மக்களே! உங்களை விட நான் சிறந்தவன் அல்லன்


               இமாம் அபூ இஸ்ஹாக் இப்ராஹீம் பின் மூசா அஷ்ஷாதிபீb (ரஹ்) கூறுகின்றார்கள்:

             கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் தனது நூல்களில், *“மனோ இச்சைகளின் பக்கம் சாய்ந்து கொண்ட விடயங்களையும், சத்தியத்தை விட்டும் தூரமாகிப்போன விடயத்தையும் உங்களுக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன்!”* என்று எழுதுபவர்களாக இருந்தார்கள்.

             உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களை மக்கள்  கலீபாவாக ஏற்று, அவருக்கு அவர்கள் பைஅத் செய்த போது அவர் பிரசங்க மேடையில் (மிம்பரில்) ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்தார். போற்றும் வார்த்தைகளை அவன்  மீது கூறிவிட்டு பின்னர் இவ்வாறு உபதேசம் செய்தார்: *“மக்களே! உங்கள் நபிக்குப் பின்னர் வேறொரு நபி கிடையாது. (அல்குர்ஆன் என்ற) உங்கள் வேத நூலுக்குப் பின்னர் வேறொரு வேத நூலும் கிடையாது. நபியின் வழிமுறையாக உங்களுக்கு வந்திருக்கும் விடயத்திற்குப் பின்னர் வேறெந்த வழிமுறையும் இல்லை. (நபியின் சமூகமாகிய) உங்கள் சமூகத்திற்குப் பின்னர் வேறு ஒரு சமூகமும் இல்லை. அறிந்து கொள்ளுங்கள்! ஹலால் என்பது, அல்லாஹ் தனது வேதத்திலும், தனது நபியின் பேச்சிலும் ஹலாலாக்கியிருப்பதுதான் மறுமை நாள் வரைக்கும் ஹலால் ஆகும். ஹராம் என்பது, அல்லாஹ் தனது வேதத்திலும், தனது நபியின் பேச்சிலும் ஹராமாக்கியிருப்பதுதான் மறுமை நாள் வரைக்கும் ஹராம் ஆகும். அறிந்து கொள்ளுங்கள்! மார்க்கத்தில் புதிதாக எதையும் உருவாக்குபவனாக நான் இல்லை; என்றாலும், மார்க்கத்தில் இருப்பதைப் பின்பற்றுபவன்தான் நான். அறிந்து கொள்ளுங்கள்! நான் சட்டத்தை அமுல்படுத்துபவன்தான்;  தீர்ப்பு வழங்குபவன் அல்லன். அறிந்து கொள்ளுங்கள்! உங்களை விட நான் சிறந்தவன் அல்லன்; என்றாலும், உங்களை விட பாரமான பொறுப்பைச் சுமந்திருப்பவன். அறிந்து கொள்ளுங்கள்! படைத்தவனுக்கு மாறு செய்யும் விடயத்தில் படைப்பினங்களுக்குக் கட்டுப்படுவதென்பது கிடையாது!”*

{ நூல்: 'அல்இஃதிஸாம்', பக்கம்: 67 }

☄➖➖➖➖➖➖➖➖☄

              قال الإمام أبو إسحاق إبراهيم بن موسى الشاطبي رحمه الله تعالى:- 

[ كان عمر بن عبدالعزيز رحمه الله يكتب في كتابه: *إني أحذركم ما مالت إليه الأهواء والزيغ البعيدة*. ولما بايعه الناس صعد المنبر فحمد الله وأثنى عليه ثم قال: *أيها الناس! إنه ليس بعد نبيّكم نبيّ، ولا بعد كتابكم كتاب، ولا بعد سنّتكم سنة، ولا بعد امّتكم امّة. ألا ! وإن الحلال ما أحلّ الله في كتابه وعلى لسان نبيّه حلال إلى يوم القيامة. ألا! وإن الحرام ما حرّم الله في كتابه وعلى لسان نبيّه حرام إلى يوم القيامة. ألا! وإني لست بمبتدع ولكني متّبع، ألا! وإني لست بقاض؛ ولكني منفذ.  ألا! وإني لست بخيركم، ولكني أثقلكم حملا. ألا! ولا طاعة لمخلوق في معصية الخالق* ].

{ الإعتصام،  ص - ٦٧ }

☄➖➖➖➖➖➖➖➖☄

                    ✍தமிழில்✍

                     அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

أحدث أقدم