அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“மார்க்க அறிவு என்பது அது ஓர் நீதிபதியாகும். சந்தேகம்- உறுதி, தவறு- சரி, வழிகேடு- நேர்வழி ஆகியவற்றுக்கிடையிலுள்ள வேறுபாடுகளைப் பிரித்துக் காட்டக்கூடியதும் இதுதான்! இதன்மூலம்தான் அல்லாஹ்வும் அறிந்துகொள்ளப்படுகின்றான்; அவன் வணங்கப்பட்டு நினைவுகூரவும் படுகிறான்; ஏகத்துவப்படுத்தப்பட்டு புகழப்படவும் செய்கிறான். நேர்வழியில் செல்ல வேண்டும் என எண்ணுபவர்கள் இதன்மூலமே நேர்வழியடைகிறார்கள்; (இலக்கைச்) சென்றடையக்கூடியவர்கள் இதன் வழியில் போய்தான் அதைச் சென்றடைகிறார்கள்; நல்லதை நாடிச் செல்பவர்கள் இந்த வாசல் வழியாகவே நுழைந்துகொள்கிறார்கள்! இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் இதைக்கொண்டே அறியப்படுகின்றன; ஹராத்திலிருந்து ஹலாலும் இதன்மூலமே தெளிவாகின்றது; இதைக்கொண்டே குடும்ப உறவுகள்கூட சேர்த்து வைக்கப்படுகின்றன; அன்புக்குரியவன் அல்லாஹ்வின் விருப்பங்களும் அறிந்துகொள்ளப்படுகின்றன...!
அறிவு என்பது (தொழுகை நடாத்தும்) இமாம் என்றால், செயல் என்பது (அவரைப் பின்பற்றித் தொழுகின்ற) மஃமூம் ஆகும். அறிவு ஓர் வழிகாட்டி; செயலோ அதைப் பின்தொடரக்கூடியது! ஆதரவின்றி இருக்கும்போது இது ஓர் நண்பன்; தனித்திருக்கையில் பேசக்கூடியவன்; கவலையிலிருக்கையில் ஆறுதல் அளிப்பவன்; சந்தேகத்தை நீக்கி வைப்பவன்; இதன் பொக்கிஷத்தைக்கொண்டு வெற்றியடைந்தவருக்கு வறுமை இல்லாத அளவுக்கு செல்வந்தராக இது இருந்துகொண்டிருக்கும்.
இதைப் படிப்பது (அல்லாஹ்வைத் துதிக்கின்ற) 'தஸ்பீஹ்' ஆகும்; இதைப்பற்றிய ஆய்வில் ஈடுபடுவது 'ஜிஹாத்' ஆகும்; இதைத் தேடும் பணியில் ஈடுபடுவது இறைநெருக்கத்தை ஏற்படுத்தும் செயலாகும்; இதற்காக (கால நேரங்களைச்) செலவழிப்பது 'ஸதகா' வாகும்; இதற்கான தேவை உணவு மற்றும் குடிபானத்தின் தேவையைவிடப் பிரதானமானதாகும். இதனால்தான் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) இவ்வாறு கூறினார்கள்: *“மனிதர்களுக்கு அவர்களின் உணவு, குடிபானத்தின் தேவையைவிட அறிவின் தேவைதான் மிகப்பெரிய தேவையாகும். ஏனெனில், ஒரு நாளில் ஒரு தடவை அல்லது இரு தடவைகள்தான் உணவும் குடிபானமும் மனிதனுக்குத் தேவைப்படும்; ஆனால், அறிவின் தேவையோ அவன் விடும் மூச்சுக்களின் எண்ணிக்கையளவுக்கு அவனுக்குத் தேவைப்படுகின்றது!”*. இமாம் ஷாfபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களும் *“அறிவைத் தேடுவது சுன்னத்தான தொழுகை தொழுவதைவிட அதி சிறப்புக்குரியது!”* எனக் கூறியிருப்பதாக எமக்குச் செய்தி கிடைத்திருக்கின்றது”.
{ நூல்: 'மதாரிஜுஸ் ஸாலிகீன்', 02/469,470 }
قال العلاّمة إبن القيم رحمه الله تعالى:-
{ العلم الشرعي هو الحاكم، المفرق بين الشك واليقين والغي والرشاد، والهدى والضلال، وبه يعرف الله، ويعبد، ويذكر، ويوحد، ويمجد، وبه اهتدى إليه السالكون؛ ومن طريقه وصل إليه الواصلون؛ ومن بابه دخل عليه القاصدون؛ وبه تعرف الشرائع والأحكام؛ ويتميّز الحلال من الحرام؛ وبه توصل الأرحام؛ وبه تعرف مراضي الحبيب....
وهو إمام، والعمل مأموم، وهو قائد، والعمل تابع، وهو الصاحب في الغربة، والمحدث في الخلوة، والأنيس في الوحشة، والكاشف عن الشبهة، والغنيّ الذي لا فقر على من ظفر بكنزه.
مذاكرته تسبيح، والبحث عنه جهاد، وطلبه قربة، وبذله صدقة، والحاجة إليه أعظم منها إلى الشراب والطعام، قال الإمام أحمد رحمه الله: *"النّاس إلى العلم أحوج منهم إلى الطعام والشراب؛ لأن الرّجل يحتاج إلى الطعام والشراب في اليوم مرّة أو مرّتين، وحاجته إلي العلم بعدد أنفاسه"*. وروّينا عن الشافعي رضي الله عنه أنه قال: *"طلب العلم أفضل من صلاة النافلة"* }
[ مدارج السالكين، ٢/٤٦٩،٤٧٠ ]
📚➖➖➖➖➖➖➖➖📚
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா