிவிடுவதாகவும் இவர்களை அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். 

          தண்ணீர் என்ற அருளுக்கு நன்றி செலுத்தப்படாவிட்டால் அருளை அழிவாக மாற்றுவதற்கு அல்லாஹ் ஆற்றல் படைத்தவன் என்ற விளக்கம் அல்குர்ஆனில் வந்தே இருக்கின்றது. முன்னைய சமூகங்கள் சிலவற்றை இந்த நீரின் மூலம் அல்லாஹ் அழித்திருக்கின்றான். இறைத்தூதர் நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சமூகமும் இவ்வாறே அழிக்கப்பட்டார்கள். அல்லாஹ் கூறுகிறான்: *“அதனால், கொட்டும் நீரால் வானத்தின் கதவுகளை நாம் திறந்துவிட்டோம். மேலும், பூமியை ஊற்றுக்கண்களால் பீறிட்டு ஓடச் செய்தோம். நிர்ணயிக்கப்பட்டபடி (இருவகை) நீரும் ஒன்றுசேர்ந்தது”*. (அல்குர்ஆன், 54:11,12)          

           இறைத்தூதர்  நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும், அவர்களுடன் இருந்த இறை நல்லடியார்களையும் கப்பலில் வைத்து தான் காப்பாற்றிய நிகழ்வையும் அல்லாஹ்  குறிப்பிடுகின்றான். *“பூமியே! உனது நீரை நீ உறிஞ்சிக்கொள்; வானமே! மழையை நீ நிறுத்திக்கொள்' என்று கூறப்பட்டது. நீரும் வற்றியது; கட்டளையும் நிறைவேற்றப்பட்டது; 'ஜூதி' (மலை)யில் கப்பல் தரித்து நின்றது. 'அநியாயக்காரக் கூட்டத்தினர் (அல்லாஹ்வின் அருளிலிருந்து) தூரமாகட்டும்' என்றும் கூறப்பட்டது”*. (அல்குர்ஆன், 11:44)

           முன்னொரு காலத்தில் எமன் நாட்டின் 'சபஃ' பிரதேசத்தில் ஒரு கோத்திரத்தார் வசித்து வந்தனர். அதிக மழை அவர்களுக்குக் கிடைத்தது. அதை அவர்கள் அணைக்கட்டில் சேமித்து வைத்து பயன்படுத்தி வந்தனர்.   இதனால், தமது வாழ்வாதாரங்களிலும் கனி வர்க்கங்களிலும் வளம் பெற்று வசதியுடன் கூடிய நல்ல  செழிப்பான வாழ்க்கையை அவர்கள்  வாழ்ந்து வந்தனர். அணைக்கட்டின் வலப்புறத்திலும் அதன் இடப்புறத்திலும் இரு தோட்டங்கள் அவர்களுக்கு இருந்தன.  அப்போது,  அவ்வருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும்படி அல்லாஹ் அவர்களுக்குக் கட்டளையிட்டான். ஆனால், அவர்கள் அதைப் புறக்கணித்து, அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பாக மாற்றிவிட்டார்கள். உயரிய அவ்வருட்கொடைக்கு அவர்கள் நன்றி செலுத்தவில்லை. அவர்களை அல்லாஹ்  என்ன செய்தான்  என்பதைப் பாருங்கள்!

     *“நிச்சயமாக 'சபஃ' பிரதேச மக்களுக்கு அவர்களது வசிப்பிடத்தில் ஓர் அத்தாட்சி இருக்கின்றது. வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரு தோட்டங்கள் (அவர்களுக்கு)  இருந்தன. 'உங்கள் இரட்சகனின் ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்துங்கள்; (அது) தூய்மையான நகரம்; (அவன்) மிக்க மன்னிக்கும் இரட்சகன்' (என்றும் கூறப்பட்டது.)*

       *ஆனால், அவர்கள் புறக்கணித்தனர். எனவே, நாம் அவர்கள் மீது (அணையை உடைக்கும்) 'அல்அரிம்' எனும் பெருவெள்ளத்தை அனுப்பினோம்.  அவர்களது இரு தோட்டங்களையும் புளிப்பும் கசப்புமுள்ள பழங்களையுடைய மரங்களும், சிறிதளவு இலந்தை மரங்களுமுடைய இரு தோட்டங்களாக அவர்களுக்கு நாம் மாற்றினோம்.*

           *அவர்கள் நிராகரித்த காரணத்தினால் இதுவே நாம் அவர்களுக்கு வழங்கிய கூலியாகும். நிராகரிப்பானுக்கே அன்றி (இவ்வாறு) நாம் கூலி கொடுப்போமா?”*.

(அல்குர்ஆன், 34:15-17)

          நீரின் மூலம் மேற்படி சமூகங்களை அழிப்பதற்கு ஆற்றல் படைத்த அல்லாஹ், இந்த சமூகத்தையும் முன்னைய சமூகங்களை நீரில் மூழ்கடித்ததுபோல் நீரில் மூழ்கடித்து அழிப்பதற்கும் ஆற்றல் படைத்தவனாகவே இருக்கின்றான். இதை இவ்வாறு அல்லாஹ் குறிப்பிடுகின்றான்: *“நாம் நாடியிருந்தால் அவர்களை மூழ்கடித்திருப்போம். அப்போது அவர்களைப் பாதுகாப்பவர் எவரும் இருக்கமாட்டார். அவர்கள் காப்பாற்றப்படவுமாட்டார்கள். என்றாலும், எம்மிடமிருந்துள்ள அருளால் சிறிது காலம் சுகமனுபவிப்பதற்காகவும் (அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள்.)”* (அல்குர்ஆன், 36:43,44)

*[* நூல்: 'மஜல்லதுல் ஜாமிஆ அல்இஸ்லாமிய்யா', இதழ் - 139 *]*

             

✍     قال الدكتور عبدالعزيز بن صالح العبيد حفظه الله تعالى:-

                    « الأصل أن الماء نعمة من الله على عباده، ولكن لمّا كان أكثر الناس كافرين بهذه النعمة توعدهم جلّ وعلا إن استمروا على كفرهم وإعراضهم أنه سيسلبهم هذه النعمة أو يغيرها عليهم كما غيرها على قوم سابقين وجعلها عليهم عذابا ونقمة. 

          وقد جاء في القرآن الكريم بيان قدرة الله على تغيير الماء من النعيم إلى العذاب إذا لم يشكر، وذلك أن الله عذّب به أمما سابقة منها قوم نوح: قال تعالى: *{ففتحنا أبواب السماء بماء منهمر🔅وفجّرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر }* < سورة القمر، الآية ١١،١٢ > ، فلما نجا الله نوحا ومن معه في السفينة قال جلّ وعلا : *{ وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجوديّ وقيل بعدا للقوم الظالمين }* < سورة هود، الآية - ٤٤ >.

              كانت قبيلة سبأ تسكن في اليمن وكانوا في نعمة وغبطة واتساع في أرزاقهم وثمارهم بسبب كثرة الأمطار وتخزينها في السد، ولهم جنتان عن يمين السد وشماله فأمرهم الله بشكر هذه النعم ولكنهم أعرضوا وبدلوا نعمة الله كفرا فلم يشكروا هذه النعمة العظيمة. فانظر ماذا فعل الله بهم؟ قال الله تعالى: *{ لقد كان لسبأ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكرو له بلدة طيبة ورب غفور🔅فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل🔅ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور🔅*  

< سورة سبأ، الآيات ١٥- ١٧ >.

            ولما أهلك الله سبحانه تلك الأمم بالماء أنذر هذه الأمة بقدرته عليهم كما قدر على أولئك ويغرقهم كما أغرقهم كما قال سبحانه وتعالى: *{ وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولاهم ينقذون🔅إلا رحمة منا ومتاعا إلى حين }* < سورة يس، الآية - ٤٣،٤٤ }.

[ مجلة الجامعة الإسلامية بالمدينة المنورة، العدد - ١٣٩ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

        

أحدث أقدم