தர்மத்தின் மகிமையைச் சரியாகப் புரிந்த மனிதர்

    _அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:_

        "ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களை நான் பார்த்தேன்; ஜும்ஆ கடமையை நிறைவேற்றுவதற்காக அவர்கள் வெளியேறிச் சென்று விட்டால் வீட்டில் கிடைத்த ரொட்டியையோ, அல்லது வேறு ஒரு பொருளையோ எடுத்துக்கொண்டு பாதையில் செல்வோருக்கு அதை இரகசியமாக  தர்மம் செய்து விடுவார்கள்!"


 _قال العلامة إبن القيم رحمه الله تعالى:_

      "شاهدت شيخ الإسلام إبن تيمية رحمه الله، إذا خرج إلى الجمعة يأخذ ما وجد فى البيت من خبز أو غيره فيتصدق به في طريقه سرا".

{ زاد المعاد، ١/ ٤٠٧ }

➖➖➖➖👇👇➖➖➖➖

*மக்கள் சேவையில் அதிக ஈடுபாடு காட்டிய மார்க்க அறிஞர்!!*

➖➖➖🌼🌻🌻🌼➖➖➖

      அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:-

         “இஸ்லாமியப் பேரறிஞர், ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள், மக்கள் தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் அதிக ஈடுபாடுடையவர்களாக இருந்தார்கள். *“அடுத்தவருக்கு ஒருவர் உதவும் போதெல்லாம் அவருக்கு அல்லாஹ் உதவுவான்!”*என்பதை அவர் உறுதியாக  அறிந்து வைத்திருந்ததே இதற்குக் காரணமாகும்!”.

{ நூல்: 'ரவ்ழதுல் முஹிப்bபீbன்' ,1/168 }

🌿➖➖➖➖➖➖➖➖🌿

قال العلامة إبن القيم رحمه الله تعالى:- 

      " كان شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى يسعى في حوائج الناس سعيا شديدا، *لأنه يعلم أنه كلما أعان غيره أعانه الله!"*

{ روضة المحبين، ١/١٦٨ }

🌿➖➖➖➖➖➖➖➖🌿

                 ✍தமிழில்✍

                அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா.


أحدث أقدم