பதவி, அந்தஸ்து, சொத்து, பிரபல்யம் போன்றவற்றில் எம்மை முந்திவிட்ட ஒரு மனிதர் விடயத்தில் நாமெல்லாம் சில நேரங்களில் ரோஷம் கொள்கிறோம். என்றாலும், தொழுகையில் முதல் வரிசையில் எம்மை முந்திவிட்டவர் , அல்லது அல்குர்ஆன் மனனத்தில் எம்மை முந்திவிட்டவர் விடயத்தில் நாம் ரோஷம் கொள்ளாதிருக்கின்றோம். *“காரணம் தெளிவானது.... ! உலக மோகமும், மறுமையை மறந்ததும்தான் இதற்கான காரணமாகும்.”*
அல்லாஹ் கூறுகின்றான்: “எனினும், நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். மறுமைதான் மிகச் சிறந்ததும், நிலையானதுமாகும்”.
(அல்குர்ஆன், 87:16,17)
{ முகநூலில் ஒர் அரபுச் சகோதரர் }
قد نغار من إنسان سبقنا إلى منصب أو مال أو شهرة...! ولكن لا نغار إذا سبقنا إلى الصف الأول فى الصلاة أو حفظ القرآن ! والسبب واضح...! *عشق الدنيا، ونسيان الآخرة*.
قال الله تعالى: [ بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى ] {سورة الأعلى، الآية - ١٦ ،١٧ }
➖➖👇👇👇👇👇👇➖➖
👉🏿 மேலும், அல்லாஹ் கூறுகிறான்: “உங்களுக்கு வழங்கப்பட்ட எதுவானாலும் அது இவ்வுலக வாழ்க்கையின் சிற்றின்பமே! எனினும் நம்பிக்கை கொண்டு, தமது இரட்சகன் மீது முழுமையாக நம்பிக்கை வைப்போருக்கு அல்லாஹ்விடமிருப்பதோ மிகச் சிறந்ததும், நிலையானதுமாகும்”.
(அல்குர்ஆன், 42:36)
🌿➖➖➖➖➖➖➖➖🌿
✍தமிழில்✍
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா