தலைமைத்துவப் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் தீமைகள் செய்வதற்கு ஆயத்தப்படுகின்றனர்


🎯👉🏿 'இமாம் fபுழைல் இப்னு இயாழ்' (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுவதாக 'அல்ஹாfபிழ் இப்னு அப்தில் bபர்' (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          *“தலைமைத்துவத்துவப் பதவிக்கு ஆசைப்படும் எவராக இருப்பினும், அவன் பொறாமைப்படவே செய்வான்; (அதை அடைவதற்காக) அட்டூழியமும் செய்வான்;  மனிதர்களின் குறைகளையும் அவன் தேடித் திரிவான். ஒருவர் பற்றி நல்லது கூறப்படுவதையும் அவன் வெறுப்பான்”.*

{ நூல்: 'ஜாமிஉ பயானில் இல்ம் வ fபழ்லுஹு', பக்கம்: 971 }


🎯👉🏿 அஷ்ஷெய்க் அபுல்ஹசன் அலி அர்ரம்லீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          *“கல்வித் தேடலில் ஈடுபடுகின்ற மாணவர்களே! தலைமைத்துவப் பதவிக்காக ஆசைப்படுவது குறித்தும், அதைப் பெறுவதற்காக முயற்சிப்பது குறித்தும் நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். ஏனெனில், இது பொறாமைக்கு இழுத்துச் செல்லும்; அட்டூழியம், அநியாயம், பகைமை, பொய் ஆகியவற்றின் பக்கம் இந்தப்  பொறாமை கொண்டு போய் சேர்க்கும். இதன் இறுதி முடிவு மோசமானதாகவும், நஷ்டமுடையதாகவுமே இருக்கும்.* 

         *மேலும் நீங்கள்,   'அல்லாஹ் கண்காணிக்கின்றான்!' என்ற உணர்வை உங்கள் உள்ளங்களில்  ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! முதன்முதலில் உள்ளங்களை நீங்கள் சுத்தப்படுத்திக்கொண்டு அல்லாஹ்வின் மார்க்க விடயத்திலும், அம்மார்க்கத்தின் பக்கம் அழைக்கின்ற அழைப்புப் பணி விடயத்திலும், உங்கள் விடயத்திலும், உங்கள் சகோதரர்கள் விடயத்திலும் அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்ளுங்கள்!”*

{ முகநூல் -  علي الرملي - Ali arramly }

➖➖➖➖➖➖➖➖➖➖

🎯👈🏿 قال الحافظ ابن عبد البرّ المالكي رحمه الله تعالى:-

          قال الإمام فضيل بن عياض رحمه الله تعالى: *« ما من أحد أحبّ الرّئاسة إلاّ حسد، وبغى، وتتبّع عيوب الناس، وكره أن يذكر أحد بخير »*

{ المصدر: جامع بيان العلم وفضله }


🎯👈🏿 قال الشيخ أبو الحسن علي الرملي حفظه الله تعالى:-

           *{ إحذروا حبّ الرّياسة والسّعي إليها يا طلبة العلم! فإنه يقود إلى الحسد، والحسد يوصل إلى البغي والظلم والعدوان والكذب. وعاقبته إلى سوء وخسران! راقبوا الله في قلوبكم؛ ونظّفوها أوّلا بأوّل؛ واتّقوا الله في دين الله ودعوته وفي أنفسكم وإخوانكم }*

{ فيس بوك: علي الرملي }

➖➖👇👇👇👇👇👇➖➖

🔅👉🏿  அபூ மூஸா அல்அஷ்அரீ(ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்: “நானும், என் சமுதாயத்தாரில் இரண்டு பேரும் நபி(ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களிடம் சென்றோம். (என்னுடன் வந்த) அவ்விருவரில் ஒருவர், *'எங்களுக்குப் பதவி தாருங்கள் இறைத்தூதர் அவர்களே!'* என்று கேட்டார். மற்றொருவரும் அவ்வாறே கேட்டார். அப்போது

நபி(ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், *'கேட்பவருக்கும், ஆசைப்படுபவருக்கும் நாம் இதை (பதவியை) வழங்கமாட்டோம்!'* என்று கூறினார்கள்”.

{ நூல்: புகாரி - 7149 }

🌻➖➖➖➖➖➖➖➖🌻

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

            

📝🌠🌠🌠🌠🌠🌠🌠🌠📝

أحدث أقدم