வியர்வை நீரில் தத்தளிக்கும் மனிதர்கள்


          அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “மறுமை நாளின் அமளிதுமளியிலும், அதன் கடும் கஷ்ட நிலையிலும் உள்ள முக்கிய விடயமொன்றுதான் படைப்பினங்களுக்கு அருகில் சூரியன் இருப்பதும்,  வியர்வையில் மக்கள் மூழ்கிப் போவதுமாகும்! அப்போது, கஷ்டம் அவர்களுக்குக் கடுமையாகி, அந்நிலையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு அவர்கள் விரும்புவார்கள். நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்: *“மறுமை நாளில் மனிதர்கள் (அவர்களின் தலைக்கருகில் நெருங்கி வரும் சூரியனால்) வியர்வையில் மூழ்கியிருப்பார்கள்.  அவர்களின் வியர்வை தரையினுள் எழுபது முழம் வரை சென்று, (தரைக்கு மேல்) அவர்களின் வாயை அடைந்து, இறுதியில் அவர்களின் காதையும் அடையும்!”* (புகாரி - 6532).

          நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதை தான் கேட்டதாக மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: *"மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு அருகில் கொண்டுவரப்படும். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கும் அதற்கும் இடையில் ஒரு மைல் தொலைதூரமே இருக்கும். அப்போது மக்கள் தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள். சிலரது வியர்வை அவர்களின் கணுக்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை அவர்களின்  முழங்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை அவர்களின் இடுப்பு வரையிலும், சிலரது வியர்வை அவர்களின் வாய் வரையிலும் எட்டி விடும்!”*.

இதைக் கூறியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தமது கையால் வாயை நோக்கி சைகை செய்தார்கள்.

இதன் அறிவிப்பாளரான சுலைம் பின் ஆமிர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், *"அல்லாஹ்வின் மீதாணையாக! "மைல்" என்று பூமியின் தொலைதூர அளவை நபியவர்கள் குறிப்பிட்டார்களா? அல்லது கண்ணில் சுருமா தீட்டப் பயன்படும் குச்சியின் அளவைக் குறிப்பிட்டார்களா என்பது எனக்குத் தெரியவில்லை!"* என்று குறிப்பிடுகிறார். (முஸ்லிம் - 5497)

           மிகச் சூடான அந்த இடத்தில் நிற்கப்போகும் ஒவ்வொருவரும் தனது நிலையைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கட்டும்! (உலகில்) சூடு கொஞ்சம் அதிகரித்து விடும்போது பலவிதமான குளிரூட்டுச் சாதனங்களால் அச்சூட்டைப் போக்குவதற்கான வேலையை மனிதன் கஷ்டப்பட்டுச் செய்கிறான். எனவே, அச்சுறுத்தும் கடும் சூட்டிலிருந்தும், தனது தீச்செயலின் அளவுக்கேற்ப மனிதன் அடைந்து கொள்ளப்போகும் அதிக வியர்வையிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வேலையை எப்படி இவன் செய்யாமல் இருக்க முடியும்?!”.

{ நூல்: 'அல்முஹ்தார் லில்ஹதீசி fபீ ஷஹ்ரி ரமழான்', பக்கம்: 146,147 }

🎡➖➖➖➖➖➖➖➖🎡

            قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-

              { وممّا يزيد في هول يوم القيامة وشدّته أن الشمس تدنو من الخلائق ويعرق الناس فيشتدّ عليهم الكرب ويتمنّون الخلاص ممّا هم فيه. فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلّى الله عليه وسلم قال: *«يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم في الأرض سبعين ذراعا ويلجمهم حتى يبلغ آذانهم»* (مسلم -          ).وعن المقداد بن الأسود رضي الله عنه قال: سمعت رسول الله صلّى الله عليه وسلم يقول: *«تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون منهم كمقدار ميل»*. قال سليم بن عامر: فوالله ما أدري ما يعني بالميل: أمسافة الأرض أم الميل الذي تكتحل به العين. قال: *« فيكون الناس على قدر أعمالهم في العرق. فمنهم من يكون على كعبيه، ومنهم من يكون إلى ركبتيه، ومنهم من يكون إلى حقويه، ومنهم من يلجمه العرق إلجاما. وأشار رسول الله صلّى الله عليه وسلم إلى فيه »* (رواه مسلم - 

              فليتصوّر كلّ حاله وهو في ذلك الموقف العصيب! إن الإنسان لو زاد عليه الحرّ شيئا يسيرا لعمل جاهدا على أن يذهب الحرّ بوسائل التبريد المختلفة. فكيف لا يعمل على أن يقي نفسه من ذلك الحرّ الرهيب والعرق الكثير الذي يبلغ من الإنسان على قدر عمله }.

[ المختار للحديث في شهر رمضان، ص - ١٤٦،١٤٧ ]

🎡➖➖➖➖➖➖➖➖🎡

               *✍தமிழில்✍*

                    அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

           

أحدث أقدم