இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:
“மனிதர்களில் அதிகமானோரின் நிலையைப் பார்த்தால் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகவே இருக்கின்றது..... இவர்களின் காலம் எப்படியெல்லாம் கழிந்து செல்கின்றது! வாழ்நாளும் எப்படியெல்லாம் முடிந்து போய் விடுகின்றது!! இத்தகையவனின் உள்ளம் அல்லாஹ்வை விட்டும், மறுமையை விட்டும் திரையிடப்பட்டிருக்கின்றது. உலகத்திற்கு வந்தது போலவே அதிலிருந்து அவன் வெளியேறியும் செல்கிறான்; மிக நல்லதை உலகத்தில் அவன் சுவைத்துப் பார்க்கவே இல்லை; மாறாக, மிருகங்களின் வாழ்க்கையையே அவன் வாழ்ந்தான்! (இறுதியில்) நஷ்டப்பட்டு வங்குரோத்து நிலைக்குச் சென்றவர்கள் போலவே இவ்வுலகிலிருந்து அவன் செல்கின்றான். இவனது வாழ்க்கை இயலாமை மிக்கதாகவும், இவனது மரணம் கடும் கஷ்டம் நிறைந்ததாகவும், (மறுமை என்ற) இவனது மீளுமிடம் கவலையும் கைசேதமும் உடையதாகவே இருக்கும்!”.
{ நூல்: 'தரீகுல் ஹிஜ்ரதைன்', பக்கம்: 385 }
قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى: [ والعجب كل العجب من حال أكثر الناس. كيف ينقضي الزمان، وينفذ العمر! والقلب محجوب عن الله ودار الآخرة. وخرج من الدنيا كما دخل إليها، وما ذاق أطيب ما فيها. بل عاش عيش البهائم، وانتقل منها إنتقال المفاليس. فكانت حياته عجزا، وموته كمدا، ومعاده حسرة وأسفا !"
{ طريق الهجرتين، ص - ٣٨٥ }
➖➖👇👇👇👇👇👇➖➖
👉🏿 அல்லாஹ் கூறுகிறான்: “ஜின்களிலும் மனிதர்களிலும் அதிகமானோரை நரகத்திற்கென்றே நாம் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன; அவற்றின் மூலம் அவர்கள் விளங்கிக் கொள்ளமாட்டார்கள். இன்னும், அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன; அவற்றின் மூலம் அவர்கள் பார்க்க மாட்டார்கள். இன்னும், அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன; அவற்றின் மூலம் அவர்கள் செவியுறமாட்டார்கள். அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை, (அவற்றை விடவும்) அவர்கள் மிக வழிகெட்டவர்கள். அவர்கள்தாம் (எமது வசனங்களை) அலட்சியம் செ்பவர்கள்”.
{ அல்குர்ஆன், 7:179 }
☘➖➖➖➖➖➖➖➖☘
✍தமிழில்✍
அஷ்ஷெய்க்
N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா