அஷ்ஷெய்க் அல்முஹர்ரர் அல்மஹல்லீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“நற்குணங்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் அடிப்படைத் தூணாகும். இது, மனிதர்களில் இறையச்சமுடையோர் கடைப்பிடித்து நடக்கின்ற மிக அழகானதோர் விடயமாகும். மனித சமூகங்களை கட்டியெழுப்புவதில் பலம் பொருந்திய அடிப்படையாகவும், மனித நாகரிகங்களின் வளர்ச்சியில் அச்சாணியாகவும் இருக்கக்கூடியவை இந்த நற்குணங்கள்தான். இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை!. இறைத்தூதராக தான் அனுப்பி வைக்கப்பட்டதன் நோக்கமே நற்குணங்களை பூரணப்படுத்துவதற்காக வேண்டித்தான் என்று இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களே கூறிவிட்டார்கள். *“நற்குணங்களைப் பூரணப்படுத்துவதற்காகவே இறைத்தூதராக நான் அனுப்பப்பட்டுள்ளேன்”*. (நூல்: முஸ்னத் அஹ்மத்).
அருள்வளம் பொருந்திய அழகிய நற்குணங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் பேரார்வமுடையவர்களாக இருந்தார்கள். தக்பீர் கட்டி தனது தொழுகையை அவர்கள் ஆரம்பித்தவுடன், “வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய லில்லதீ fபதரஸ் ஸமாவாத்தி வல்அர்ழ ஹனீfபன்....” என்ற பிரார்த்தனையோடு....
*....வஹ்தினீ லி அஹ்சனில் அக்லாக்கி, லா யஹ்தீ லி அஹ்சனிஹா இல்லா அன்த்த. வஸ்ரிஃப் அன்னீ சய்யிஅஹா, லா யஸ்ரிஃபு அன்னீ சய்யிஅஹா இல்லா அன்த்த”*.
*(பொருள்:* எனது இரட்சகனே! நற்குணங்களுக்கு எனக்கு நீ வழிகாட்டுவாயாக! நற்குணங்களுக்கு வழிகாட்டுபவர் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை. துர்க்குணங்களை என்னிலிருந்து அகற்றுவாயாக! துர்க்குணங்களை அகற்றுபவர் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை) என்பதையும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தித்துக் கேட்கக்கூடியவர்களாக இருந்தார்கள். (நூல்: முஸ்லிம் - 1419)
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் நற்குணம் குறித்து அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, *“அவர்களின் நற்குணம் அல்குர்ஆனாகவே இருந்தது”* என அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)
[ 'அல்fபுர்கான்' அரபு சஞ்சிகை, இதழ் - 958, திகதி 16/04/2018 ]
قال الشيخ المحرر المحلي حفظه الله تعالى:-
{ وإن الأخلاق هي حجر الزاوية في الإسلام؛ وهي أجمل ما يتحلّى به الأتقياء من الأنام؛ فهي الأساس المتين في بناء المجتمعات البشرية، وقطب الرّحى في نشأة الحضارات الإنسانية، ولا غرو؛ فقد أخبر رسول الله صلّى الله عليه وسلم أن الغاية من بعثته هي إتمام الأخلاق. فعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلّى الله: *« إنّما بعثت لأتمّم صالح الأخلاق »* (أخرجه أحمد)
وكان من حرصه صلّى الله عليه وسلم على الأخلاق الطّيّبة المباركة أنه كان يدعو الله تعالى في استفتاح صلاته أن يهديه لأحسن الأخلاق، وأن يصرف عنه سيّئها. فعن عليّ بن أبي طالب رضي الله عنه عن رسول الله صلّى الله عليه وسلم أنه كان إذا قام إلى الصلاة قال: « وجّهت وجهي للّذي فطر السموات والأرض حنيفا.... ، إلى أن يقول: *واهدني لأحسن الأخلاق لا يهدي لأحسن إلّا أنت، واصرف عنّي سيّئها لا يصرف عنّي سيّئها إلّا أنت »* (رواه مسلم، رقم الحديث - ١٤١٩)
ولمّا سئلت عائشة رضي الله عنها عن خلقه صلّى الله عليه وسلم قالت: *« كان خلقه القرآن »* < رواه مسلم > }
[ المصدر: مجلة الفرقان، العدد - ٩٥٨، التاريخ ٢٠١٨/٤/١٦م ]
💢➖➖➖➖➖➖➖➖💢
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா