பெற்ற அறிவை மற்றவருக்குக் கற்றுக்கொடுங்கள்; அறிவில் விருத்தி செய்யப்படுவீர்கள்!


           பேராசிரியர் அஷ்ஷெய்க் சுலைமான் அர்ருஹைலீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         “கல்வித் தேடலில் ஈடுபடுபவரே! பயன்மிகு நன்மையான விடயமொன்று உமக்குக் கிடைத்துவிட  அல்லாஹ் அருள் புரிந்துவிட்டால், நீர் அறிந்துகொண்ட அளவுக்கு அதைப் பரப்பும் பணியில் நீர் விரைவாக ஈடுபடுவீராக! ஏனெனில், இதன்மூலம் அறிவில் நீர் விருத்தி செய்யப்படுகின்றீர். இதனால்தான், *“தான் கற்றதை பிறருக்கு ஒருவர் கற்றுக்கொடுப்பது,  அறிவைப் பெருக்கிக்கொள்வதற்குரிய காரணிகளில் ஒன்றாகும்!”* என கண்ணியமிகு எமது ஆசான்களில் சிலர்  கூறியிருக்கின்றார்கள். 

         எனவே, ஏதாவதொரு நல்ல விடயம் ஒன்றை நீர் கற்று, பிறருக்கு அதை  நீர் கற்றும் கொடுக்கின்றீர் என்றால் அதன்மூலம்  இன்னும் நிறையக் கற்பதற்கு அல்லாஹ் உமக்கு பிரதியுபகாரம் புரிகின்றான்; நன்மையான  விடயங்கள் ஒவ்வொன்றிலும் இவ்வாறுதான் அதிகரிப்பும், விருத்தியும் செய்யப்படுகின்றது. *“நன்மையான விடயத்தை நீர் செய்கின்றபோது,  சொத்து பணம் வரைக்குமுள்ள விடயமாக அது இருந்தாலும்  அல்லாஹ் உமக்கு அதில் விருத்தி செய்வான்!”* என்ற இவ்விடயம் இஸ்லாமிய சட்ட விதி ஒன்றாகவும் இருந்துகொண்டிருக்கின்றது”.

{ நூல்: 'ஷர்ஹு ரிசாலதி இப்னில் கைய்யிம்', பக்கம்: 69,70 }


          قال الأستاذ الشيخ سليمان الرحيلي حفظه الله:-

           { يا طالب العلم! إذا وفّقك الله إلى خير فاسع إلى نشره بمقدار ما علمت؛ فإنّك بذلك تزداد علما؛ ولذلك يقول بعض مشائخنا: *"من أسباب زيادة العلم أن يعلّم الإنسان ما علم"*.

            فإذا تعلّمت شيئا وعلّمته كافأك الله بأن تتعلّم أكثر، وهكذا في كلّ خير، وهذه قاعدة شرعية؛ كلّما بذلت الخير زادك الله منه، حتى المال ! }

[ شرح رسالة إبن القيم إلى أحد إخوانه ، ص - ٦٩،٧٠ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم