நன்மைக்கு வழிகாட்டும் நட்பே நல்ல நட்பாகும்!

 

👉🏿  இமாம் கதாதா (ரஹ்) கூறுகின்றார்கள்:

           “ஒரு முஸ்லிம், நல்ல (நண்பனாக இருக்கும்) தனது சகோதரனிடமிருந்து பயன் ஏதும் பெற்றுக்கொள்ளவில்லையென்றாலும் அச்சகோதரனுடன் அவன் உட்கார்ந்திருப்பது பாவங்களில் விழுந்து விடுவதை விட்டும் அவனைத் தடுக்கிறது என்றால், அதுவே (அவனுக்கு) அதிக நலவாகிவிடுகிறது!”.

{ நூல்: 'அல்ஹுகூகுல் இஸ்லாமிய்யா', பக்கம்: 30 }

              قال الإمام قتادة رحمه الله تعالى : [ لو لم يستفد المسلم من أخيه الصالح إلا أن جلوسه معه يمنعه من الوقوع فى المعاصي، لكان خيرا كثيرا ]

{ ألحقوق الإسلامية، ص -  ٣٠ }

➖➖➖➖➖➖➖➖➖➖

👉🏿 அல்லாமா நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹ்) கூறுகின்றார்கள்:

           “நல்லவர்களின் நட்பைச் சம்பாதித்துக்கொள்வதும், வாழ்வின் போதும் மரணத்தின் பின்னும் அவர்களின் பிரார்த்தனைகளை வரப்பிரசாதமாகப் பெற்றுக்கொள்வதும்தான் சம்பாத்தியங்களில் மிக்க மகத்துவமானதும், கனீமத்துகளில் மிகச்  சிறந்ததுமாகும்!”.

{ நூல்: 'மஜ்மூஉல் பfவாயித்', பக்கம்: 106 }

            قال العلامة ناصر السعدي رحمه الله تعالى: [ من أعظم المكاسب وأجلّ الغنائم كسب صداقة الأخيار، واغتنام أدعيتهم فى الحياة وبعد الممات ]

{ مجموع الفوائد،  ص - ١٠٦ }

➖➖👇👇👇👇👇👇➖➖

           

👉🏿 *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமூசா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனுக்கான உதாரணம், கஸ்தூரி வியாபாரியின் நிலையையும் (உலைக் களத்தில்) உலை ஊதுகின்றவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரி வியாபாரி ஒன்றில் அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம்; அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக்கொள்ளலாம்; அல்லது அதிலிருந்து நறுமணத்தையேனும் நீ பெறலாம். ஆனால், உலை ஊதுபவனோ ஒன்றில் உனது ஆடையை எரித்துக் கரித்து விடுவான்; அல்லது (அவனிடமிருந்து) துர்வாடையையாவது நீ அடைந்தே தீருவாய்!”*.

{ நூல்: புகாரி - 5534, முஸ்லிம் - 5124 }

🌿➖➖➖➖➖➖➖➖🌿


                    ✍தமிழில்✍

                    அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم