மரண வேளையில் மார்க்க அறிஞர்களின் நிலை


🎇👉🏿 இமாம் முஸனீ (ரஹ்) கூறுகின்றார்கள்:

            மரணம் ஏற்பட்ட நோயில் இருந்த இமாம் ஷாபிfஈ (ரஹ்) அவர்களிடம் சென்ற நான், *“அப்துல்லாஹ்வின் தந்தை (ஷாபிfஈ) அவர்களே! காலைப்பொழுதை எப்படி நீர் அடைந்து கொண்டீர்?”*என்று கேட்டேன். உடனே தன் தலையை உயர்த்திய அவர், *“இவ்வுலகிருந்து பயணிக்கவிருப்பவனாக, எனது சகோதரர்களைப் பிரியவிருப்பவனாக, என் தீய வினையைச் சந்திக்கவிருப்பவனாக, அல்லாஹ்விடம் செல்லவிருப்பவனாக காலைப்பொழுதை நான் அடைந்துள்ளேன்!. எனது உயிர் சுவர்க்கம் சென்று, அதில் நான் இன்பத்தில் திளைத்திருப்பேனா? அல்லது நரகம் சென்று, அதில் நான்  கவலையில்  மூழ்கிப் போய் விடுவேனா?”* என்று எனக்குத்  தெரியாது என்று சொல்லி விட்டு அழுதார்கள்.

{ நூல்: 'சியரு அஃலாமின் நுபbலா' , 10/75 }

                قال الإمام المزني رحمه الله تعالى:- 

               دخلت على الشافعي في مرضه الذي مات فيه، فقلت: *" يا أبا عبدالله! كيف أصبحت؟"*

              فرفع رأسه وقال: *" أصبحت من الدنيا راحلا، ولإخواني مفارقا، ولسوء عملي ملاقيا، وعلى الله واردا، ما أدري روحي تصير إلى جنة فاهنيها، أو إلى نار فاعزيها!"* ثم بكى ...

{ سير أعلام النبلاء،  ١٠ /٧٥ }

➖➖➖➖➖➖➖➖➖➖

🎇👉🏿  'ஆமிர் பின் அப்துல்லாஹ் (ரஹ்)' அவர்கள் மரணத்தறுவாயில் இருந்த போது அழுதார்கள். *“போராடும் இதுபோன்ற இடத்துக்காகவே நற்செயல்களில் ஈடுபடுவோர் ஈடுபட்டுக்கொள்ளட்டும்; யாஅல்லாஹ்! நற்செயல்கள் புரிவதில் ஏற்பட்ட எனது குறைபாடு, எனது பொடுபோக்கு ஆகியவற்றுக்காக உன்னிடம் நான் பிழை பொறுக்கத் தேடுகிறேன். எனது பாவங்கள் அனைத்திலிருந்தும் உன்னிடம் நான் பாவமன்னிப்புத் தேடிக் கொள்கிறேன். உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை!”*என்று கூறினார்கள். 

          பின்னர், மரணிக்கின்ற வரைக்கும் மேற்படி வார்த்தையை அடிக்கடி தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார்கள்!.

{ நூல்: 'லதாஇபுfல் மஆரிப்f ' , பக்கம்: 586 }

            لما احتضر عامر بن عبدالله رحمه الله تعالى بكى، وقال : *"لمثل هذا المصرع فليعمل العاملون، اللهم إني استغفرك من تقصيري وتفريطي، وأتوب إليك من جميع ذنوبي، لا إله إلا الله!"*

ثم لم يزل يرددها حتى مات.

{ لطائف المعارف،  ص - ٥٨٦ }

🍃🍃🍃🎇☄🎇☄🍃🍃🍃

                   ✍தமிழில்✍

                   அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

أحدث أقدم