எவர் இன்பத்திலும் பொறாமைப்பட முடியாத இன்பம், சுவர்க்க இன்பம் மட்டும்தான்


🎯 அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்லறங்களும் செய்தார்களோ அவர்களுக்கு 'fபிர்தவ்ஸ்' எனும் சுவனச் சோலைகளே தங்குமிடமாக இருக்கும்.🔅அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். *அதை விட்டும் இடம்பெயர்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள்”.*

(அல்குர்ஆன், 18:107,108)

          அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           “ அல்லாஹ் கூறும், *'அதை விட்டும் இடம்பெயர்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள்'* என்ற இந்த வார்த்தையின் விளக்கம், '(இருக்கும் இன்பத்திற்கு) மாற்றீடான இன்பத்தை அவர்கள் வேண்டவோ, அதை விட்டும் இன்னொன்றுக்கு நகர்ந்து செல்லவோ விரும்பமாட்டார்கள்' என்பதாகும். ஏனெனில், சுவர்க்கவாதிகள் ஒவ்வொருவரும் தாம் அனுபவிக்கும் இன்பங்களில் திருப்தியுடையோராகவே இருப்பர்; அத்தோடு, 'இன்பம் அனுபவிப்பதில்  தன்னை விட மற்றவர் பூரணத்துவமுடையவராக இருக்கிறார்!' என்று நினைக்காதவர்களாகவே அவர்களில் ஒவ்வொருவரும் இருப்பர். இதுதான் பரிபூரணமான இன்பம் அனுபவித்தலாகும். உதாரணமாக, அழகும் கவர்ச்சியுமிக்க மாளிகை ஒன்றுக்குள் நீ சென்று விட்டாய்; அதற்குள்ளே மனதை மகிழ்ச்சிப்படுத்தும் எல்லாமே இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். இப்படியான நிலையிலும், மற்றவருடைய மாளிகை இதை விட மதிப்பும் சிறப்பும் மிக்கதாகவே இருக்கும் என்றுதான் நீ நினைப்பாய்! உனது சந்தோசம் இங்கு பூரணத்துமடைகின்றதா? உலகத்தை விரும்புபவனின் பார்வையில், சந்தோசம் பூரணத்துவமடையாது என்பதுதான் இதற்கான பதிலாகும். ஏனெனில், தன்னை விட மற்றவன் சிறப்பு இன்பத்தில் இருப்பதாகவே இவனது  பார்வை இருந்துகொண்டிருக்கிறது. எனினும், சுவர்க்கத்திலுள்ள மனிதர்கள் பல அந்தஸ்துகளிலிருந்தாலும், அவர்களில் ஒவ்வொருவரும் தன்னை விட எவரும் அதிக இன்பம் அனுபவிக்கவில்லை என்றுதான் எண்ணுவார். நரகவாதிகளின் பார்வையோ இதற்கு நேர்மாறாகவே இருக்கும்; இவர்களில் ஒவ்வொருவரும் தன்னை விட எவரும் கடும் துன்பத்தில் இல்லை என்றும், மற்றவர்களை விட தானே அதிக வேதனையை அனுபவிப்பதாகவுமே எண்ணுவர்.

            *'அதை விட்டும் இடம்பெயர்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள்':* அதாவது சுவர்க்கவாதிகளில் ஒருவரிடம், 'உமது இடம் அல்லாத வேறு ஓர் இடத்தில் உம்மை நாம் இருக்க வைப்பது உமக்கு விருப்பமா?' என்று கேட்கப்பட்டால், 'இல்லை!' என்றுதான் நிச்சயமாக அவர் சொல்வார். தனக்கு அல்லாஹ் வழங்கியதைக்கொண்டு திருப்திப்பட்டு, நிம்மதியடைந்து, பதற்றமடையாமல் மனிதன் இருக்கின்ற இந்நிலைதான், அல்லாஹ்விடமிருந்து மனிதனுக்குக் கிடைக்கும் பேரருளாகும்!”.

{ நூல்: 'தfப்ஸீர் இப்னு உஸைமீன்', அல்கஹ்fப் அத்தியாயம் , வசனம் - 108 }

🌿➖➖➖➖➖➖ ➖➖🌿 

         قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

         { قوله تعالى: *«لا يبغون عنها حولا»* أي: لا يطلبون عنها بدلا، *«حولا»* أي: تحوّلا؛ لأن كل واحد راض بما هو فيه من النّعم، وكل واحد لا يرى أن أحدا أكمل منه، وهذا من تمام النّعيم. أنت مثلا لو نزلت قصرا منيفا فيه من كل ما يبهج النفس، ولكنك ترى قصر فلان أعظم منه، هل يكمل سرورك؟ الجواب: من يريد الدنيا لا يكمل سروره، لأنه يرى أن غيره خير منه. لكن في الجنة وإن كان الناس على درجات،  يرى كل واحد منهم أنه لا أحد أنعم منه! عكس أهل النار، أهل النار يرى الواحد منهم أنه لا أحد أشدّ منه، وأنه أشدهم عذابا.

        *« لا يبغون عنها حولا »* يعني لو قيل للواحد: هل ترغب أن نجعلك في مكان آخر غير مكانك؟ لقال: "لا". وهذا من نعمة الله على الإنسان، أن يقنع الإنسان بما أعطاه الله عزّ وجلّ وأن يطمئن ولا يقلق }.

[ تفسير إبن عثيمين رحمه الله : سورة الكهف، الآية - ١٠٨ ]

🌿➖➖➖➖➖➖➖➖🌿

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم