இப்லீஸ் ஏற்படுத்தும் குழப்பமே “மூதாதையர்களைத்தான் பின்பற்றுவேன்” என்ற பிடிவாதம்!*


          அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

        “அசத்தியத்தை சத்தியத்தின் வடிவிலும், சத்தியத்தை அசத்தியத்தின் வடிவிலும் காட்டி, (அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவுக்கு முரணான) சமூக வழக்காறுகளுடன் செல்லும்படியான குழப்பத்தை  பெரும்பாலான பொதுமக்களுக்கு இப்லீஸ் ஏற்படுத்தியே விட்டான். இது,  அவர்களின் அழிவுக்கான காரணிகளில் மிக அதிகமானதாகும். 

           இப்லீஸ் ஏற்படுத்தும் இத்தகைய குழப்பத்தில் ஒன்றாக (மார்க்க விவகாரங்களில்) தமது மூதாதையர்களையே இம்மக்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருவதை நீ பார்க்கலாம். இவர்களது நம்பிக்கையில் இஸ்லாம் என்பது, சமூக வழக்கப்படி வழமையாக  அவர்கள் செய்துகொண்டு வந்தவையேயாகும். இவர்களில் ஒருவரை நீ பார்க்கலாம்; அவர் தனது தந்தை எவ்வழியில் இருந்தாரோ அவ்வழியிலேயே ஐம்பது வருடங்கள் வாழ்ந்திருப்பார். தனது தந்தை சரியான வழியில் இருந்தாரா? அல்லது பிழையான வழியில் இருந்தாரா? என்றெல்லாம் அவர் பார்க்கமாட்டார். இவ்வாறுதான் முஸ்லிம்கள் தமது தொழுகையிலும், ஏனைய வணக்க வழிபாடுகளிலும் வழமைப்படி சென்றுகொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒருவரை நீ பார்க்கலாம்; பல வருடங்கள் அவர் வாழ்ந்திருப்பார்; மக்களை எப்படி அவர் தொழக் கண்டாரோ அந்த அமைப்பலிலேயே அவரும் தொழதுகொண்டிருப்பார். சிலவேளை fபாத்திஹா சூராவை சரியாக ஓதத் தெரியாமலும், தொழுகையின் வாஜிப்கள் குறித்து அறியாமலும் இவர் இருப்பார். இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதுகூட சிலவேளை இவருக்குக் கஷ்டமாக இருக்கும். ஆனால், வியாபாரம் ஒன்றை இவர் செய்ய நாடினாலோ தனது பயணத்திற்கு முன்னர் தான் செல்லவிருக்கும் ஊரில் தனக்குச் செலவாகும்  செலவழிப்பு விடயம் குறித்தெல்லாம் கட்டாயம் இவர் கேட்டுத் தெரிந்திருப்பார். அவர்களில் இன்னொருவரையும் நீ பார்க்கலாம்; அவர்  ஜமாஅத் தொழுகையில் இமாமுக்கு முன்னரே ருகூஃ செய்துவிடுவார்; இமாமுக்கு முன்னரே சுஜூதும் செய்துவிடுவார்.  இமாமுக்கு முன்னர் தான் ருகூஃ செய்து விட்டால் தொழுகையின் பிரதான கடமை (ருக்ன்) ஒன்றில் அந்த இமாமுக்கு தான் மாறு செய்து விட்டேன் என்றும், அவர் ருகூவிலிருந்து நிமிர்ந்து வருவதற்கு முன்னர் தான் வந்துவிட்டால் தொழுகையின் பிரதான இரு கடமைகளில் தான் அவருக்கு மாறு செய்து விட்டேன், அதனால் தனது தொழுகையே பாழாகிவிட்டது என்ற சட்டம் அவருக்குத் தெரியாது!. (இப்படி சட்டங்களை அறியாது மக்கள் வழமையாக நிறைவேற்றி வருகின்ற அடிப்படையிலேயே இவர்களின் தொழுகையும் போய்க்கொண்டிருக்கின்றது)”.

{ நூல்: 'தல்பீஸ் இப்லீஸ்', பக்கம்: 480 }

♦➖➖➖➖➖➖➖➖♦

        قال العلّامة إبن الجوزي رحمه الله تعالى:-

         { وقد لبس إبليس على جمهور العوام بالجريان مع العادات، وذلك من أكثر أسباب هلاكهم. فمن ذلك: أنهم يقلّدون الآباء والإسلام في إعتقادهم على ما نشئوا عليه من العادة. فترى الرّجل منهم يعيش خمسين سنة على ما كان عليه أبوه، ولا ينظر أكان على صواب أم على خطأ؟  وكذلك المسلمون يجرون في صلاتهم وعباداتهم مع العادة فترى لرجل يعيش سنين يصلّي على صورة ما رأى النّاس يصلّون، ولعلّه لا يقيم الفاتحة ولا يدري ما الواجبات؟ ولا يسهل عليه أن يعرف ذلك. ولو أنه أراد تجارة لسأل قبل سفره عمّا ينفق في ذلك البلد، ثم ترى أحدهم يركع قبل الإمام ويسجد قبل الإمام ولا يعلم أنه إذا ركع قبله فقد خالفه في ركن، فإذا رفع قبله فقد خالفه في ركنين فبطلت صلاته... ! }

[ المصدر: ' تلبيس إبليس' ، ص - ٤٨٠ ]

♦➖➖➖➖➖➖➖➖♦

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم