தர்மத்தின் பன்முக வடிவங்கள்


          அறிஞர் ஸைத் அல்மத்ஹலீ (ரஹிமஹுல்லாஹ்)  கூறுகின்றார்கள்:

           “குறைந்த செல்வம், அல்லது அதிக செல்வத்தைக்கொண்டு தானதர்மம் செய்ய முடியும்  என்பதைப்போல பணம் அல்லாத வேறு சில விடயங்கள் மூலமும் தர்மம் செய்ய முடியும். அத்தகைய விடயங்கள் வருமாறு:

*01) பல்வேறு வகையான திக்ருகளில் ஈடுபடுதல்:*           அல்குர்ஆனை ஓதுதல் இதில் மிக முக்கியமானதாகும். திக்ரின் வகைகளில் இது அதிக சிறப்புக்குரியதாக இருக்கின்றது. மேலும் 'சுப்ஹானழ்ழாஹ்' என்று சொல்லி  அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்தல், 'அல்ஹம்து லில்லாஹ்' என்று அவனைப் புகழுதல், 'லா இலாஹ இல்லழ்ழாஹ்'  என்ற கலிமாவைக் கூறுதல், 'அல்லாஹு அக்பர்' என்று கூறி அவனைப் பெருமைப்படுத்துதல், பாவமன்னிப்புக்கோரி அவனிடம் மீளுதல் போன்ற உள்ளத்தோடும் நாவோடும் சம்பந்தப்பட்ட திக்ருகளில் ஈடுபட்டு வருதல். இவை யாவும் பன்மடங்கு நற்கூலிகளைப் பெற்றுத்தருகின்ற தர்மங்களாகும். இவற்றைச் செய்வதில் எவ்வித சிரமமோ, கஷ்டமோ, களைப்போ ஏற்படுவதில்லை. மாறாக,  உள்ளத்துடனும் நாவுடனும் சம்பந்தப்பட்டதாக உள்ள இவ்விடயம் செய்வதற்கு இலகுவானதும் இலேசானதுமாகும்.

*02) மனிதர்கள் இருவருக்கிடையில் சமரசத்தை ஏற்படுத்துதல்:*

          அல்லாஹ்வின் சங்கையான முகத்தையும், மறுவுலக வாழ்வையும் நோக்காகக்கொண்டு மனிதன் கொண்டு செல்லும் நன்மையான விவகாரமாக அல்லாஹ் இதை ஆக்கியுள்ளதோடு இதன் சிறப்பையும் அவன் மேம்படுத்தியிருக்கின்றான்.

*03)* முள், கல், எலும்பு போன்ற இடைஞ்சல் தரும் பொருட்களை பாதையை விட்டும் அகற்றுதல். குருடருக்கு வழிகாட்டுதல். ஊமையருக்கும் செவிடருக்கும் நல்வழிகாட்டல் வழங்குதல். கைசேதப்பட்டுக்  கவலைப்பட்டுக்கொண்டிருப்பவனுக்கும், பலவீனமானவனுக்கும் உதவுதல் போன்ற பல்வகை சார்ந்த தர்மங்களில் ஈடுபடுதல்.

*04)* நற்குணம், முகமலர்ச்சி ஆகியவற்றைக் கடைப்பிடித்தல்.

*05)* பிற மனிதர்களுக்குத் தன்னால் ஏற்படும் தீங்கை ஒருவர்  தடுத்துக்கொள்ளல்.

*06)* தான் நாட்டிய மரங்களிலிருந்தும், தனக்குச் சொந்தமான பொருட்களிலிருந்தும் பறவைகளும் மிருகங்களும் சாப்பிட்டவை. 

*07)* பெற்ற அறிவை மற்றவருக்குக் கற்றுக்கொடுத்தல்:

          இது, மிக உயர்ந்த தர்மம் ஒன்றாகும். காரணம், மனிதர்களை  அறியாமையிலிருந்து பாதுகாத்து, ஒளி மற்றும் நேர்வழி என்ற வாசல்களுக்குள் அவர்களை நுழைவித்து விடும் மகத்துவம் இதில் இருக்கின்றது.

          இவை யாவும்,  அல்லாஹ்வின் கருணை மற்றும் அவனது பேரருளால் பன்மடங்கு நற்கூலிகளை எமக்குப் பெற்றுத் தருகின்ற தர்மத்தின் பன்முக வடிவங்களாகும்”.

{ நூல்: 'அல்அப்fனானுன் நதிய்யா', 03/125 }

           

              

قال شيخنا العلامة زيد المدخلي رحمه الله تعالى  :

        « أن الصدقة كما تكون بالمال القليل أو الكثير، فإنها أيضاً تكون بأشياء أخرى غير المال، من هذه الأشياء ما يلي:

♦️1- الذكر على اختلاف أنواعه كقراءة القرآن، وهي أفضل أنواع الذكر والتسبيح لله والتحميد والتهليل والتكبير والتوبة والاستغفار وغير ذلك من ذكر القلب واللسان، فإن ذلك صدقات مضاعفة لا كلفة فيها ولا إرهاق ولا مشقة، وإنما هي خفيفة وسهلة وميسرة على القلب واللسان معا.

♦️2- اﻹصلاح بين الناس الذي عظم الله شأنه، فجعله من خير ما يقدمه الإنسان يبتغي به وجه الله والدار الآخرة.

♦️3- عزل الشوكة والعظم والحجر عن الطريق، ودلالة الأعمى، وإرشاد الأصم والأبكم، وإغاثة اللهفان، ومساعدة الضعيف ونحو ذلك مما هو مثله من وجوه الصدقات .

♦️4 - حسن الخلق، وطلاقة الوجه.

♦️5 - كف الشر عن الناس صدقة من العبد على نفسه.

♦️6 - ما أكلته الطيور والسباع. 

♦️7 - تعليم العلم أعظم صدقة؛ لأن فيه إنقاذا من الجهل وإدخالا في أبواب النور والهدى.

        وهذه الأشياء صدقات مضاعفة رحمة من الله وفضلا.

📚 الأفنان الندية - الجزء الثالث - كتاب الزكاة - ص125.

🌐➖➖➖➖➖➖➖➖🌐

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)


أحدث أقدم