அல்லாமா அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
*“வீட்டில் இருப்பவர்கள் அல்குர்ஆனை அதிகம் ஓதக்கூடியவர்களாகவும், ஹதீஸ்களை அதிகமாக படிக்கக்கூடியவர்களாகவும், 'தஸ்பீஹ்' மற்றும் 'தஹ்லீல்' (லா இலாஹ இல்லல்லாஹ்) என்ற திக்ருகளைச் செய்து அல்லாஹ்வை அதிகம் நினைவுகூரக்கூடியவர்களாகவும் இருக்கும்போதெல்லாம் ஷைத்தான்களிலிருந்து அவ்வீடு அதிக பாதுகாப்புப் பெற்றதாகவும், ஷைத்தான்களை விட்டும் அது மிகத் தூரமானதாகவும் இருந்து கொண்டிருக்கும். பாடல்கள், வீண் விளையாட்டுக்கள், பிரயோசனமில்லாத தேவையற்ற பேச்சுக்கள் முதலிய காரணங்கள் மூலம் கவனயீனத்தால் நிரம்பியதாக அவ்வீடு இருக்கும்போதெல்லாம், தவறானவற்றைச் செய்வதை உற்சாகப்படுத்தும் ஷைத்தான்கள் அதில் இருப்பதற்கு மிக நெருக்கமான வீடாக அது ஆகிவிடும்!”*
{ நூல்: 'அல்fபவாயிதுல் இல்மிய்யா மினத் துரூசில் பாbஸிய்யா', 01/142 }
قال العلّامة عبدالعزيز بن عبدالله بن باز رحمه الله تعالى:-
*{ فكلما كان أهل البيت أكثر قراءة للقرآن، وأكثر مذاكرة للأحاديث، وأكثر ذكرا للّه وتسبيحا وتهليلا كان أسلم من الشياطين وأبعد منها. وكلما كان البيت مملوءا بالغفلة، وأسبابها من الأغاني والملاهي والقيل والقال كان أقرب إلى وجود الشياطين المشجّعة على الباطل}.*
{ الفوائد العلمية من الدروس البازية، ١/١٤٢ }
🏚➖👇👇👇👇👇👇➖🏚
🎯 *“ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும், உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை!" என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது!" என்று சொல்கிறான்.*
*அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால், 'இன்றைய இரவில் நீங்கள் தங்குமிடத்தையும், உணவையும் அடைந்துகொண்டீர்கள்!'என்று ஷைத்தான் சொல்கிறான்”* என நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் - 4106)
🎯 *“உங்கள் வீடுகளை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். 'அல்பகரா' எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் வீட்டிலிருந்து நிச்சயமாக ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான்!”* என அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். { நூல் :முஸ்லிம் - 1430 }
🏚➖➖➖➖➖➖➖➖🏚
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா