உனக்காக மட்டும் நீ வாழாதே! பிறருக்காகவும் நீ வாழப் பழகிக்கொள்


         பேராசிரியர், கலாநிதி அப்துல்லா பின் ழைfபுல்லாஹ் அர்ருஹைலீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

             *“உனக்காக மட்டும் வாழாமல் இருப்பதை நீ பழக்கமாக்கிக்கொள்! பிறர் விடயத்திலும் நீ சிந்திக்க வேண்டும்; உன் அல்லாத மற்றவர்களுக்காக (நற்பணிகளில்) எதையாவது நீ செய்யவும் வேண்டும்;  உனது நலவுகளிலிருந்து ஏதாவதொன்றின் மூலம் பிறர் நலவுகளுக்காக நீ அர்ப்பணிக்கவும் வேண்டும்; உனக்கு சில தேவைகள் இருப்பதாக நீ நினைத்தால், உன் அல்லாத மற்றவர்களுக்கும் தேவைகள் இருக்கின்றன என்றும் நீ நினைவுபடுத்திக்கொள்! உனக்கென சில உணர்வுகள் இருக்கின்றன என்று நீ உணர்ந்தால், மனிதர்களில் உன் அல்லாதவர்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன என்பதை நீ உணர்ந்துகொள்! மேலும், உன்னைச் சுற்றி வாழும் மக்களின் வலிகளையும், அபிலாஷைகளையும் உணர்ந்துகொள்ளும் தன்மையற்ற கல்லைப் போன்று நீ இருந்துவிடாதே!. (இப்படி, தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ வேண்டும் என்று) மனிதனிடம் இருக்கின்ற இந்த நல்ல பண்புதான் இவனுக்கிடையிலும், ஏனைய படைப்புகளுக்கிடையிலும் மனிதர்களுடன் பழகி உறவாடி, அவர்களுடன் இரண்டறக் கலந்து வாழ்கின்ற விடயத்தில் காணப்படுகின்ற வேறுபாடுகளில் மிக முக்கியமானதாகும்.*

         *கொடை, தன் தேவையை விட பிறர் தேவைக்கு முன்னுரிமையளித்தல், அர்ப்பணிப்பு ஆகிய இப்பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்வதை மனிதன் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்ற இவ்விடயம்தான் நற்பண்புகளுக்குச் சொல்லப்படும் கருத்துக்களில் மிக முக்கியமானது என்பது உனக்குத் தெரியாதா? அல்லாஹ்வுக்காக வேண்டி சில விடயங்களை விட்டு விடுவதை நீ வழக்கமாக்கிக்கொள்வதும், அல்லாஹ்வுக்காக வேண்டி சில விடயங்களை நீ செய்வதும் இந்த நல்ல பண்புகளை நடைமுறைப்படுத்துகின்ற விடயங்களில் உள்ளவையாகும். இதன் மூலம் அதிக சந்தோசத்துடன் நீ இருப்பாய்.*

            *இதைக் கடைப்பிடித்து நடப்பதன் மூலம்தான் உனது ஈமானும் பூரணத்துவமடையும் என்பதை நீ நினைவில் வைத்துக்கொள்! ஏனெனில், 'உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறை நம்பிக்கையாளராகமாட்டார்!'*(புகாரி - 13) என்று நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்”. { ஆதார நூல்: 'அல்அஹ்லாகுல் fபாழிலா', பக்கம்: 195,196 }


             قال الأستاذ الدكتور عبدالله بن ضيف الله الرحيلي حفظه الله تعالى:-

           *{ تعوّد ألاّ تعيش لنفسك فقط، وإنما تفكر في غيرك، وتعمل شيئا من أجل غيرك، وتضحي بشيء من مصالحك لمصالح غيرك! فإذا تذكرت أن لك حاجات فتذكر أيضا أن لغيرك حاجات، وإذا أحسست بأن لك مشاعر فتذكر أيضا أن لسواك من الناس مشاعر. ولا تكن كالحجر عديم الإحساس والشعور بآلام الناس من حولك وآمالهم، ولعل هذا الخلق الطيب في الإنسان من أهم الفوارق بينه وبين المخلوقات الأخرى في تعامله مع الناس ومخالطته لهم.*

            *ألا تعلم أن من أهم معاني مكارم الأخلاق هو أن يتعوّد الإنسان الإتصاف بصفات الكرم والإيثار والتضحية، وأن من تطبيقات هذه الصفات أن تعتاد ترك أشياء من أجل الله، وتعمل أشياء من أجل الله، وتكون بذلك أكثر سرورا.*

           *وتذكّر أن إيمانك لا يكمل إلا بهذا لقوله صلّى الله عليه وسلم: « لا يؤمن أحدكم حتى يحبّ لأخيه ما يجبّ لنفسه ».* (البخاري، رقم الحديث - ١٣ )

[ الأخلاق الفاضلة - قواعد ومنطلقات لاكتسابها - للأستاذ الدكتور عبدالله بن ضيف الله الرحيلي ، ص : ١٩٥،١٩٦ ]

🎡➖➖➖➖➖➖➖➖🎡

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

أحدث أقدم