மார்க்கப்பற்று சேர்ந்திருக்கும் கண்ணியத்திற்கே உண்மையான மதிப்பு உண்டு


        இமாம் சுப்fயான் இப்னு உயைனா (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தான் ஒரு பெண்ணைத் திருமணம் முடித்து, அவளிடம் தான்  எல்லாவற்றையும் விட மிக இழிவானவராகவும் மிகக் கேவலமானவராகவும் இருந்து வருவதாக முறையிட்டார். அதாவது, தன்னை மனைவி இழிவுபடுத்துவதாகச் சொன்னார்.

    *"கண்ணியத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகத்தான் அவளை நீர் விரும்பியிருக்கின்றீர் போல! அப்படித்தானே!?"* என இமாமவர்கள் அம்மனிதரிடம் கேட்க அவர், *"ஆம்!"*என்று சொன்னார்.

        _அப்போது இமாம் சுப்fயான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள்:_

 *"(மணப்பெண் தேர்வு விடயத்தில்) எவன் கண்ணியத்தின்பால் செல்வானோ, அவன் இழிவைக்கொண்டு சோதிக்கப்படுவான்; எவன் சொத்து செல்வத்தின்பால் செல்வானோ அவன் வறுமையைக்கொண்டு சோதிக்கப்படுவான்; எவர் மார்க்கத்தின்பால் செல்வாரோ அவருக்கு அல்லாஹ் மார்க்கத்துடன் சேர்த்து கண்ணியத்தையும் செல்வத்தையும் ஒன்றுசேரக் கொடுப்பான்!".*எனக் கூறினார்கள்.

 _{ நூல்: 'ஹில்யதுல் அவ்லியா', 7/289 }_

🌷➖➖➖➖➖➖➖➖🌷

اشتكى رجل عند سفيان بن عيينة رحمه الله أنه تزوج إمرأة، فصار أذل الأشياء عندها وأحقرها: أي أنها تذله.

 _فقال سفيان:_*"لعلك رغبت إليها لتزداد عزا؟!"*

 _قال:_*"نعم!"*

 _فقال سفيان: *"من ذهب إلى العز أبتلي بالذل، ومن ذهب إلى المال أبتلي بالفقر، ومن ذهب إلى الدين يجمع الله له العز والمال مع الدين!"*

 _{ حلية الأولياء، ٧/ ٢٨٩ }_

🌷➖➖➖➖➖➖➖➖🌷


               ✍தமிழில்✍

              அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم