🔅🎯 அல்லாஹ் கூறுகிறான்: *“எவர்கள் நம்பிக்கையாளர்களான ஆண்களையும், நம்பிக்கையாளர்களான பெண்களையும் அவர்கள் செய்யாதவற்றிற்காக நோவினை செய்கின்றனரோ நிச்சயமாக அவர்கள், அவதூறையும் தெளிவான பாவத்தையுமே சுமந்துள்ளனர்”.* (அல்குர்ஆன், 33: 58)
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“ஒருவருக்கு நீங்கள், உள ரீதியாக அவர் வேதனைப்படும் விடயத்தைக் கொண்டோ, அல்லது உடல் ரீதியாக அவர் வேதனைப்படும் விடயத்தைக்கொண்டோ தொல்லை கொடுப்பதுதான் *நோவினை செய்தல்* என்பதாகும். இது, அவரைத் திட்டுவதன் மூலமாகவோ, அல்லது ஏசுவதன் மூலமாகவோ, அல்லது அவர்மீது பொய்யான செய்திகளை இட்டுக்கட்டிச் சொல்வதன் மூலமாகவோ, அல்லது அவர்மீது பொறாமை கொள்ள முயற்சிப்பதன் மூலமாகவோ, அல்லது எவற்றின் மூலம் முஸ்லிம் சகோதரொருவர் வேதனையடைவாரோ அந்த விடயங்களைச் செய்வதன் மூலமாகவோ இருந்தாலும் சரியே! இவையனைத்துமே தடை செய்யப்பட்டவைகளாகும். ஏனெனில் அல்லாஹ், *'எவர்கள் நம்பிக்கையாளர்களான ஆண்களையும், நம்பிக்கையாளர்களான பெண்களையும் அவர்கள் செய்யாதவற்றிற்காக நோவினை செய்கின்றனரோ நிச்சயமாக அவர்கள், அவதூறையும் தெளிவான பாவத்தையுமே சுமந்துள்ளனர்'* எனத் தெளிவுபடுத்திக் கூறிவிட்டான்”.
{ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்', 03/273 }
🎉➖➖➖➖➖➖➖➖🎉
🔅🎯 قال الله تعالى: *« والّذين يؤذون المؤمنين والمؤمنات بغير مااكتسبوا فقد احتملوا بهتانا وإثما مّبينا »* (سورة الأحزاب، الآية: ٥٨ )
قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
{ والأذية: هي أن تؤذي الشخص بما يتألم منه قلبيا، أو بما يتألم منه بدنيا! سواء كان ذلك بالسّب،ّ أو بالشّتم، أو باختلاق الأشياء عليه، أو بمحاولة حسده، أو غير ذلك من الأشياء التي يتأذّى بها المسلم. وهذا كلّه حرام، لأن الله عزّ وجلّ بيّن *" أن الذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مّبينا"*}.
[ شرح رياض الصالحين، ٣/٢٧٣ ]
🎉➖➖➖➖➖➖➖➖🎉
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா