வெட்கம் பாவங்களைத் தடுக்கின்ற கேடயம்


          அல்லாமா ரபீbஃ பின் ஹாதீ அல்மத்ஹலீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           *“அல்லாஹ் மீது ஆணையாக! வெட்கம் அறவே இல்லாதவன், அல்லது அது குறைவாக உள்ளவனே பாவங்களையும், குற்றச் செயல்களையும், அநியாயத்தையும் செய்வான். எனவே, வெட்கம் என்பது முக்கியமானதோர் விடயமாகும்!.*

          *சிலவேளை, நீ ஒரு பாவத்தைச் செய்ய நாடி அதனிடம் செல்கிறாய்; பின்னர் உனக்கு ஞாபகம்  வந்தவுடன், 'எனது இரட்சகன் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்; என் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிறான்!' என உனக்குள் நீ சொல்லிக்கொண்டு அந்நேரமே வெட்கமும் படுகிறாய்; அச்சமும் கொள்கிறாய் என்றால் இந்த வெட்கமும் அச்சமும்தான் அப்பாவத்தைச் செய்வதை விட்டும் உன்னைத் தடுத்து நிறுத்தி விடுகிறது! இது, வெட்கப் பண்பு பெற்றுத் தருகின்ற சிறந்த பயன்களில் ஒன்றாகும்.*

            *ஆதலால், வெட்கம் என்பது பாவச் செயல்களைக் கட்டுப்படுத்தி, அவற்றைத் தடுத்து நிறுத்துகின்ற முக்கியத்துவம் வாய்ந்ததொரு விடயமாகும். இந்த  வெட்கமும், அச்சமும் உண்மையான ஈமானுடன்தான் இருந்துகொண்டிருக்கும். எனவே, எமது ஈமானை நாம் பலப்படுத்த வேண்டியதும், நபிமார்களின் வரலாறுகளைப் படிப்பதன் மூலம் வெட்கப் பண்பை நாம் வளர்த்தெடுத்துக்கொள்ள வேண்டியதும் எமக்கு மிக அவசியமாகும்!”.*

{ நூல்: 'அல்மஜ்மூஉ ஷர்ஹு அகீததிஸ் ஸலfப்' லிஸ்ஸாபூbனீ, 02/146 }


          قال العلّامة ربيع بن هادي المدخلي حفظه الله تعالى:-

          *{ والله لا يرتكب المعاصي والجرائم والظلم إلا من قلّ حياؤه أو عدم، فالحياء أمر عظيم.*

           *ومن فوائده الجليلة: أنك ربما تهمّ بالمعصية فتذهب وتمشي إليها، ثم تتذكر وتقول: إن ربّي يراني ويسمعني فتخجل وتخاف في نفس الوقت، فيدفعك ذلك الحياء والخوف إلى الاحجام عن فعلها.* 

           *فالحياء رادع عظيم، ووازع عظيم، الحياء والخوف مع الإيمان الصادق. فعلينا ان نقوي إيماننا وأن نغذي الحياء بدراسة سير الأنبياء عليهم الصلاة والسلام }.*

[ المجموع شرح عقيدة السلف للصابوني، ٢/١٤٦ ]

➖➖👇👇👇👇👇👇➖➖

🎯  நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதாக அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்: *“முந்தைய இறைத்தூதர்களின்  போதனைகளிலிருந்து மக்கள் அடைந்து கொண்ட (நன்மைகளில்) ஒன்றுதான்: 'உனக்கு வெட்கம் இல்லையேல் நீ விரும்பியதைச் செய்துகொள்!' என்பதாகும்!”.* (நூல்: புகாரி - 6120)

🌠➖➖➖➖➖➖➖➖🌠

               *✍தமிழில்✍*

                     அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم