கொடையும், உபகாரப் பண்புமுடையவர் விரிந்த மனமுடையவராவார்


         அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “மனிதர்களுக்கு உபகாரம் புரிவதும், முடியுமான அளவில்  பணம், அந்தஸ்து, உடல் உதவிப் பயன்பாடு, பலவித உபகார நடவடிக்கைகள் மூலம் அவர்களுக்குப் பயனளிப்பதும் விரிந்த மனதைப் பெற்றுக்கொள்வதற்கான காரணிகளில் உள்ளவையாகும். உபகாரம் செய்யும் கொடைவள்ளல் ஒருவர் மனிதர்களிலேயே மிக விரிந்த மனமுடையவராகவும், அவர்களில் நல்ல மனமுடையவராகவும், உள இன்பம் அவர்களில் நிறையப்பெற்றவராகவும் இருந்துகொண்டிருப்பார். உபகாரம் செய்யும் பண்பே இல்லாத கஞ்சனைப் பொறுத்தவரை அவன்தான் மனிதர்களிலேயே கடும் மன நெருக்கடியுடையவனாவும், வாழ்க்கையில் கடும் துன்பத்தில் இருப்பவனாகவும், அவர்களிலேயே அதிக கவலையும், சஞ்சலமும் உடையவனாகக் காணப்படுவான்.

         கஞ்சனுக்கும், தர்மம் செய்பவருக்கும் நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் இவ்வாறு உதாரணம் கூறினார்கள்: *“(தர்மம் செய்யாத) கஞ்சனுக்கும், தர்மம் செய்பவருக்குமான உவமையாகிறது இரும்பாலான இரு கவசங்கள் அணிந்த இரண்டு மனிதர்களின் நிலைக்கு ஒத்திருக்கிறது. தர்மம் செய்பவர் ஒன்றை தர்மம் செய்ய எண்ணும்போது அவரது கவசம் விசாலமாகி விடுகிறது. எந்த அளவுக்கென்றால், அவர் நடந்து செல்லும்போது அது நீண்டு அவரின் பாதச் சுவட்டை அது அழித்து விடுகிறது. (அதாவது, தர்மம் அவரின் குற்றங் குறைகளை மறைத்து விடுகிறது). கஞ்சன் (எதையாவது) தர்மம் செய்ய நாடும்போதெல்லாம் (அவனுடைய இரும்பு அங்கியின்) ஒவ்வொரு வளையமும் அடுத்த வளையத்தை நெருக்கி அவனுக்கு விசாலமாகாமல் இருக்கிறது!”* (புகாரி - 2917, 5299, முஸ்லிம்- 1855)

           தர்மம் செய்யும் இறைவிசுவாசியின் மனம் விரிவடைந்து, அவர் உள்ளம் விசாலமாக இடம் கொடுக்கிறது என்பதற்கான உதாரணமே இதுவாகும். மேலும் இது, கஞ்சனின் மனம் நெருக்கடியடைந்து, அவனது உள்ளம் (விசாலமாக இடம் கொடுக்காமல் நன்மை செய்வதைத்) தடுக்கிறது என்பதற்கான உதாரணமுமாகும்”.

{ நூல்: 'ஸாதுல் மஆத்' , 02/25,26 }

             

         قال العلّامة إبن القيم رحمه الله تعالى:-

          { ومن أسباب شرح الصّدر: الإحسان إلى الخلق ونفعهم بما يمكنه من المال والجاه والنفع بالبدن وأنواع الإحسان. فإن الكريم المحسن أشرح النّاس صدرا، وأطيبهم نفسا، وأنعمهم قلبا. والبخيل الذي ليس فيه إحسان أضيق النّاس صدرا، وأنكدهم عيشا وأعظمهم همّا وغمّا.

          وقد ضرب رسول الله صلّى الله عليه وسلم في الصحيح مثلا للبخيل والمتصدّق، *كمثل رجلين عليهما جنّتان من حديد، كلّما همّ المتصدّق بصدقة إتّسعت عليه وانبسطت حتى يجرّ ثيابه ويعفي أثره. وكلّما همّ البخيل بالصّدقة لزمت كلّ حلقة مكانها، ولم تتّسع عليه*  (البخاري - ٢٩١٧، ٥٢٩٩، مسلم - ١٨٥٥). فهذا مثل إنشراح صدر المؤمن المتصدّق، وانفساح قلبه؛ ومثل ضيق صدر البخيل وانحصار قلبه  }

[ زاد المعاد في هدي خير العباد، ٢/٢٥،٢٦ ]

♦➖➖➖➖➖➖➖➖♦

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

أحدث أقدم