இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் இப்னு கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:
🌼👉🏿 இமாம் புfழைல் இப்னு இயாழ் (ரஹ்) அவர்களிடம், பணிவு என்றால் என்ன? என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள், *“சத்தியத்தி்ற்குப் பணிந்து நடப்பதும், அதற்குக் கட்டுப்படுவதும், யாரிடமிருந்து அது வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதுமாகும்”*என்று பதிலளித்தார்கள்.
🌼👉🏿 இமாம் ஜுனைத் பின் முஹம்மத் (ரஹ்) கூறுகின்றார்கள்: *“பணிவு என்பது இரக்க சுபாவத்துடன் மென்மையாக நடப்பதும், வழிப்பட்டு, கட்டுப்பட்டு நடப்பதுமாகும்!”*
🌼👉🏿 இமாம் இப்னு அதாஃ (ரஹ்) கூறுகின்றார்கள்: *“பணிவு என்பது, சத்தியம் யாரிடமிருந்து வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதாகும். பணிவில்தான் கண்ணியமே இருக்கிறது! எவர் அதை பெருமையில் தேடுகிறாரோ அவர், நெருப்பில் தண்ணீரைத் தேடியவரைப் போலாவார்!”*
{ நூல்: 'மதாரிஜுஸ் ஸாலிகீன்', 2/314 }
🌻➖➖➖➖➖➖➖➖🌻
قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:
🌼⬅ سئل الفضيل بن عياض عن التواضع؟ فقال: *"يخضع للحق، وينقاد له، ويقبله ممّن قاله!"*
🌼⬅ وقال الجنيد بن محمد: *"هو خفض الجناح، وبين الجانب!"*
🌼⬅ وقال ابن عطاء : *"هو قبول الحق ممّن كان! والعز فى التواضع. فمن طلبه فى الكبر فهو كتطلب الماء من النار "*
{ مدارج السالكين ، ٢/ ٣١٤ }
🌻➖➖➖➖➖➖➖➖🌻
✍தமிழில்✍
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா